தமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் சர்வதேசப் பொறுப்பாளரும், இலங்கை அரச உளவாளியும், ஆயுதக் கடத்தல்காரரும், சர்வதேச போலிஸ் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இன்ரர் போல் நிறுவனத்தால் தேடப்படுபவருமான கே.பி என்ற குமரன் பத்மனாதன் சுதந்திர மனிதர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.குமரன் பத்மநாதன் அரசாங்க வீடொன்றில் தங்கவில்லை எனவும் அவர் கிளிநொச்சி, மதவாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு சுதந்திரமாக செல்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான போராளிகளை சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்யும் போது கே.பி சுதந்திரமாக உலாவருவதாக இலங்கை அரசு அறிவிக்க இன்டர்போல் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
கே.பி ஐ மலேசியாவில் கைதுசெய்து இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தின் பின்னணியில் உலகப் போலிசுக்கும் தொடர்பிருந்ததா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
கே.பி ஐ துரோகி என என்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை தமது இரட்சகர்கள் என்றும் அன்னிய தேசியம் பேசும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்கள் கே..பி ஐ இன்டர்போல் கைதுசெய்யக் கோரி இதுவரை முறைப்பாடுகள் கூடச் செய்ததில்லை.
////இலங்கை அரசு அறிவிக்க இன்டர்போல் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது./////
/////புலிசார் புலம்பெயர் அமைப்புக்கள் கே..பி ஐ இன்டர்போல் கைதுசெய்யக் கோரி இதுவரை முறைப்பாடுகள் கூடச் செய்ததில்லை./////
நான் இங்கே எழுதப்போவது இன்டர் போல் பற்றியே . கே.பி பற்றி அல்ல .
இன்ரர் போலிடம் புலம் பெயர் தமிழர் முறையிடவில்லை என்பது உலக சட்ட நடை முறை தெரியாத கதை . இன்டர் போலிடம் தனிநபர்கள் முறையிட முடியாது , இன்டர் போல் என்பது இறையாண்மை உள்ள அரசுகளுக்கிடையே அந்தந்த நாட்டு நீதி மன்ற கட்டளைகளை நிறை வேற்றும் ஏஜன்சி அதற்கு எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லை .
இரண்டாவதாக , ஒரு நாடு ஒருவரைக் கைது செய்ய இண்டர் போலிடம் கோரினால் அவரைப் பிடித்து அந்த நாட்டிடமே ஒப்படைப்பதுடன் இன்டர் போலின் கடமை முடியும் . இங்கே கே.பி என்ற நபரை இன்டர் போல் பிடித்து யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? சிறீலங்காடமா ? அவர் தானே சிறீலங்காவில் இருக்கின்றார்.
காட்டிக்கொடுப்பவர்கள் காலத்தில் நிலைப்பதில்லை
குமரன்பத்மநாதனனை இந்தியா வசம் ஒப்படைக்கலாம்.அவரை இந்தியா கொண்டுவந்து ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கலாம். ஈழப்பேரழிவுக்கும் இன்றைய ஈழ மக்களின் அவலங்களுக்கும் கே.பீ யின் காட்டிகொடுத்தலே காரணம்.ராஜீவ் கொலை சதி ரகசியங்களை ஸ்ரீலங்காகவிடம் சொல்லி அதன் மூலம் ஸ்ரீலங்கா இந்தியாவை மிரட்டி பணியவைத்து தன் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.
பணம் இல்லையேல் பிணமென்பார்கள். கையில் பணத்தோடு தப்பிய
தமிழீழ விடுதலைப்புலிகளெல்லாம் உயிருடனும் பாதுகாப்புடனும்
இலங்கை உட்பட உலகெங்கும் வாழ்கின்றார்கள்.
பணமில்லாமல் கையில் வெடிகுண்டையும்,புலிக்கொடியையும்
துப்பாக்கியைத்தூக்கியவர்கள் மாவீரர்களானார்கள்,காணாமல்போனார்கள்
சிறைகளில் வாடுகின்றார்கள்.
உலகமெங்கும் எத்தனை கேபிக்கள் வாழ்கின்றார்கள் என்பதை
யார் அறிவார்.