அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இன்றைய ஊடகத்துறை அமர்வின் போது மகிந்த ராஜபக்சவின் அமரிக்கப்பயணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பேச்சாளர் கிரவ்ளி, ராஜபக்சவின் பயணம் தனிப்பட்ட ஒன்று என்றும் அமரிக்க அரச பிரதிநிதிகள் எவரை அவர் சந்திக்க மாட்டார் எனவும் தெரிவித்தார். இலஙகை வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜபக்சவுடன் சென்றிருப்பதால் அவருடனான சந்திப்புக்கள் இடம் பெறுமா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு, தனக்குத் தெரிந்த வரை எந்தச் சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்படவில்லை, தனது கூற்றுத் தவறாயின் அதனை பதிவுகளில் திருத்திக்கொள்வேன் என்றும் குறிப்பிட்டார்.
மகிந்தவிற்கு எதிரான போர்க்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருப்பதாவும் இது குறித்து அமரிக்க அரசின் நிலைப்பாடு என்ன என்று மற்றொரு ஊடகவியலாளர் வினாவெழுப்பினார்.
அதற்ற்குப் பதிலளித்த கிரவ்ளி, இலங்கை அரசு செய்துகொண்டிருப்பவற்றைத் தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாகக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு எனக் குறிப்பிட்ட கிரவ்ளி, சர்வதெச மனித உரிமைச் சட்டங்களை மீறியவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்றும், மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கபட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இந்த வருட ஜூன் மாதமளவில் ஆணைக்குழு ராஜபக்சவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் நிபுணர்களின் ஆலோசனைகளையும் இலங்கை அரசு பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்பது ஏகதிபத்தியங்களுக்கும் எதிராரான உலகம் முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்த போராட்டம் என்பதை இது வரை புலி சார் சிந்தனையைக் கொண்டவர்கள் மறுத்துவந்தனர். அமரிக்கா உட்பட அனைத்து ஏகாதிபத்தியங்களையும் வல்லரசுகளையும் நம்பகத் தன்மையுடையவையாகக் கருதி பல்லாயிரக் க|ணக்கான போராளிகளும் பொது மக்களும் அழிவதற்குப் புலிகள் வழிவகுத்தனர். இன்றுவரைக்கும் அந்த அழிவுகளின் சின்னமான புலிக் கொடிகளோடு தெருக்களில் அனாதைகளாக வெற்றுப் போராட்டங்களோடு உலாவருகின்றனர்.
கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், ஒபாமாவிற்காகத் தமிழர்கள் போன்ற கேலிக்குரிய புலிசார் அமைப்புக்களை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிச் செயற்படுகின்றனர்.
ஏகாதிபத்தியங்களுக்கும் மக்களின் எதிரிகளுக்கும் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் இன்னும் தொடர்கின்றன. உலகின் மறுபக்கத்தில் பெரும்பான்மையினராகக் காணப்படும் ஒடுக்கபடும் தேசிய இனங்களும் மக்களும் ஈழத் தமிழர்களுக்காக தமது எல்லைக்குள் குரழெழுப்பியே வந்துள்ளனர். ஈழத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று மார்தட்டிக்கொண்டவர்களோ இலங்கை ஒடுக்கப்படுகின்றவர்கள் எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களையும் காட்டிக்கொடுக்கும் துர்ப்பாகிய சூழலை ஏற்படுத்தி முள்ளிவாய்காலில் அழிந்துபோயினர்.
இன்று அமரிக்க ஏகாதிபத்தியம் போர்க்குற்றவாளி ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறது. போர்க்குற்றவாளியையே போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துமாறு கோருகிறது.
-விஜிதா








அமெரிக்கா பக்கத்தில நிற்கிற பசுமாடு எண்டா நினைச்சியள் அது நாம்பன் குத்திக் குடலை எடுத்திடும்.போக்குக் காட்டியே வீட்டுக் கத்தரியைக் கடித்துச் சாப்பிட்டு விடும்.சாம்பிராணீப் புகையை மாட்டுக்கு காட்டி பொட்டு வைக்கிற வேலையை விட்டிட்டு வீட்டில வேற வெலை இருந்தா அதைப் பாருங்கோ? மகிந்தா அவற்ற கூட்டமும் பாலைக் கறக்கிற வித்தையைக் கற்றூ வைத்து நாம்பனுக்கும் கயிறக் கட்டுகினம் நாங்கள்தான் தமிழன் அழக் கூடாது எண்டு வெளீயில சொல்லிப் போட்டு உள்ள போய் நாயைப் போல நக்கிறம்.பிட்டுக்கு மண் சுமந்த உமாபதி சிவம் வருவார்.பார்ப்பம்.சில்வாக்களூக்கு கயிலாயமா? வைகுந்தமா எண்டு.
இன்று அமரிக்க ஏகாதிபத்தியம் போர்க்குற்றவாளி ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறது. தாங்கள் நேசிக்கும் வியட்நாம், கியூபா போன்றநாடுகளும் ஒடுக்கப்பட்டமக்களுக்கெதிராக போர்க்குற்றவாளி ராஜபக்சவிற்கு வெளிப்படையாக ஆதரவையும் உதவியையும் வழங்கின்றனர் என்பதையும் மனதில் நிறுத்துக.