27.09.2008.
இலங்கையில் போரை நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் நடத்தும் கொலைகளை நிறுத்தவேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில தலைவர் ப. பாண்டியன் கேட்டுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த விடயத்தை வலியுறுத்தி தாம் முனைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பைத் தரவேண்டும் எனக் கோரியுள்ளார். இதேவேளை இலங்கை அரசாங்கம் நியாயமான தீர்வு ஒன்றை இனப்பிரச்சினைக்கு முன்வைக்குமானால், அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுததுள்ளார். இலங்கையில் தற்போதைய போர் குறிப்பிட்ட தமிழ் போராளிக் குழுவுக்கு எதிரானது என்றில்லாமல் அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான போராக முன்னெடுக்கப்படுவதாகப் பாண்டியன் குறிப்பிட்டார். |
ப.பாண்டியன் அவர்களே !
இலங்கையின் வரலாறு தெரியாமலும் இலங்கை கம்யூட்ஸகட்சியின் வரலாறு
தெரியாமலும் இலங்கை பிரச்சனைகளில் தலையிடாதீர்கள்.
உணராதிருந்தால் உங்களை இலங்கைபூராதமிழ்மக்கள் வாழும் பகுதிகளுக்கு உங்களை சுற்றி
காட்ட விரும்புகிறேம். தமிழ்மக்களுக்கு இன்று உள்ள பிரச்சனை சிங்களபேரினவாதமல்ல.
மாறாக புலிகளே.
ஜேர்மன் கம்யூனிஸ்கட்சியில் ஒரு தமிழ் உறுப்பினராக இருந்துகொண்டுதான் உங்களுடன்
பேசுகிறேன் ஆழம்தெரியாமல் காலைவிடாதீர்கள்.
எல்லா வகையிலும் தமிழ்மக்களை காட்டிக்கொடுத்தவர்கள் புலிகள் என்பதை நிரூபிப்பதற்கு
ஒரு சந்தர்பம் தாருங்கள்.