தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அஇஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 3வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் 160 தொகுதிகளில் அஇஅதிமுக தனித்துப் போட்டியிட்டது. இதில் 140 மேற்பட்ட தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலையில் உள்ளார்.
விஜயகாந்தின் தே.மு.தி.க. 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், ஸ்ரீதர்வாண்டையார் மூவேந்தர் முன்னணி கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி படுதோல்விகளை சந்தித்துள்ளது.
தி.மு.க. 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாமக ஒரு தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தலை பொறுத்த வரை அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் அஇஅதிமுக 140க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனின்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
3வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே மக்கள் அஇஅதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
இருந்தாலும் 2006ஆம் ஆண்டு திமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போது அஇஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.








அம்மா காளீ, அகிலாண்டேஸ்வரி வந்துட்டியாம்மா.இனி என்ன பண்ணப்போறீயோ?உனக்குப் பின்னால எல்லா நாயும் வந்துட்டிருக்கு நீ எந்த எலும்புத் துண்டப் போட்டியோ தெரியல்லேயே அம்மா?
தமிழ்மாறன் நாய் என்று யாரைச் சொல்கிறிர்கள்? தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரா அல்லது வாக்காளரை விலைக்கு வாங்கலாம், இலத்திரனியல் புரட்சி முலம் வாக்குகளை தம்பக்கம் பிரட்டலாம் என்று கனவு கண்டவர்களா நாய்கள்? கருணாநிதி போட்ட எலும்புத்துண்ட கடித்துக் கடித்து சோம்பேறியாக இருக்காமல் சொந்தக் காலில் நிற்பமே என்று தமிழ்நாட்டான் ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளான். அம்மையாரின் செம்மை தமிழருக்குத் தெரியாமலில்லை.
கருணாநிதிக்கு இதுவரை தன்னை தமிழ் தலைவனாகவும் சீர்திருத்த வாதியாகவும் காட்ட வேண்டிய தேவை இருந்தது. ஜேவிற்கு அப்படி எல்லாம் இல்லை. இனிமேல் ராஜபக்சே வுன் கொழும் நைட் கிளப்பில் ஜே நடனமாடினார் என செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
இந்த ராமதாசு போற இடமெல்லாம் விளங்காது அது மட்டுமல்ல கலைஞர் சாதிக்கட்சிகள சேர்த்தது தவறூ.சோத்து மாடுகள சேர்த்து வைத்து நம்ம கலைஞரை சேத்தில விழுத்திப்புட்டாங்களே.இனி நாம தமிழுக்கு எதைச் செய்வது? தமிழன் வாழ்க்கை இப்படியாயிற்றே?
ஈழத்தமிழர்களிலும் பார்க்க விவேகமிக்கவர்கள் தமிழகத்தமிழர்கலென்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன், 30 வருடமாக் ஒரு ராசாவை வன்னியில வைத்து உலகமெங்கும் மோசடிகள் செய்த தமிழர்களை அறியாத புலம் பெயர் தமிழர்கள். இன்னமும் நடந்த உண்மைகளை அறிய முடியாதவ்ர்கள். இவர்களெல்லாம் தமிழகத்தைப்பற்ரி கருத்து தெரிவிக்கிறார்ளே. அந்தோ பரிதாபம்.-துரை
அந்த ராசாவை வளர்த்து விட்டதே M G ஆர் தான் .
இப்பவும் ஊளல் அம்மாவை தேர்ந்து எடுத்ததும் அவர்கள் தான். வேறு வழியோ நல்ல தலைவர்களோ இல்லை…….தமிழினத்தின் சாபம் தான் . எஙகும்.
( பிரிட்டிஸ்)உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. எனவே அவ்ர்களின் சொல்படியே நாங்கள் எல்லோரும்நடக்க வேண்டியதுதானே.-துரை
கனிமொழி ராஜபக்சே உறவுக்கு பின்னணியில் உள்ள வியாபாரம் வெளிவரும்! குடும்பச் சண்டை உருவாகும், கருணா குடும்பம் சுக்கு நூறாகும்.
