புலிகளை அழிக்குமாறு ராஜபக்கசவை அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனிப்பட்ட வகையில் ஊக்கப்படுத்தினார் என்ற தகவலை விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் பதிவு செய்த்துள்ளது. தம்மை ஊக்கப்படுத்திவிட்டு இப்போது போரை நடத்திய முறை குறித்தும் போர்க்குற்றம் குறித்தும் தம்மை கேள்விக்கு உட்படுத்துவதாக ராஜபக்ச தனது விரக்தியை இலங்கைக்கான அமரிக்கத் தூதுவராக இருந்த பற்றீசியா பட்டனிஸ் இடம் தெரிவித்துள்ளார். இத் தகவலை பற்றீசியா பட்டனிஸ் கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்துள்ளார். போர்க்குற்றம் குறித்த அறிக்கை சட்டசபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அது குறித்து உதவி இராஜங்க செயலாளர் பிளேக் இலங்கை அமைச்சர் போகலோகமவிடமும், அமரிக்காவிற்கான இலங்கைத் தூதரின் வாஷிங்டனிலும் உரையாடியதாகத் தெரிவித்தார். மேலும், அமரிக்க சட்டசபைக்கு போர்க்குற்ற அறிக்கையைச் சமர்ப்பதை ஒரு மாதகாலத்தால் தாமதமாக்கியுள்ளதாகவும் ராஜபக்சவிற்கு அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கூட இலங்கை அரசிற்கு தெரிவித்த பின்னரே முன்வைக்கப்படுகின்றன. மக்களின் பிணங்களின் மேல் இவர்கள் நடத்தும் அதிகார நாடகம் அருவருப்பானது.
கடந்த ஐந்து வருடங்களாக இனியொரு இனப்படுகொலையில் அமரிக்காவின் பங்கு குறித்து வெளிப்படுத்தியிருந்தும் புலி சார் வியாபாரிகள் இதனை நிராகரித்து வந்தனர். ஜெனீவாவிலும், உலக நாடுகளிலும் அமரிக்காவோடு இணைந்து ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாக தம்மாலான பணத்தைச் சுருட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ்கின்றனர். தமது உயிரைத் தியாகம் செய்த போராளிகளும், மக்களும், புலம்பெயர் நாடுகளில் இவர்களின் நாடகத்தில் நம்பிக்கைவைத்து ஏமாற்றப்பட்டவர்களும் பேரினவாத அரசிற்கு எதிரான புதிய போராட்டத்தின் சாட்சிகளாவர்.
¶3. (C) Expressing a combination of bewilderment and frustration, the president pointed out that while President Bush personally had encouraged him to pursue defeat of the LTTE, we were now criticizing Sri Lanka for the conduct of its fight against terrorism. The president raised the issue of the war crimes report, which is being prepared by Department. Ambassador explained the origins of the report as congressionally mandated, noted that Assistant Secretary Blake had discussed the report with FM Bogollagama and with the Sri Lankan ambassador in Washington, and informed the president that its release to Congress had been delayed by a month. On the question of freedom of movement for IDPs, the president held to his standard paternalistic line that the GSL could not release them from the camps until de-mining was finished and infrastructure was restored. He promised that 70 percent of the IDPs would be returned by the end of January. Asked to clarify whether they would be allowed to return to their own homes or resettled in new closed camps, FM Bogollagama interjected that they would go to their own homes.
BUTENIS