வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தொடர்ந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்ட்டிருக்கும். அதேபோல் பல கோடான கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும். அதை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என கிழக்கு மாகாண முதலமைச்சர் (பிள்ளையான) சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பல ஆயிரக் கணக்கில் மனித உயிர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் துணைப்படையாக மாற்றமடைந்த புலி உறுப்பினர்களுள் பிள்ளையானும் ஒருவர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி நிகழ்வில் முதலமைச்சர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
அங்கு உரையற்றிய போதே பிள்ளையான் இக் கருத்தைத் தெரிவித்தார்.








பிள்ளையான் சிறந்த அரசியல் அஞ்ஞானி.புலி அரசியலின் ஒரு முகம் பிள்ளையான்.
இதில் சந்தேகமே! இல்லை. சந்தேகப்படுவதே!! தப்பு.இல்லையேல் பங்கர்ராஜா ஏழைச் சிறுவர்கள் சிறுமியர்களுக்கு சயினைட்டை கட்டி மூளையை சலவைசெய்து தனது காரியத்தை நடத்திக் கொண்டேயிருந்திருப்பார்.
உண்மையில் இந்நிலையை தட்டிக்கேட்டிருக்க வேண்டியது தமிழ்மக்களே. ஏழைவிவசாயிகள் கையறாநிலைக்கு வந்திருந்த போது அதை அரசு பலம் கொண்டு அடக்கி அழித்தது நியாமானதே! மற்றும்படி பிள்ளையான் மகிந்தாவின் அரசியல் எல்லாவிதத்திலும் சரியாக இருக்குமென்றும் சொல்லவில்லை. அதற்கும் விமர்சனம் உண்டு.
புலி மட்டுமா மகிந்தனோட நிக்குது. டக்லஸ் க்ரூப், சிறி டெலோ க்ரூப், என்று பல கும்பல்கள். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி அவர்.
மோட்டுச் சிங்களவரும், மடத் தமிழரும் இணைந்து இலங்கைத் தமிழருக்கு உரிமை வழங்கப் போகின்றனர். அதனை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கப் போகின்றனர். சற்றுத் தூரத்தில் இருக்கும் சிங்கப்ப+ரில் மூன்றின மக்களும் அரசியல் அதிகாரத்துடன் நிர்வாகத்தை எப்படி நடத்துகின்றனர் என்று அறிந்து கொள்ள முடியாத மோட்டுச் சிங்களவரும், தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதத்தை யாருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத மடத் தமிழரும்தான் எங்கள் இனத்துக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகின்றார்களா? இவை இரண்டுமே நடக்காதவை