Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கைத் தமிழ் ஊடகங்களின் புதிய நெருக்கடிகளும் சவால்களும் ! : விஜய்

இனியொரு... by இனியொரு...
01/18/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

மகிந்த ராஜபக்ஷ, இந்த வருட ஆரம்பத்தில் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனும் அலரிமாளிகையில் நடாத்திய சந்திப்பில், தமிழ் ஊடகங்கள் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தினக்குரல் அசிரியர், ‘வடபகுதியில் இடம்பெற்றிருக்கக்கூடிய குற்றச் செயல்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் அங்குள்ள உண்மை நிலைவரத்திற்கு முற்றிலும் மாறானவை என்பதுவும் அமைதி திரும்புவதை விரும்பாத சக்திகளும் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிடுவதில் நாட்டம் கொண்ட சக்திகளுமே அத்தகைய பிரசாரங்களை செய்கின்றன என்பதுவுமே ஜனாதிபதியின் நம்பிக்கையாக இருப்பதை அவர் அன்றைய சந்திப்பின் போது சில சந்;தர்ப்பங்களில் கடுகடுப்பான தொனியில் தெரிவித்த கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது’ எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

அரசும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் தான் இனவாதத்தை உமிழ்கின்றன என்பது இலங்கையின் எந்தப்பகுதியில் வாழ்கின்ற சாதாரண குடிமகனுக்கும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அரசின் குற்றச்செயல்களை பொதுத் தளத்திற்குக் கொண்டுவருகின்ற போதெல்லாம் அது இனவாதமாகச் கருதப்படும் என்பதை நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கின்ற மகிந்த ராஜபக்ச எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறார்.

மேலும், ‘ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக, பத்திரிகைகள் இனவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அத்தகைய கொள்கைகளில் இருந்து விலகி தேசத்தின் ஜக்கியம், இன சௌஜன்யம் மற்றும் அபிவிருத்தி நோக்கிய பயணத்துக்கு உதவக்கூடிய அணுகுமுறைகளைத் தமிழ் ஊடகங்கள் பின்பற்றத் தயாராக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை விடுப்பவையாகவே அமைந்திருந்தன’ எனவும் தினக்குரல் அசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து தமிழ் ஊடகங்கள் மத்தியில் எதிர்வினையினைத் தோற்றுவித்திருக்கிறது.

இக்கருத்தினால் ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கிற தினக்குரல் அசிரியர், ஜனாதிபதியின்; இக் கருத்துக்கள் தொடர்பில் ஏனைய மொழிப் பத்திரிகைகள் மறுநாள் செய்திகளை வெளியிட்ட பாணியும் அரசியல் விமர்சகர்களினால் செய்யப்பட்டிருக்கும் அர்த்தப்படுத்தல்களும் தமிழ் ஊடகங்கள் குறித்து ஒரு மோசமான கருத்தமைவை ஏனைய மொழிப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் கட்டமைக்கத்தக்கவை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தினக்குரல் அசிரியர், ‘…(கடந்த காலத்தில்) தேசிய தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக ஜனநாயக வழியில் நின்று குரல் கொடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமை இருந்தது.’ எனவும் ‘போரின் முடிவின் பின்னரான காலகட்டத்தில் தேசிய மீள் நல்லிணக்கத்தில் தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடியதாக அரசாங்கத்திடமிருந்து உருப்படியான அரசியல் சமிக்ஞைகள் காட்டப்படுவதாக இல்லையென்ற தமிழ் மக்களின் மனக்குறையை வெளிக்காட்டும் முயற்சிகளை இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை; என்று வர்ணிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது’ எனத் தனது நியாயத்தினை முன்வைத்திருக்கிறார்.

