அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகத் தமிழ் பேரவை அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானிய வெளியுற அமைச்சர் தலையீடு செய்ய வேண்டாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை பெளத்த துறவிகளின் இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரித்தானியாவிற்கு உரிமையில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.