அறுபது ஆண்டுகள் இடைவெளியின்றிச் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டத்தைத் தலைமை தாங்குவது யார் என்ற சமூகத்தின் எந்த பிரிவினர் என்ற கேள்வி அனைத்தும் இன்று இல்லை. தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது முளைவிடாமல் கண்காணிப்பதற்கான சமூகத்தின் மேட்டுக்குடிகள் தமது எஜமானர்களான ஏகபோக நாடுகளுடன் அடைமை ஆண்டான் கூட்டுக்கு வந்துள்ளனர்.
சுயநிர்ணய உரிமைக்கான மக்களின் போராட்டத்தை நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைத்த அதே ஏகாதிபத்திய அடிமைகள் இன்று எந்த அவமானமும் இன்றி களத்தில் இறங்கியுள்ளனர்.
பிரிதானியப் பாரளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை என்ற தன்னார்வ நிறுவனம் ஒழுங்கு செய்யும் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளினது பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உரிமையுடைய நாடுகளே இவ்வாறு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளன
பிரித்தானிய பாராளுமன்றில் இந்த மாதம் 27ம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மீன் சூகா, இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை குறைந்ததபட்ச எதிர்ப்பும் இன்றி நடத்திக்கொண்டிருக்க, ஒவ்வொரு அங்குல நிலத்தையும் சூறையாடிக்கொண்டிருக்க, துப்பாக்கி முனையில் ஒவ்வொரு மனிதனிம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் இவை குறித்து எந்தத் துயருமின்றி அழிப்பவர்களுடன் கூட்டம் போடுகிறார்கள் பிரித்தானிய தமிழர் பேரவை.
ராஜபக்சவிற்கு எதிராக 1983 இல் இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவர்களுள் ஒருவரான ரனில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவருவோம் என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் துணை அமைப்பான உலகத் தமிழர் பேரவை.
இனப்படுகொலை நடைபெற்ற போது அரசுக்கு ஆதரவளித்த ரனில் குழு பாசிசத்திற்கான 18ம் திருத்தச் சட்டத்தைக் கூட எதிர்க்கவில்லை.
வன்னியில் மனிதப் படுகொலைகள் நடைபெறும் போது ஒரு மனிதனின் உயிரையாவது பாதுகாக்க முடியாத ஏகபோக நாடுகளோடும், பேரினவாதிகளோடும் அடிமைகள் போல கூட்ட்மைப்பும், உலகத் தமிழர் பேரவையும் உலாவருகின்றன.








‘ஓநாய் நனைவாதாக ஆடுகள் அழுகின்றன‘. இதுதான் இன்றைய நிலை.
ஓநாய்களை உருவாக்கும் அதிகாரம் கொண்ட ஆடுகள் ஓநாய்களை உருவாக்கிவிட்டு அழுகின்றன. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
It is Sri Lanka Police all over the island. That is not negotiable by anyone at any time. That person will end up like Yitzak Rabin in Israel. The Police have come a long way. We must look forward for the elections to the Northern Provincial Council Nine flags have been approved for the nine provinces. We must learn to work the system for our good.o the
உலகத் தமிழர் பேரவை நரிகளீன் கூட்டு முயட்சி ……. உலகத் சிங்கள பேரவை என்பதே பொருத்தம் அல்லது உலகத் சிங்கள தமிழ் பேரவை என்பதே மிகவும் பொருத்தமானது