மேலும் ‘துரதிஷ்டவசமான சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக ஜனநாயக ரீதியில் கிளம்புகின்ற குரல்களை, அக்குரல்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகின்ற நேர்மையான ஊடகச் செயற்பாடுகளை அல்லது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடத் தொல்லைகளைப் பகிரங்கப்படுத்தி நிவாரணம் தேடுவதற்கான அக்கறையுடைய முயற்சிகளை பிரிவினைவாத அரசியலின் எச்சமிச்சங்களின் முனகல்கள் என்று வர்ணிக்க முயற்சிப்பது கவலைக்குரியதாகும். இத்தகைய பின்புலத்திலேயே தமிழ் ஊடகங்கள் முகங்கொடுக்க வேண்டியயிருக்கின்ற நெருக்கடிகளையும் சவால்களையும் நோக்க வேண்டியிருக்கிறது’ என தனது கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதே வேளை தமிழ் ஊடகங்கள் குறித்து குறிப்பிட்டடுள்ள ‘கோகர்ணன்'( மறுபக்கம்-தினக்குரல்), ‘வன்னி நிலைமைகள் பற்றி ஒரு இடது சாரி தமிழேட்டில் நான் வாசித்தறிந்த சிறு பகுதியைக் கூட நமது நாளேடுகளிலிருந்து பெற முடியாதளவுக்கு நமது ஊடக நிறுவனங்களின் அக்கறை உள்ளது’ என அங்கலாய்த்திருப்பதுவும் இங்கு கவனித்தில் கொள்ளத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

துனிசிய மக்கள் போராட்டமும் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் : கோசலன்

Comments 2

  1. THAMILMARAN says:
    15 years ago

    கோமாவில் மீடியாக்கள் கிடக்கவேண்டும் என்பதற்காக எல்லாவற்றயும் செய்து கொண்டு மீடியாக்கள் நினைவு திரும்புவதாய் நாடகமாடும் இலங்கை அரசு,தன் மக்கள எத்தனை நாளக்கு ஏமாற்றீக் கொண்டிருக்கும்? இரட்டை அர்த்தத்தில் நம்மை இலங்கையில் நக்கலடிக்கும் நாய்க்கு நமக்கும் நன்றீ விசுவாசம் உண்டு என்பது தெரியாதது அதன் இனவெறீயையே காட்டுகிறது.நாயைக் குளீப்பாட்டி நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் குடிக்குமாம் அத நம்மால் மாற்றவா முடியும்????????????????????????????????????????????????????????????????

  2. YOGA.S says:
    15 years ago

    அதாவது இற்றைக்கு கிட்டத்தட்ட இருபத்தேழு ஆண்டுகளாக “எதுவும்” செய்ய முடியாதிருந்த பேரினவாதிகள் மீண்டும் தங்கள் சுய ரூபத்தை,இனக்கலவரம் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்க எத்தனிக்கிறார்கள்!அதுவும் நல்லதே!புலிகளை அழிக்கிறோம்,மக்களை மீட்கிறோம் மனிதாபிமானப் போரென்று பிரகடனப்படுத்தி,தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி சாட்சியமற்ற இன அழிப்பை மேற் கொண்டது போல்,இப்போது மீண்டும் “ஒரு தொகை” தமிழ் மக்களை இனக்கலவரம்,இன வாதத்தை தூண்டி அரங்கேற்ற முயற்சிப்பது எங்கள் நியாயமான விடுதலைக்குப் பலம் சேர்க்கும்!1983- க்குப் பின் புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்தோ ,சர்வதேசத்தின் கண்களுக்கு பயந்தோ இனக்கலவரமென்ற ஒன்றை அரங்கேற்ற முடியவில்லை!இப்போது வாய்ப்புகள் இருபாதாக மிரட்டுகிறார்!பாவி போகுமிடம் பள்ளமும் திட்டியும் தானே?அடுத்த வெளி நாட்டுப் பயணம் எப்போ?எங்கு?சொல்ல மாட்டீர்களாமே?பரவாயில்லை,விடுங்கள்,விமான நிலையத்திலிருந்து கடைசி நிமிடத்திலாவது எங்களுக்கு “விசுவாசமானவர்கள்”தகவல் சொல்ல மாட்டார்கள,என்ன?????????????

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...