Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்தியாவிற்கு போர்நிறுத்தம் பற்றி அக்கறையில்லை : தா.பாண்டியன்

இனியொரு... by இனியொரு...
10/29/2008
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

சென்னை, அக்.29-

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும். அதைவிட்டுவிட்டு குண்டுவீச்சு நடக்கும் இடத்தில் உணவுப் பொருள்களை வழங்குவோம் என இந்தியாவும் இலங்கையும் அறிவித்திருப்பது கபட நாடகம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ராணுவத்தினர் விமானங்களின் மூலம் குண்டுகளைப் போட்டும், ஏவுகணைகளின் மூலம் நடத்தும் தாக்குதல்களால் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் ஒரே நோக்கத்திற்காக, இலங்கை அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே, நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென்றும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாடு மக்கள் சார்பில் வற்புறுத்தி வந்தோம்.

இந்திய அரசு, இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை எடுத்துக்கூறி வலியுறுத்தி போரை நிறுத்துமாறு வேண்டுமென்றும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து அனுப்பிட அனுமதியும் கேட்கப்பட்டது.

பல நாட்களுக்குப் பிறகு தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசிடம் வற்புறுத்தியதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து பாஸில் ராஜபக்சேவிடம் இந்தியா வற்புறுத்தியதா என்பது பற்றியும், அதை பாஸில் ஏற்றுக் கொண்டாரா என்பது பற்றியும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

போர் நிறுத்தம் பற்றி அந்த சந்திப்பில் பேசப்பட்டதா என்றே தெரியவில்லை.

இலங்கை அரசின் சார்பில் போர் நடத்தி வெற்றி பெற்ற பின்னர் தீர்வுக்கு ஆலோசனை கூறப்படும் என்றே கூறுகிறது.

இது பற்றியும் தமிழக முதல்வரோ, வெளி விவகார அமைச்சரோ திட்டவட்ட பதிலைத் தரவில்லை.

ஏற்கனவே இலங்கைக்கு தந்த ஆயுத உதவி போதாதென்று இப்போது உணவுப் பொருட்களையும் இந்திய அரசு கொடுக்க இருக்கிறது. 800 டன் உணவு, மருந்துப் பொருட்களை ராஜபக்சே மூலம் தான் அனுப்பப்பட உள்ளன.

தலைக்கு மேல் குண்டு விழும் இடத்தில் எப்படி பால் வினியோகிக்க முடியும்?. நாம் அனுப்பும் உணவும் மருந்தும் போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

எனவே, இதில் கபட நாடகம் தான் அதிகம் உள்ளது. குண்டுவீசும் இடத்தில் குண்டு தாக்காத வகையில் குடை ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?.

இலங்கைக்கு அரசிய் கட்சிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆன்மீகவாதிகளை அங்கு அனுப்பி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு இலங்கை அரசு தயாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

காயம்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக மருத்துவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது சிங்களர் யாரேனும் காயம்பட்டிருந்தாலும் சிகிச்சை பெறலாம்.

ஆனால், ராஜபக்சே மூலம் ஒரு குண்டூசியைக் கூட தர நாங்கள் தயாராக இல்லை. அவரை நம்ப முடியாது.

இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி விழிப்பு பெற வேண்டும். தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள நிதி, உணவு, மருந்துவ உதவி குறித்த அறிவிப்புகள் எந்த மனநிறைவையும் தரவில்லை. போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும்.

உடனே போர் நிறுத்தவும், துன்பப்படுவோர்க்கு உதவிட அனுமதி என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.

பல நாட்களுக்குப் பிறகு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்த இந்தியாவின் வெளி விவகார மந்திரி, போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசிடம் வற்புறுத்தியதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கை அரசின் சார்பில் போர் நடத்தி வெற்றி பெற்ற பின்னர் தீர்வுக்கு ஆலோசனை கூறப்படும் என்றே கூறுகிறது. இது பற்றியும் தமிழக முதல்-அமைச்சரோ, வெளிவிவகார மந்திரியோ திட்டவட்ட பதிலைத் தரவில்லை. எனவே, இந்த அறிவிப்புகள் எந்த மனநிறைவையும் தரவில்லை. உடன் போர் நிறுத்தவும்-துன்பப்படுவோர்க்கு உதவிட அனுமதி என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்ïனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும்.

