இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற கற்பனையை வளர்த்து உலகெங்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவித்த அமரிக்காவின் இதயப் பகுதியிலேயே கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் குர் ஆனை எரித்துள்ளனர். அமரிக்கா நிகழ்த்திய இஸ்லாமியப் படுகொலைகளின் சின்னமாக இந்த நிகழ்வு அமைகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரான் நூல் குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக அந்த தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பவரால் குரான் கொளுத்தப்பட்டுள்ளது.
டெர்ரி ஜோன்ஸ் ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.








“அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில் தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பவரால் குரான் கொளுத்தப்பட்டுள்ளது.”
இந்த இரண்டுபேரும் மதவெறியர்கள்தான்.
இவர்களை “மதபோதகர்கள் ” என்று சொல்வது மாபெரும் தவறு.
ஆன்மீக் கருத்தியல் – அடிப்படையில் மக்களை இருட்டில்
வைத்திருப்பதுதான். ஆயினும் அன்பு > பிறர்சிநேகம் > மானுட நலம்
என்பவற்றையும் அவை போதிக்கின்றன.மதவாதிகள் இவற்றைக்
கடைப்பிடிக்க வேண்டும்!
இந்த இரண்டுபேரும் மதவெறியர்கள்தான்.இவர்களை “மதபோதகர்கள் ” என்று சொல்வது மாபெரும் தவறு.ஆன்மீக் கருத்தியல் – அடிப்படையில் மக்களை இருட்டில்வைத்திருப்பதுதான். ஆயினும் அன்பு > பிறர்சிநேகம் > மானுட நலம்என்பவற்றையும் அவை போதிக்கின்றன.மதவாதிகள் இவற்றைக்கடைப்பிடிக்க வேண்டும்!
வேண்டா பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அரசின் அரசியலும் இந்த தமிழ்மொழியையே சாடிநிற்கிறது.
ஊரைத்திண்டு கொழுத்தவன் அல்ல உலகத்தின் உழைப்பையே திண்டு கொழுத்தது தான் அமெரிக்க ஜனநாயக அரசியல்.. அந்த வீடுஎரிந்தால் மட்டுமே நான் சுருட்டுப்பத்த வைக்கமுடியும் என்கிற அரசியல்.
வருமானம் வருவதாக இருந்தால் இது எதையும் செய்யத்தயங்காது. மதவெறியர்களுக்கு மானியம் கொடுப்பதே இந்த ஆண்டானின் சட்டம். பைபிள் தூக்கிய கைகளில் குரானை எரிக்கச் சொல்வது ஆண்டான்யாகிய நாம் பாஸிசகதவுகளை திறந்து விடுகிறோம் எனத்தான் அர்த்தம் கொள்ளப் பண்ணுகிறது.
இதற்கு அமெரிக்க தொழிலாளிவர்க்கம் அனுமதியளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவை எந்த தொழிலாளிக்கும் கிடையாது. அமெரிக்கா தொழிலாளி உட்பட.