யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான ராஜவரோதயன் கவிதாஸ் என்ற 26 வயதான மாணவன் முதலில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களினால் பரந்தன் – பூநகரி வீதியில் வைத்து இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யாழ்பாணத்தில் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அரச படைகளதும், துணைக்குழு அடியாட்களதும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.








