வெலிக்கடைப் சிறைச்சாலையில், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட அரசியல் கைதிகள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவு நாள் ஒன்று பாரிசில் நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நினைவு நாள் நிகழ்வை நடத்தியது பிரான்ஸ் இலங்கைத் தூதரகத்தின் ஆசியோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமாகும். பேரினவாதத்தால் கண்கள்ன் தோண்டப்பட்டு, உறுப்புக்கள் அறுக்கப்பட்டு விலங்குத் தனமாகக் கொல்லப்பட்ட கைதிகளின் நினைவஞ்சலியைப் அதே பேரினவாதத்தின் தொங்குதசைகளே நடத்தின. தேசியத்திற்காகப் போராடுகிறோம் என்று மக்களின் அவலங்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் புலி சார் அமைப்புக்களோ இவைகளைக் கண்டுகொள்வதில்லை.
ஈ.பி.டி.பி, சிறீ டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்-பத்மநாபா-, பிள்ளையான் குழு போன்றவற்றின் ஆதரவோடு இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்திவிட்டுத் திரும்பியவர்களும் தமிழ் மக்கள் உரிமைக்காகப் போராடவேண்டும் என்று வேறு போட்டுவைத்திருக்கிறார்கள். ஆடு நனைகிறது என்று ஓனாய்கள் இரத்தக்கண்ணீரே வடிக்கின்றன.
தம்பி ரயாகரனும் இருக்கிறாரா ?
ஆடு நனைகிறது என்று ஓனாய்கள் இரத்தக்கண்ணீரே வடிக்க உங்கள் கண்களில் கவலைக்கண்ணீர். இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் முகவலையில் படங்கள் போட்டுஇருக்கிறார்கள் பாருங்கள் எக்கச்சக்க கூட்டம். உங்களின் பொய் பிரச்சாரங்களையும் தாண்டி அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். ஆச்ரியம் என்னவனில் தூதரகத்தின் ஆசியோடு வந்தசிலர் கூட்டத்தை குளப்ப முயன்று நன்றாக வாங்கிகட்டியதுதான். அதுசரி பாரிசில் கடந்த ஞயிறு 21.07.2013 வெலிக்கடையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை என்று ஓர் கூட்டம் நடைபெற்றது இனியோருவில் கூட்டம் பற்றிய பிரசுரமும் போட்டிருந்தீர்கள் என்ன ஆச்சு ! ?. இனியோருவின் கட்டுரையாளர் சபா நாவலன் பேசுவதாகவும் விளம்பரப்படுத்த அவரின் வா சக விசிறிகள் ஆவாள் உடன் பாக்கசென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல் ஆனால் இனியோருவில் அந்த கூட்டம்பற்றிய செய்திக்கு என்ன ஆச்சு ?…. பி.கு: இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்தியவர்கள் என்னும் நாடு திரும்பவில்லை