இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருவதற்கு இதுவே காரணம். அமைதியான முறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன.
பலம்பொருந்திய நாடுகள் இலங்கைக்கு மறைமுகமாக அளித்து வரும் ஆதரவினால், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்பான விடயங்களில் மெத்தனப்போக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது.
இலங்கையுடன் அமெரிக்காவும், இந்தியாவும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளன. 13ம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி சர்வதேசத்திற்கு வாக்களித்திருந்தார்.
எனினும், ஆளும் கட்சியின் சிலர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.









நீங்க எப்படி புலிக்கு ஆதரவு காட்டினீர்கள்?