நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் என்பவர் கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் கமலேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் . ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான கமலேந்திரன், இன்று கொழும்பில் வைத்து இரகசிய குற்ற புலனாய்வு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலனையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் எல்லாப் பாசிச அரசுகளையும் போன்று துணைக்குழுக்களைத் தேவையானவரை பயன்படுத்திவிட்டு அழிக்கும் முயற்சியை மகிந்த அரசு ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஈ.பி.டி.பி போன்ற மக்களிலிருந்து தனிமைப்பட்ட கட்சிகளை விட மக்கள் ஆதவு பெற்ற தனிநபர்களையும் கட்சிகளையும் இலங்கை அரசு தனது பயங்கரவாத வலைக்குள் கொண்டுள்ளது.இதனால் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் தேவை இலங்கை அரசிற்கு அருகி வருகின்றது.
ரஜீவின் கொலை ஈ.பி.டி.பி இன் உள்வீட்டு விவகாரம் என்பது மக்களுக்கு வெளிப்படையானதாக இருந்தாலும் புலனாய்வுப் பிரிவின் ஆதரவின்றி அது நடைபெற்றிருக்க முடியாது என்ற ஊகத்தையும் வெளியிட்டிருந்தனர்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் ரஜீவைக் கொலை செய்தது புலானாய்வுப் பிரிவு?
“பிரச்சினைகளை தீராமல் வைத்துக் கொள்வது தான் கூட்டமைப்பின் விருப்பம்” என்று பாரம்பரிய அமைச்சர் சொல்றார்…
“பிரச்சினைகளை தீராமல் வைத்துக் கொள்வது தான் கூட்டமைப்பின் விருப்பம்” என்று பாரம்பரிய அமைச்சர் சொல்றார்…
“அரசியல் காரணங்களுக்காக எமது மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது” என்று தீவகத்தின் பொறுப்பாளராக இருந்து… யாழ். மாவட்ட பொறுப்பாளராகி… வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராகி “மக்கள் சேவையில் உள்ள’ என்று அறிக்கை விட்ட… கமல்… மேலும் அன்னாரின் பூதவுடலையும் முன்னின்று தூக்கிச் சென்றுள்ளார்…
What is the problem? There are local, provincial and national level problems.
Sri, I am really sick and tired of your nonsense here. You know damn well what you are and its time you are honest about it and help others who too are in your predicament. Enough of this game playing pleeeeease. Probably this is the only forum that allows opinions from someone like you, I can’t be more explicit than this. I am sorry sir, truth hurts.
Sutharsan, that reminds me of Oscar Wilde at New York Customs. I have nothings to declare or hide from anybody. Tribes out. Where did I hear that?
Then why don’t you tell what your problems are so that people will understand why you go off the track all the time.
இந்தப்புகைப்படத்தில் இறந்தவரின் உடலை தூக்கி செல்பவர்தான் இந்தக்கொலையை செய்த துணை இராணுவக்குழு யாழ் மாவட்டப்பொறுப்பாளரும் வட மகாணஎதிர்க்கட்சி தலைவருமாவார்,
என்னதான் நடக்கிறது இங்கே…
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனை கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
ஆனால், தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததாகவும், வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 09 மி.மீற்றர் வர்க்க துப்பாக்கியும் 11 ரவைகளும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரனுக்கும் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாகவே… http://thesamnet.co.uk/?p=49564
இன்று இப்படியும் செய்தி வருகிறது…
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை விசாரணை:
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் உட்பட மூவர் கைது
கொலையில் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் சந்தேகம்
அதுவும் தினகரனில்…
http://www.thinakaran.lk/2013/12/05/?fn=n1312054
Daily News இலிலும்
Delft PS Chairman’s murder …:
REXIGAN: POLITICO, WIFE BEHIND GUN
* NPC opposition leader among the arrested
* Pistol believed to be murder weapon also seized
http://www.dailynews.lk/local/rexigan-politico-wife-behind-gun
Thank you for the information, Alex Ravi.
