இந்தியர்களான ஏ.ஆர். ரஹ்மானும், ரெசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருது பெற்றது சரித்திர சாதனை என்பதில் ஐயமில்லை. அதேநேரம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மற்ற ஆறு விருதுகளுக்கும் சேர்த்து இந்தியர்கள் சந்தோஷம் கொண்டாடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆஸ்கர் விருதின் பூர்வீகம் அறிந்த கமல்ஹாசன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே ரஹ்மானை பாராட்டியிருக்கிறார். அமெரிக்கர்கள் தங்களது சினிமாவுக்கு அளிக்கும் விருதான ஆஸ்கரை அமெரிக்க படத்தில் வேலை செய்து பெற்றிருக்கிறார் ரஹ்மான் என்று தெளிவுபட கூறி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் இந்தியாவில் தயாரான படம் என்றாலும் அது இந்திய படம் அல்ல. அப்படியிருக்க அப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் விருது கிடைத்ததுக்காக ஏன் இந்தியர்களும், இந்தி மீடியாக்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார், முகேஷ்பட்.
ஸ்லம்டாக் மில்லியனர் போலவே அதிக ஆஸ்கர் விருதுகளை குவித்த படம் லார்ட் ஆஃப் தி ரிங். இப்படம் நியூசிலாந்தில் தயாரானது என்றாலும் இதுவொரு அமெரிக்க தயாரிப்பு. ஆஸ்கர் விருது இப்படத்துக்கு கிடைத்தபோது, நமது படத்துக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது என்று நியூசிலாந்துக்காரர்கள் பட்டாசு வெடிக்கவில்லை. இதையும் முகேஷ்பட்டே கூறியிருக்கிறார்.
அதேபோல் அமிதாப்பச்சனும் இந்தியாவை சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் ஸ்லம்டாக் மில்லியனரா அல்லது டெல்லி 6 படமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
விருது கிடைத்த சந்தோஷத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டிய கசப்பு மாத்திரைகள் இந்தக் கேள்விகள் என்பதில் ஐயமில்லை.
திரு ஜமுனா ரஜேந்திரன் அவர்களின் ஆஸ்காரைப்பற்றிய கட்டுரை ஒன்றை மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்
.காரணம் ஆஸ்கார் என்ற அமெரிக்கமாயையை களைவதற்காக.
அன்புள்ள ஜான். இரு முறை இது குறித்த எழுதியிருக்கிறேன். கமல்ஹாஸனை முன் வைத்து ஒரு முறையும்- இளையராஜா சிம்பொனி அமைத்த தருணத்தில் மறுமுறையும்- இத்தகைய ஆரவாரங்கள் ஆபாசமானவை என்பது குறித்து எழுதியிருக்கிறேன். உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஐரொப்பியர் அல்லது அமெரிக்கர்அல்லாதவர்கள் ஆஸ்கரில் சிறந்த படத்திற்கான பரிசு பெறுகிறார்கள். அந்த நாடுகளில் எதிலும் இத்தகைய அறுவறுப்பான ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் அரசியல் அலட்டல்கள் இடம்பெறுவதில்லை. வெள்ளையர்கள் அல்லது அமெரிக்கர்களின் ரசரனயைத்தான் இன்னும் எமது நாடுகளில் உச்சம் அல்லது சிகரம் எனக் கொண்டாடுகிறோம். இது காலனிய அல்லது நவகாலனிய அடிமை மனோபாவம். உலகத்தின் சிகரநகரம் உச்சசினிமாநகரம் ஹாலிவுட் என நம்புகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உலகின் மகத்தான கலைஞர்களை நோபல் போலவே ஆஸ்கரும் கண்டுகொள்ளாததற்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் இருக்கிறது. தாஸ்தாவய்வ்ஸ்க்கி நோபல் பெறவில்லை.ரித்விக் கடக் ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் இருவரும் தத்தமது வெளியில் சிகரங்களைத் தாண்டிய படைப்பாளிகள். எனது நிலைபாடு இயைராஜாவும் ரஹ்மானும் மகத்தான கலைஞர்கள் இல்லை என வாதிடுவதல்ல – மாறாக அறியாமையிலிருந்து வெளிப்படும் வெற்றுக் கூச்சல்களை புறந்தள்ளக் கோருவது. வேறு முக்கியமான காரியங்கள் நிறைய இருக்க இது பற்றி இப்போது யோசிப்பது நேர விரயம் என்பதால் அதிகம் எழுத விரும்பியிருக்கவில்லை. அன்புடன் ராஜேந்திரன்.
அன்புடன் திரு ஜமுனா ரஜேந்திரன் அவர்களுக்கு.
நீங்கள் குறிப்பிட்டபடி, தங்களுடைய அவ்விரு ஆக்கங்களும் இதுவரை என் கண்ணில் படாததால் அப்படி கேட்டிருந்தேன்.
உங்கள் வேலைப்பழுவின் மத்தியிலும் எனக்காக ஒதுக்கிய சிறு நேரத்திற்காக நன்றி. ஜான்.