பெருசு போற வழில முதலமைச்சரா இருந்து மண்டையப் போடலாம் என நினைச்சு, இப்பா ஒன்டுமே இல்லாம எங்கையாவது சிறையில சாகப்போகுது. ஐயோ பாவம்.
ஈழத்தமிழர் படுகொலையில் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை ஆதரித்த தி.மு.க. அரசாங்கத்தை ஆழிப்பேரலையாய் திரண்டெழுந்த மக்கள் சக்தி வீழ்த்தியுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவிக்கின்றார்.
இன்று வெளியான தமிழக தோ்தல் முடிவுகள் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் என்றவகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப ஆதிக்கம், அராஜகம், ஊழல் மற்றும் தாங்க முடியாத விலைவாசி என்பவற்றுக்கு அப்பால் ஈழத் தமிழர்கள் படுகொலையில் துணை நின்ற காங்கிரஸை ஆதரித்ததே தி.மு.க. செய்த மாபெரும் தவறாகும். அதன் காரணமாகத் தான் மக்கள் ஆழிப்பேரலையாகத் திரண்டு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
சினிமா, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயன்ற குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிலவிய பணநாயக ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது என்றும் வைகோ தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யார் தெரிவித்தாலும் இது நூற்றுக்கு நூறு உண்மை.
சினிமா கோமாளிகளில் எந்தக்கோமாளி வந்தாலும் ஒன்றுதான், ஆனால் கருணாநிதி குடும்பத்தின் குடும்ப அட்டகாசமும் பணத்தால் சனநாயகத்தை விலை பேசிய அடாவடித்தனமும் அத்தோடு தமிழா் பிரச்சனையில் காங்கிரஸுடன் சோ்ந்து ஆடிய நாடகத்திற்கும் விழுந்த அடியை இட்டு மகிழாமல் இருக்கமுடியாது, வாழ்க தமிழக மக்கள்.
//சினிமா கோமாளிகளில் எந்தக்கோமாளி வந்தாலும் ஒன்றுதான், //
இலங்கைத்தமிழர்களிற்கு சினிமாவும் தொடர் நாடகங்க்ழுமே வாழ்க்கை அதுமட்டுமல்ல மிளகாய்த்தூள் விற்பதற்கும் இந்திய பெண்மணியின் முகமே விளம்பரத்திற்குத் தேவை. சர்வதேச தரத்திற்கு ஒரு சினிமாப்படம் தயாரித்து வெளியிட முடியுமா உங்களால்? மன்னிக்கவும் நாடுகடந்த அரசாங்கம்
இலங்கைத்தமிழரின் தயாரிப்புத்தானே அதில் கதாநாயகன் உருத்திரகுமார்.
அரசியல் ரசிகர்கள் புலம்பெயர் தமிழர்தானே.-துரை
துரை நீா் வேலைக்குப் போவதில்லையா தம்பி, என்னவோ நீா் ஒரு மனநல வைத்தியரை நாடுவது நல்லது.நாக பாம்புகள் படம் எடுத்து ஆடுவதைப்பார்த்து நாக்கிழிப்புழுவும் படம் எடுத்தாட ஓடிச்சுதாம் என்ற கதைதான் ஞாபகம் வருகிறது.
குமார், அவர் வேலைக்குப் போகிறார். இணையங்களில் மகிந்தவுக்கு ஆதரவாக எழுத்துவதுதான் அவரது வேலை.
புலியை எதிர்ப்பவரெல்லாம் துரோகிகள் அன்று. இனறு அர்சாங்கத்தை எதிர்க்காதவ்ர்களெல்லாம் துரோகிகள். காரணம் மந்தைகள் போல் ஒன்றின் பின் ஒருவராக
போகின்றவ்ர்களே அதிகம்.-துரை
துரை வேலைக்குப் போனால் என்ன? விதைக்கப் போனால் என்ன நன்றாகவே தோசை சுடுகிறார் ஆனால் சம்பலில்தான் காரம் கம்மி.
