இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால்- நாகை
மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகமாக காணப்படுவதால், இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடிக்கிறோம். எதிர்பாராதவிதமாக அலைகளின் ஓட்டம், காற்றின் வேகம் காரணமாக அங்கு செல்ல நேரிடுகிறது.
எனவே இந்திய கடல் எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிப் பது என்றும், கண்டிப்பாக இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று யாராவது மீன்பிடித்து இலங்கை கடற்படையினரிடம் சிக்கினால், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை யாரும் எடுக்க மாட்டோம் என்றும், அவ்வாறு மீன்பிடிக்கும் மீனவர்களை 2 மாதம் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடை விதிப்பது என்றும், ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பது என்றும் காரைக்கால், நாகை மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிக் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதால் பாதுகாப்புக் கெடுபிடிகள் மத்தியில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின், குறிப்பாக வடக்கு மீனவர்களின் வளங்கள் பாதிப்படைந்துள்ளது. காரைநகர் போன்ற பகுதிகளில் மீனவர்களின் நாளந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாகியிருந்தது. இதனைப் பயன்படுத்தி மீனவர்களை தமக்கும் இலங்கை அரசிற்கும் ஆதரவாகத் அணிதிரட்டுவதற்கு டக்ளஸ் தேவானந்தா போன்ற அரச எடுபிடிகள் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் முடிவு வரலாற்று முக்கியத்துவமுடையது,








