Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஆஸ்கர் விருது சில சர்ச்சைகள்….

இனியொரு... by இனியொரு...
02/24/2009
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்
ஸ்லம்டாக் மில்லியனர் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியதை உலக அதிசயமாக இடைவிடாமல் ஒளிபரப்பின வட இந்திய ஆங்கில செய்தி ஊடகங்கள். ஸ்லம்டாக் மில்லியனரின் வெற்றியை தங்களது சொந்த வெற்றியாக கொண்டாடும்படி இந்தியர்கள் இந்த ஊடகங்களால் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்தியர்களான ஏ.ஆர். ரஹ்மானும், ரெசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருது பெற்றது சரித்திர சாதனை என்பதில் ஐயமில்லை. அதேநேரம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மற்ற ஆறு விருதுகளுக்கும் சேர்த்து இந்தியர்கள் சந்தோஷ­ம் கொண்டாடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்கர் விருதின் பூர்வீகம் அறிந்த கமல்ஹாசன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே ரஹ்மானை பாராட்டியிருக்கிறார். அமெரிக்கர்கள் தங்களது சினிமாவுக்கு அளிக்கும் விருதான ஆஸ்கரை அமெரிக்க படத்தில் வேலை செய்து பெற்றிருக்கிறார் ரஹ்மான் என்று தெளிவுபட கூறி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் இந்தியாவில் தயாரான படம் என்றாலும் அது இந்திய படம் அல்ல. அப்படியிருக்க அப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் விருது கிடைத்ததுக்காக ஏன் இந்தியர்களும், இந்தி மீடியாக்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார், முகேஷ்பட்.

ஸ்லம்டாக் மில்லியனர் போலவே அதிக ஆஸ்கர் விருதுகளை குவித்த படம் லார்ட் ஆஃப் தி ரிங். இப்படம் நியூசிலாந்தில் தயாரானது என்றாலும் இதுவொரு அமெரிக்க தயாரிப்பு. ஆஸ்கர் விருது இப்படத்துக்கு கிடைத்தபோது, நமது படத்துக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது என்று நியூசிலாந்துக்காரர்கள் பட்டாசு வெடிக்கவில்லை. இதையும் முகேஷ்பட்டே கூறியிருக்கிறார்.

அதேபோல் அமிதாப்பச்சனும் இந்தியாவை சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் ஸ்லம்டாக் மில்லியனரா அல்லது டெல்லி 6 படமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விருது கிடைத்த சந்தோ­ஷத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டிய கசப்பு மாத்திரைகள் இந்தக் கேள்விகள் என்பதில் ஐயமில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தற்காலிக முகாம்களை சுயாதீனமாக பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவும்- EU

Comments 3

  1. john says:
    17 years ago

    திரு ஜமுனா ரஜேந்திரன் அவர்களின் ஆஸ்காரைப்பற்றிய கட்டுரை ஒன்றை மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்
    .காரணம் ஆஸ்கார் என்ற அமெரிக்கமாயையை களைவதற்காக.

  2. yamuna rajendran says:
    17 years ago

    அன்புள்ள ஜான். இரு முறை இது குறித்த எழுதியிருக்கிறேன். கமல்ஹாஸனை முன் வைத்து ஒரு முறையும்- இளையராஜா சிம்பொனி அமைத்த தருணத்தில் மறுமுறையும்- இத்தகைய ஆரவாரங்கள் ஆபாசமானவை என்பது குறித்து எழுதியிருக்கிறேன். உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஐரொப்பியர் அல்லது அமெரிக்கர்அல்லாதவர்கள் ஆஸ்கரில் சிறந்த படத்திற்கான பரிசு பெறுகிறார்கள். அந்த நாடுகளில் எதிலும் இத்தகைய அறுவறுப்பான ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் அரசியல் அலட்டல்கள் இடம்பெறுவதில்லை. வெள்ளையர்கள் அல்லது அமெரிக்கர்களின் ரசரனயைத்தான் இன்னும் எமது நாடுகளில் உச்சம் அல்லது சிகரம் எனக் கொண்டாடுகிறோம். இது காலனிய அல்லது நவகாலனிய அடிமை மனோபாவம். உலகத்தின் சிகரநகரம் உச்சசினிமாநகரம் ஹாலிவுட் என நம்புகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உலகின் மகத்தான கலைஞர்களை நோபல் போலவே ஆஸ்கரும் கண்டுகொள்ளாததற்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் இருக்கிறது. தாஸ்தாவய்வ்ஸ்க்கி நோபல் பெறவில்லை.ரித்விக் கடக் ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் இருவரும் தத்தமது வெளியில் சிகரங்களைத் தாண்டிய படைப்பாளிகள். எனது நிலைபாடு இயைராஜாவும் ரஹ்மானும் மகத்தான கலைஞர்கள் இல்லை என வாதிடுவதல்ல – மாறாக அறியாமையிலிருந்து வெளிப்படும் வெற்றுக் கூச்சல்களை புறந்தள்ளக் கோருவது. வேறு முக்கியமான காரியங்கள் நிறைய இருக்க இது பற்றி இப்போது யோசிப்பது நேர விரயம் என்பதால் அதிகம் எழுத விரும்பியிருக்கவில்லை. அன்புடன் ராஜேந்திரன்.

  3. john says:
    17 years ago

    அன்புடன் திரு ஜமுனா ரஜேந்திரன் அவர்களுக்கு.
    நீங்கள் குறிப்பிட்டபடி, தங்களுடைய அவ்விரு ஆக்கங்களும் இதுவரை என் கண்ணில் படாததால் அப்படி கேட்டிருந்தேன்.
    உங்கள் வேலைப்பழுவின் மத்தியிலும் எனக்காக ஒதுக்கிய சிறு நேரத்திற்காக நன்றி. ஜான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In