உலகத்திலை வாழும் இலங்கைத்தமிழர்கள்
சிலரின் நினைப்பு தங்களை விட்டால் உலகமே
இயங்காது என்பது அதில் ஒருவரா நீர்.-துரை
பிறருக்காக இரங்குவதும் அனுதாபப்படுவதும் தமிழரோடு கூடிப்பிறந்த உணர்வு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை நீரூபித்துள்ளனர். எம்ஜிஆர் இறந்த அநுதாபம் ஜெயலிதாவை முதலில் ஜெயிக்க வைத்தது, ராஜீவ்காந்தியின் அவலச்சாவின் அநுதாபம் பின்பு ஜெயிக்க வைத்தது, ஈழத்தமிழரின் கொடூர அழிவைக்கண்டு அவர்கள்மேல் ஏற்பட்ட அநுதாபமே தற்போது ஜெயலிதாவை மீண்டும் ஜெயிக்க வைத்துள்ளது. மற்றும்படி ஜெயலிதாவால் தமிழர்வாழ்வு சிறப்படையுமென்றோ, அவரால் தங்கள் உரிமையெல்லாம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலோ தமிழர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் பத்திரகாளீ முதலவர், முகப்பூச்சு உளவுத்துற எதிர்க்கட்சி ஆனால் அம்மாவுக்கு யாருடைய தயவும் தேவை இல்லை எனும் போது அம்மா வைத்ததே சட்டம்.தமிழனுக்கு இனித்தான் சளீ பிடிக்கப்போகிறது.துரை சொல்வது போல சீரங்கத்து ராணீதான் தமிழனுக்கு ஆணீ.சூர்யா நான் நாய்கள் எனக் குறீப்பிட்டது யாரை என்பது உங்களூக்கு தெரியாததல்ல இனித்தான் தெரியும் சிலுவையின் பாரம்.ஈழத்தமிழரில் சிலர் பட்டாசு கொழுத்திக் கொண்டாட இது தீபாவளீ அல்ல கலோவன்.
இதில் புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அதிகம் என்று சொல்லலாம்.நாடுகடந்த அரசின் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கவில்லயா இன்னமும். இந்தியா தாய்தாடு
என்று சொல்லியே இறுதியில் இந்தியாவுமில்லை இலங்கையுமில்லை. இனியாவது
நம்பி நடவாமல்நம்ப நடந்து பழகுஙக்ளேன்.-துரை
முழு மென்டல்..
சந்தேகம் இல்லை.
வென்றவர்கள்,தோற்றவர்கள் பற்றிய எதிரும் புதிருமான வாதப்பிரதிவாதங்களில்,ஈழத்தமிழர்கள் தலையை நுழைப்பது நல்லதல்ல.
ஏனெனில் வென்றவர் ‘ஈழத்தமிழர்’ பற்றி தூக்கிப் பிடித்து விட்டார்.
தோற்றவர் மீள, ‘ஈழத்தமிழர்’ பற்றி அதிகமாக செய்தாக வேண்டும்.
இந்தத் திருப்பு முனையை ஈழத்தமிழர்கள் நன்கு பயன்படுத்தத் தெரிய வேண்டும்.
மாறாக வெளிக்காட்டுகிற அதிமேதாவித்தனம்,’மெல்ல அழிந்து போகும் இன’த்தை உருவாக்கி விடும்.
துரை பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்!செய்திக்குக் கருத்துரைப்பதை விட்டு சேற்றை வாரி அடிப்பதற்காக!இலங்கையில் நடந்தது இன அழிப்பென்று ஐ.நா மற்றும் ஐரோப்பிய பொது மன்றங்கள் முடிவெடுத்திருக்கையில் எட்டப்பராக இனம் காட்டிக் கொண்டதற்காக!-யோகா.சு.
தொடர்ந்தும் இலங்கைத்தமிழர்களின் அழிவிற்கே வழி பார்க்கும் கூட்டத்துடன்
சேர்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எத்தனை எட்டப்பரை துரோகிகளை
நீங்களாகவே உருவாக்கி படுகொலைசெய்தீர்கள். தமிழனைத் தமிழன் கொன்றால் அதற்கு விசாரனை தேவையில்லை. இலங்கை அரசையும் மதிக்க மாட்டோம
உலகினையும் மதிக்கமாட்டோம். இப்போ வன்னியில் ஆட்சி முடிந்ததுஇனி
தமிழகத்தில் ஜெயலலிதா தான் கை கொடுப்பார் என்று நம்பிக்கை. -துரை
செல்வி ஜெயலலிதாவுக்கு டீவுகு வாழ்த்து தெரிவித்துள்ளது.