இவ்வாறு தா.பாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை தமிழர் பிரச்சினை : ரெயில் மறியல் போராட்டம்

Comments 3

  1. chandran.raja says:
    17 years ago

    தோழர் தா.பாண்டியன் முதலில் எனது கம்யூனிச வணக்களை உங்களுக்கு தெரிவித்துகொள்ளுகிறேன்.இலங்கையில் வடக்கே பனைமுனையில்லிருந்து தெற்கே தெய்வேந்திர முனைவரை தமிழ்மக்கள் பரந்துவாழ்கிறார்கள் ஒட்டுமொத்தமாக கணக்கு பார்க்கும் போது நாற்பதுலட்சத்திற்கு கூடுமோ ஒழிய குறையாது.வன்னியில் அன்னவாக மூன்றுலட்சம் மக்கள் இருப்பார்கள் இந்த மூன்றுலட்சம் மக்களை சுத்தியே புலிகளின் அடாவடித்தனம் அராஜகம் அரசாங்கம் நடந்தேறுகிறது.
    இந்தியாவில் சிங்களஅரசு குண்டுவீசி தமிழ்மக்களை அழித்தொழிகிறார்கள் என கதை கட்டவுள்த்து விடப்பட்டிருக்கிறது. சிங்களஅரசின் யுத்தவிமானங்கள் தெய்வேந்திர முனையையும் பனைமுனையையும் எட்டியும் பார்ததில்லை;அப்படியென்றால் எப்படி தமிழ்

    மக்களின் அழித்தொழிப்பாகும்.
    பட்டணத்தில் பொதுஜன-போக்குவரத்துள்ள இடத்தில் குண்டு வைக்கிறதும் தனியொரு மனிதனை அழிக்கிறதிற்கு தற்கொலைகுண்டுதாரியை அனுப்புவது அதுவொரு விடுதலைப்
    போராட்டத்தின் பணியா? அப்பட்டமான பயங்கரவாதம் இல்லையா?
    ஒருநாட்டில் பயங்கரவாதம் தோன்றினால் அந்தநாட்டின் அரசாங்கம்தானே பெறுப்பேற்கவேண்டும்.
    ஆகவே இது பற்றி கூடியகவனம் செலுத்தும் படி பணிவன்புடனும் உரிமையுடனும்
    கேட்டுக் கொள்ளுகிறேன்.

  2. Satheesh Jayabalan says:
    17 years ago

    To Chandiran.Raja,

    உங்களது கருத்து ஒரு புதிய பார்வை.

    என்னை போன்ற தமிழர்களுக்கு , தொலைகாட்சியில் சொல்லப்படுகிற விசயங்களே சரி என்கிற எண்ணம் தோன்றுகிறது .

    உண்மை எது என்பது சரிவர புரியவில்லை .

    சண்டை நிறுத்தம் எப்போது ? நிம்மதி எப்போது ?

    – சதீஷ் ஜெயபாலன்

  3. chandran.raja says:
    17 years ago

    சதீஷ் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
    இலங்கைப்பிரச்சனை-அல்லது யுத்தம் ஏதோ ஒருவகையில் சர்வதேசத்துடன்
    சம்பந்தப்பட்டிருக்கிறது.சின்ன உதாரணம்;ஒரு மில்லியன் தமிழ்மக்கள் உலகம்
    முழுவதுமாக குடியேறியிருக்கிறார்கள்.இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கு தங்களையும்
    அறியாமல் துன்பம்கொடுத்தார்கள் என்றால் நம்பிவீர்களா? பல பெயர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் அதுவே உண்மை.அல்லது இந்த இருபத்தைந்து
    வருடம் இந்த கொடுரயுத்தம் நடந்துகொண்டிருக்க முடியுமா?போராட்டத்தை பிரபாகரன்
    தாய்வழி-தகப்பன்வழிசொத்தாகவோ சீதனமாகவோ கருதியிருக்க முடியுமா?

    இனமோ மதமோ நிறமோ யுத்தத்தை ஏற்படுத்துவதில்லை.அதை வழிநடத்துபவர்கள்
    தவறனவழிக்கு தூண்டிவிடுகிறார்கள்.ஒரு உள்நாட்டுயுத்ததமே எங்களுக்கு இவ்வளவு
    கசப்பான அனுபவங்களை தந்திருக்கிறது என்றால் உலகஅளவில் வெடிக்கப்போகிற யுத்ததம்
    எமக்கு இன்னும் எவ்வளவு அனுபவத்தை தரயிருக்கின்றன.
    “பொருள்ளாதாரதின் அடித்தளததிலேயே அரசியல் கட்டுமானம் ஏற்படுத்தப்படுகிறது”-மாக்ஸ்-
    இப்பொழுது உங்களுக்கு ஒன்றைமட்டும் உறுதியாக என்னால் சொல்லமுடியும்.
    தொழிலாளரும் உழைப்பாளிகளும் யுத்தத்தை விரும்புவதில்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In