Thursday, May 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இந்தியா இனியும் நாடகம் ஆடக்கூடாது!

இனியொரு... by இனியொரு...
05/25/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது என்று தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான “ஆனந்த விகடன்’ வலியுறுத்தியிருக்கின்றது.

இது தெடார்பாக “இரக்கமற்ற இறையாண்மை’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதேநேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது இலங்கை இராணுவம்.

“முந்தைய தேர்தலை விட வலுவாக வென்றுவிட்டோம்’ என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை… “இறுதி வெற்றியை நெருங்கி விட்டோம்’ என்று பீரங்கிகள் வெடித்துக் கரும் புகையால் விண்ணை நிரப்பின.

“விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்’ என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதேசமயம், “பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்’ என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்! “விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள் என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்லமுடியாது.

இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ பசியாலோ உயிர்நீத்தாலும் அதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்கவேண்டும். அது அடுத்த நாட்டு விவகாரம் என்று சொல்லி இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக்கூடாது.

குண்டு மழையால் விளைந்த காயங்களாலும் குடலைச் சுருட்டும் பசியாலும் வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியபங்கு வகிக்க வேண்டும்.விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.

உலக நாட்டுப் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும் கூட இந்திய அரசின் பொறுப்புத்தான். இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால் இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் இறையாண்மை என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிபட்டுவிடும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கோபாலசாமி, நெடுமாறன், திருமா மற்றும் ஈழத்தமிழர் அனுதாபிகளுக்கு பகிரங்கக் கடிதம்!

Comments 1

  1. பகவன் says:
    17 years ago

    இறையாண்மை என்ற பெயரில் மாபெரும் இனப் படுகொலையை இந்தியா நடத்தியிருக்கிறது. வெகுவிரைவில் அதற்குரிய தண்டனையை இந்தியா பெறும். கட்டபொம்மனில் தொடங்கி, தேசியக்கொடியைத் தந்த தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், வ.உ.சி என எண்ணற்ற தமிழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து இந்திய விடுதலைக்கு வித்திட்டார்கள். அப்படிப்பட்ட தமிழர்களைத் துளி கூட‌ மதிக்காமல் இந்தியத்தேசியம் அவர்களுடைய சொந்தங்கள் வாழும் இடத்தைச் சுடுகாடாக்கியிருக்கிறது; வரலாற்றுப்பிழையை இழைத்திருக்கிறது. அதற்குரிய தண்டனையைத் தமிழர்கள் கொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In