இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் இலங்கை அரசின் பேரினவாத அரசின் நலன்களுக்காக வெட்டித் திருத்தப்படுகிறது. வன்னிப் படுகொலைகள் திட்டமிடப்பட்ட போதும் அது நிறைவேற்றப்பட்ட போதும் போர் முடிந்தத்தும் 13 வது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பாட்டதற்கும் அதிகமாக உரிமைகளைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்க வழங்கப்போவதாக ராஜபக்ச அரச பாசிஸ்டுக்கள் கூறி வந்தனர். அவர்களோடு இணைந்து டக்ளஸ் தேவானந்தாவின் இராணுவத் துணைக் குழு மகிந்த ராஜபக்ச அதிகமாக உரிமைகளை வழங்கப்போவதாகப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தது.
திருத்தச் சட்டத்தில் இலங்கையின் ஜனாதிபதி விரும்பினால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. சட்டத்தில் முதலாவது மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தின் அடிப்படையில் அந்த அதிகாரத்தை நீக்குவதாக அமைச்சரவை முடிவு செய்த்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சரவை இந்த கேலியான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
இனப்படுகொலை செய்வதற்கும் இனச்சுத்திகரிப்பை நடத்துவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் குறித்து மூச்சுக்கூடவிடாத இலங்கை அமைச்சவை பேரினவாத அமைச்சரவை என சட்டரீதியாக நிறுவுயுள்ளது. மாகாண சபைகளை இணைப்பது மட்டுமல்ல தனியான அரசை உருவாக்கும் அடிப்படை உரிமை குறித்துக்கூட மக்களே தீர்மானிக்கவேண்டும், பேரினவாத ஜனாதிபதியோ தனி நபர்களோ அல்ல.








1965. It should be burned in public like the White Paper on District Councils.