14 ஆயலஇ 2011 டில யனஅin
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறுதிப்போரில் மட்டும் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டுஇ அல்லது காணாமல் போயுள்ளனர்.
வன்னியில் இறுதிப் போரில் பொதுமக்கள் 7இ000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் கூறிவந்த ஐக்கிய நாடுகள் சபையும்இ வெளிநாடுகளும்இ ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பின்னர் 40இ000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அநியாயமாகவும்இ கோரமாகவும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளன.
இவ்வாறான பின்புலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய நாம்இ வன்னியின் இறுதிப்போரில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பாக �அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை� நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழினம் ஒரு முக்கிய வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில்இ ஆறரைக்கோடி மக்களின் தலைமையை ஏற்கவுள்ள தாங்கள்இ ஈழத்தமிழ் மக்களின் நீதிப் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பீர்கள் என நம்புகின்றோம்.
ஈழத்தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரித்துஇ அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்களுள் தாங்கள் மிக முக்கியமானவர் என்பதுடன்இ தமிழ்நாடு தேர்தலின் பின்னரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தாங்கள் அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் வரவேற்கிறோம்.
இன்று தாங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில்இ சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த தங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயற்படுவீர்கள் எனவும்இ வேண்டுமானால் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.
எனவே தங்களது எதிர்கால செயற்பாடுகள்இ ஈழத்தமிழ் மக்கள்இ மற்றும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.
மூன்றாவது தடவையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ள தங்களுக்குஇ மீண்டும் ஒரு தடவை எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நன்றி.
வாழ்த்துடன்இ
பிரித்தானிய தமிழர் பேரவை
யுத்தம் என்றால் பொதுமக்கள் சாகத்தான் வேண்டும் என அன
;று இவர் கூறியதாக…..!!
//யுத்தம் என்றால் பொதுமக்கள் சாகத்தான் வேண்டும் என அன
று இவர் கூறியதாக…..!!
// அதனாலென்ன?இன்றும் கூட சாமரம் வீசும் “உங்கள்” தலைவர்கள்?!,அமைச்சர்கள்?!,பிரதி அமைச்சர்கள்?!தொகுதி அமைப்பாளர்கள் என்று அனைவருமே முள்ளி வாய்க்காலில் ஒரு பொது மகனின் உயிர் கூட இழக்கப்படவில்லை என்று “திருவாய்” மலர்ந்ததை விடவும்,இவ்வாறு உயிர்கள் இழக்கப்பட்டதை ஒப்புக் கொண்டது மேலில்லையா?அதனை விடவும் உண்மையைச் சொன்னால் ஜெயலலிதா அம்மையாரின் பின்னால் இருந்தவர்கள் முற்று முழுதாக அவருக்கு தவறான தகவல்களையே வழங்கிக் கொண்டிருந்தார்கள்.இப்போது திரை விலகியிருக்கிறது!ஐ.நா நிபுணர் குழு அறிக்கை உண்மைகளை உலகம் பூராவும் விதைத்திருக்கிறது.அறுவடை ஜெயலலிதா அம்மையாரிலிருந்து ஆரம்பமாக இருக்கிறது!மாநில அரசால் மத்திய அரசுக்கு உச்சபட்ச அழுத்தம் பிரயோகிக்கப்படும் வாய்ப்புகள் அதிகப் பெரும்பான்மையால் கிட்டியிருக்கிறது.முதலாவது ஊடகப் பேட்டியிலேயே அதனை அவர் சுட்டியிருக்கிறார்!நல்லதே நிகழுமென நம்புவோம்!நம்பிக்கை தானே வாழ்க்கை என்று அவரும் சொல்லியிருக்கிறார்!பார்க்கலாம்!
ஜெயலலிதா ஸ்ரெயிட்டாகப் பேசுகிறார் அவரது இந்த நேர்மை எனக்குப் பிடிக்கிறது ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் மாறூம் அவரது குணம்தான் பயமுறூத்துகிறது போதாக்குறக்கு இராமசாமித் தாத்தா துக்ளக் பத்திரிகையோடு சென்றூ அவரை எரியப்பண்ணூவார் அடுது நமக்குத் தெரியாத பூணூல் கூட்டம் அவரை விட்டு விலகாது.ஆக ஒரு பொய்யாவது சொல் கண்ணே……………………………தேர்தல்தான் முடிந்தாயிற்றே……………………….அவர் பொய்தான் இனி நமது நம்பிக்கைகள்.
