Wednesday, June 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம்-நீதிமன்றம் கேள்வி?

இனியொரு... by இனியொரு...
07/06/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

 இந்திய அரசியல் சட்டத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம் போன்ற சொற்றொடர்கள் இப்போதைய இந்தியாவுக்கு பெயரளவில் கூட தேவையற்ற ஒன்றாகி வருகிறது. நாடாளுன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு உயர்பதவிகளில் உள்ளோர் பதவியேற்கும் போது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது பயன்படுத்தும் இந்த வார்த்தைகள் குறீத்த கேள்வி ஒன்றை நீதிமன்றம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளைச் சேர்த்திருப்பது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, “”நல்ல நிர்வாகத்துக்கான இந்திய அறக்கட்டளை” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் கோரும் வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்தது. சமத்துவத்தை ஏற்கிறேன் என்று அரசியல் கட்சி உறுதிமொழி ஏற்பது அந்தக் கட்சியின் உரிமையைப் பறிப்பதாகும் என்பது மனுதாரரின் வாதம். மதச்சார்பின்மை, சோஷலிசம் என்கிற வார்த்தைகளை நம்முடைய அரசியல் சட்ட முகப்புரையில் சேர்க்க உதவிய இந்திய அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தமே (1976-ல் மேற்கொள்ளப்பட்டது) கேள்விக்குரிய விஷயம். எனவே இந்த திருத்தத்தின்படியான அம்சத்தை வலியுறுத்தக் கூடாது என்பது மனுதாரரின் வாதம். இதைத்தவிர மனுதாரர் வேறு காரணம் எதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டாததால், மனுவைத் திருத்தி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டனர். இந்தியாவில் எந்த ஒரு தனி நபரும் அல்லது ஒரு குழுவும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. புதிதாக கட்சி தொடங்க நினைப்பவருக்கு சமத்துவக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் முதலாளித்துவக் கருத்துகளே பிடித்திருக்கின்றன என்றால், பதவி ஏற்கும்போது இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ள சோஷலிசக் கருத்தை ஏற்பேன், அதை அமல்படுத்த உறுதி பூணுவேன் என்று கூறினால் அது முரணாக இருக்காதா என்பதே மனுதாரரின் கேள்வியாகும். இந்தக் காரணத்தால் அரசியல் சட்ட திருத்தத்தையே கைவிட வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும். அரசியல் சட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மூல திருத்தம் சரியா, தவறா என்ற கருத்தில் இப்போது புகாமல், புதிய அரசியல் கட்சி தன்னைப் பதிவு செய்துகொள்ளும்போது இந்தக் கொள்கைகளை ஏற்கிறேன், இவற்றைப் பாதுகாக்க உறுதி கூறுகிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக பெஞ்ச் கூறியது. 42-வது திருத்தம் ஏற்கத்தக்கதா, இல்லையா என்பதை விசாரிக்கப் போவதில்லை என்றும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியிருக்கிறது. சோஷலிசம் என்ற வார்த்தை உங்களுடைய உரிமையைப் பாதித்திருந்தால் அதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கலாம் என்றும் நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை - மேர்வின் சில்வா.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...