Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே காரணம் :அமெரிக்க நிதியில் இயங்கும் அமைப்பு

இனியொரு... by இனியொரு...
09/06/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

A Tamil demonstrator takes part in a protest near the Commonwealth Secretariat in Londonமக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யும் நோக்கோடு அமெரிக்க அரசின் நிதி வழங்கலில் இலங்கையில் மார்கா உருவாக்கப்பட்ட காலத்தில் தொண்டு நிறுவனங்கள் அறியப்படாதவை. இலங்கையில் அதன் வெற்றியே ஏனைய நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தக் காரணமாக அமைந்தது. மார்கா என்ற தன்னார்வ நிறுவனம் இன்று வரை அமெரிக்க அரசின் நிதிக் கொடுப்பனவிலேயே இயங்கி வருகிறது. இலங்கையில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடும் மார்கா அடிப்படையில் ஏகாதிபத்தியங்களின் தகவல் மையமாகவும் செயற்படுகிறது.

அமெரிக்காவைப் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக புலம்பெயர் விதேசிய அமைப்புக்கள் கூறிவரும் அதே வேளை அமெரிக்க அரச நிதியில் இயங்கும் மார்கா இலங்கையிலிருந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் வன்னியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் தடுத்துக் கேடையமாகப் பயன்படுத்தியதே காரணம் என்றும் இதனால் படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்பு என்றும் தெரிவிக்கிறது.

தவிர, அய்க்கிய நாடுகள் நிறுவனம் புலிகளிலிருந்து மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லக் கூடியதான மூலோபாயத்தை வகுக்கத் தவறியுள்ளது என்றும் பிரச்சனையின் மூலத்தை கண்டறியவில்லை என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்ததை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இனக்கொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பத்தைத் தண்டிகக் கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் எம்மத்தியில் இல்லை.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் தலைமைகளின் ஒரே நோக்கம் மக்களிடமிருந்து இயலக்கூடிய பணத்தைச் சுருட்டிக்கொள்வதே. இந்த அடிப்படையில் நடந்த தவறுகளை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இலங்கை பாசிச அரசைத் தண்டிப்பதற்கான நெறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகளிடம் கோருவதற்குப் பதிலாக ஐக்கிய நாடுகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இரண்டுபக்கமும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் வலிந்து கூறப்பட்டுள்ளது. இதனைக்கூடக் கேள்வி கேட்காத புலம்பெயர் அமைப்புக்கள் அப்பாவிப் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கும் ஐ.நாவின் செயலுக்குத் துணை செல்கின்றன.

அமெரிக்க நிதியில் இயங்கும் மார்காவின் அறிக்கை தமிழ்த் தலைமைகளின் வியாபார நோக்கத்தின் விளைபலன். இன்று மார்கா போன்ற அமைப்புக்கள் உலகம் முழுவதும் ஜனநாயக வாதிகளுடன் தமது அரசியல் மொழியில் பேசுகின்றன. இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரும் தமிழ்த் தலைமைகளை குற்றம் சுமத்துகின்றன. மக்களை ஏமாற்ற புலம்பெயர் தமிழத் தலைமைகள் கூறிய பொய் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது மட்டுமல்ல உலகின் மிகவும் கோரமான பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவையும் பாதுகாப்பதில் போய் முடிந்துள்ளது. இடையில் அனைத்தையும் இழந்து அழிவைச் சந்திப்பவர்கள் மக்களுக்காக ஆயுதமேந்திய அப்பாவிப் போராளிகளே.

http://in.reuters.com/article/2014/09/05/srilanka-civil-war-idINKBN0H01NT20140905

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

Comments 1

  1. gnanasangaree geevasangaree says:
    12 years ago

    மார்கா நிறுவனம் தமிழ் மக்கள் அழிவுக்கு காரணம் புலிகள் என்பதாகவும்,மக்களை கொன்றது அரச படைகள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.மக்கள் அழிவதை சர்வதேசம் தடுக்கும் என்பதற்காக புலிகள் மக்களை தடுத்து வைத்திருந்தார்கள் என்பதும் ,எவ்வளவு மக்கள் இறந்தாலும் புலிகளை அழித்துவிட வேண்டும் என்று அரசும்,அதற்கு இந்தியா,அமேரிக்கா போன்ற சில சர்வதேச நாடுகளும் துனையாக இருந்தது என்பது உன்மை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...