Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கைப் பிரச்சனை:கருணாநிதி அஞ்சத் தேவையில்லை – ராம்தாஸ்

இனியொரு... by இனியொரு...
01/19/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க ஆட்சி கவிழ்க்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சத்தேவையில்லை என்று பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. ஈழத் தமிழர்களைக் காக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், தனித்தனியாக எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், தமிழ்நாட்டின் சார்பில், தமிழர்களின் சார்பில் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளும், போராட்டங்களும் அனைவருடனும் கலந்து பேசி முதலமைச்சரை முன்நிறுத்தி, அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை நான் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி வேறுபாடுகளையும், தனிப்பட்ட கோபதாபங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்பிரச்சினையில் முதலமைச்சர் மேற்கொள்கிற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

 
அந்த அடிப்படையில் தான் ஜனவரி மாதம் 12_ம் தேதி நானும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் முதலமைச்சர் கருணாநிதி அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். ந>ங்கள் என்ன முடிவெடுத்து அறிவித்தாலும், அதன்படி செயல்படத் தயார் என்று எங்கள் மூவரிடமும் முதலமைச்சர் கருணாநிதி வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான். ஈழத் தமிழர்களை காக்கும் பிரச்சினையில் முதல்வரை நம்பி செயல்படுவோம் என்று தொடர்ந்து அறிக்கைகளில் தெரிவித்து வந்திருக்கிறேன். இதனிடையே, தொல்.திருமாவளன், அவருக்கே உள்ள துடிப்புடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றாலும் உண்ணாவிரதத்தின் நோக்கம் இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதும் அதன் மூலம் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திச் சென்றேன்.

 
அவரது உடல்நலம் கருதியும், போராட்டம் திசைமாறிச் செல்கிறது என்பதாலும் அவரைச் சந்தித்த 2 முறையும் உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடும்படி வலியுறுத்தினேன். முதலமைச்சர் கருணாநிதியின் சார்பில் மூத்த அமைச்சர் ஒருவரும், நேரில் வந்து வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று தொல்.திருமாவளவனும் தனது உண்ணாவிரதத்தை இப்போது கைவிட்டிருக்கிறார்.

 
உண்ணாவிரதத்தின் நோக்கம் என்பதுதான் முக்கியமே தவிர, உண்ணாவிரத மேடையில் யார் யார் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? என்பது முக்கியமல்ல. தேர்தல் கூட்டணி, வெற்றி, தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் அரசியலை இணைத்து குழப்புவது இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பிரச்சினையை விட்டு வெகு தொலைவு போய்விட்டதாகத் தெரிகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்து எனக்கும் உடன்பாடானதுதான்.

 
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியலை கலப்பதை என்றைக்குமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. இலங்கைத் தமிழர் நலன் என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு கட்சியைப் பற்றி விமர்சித்துப் பேசுவதும், அந்தக் கட்சியினர் கோபம் அடைகின்ற வகையில் உருவப் பொம்மைகளைக் கொளுத்துவதும், தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவதும். தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இப்படியெல்லாம் செயல்படுவது இலங்கைத் தமிழர் நலனைக் காப்பதற்கு உதாவது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

 
உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசும்போது நான் தெரிவித்த ஒரு கருத்து பற்றியும் முதலமைச்சர் கருணாநிதி குறைபட்டிருக்கிறார். இலங்கைத்தமிழர் பிரச்சினையில் இறுதியாக முதலமைச்சர் கருணாநிதி மீது பழி கூற திட்டமிடப்படுகிறது என்றும், அது நல்ல அரசியல் தந்திரமாக இருக்காலம் என்றும் ஆனால் அதற்கு தாம் துணைபோக முடியாது என்றும் முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

 
உண்ணாவிதரப் மேடையில் நான் வெளியிட்ட அறிவிப்பில் எந்த அரசியல் தந்திரமும் இல்லை. முதல்வர் கருணாநிதி மீது பழிபோடும் எண்ணமும் இல்லை. அந்தக் கூட்டத்தில் நான் மிகத் தெளிவாகவே தெரிவித்திருக்கிறேன். முதலமைச்சரைச் சந்திக்க சென்ற எங்களிடம், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை ந>ங்களே முடிவெடுத்து சொல்லுங்கள் என்று முதலமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டி, அப்போது திடீரென்று என் உள்ளத்தில் உதயமான ஒரு போராட்டம் பற்றி குறிப்பிட்டேன். எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனாலும் நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் வரவில்லை. அதற்கு இந்திய அரசும் முயற்சிக்கவில்லை.

 
எனவே இனி நாம் நடத்துகின்ற போராட்டம் நாட்டின் கவனத்தையும், தில்லியின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டு அந்தப் போராட்டம் தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் இருக்கவேண்டும் என்று தெரிவித்தேன். அத்துடன் இது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான் என்பதையும் விளக்கினேன். இந்தப் போராட்டமா? அல்லது வேறு வகையிலான போராட்டமா? என்பது பற்றி முதலமைச்சர் கருணாநிதி முடிவெடுக்கலாம். அவைரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

 
இதற்காக அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை பொதுவான ஒரு இடத்தில் நடத்தாலம் என்றும் யோசனை தெரிவித்தேன். எனவே நான் வெளியிட்ட போராட்ட அறிவிப்பு இறுதியானதல்ல. அதுதான் போராட்டம என்பதல்ல.

 
தமிழகமே ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்வதில் ஆட்சிக் கவிழ்ப்பு தந்திரம் என்று குற்றம் சுமத்துவதில் அர்த்தமே இல்லை. அனைவரது ஆதரவுடனும் நடைபெறுகிற ஒரு போராட்டத்தின் விளைவாக ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சவும் தேவையில்லை. முதலமைச்சர் கருணாநிதி சொல்லுகிறபடி அல்லது அவர் அஞ்சுகிறபடி, ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மீண்டும் ஒருமுறை ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடந்தால், அதை அனுமதிக்கமாட்டோம்.

 
அத்தகைய முயற்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணை போகமாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமெல்லாம் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியிலும், அதற்கான போராட்டத்திலும் முதலமைச்சர் கருணாநிதி முன்னனின்று ஈடுபட வேண்டும். அது எத்தகையப் போராட்டம் என்பதை எல்லோரிடமும் கலந்து பேசி முடிவெடுத்து செயல்படுவோம்.

 
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பெண்கல்விக்கு எதிராக தாலிபான் பள்ளிகள் மீது தாக்குதல்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In