சரியான பார்வை தமிழ்மாறன்.
நான் முன்னால் போய் உண்ணாவிரதமிருக்கிறன் நீங்கள் பின்கதவால் போய் இலங்கை அரசுக்கு உதவுங்கள் என நாடகமாடுவதெல்லாம் nஐயலலிதாவுக்குச் சரிசராது. அவர் நேலடியாகவே பேசுவார். தேர்தலுக்கு முன் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசினார் அதில் வியப்பில்லை. வெற்றி பெற்ற முதலாவது பேட்டியிலும் சொல்வதுதான் சற்றுச் சிந்திக்க வைக்கின்றது. எல்லாமிழந்த எமக்கு இனியென்ன இருக்கிது இழப்பதற்கு.
அப்படியா யோகா? ஆயின் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது!!??…………
அந்தப் பழக்கம்(தன் மூக்கை நோண்டி தானே முகர்வது)இன்னும் விட்டுப் போகவில்லையோ?விதண்டா வாதம் புரிபவர்களுடன்………………………………..மன்னிக்கவும்,தொடர்வதற்கில்லை!
புலிகள் ஊடான ஈழத்தமிழர் போராட்டத்தை ஜெயலலிதா வெளிப்படையாகவே எதிர்த்துவந்தது உண்மை. அதன் நிரலில் ஒன்றுதான் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது.
புலிகளை தான் எதிர்ப்பதை வெளியிடாது அவர்களுக்கு கவிதையும் பாடி தமிழினத்தை நம்பவைத்து கழுத்தறுத்த கருங்காலி கருனாநிதியின் படு அயோக்கியத்தனமே, இன்று அவரை ‟ஐயகோ” என அலறி அறுந்து தொங்கவைத்துள்ளது.
எதிரியை இனம்காணலாம். சேர்ந்திருந்து குழிபறிப்பவனை எப்படி இனம்காண முடியும்??…………
valga purachithalaivi amma ; panam thotrathu;jananayagam vendrathu ,m.g.r atchi malarinthathu . m.singairamu ;v.malampatti thiru pathur unian ‘ manavar ani thunai seyalalar,sivagangai [dist]
மைசூரைச் சார்ந்த ஜெயராம் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மறுபடியும் தமிழ்நாட்டின் முதல்வராகின்றார்.ஆளுமையுடன் ஆங்கிலம் பேசத்தெரிந்த அம்மையார் அவர்கள் யார் தயவும் இல்லாமல் தானே அரசமைக்க வழியமைத்ததில் முக்கிய பங்கு ஈழத்தமிழர் பிரச்சனை. அவர் அதற்குப் பிரதியுபகாரமாக அதைத் தொட்டுப் பேட்டியழித்தமை மகிழ்வைத் தருகிறது.தொட்டுப்பேசவேண்டிய தேவையும் அவருக்கிருக்கிறது. இந்த வெற்றியில் பணம் தோற்றது ஜனநாயகம் வென்றது என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்களுக்குப் பொருந்தும். அம்மையாரின் கோடிக்கணக்கான பணச்சுருட்டலைக்காரணம் காட்டியே கருணாநிதி ஆட்சியமைத்தார். அதனை மறுபடி காரணம் காட்டியே அம்மையார் அவர்கள் வந்திருக்கின்றார்கள். இது காலச் சக்கரம். மனிதர்களின் மறந்துவிடும் இயல்பில் புல்லுருவிகள் பிழைத்துப் போகிற சாகஸம். போயர்ஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்டிருக்கிற பேட்டி தொடருமா? இத்தோடு நின்று போகுமா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்…
நம்மவ வந்திருக்கா எனப் பூணூல் எல்லாம் பூரிக்கிறது.நாயுடுவும், நாடாரும் தனித்து நின்றீருந்தால் மாறீய தமிழக விதியில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமோ?யார் கண்டா கலைஞருக்கு சனிப்பெயர்ச்சி என்றூ??/