அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்ட ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கூறி, பயண விவரத்தையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
ஆனால, தாங்கள் வெற்றி பெற்ற, விரும்பிக் கேட்ட தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை கண்ட அவரது கூட்டணிக் கட்சிகள், ஒன்றிணைந்து 3வது அணி அமைக்க திட்டமிட்டன. இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர். 3வது அணி உருவாக்குவது பற்றி நாளை இறுதி முடிவு எடுத்து அறிவிப்பதாக செய்தியாளர்களிடம் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா தனது அரசியல் வியாபாரப் பேரத்தை மீண்டும் ஆரம்பிபதற்காக தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துள்ளார்.







