போரினால் அழிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களை பணத்திற்காகப் இலங்கை அரச பாசிசம் பயன்படுத்தும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக முதியவர்களும் பெண்களும் அரச கூட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதற்காக பணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகிய அமைப்புக்களிலிருந்து பேருந்தில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சங்கம் மற்றும் கழகங்களில் இருந்து தலா 50 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொருவருக்கும் காலை, மதிய உணவுகளும், கொடுப்பனவாக ஆயிரம் ரூபா தருவதாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் மன்னாருக்கு திரும்பிய பின்னரே பணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷhட் பதியூதீன் உட்பட ஆளும் கட்சி அமைப்பாளர்கள், பணம் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை அழைத்துச் சென்றுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து பெண்களே கூடுதலாக சென்றுள்ளனர்.








இதுகள் எல்லாம் இந்த பக்கப்பாட்டு பாடுற ஆ(சா)மிகளுக்கு தெரியாது? ஐயா…. ராசா துரை எங்கபோணியள்? அவங்கள் காசு கொடுக்கிறம் எண்டாங்கள் கஷ்டப்பட்ட சனம் பாவம் போச்சுதுகள் (அதுகள் வாழத் தெரியாத சனம் இல்லை வயல் தோப்பு துரவு எண்டு வாழ்ந்த சனம் ). நீங்களும் கஷ்ட பட்டணியள் எண்டு சொல்லியே அவை கவனிக்கினம்? நாலு காசை காட்டினால் ஆவெண்டு கொண்டுபோய் எந்த சகதிக்கிளையும் விழுகிறது. சீய் என்ன பிழைப்பு…..