Also in Asian Tribune…
K.Kamalendran, EPDP Stalwart & Opposition Leader arrested and remanded over a woman affair
http://asiantribune.com/node/67306
Alex Ravi I think we are not fit enough to govern us.
True about you , how can looney tunes take care of anything.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்… (EPDP) முன்னால் தீவகப் பொறுப்பாளரும்… யாழ் மாவட்ட பொறுப்பாளரும்… வடமாகாண அரச எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரனை… கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது… என EPDPயின் ஊடகப் பொறுப்பாளர் சி.தவராசா அறிவித்துள்ளார்…
அவ் அறிக்கையில்… ‘ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.’
‘இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததும் இல்லை. நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை. கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல் இல்லை. ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்’ என்றும்…
‘தோழர் டானியல் றெக்சியன் ரரஜீவ் அவர்களினது படுகொலையானது தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது’ என்றும்…
மேலும்.. ‘கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்துமீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்’ என்றும் கூறும் நிலையில்…
‘தினமுரசு’ அற்புதன்… பால நடராஜா ஐயர்… K.S.ராஜா… போன்றவர்களின் கொலைகளையும்…
‘ முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்’
‘யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்’
என்பதற்கு அமைய… விசாரித்து… குற்றவாளிகளை கண்டு பிடிப்பார்களா…???
மேலும் தீவகத்தில் இருந்து 90 களில் துரத்தப்பட்டவர்கள் யாரால் துரத்தப்பட்டார்கள் என்றும் கண்டு பிடிப்பார்களா…???
அறிக்கை : http://www.epdpnews.com/news.php?id=22166&ln=tamil
இதையைய ும் வாசியுங்கள்..
எங்கே போய் முட்ட…
சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே!
‘கமலேந்திரனுக்கும் கொலைசெய்யப்பட்ட றெக்சியனின் மனைவியாகிய அனிதாவுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டதாகவும் இதன் காரணமாக தனது கணவரை கொலை செய்வதற்கு அனிதா உதவியதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்’
‘கமலேந்திரன் அளித்த வாக்கு மூலத்தில், அனிதா திருமணம் செய்வதற்கு முன்னரே அனிதாவும் நானும் காதலித்தோம். இடையில் ஏற்பட்ட குழப்பங்களால் எமது காதல் கைகூடாத நிலையில் அனிதா எமது கட்சியின் முக்கிய உறுப்பினராகிய றெக்சியனை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் எனக்கும் அனித்தாவுக்கும் இடையில் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அவ்வப் போது மிகவும் நெருக்கமாக இருப்போம். இது பற்றி கணவராகிய றெக்சியனுக்கு சந்தேகம் ஏற்பட என்னுடன் முரண்பட்டுக் கொண்டார். அதனால் அனிதாவின் துணையுடன் றெக்சியன் படுத்திருந்த வேளையில் நானே கைத் துப்பாக்கியால் பிடரியில் சுட்டுவிட்டு ஓடிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்’
‘தனது மனைவிக்கும் தமது கட்சியின் மாவட்ட அமைப்பாளருக்கும் இடையில் தொடர்பு இருப்பது தொடர்பாக தெரிந்து கொண்ட டானியல் றெக்சியன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றினை எழுதி அதனை டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அக் கடிதத்தில் எமது கட்சி உறுப்பினர் கமல் என் மனைவியடன் தவறான முறையில் பழகி எனது குடும்பத்தை பிரிக்கின்றார். இது தொடர்பபாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக் கடிதம் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிடைத்தும் அவர் மௌனமாக இருந்தாரா? அல்லது கமலுக்கு உதவினாரா? அல்லது கடிதம் கிடைக்கவில்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கட்சித் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இது தொடர்பில் நேரடியாக தெரிவிக்க றெக்சியன் முயன்ற போதும் அதற்கான வாய்ப்புக்கள் முடக்கப்பட்டதாக அறியமுடிகின்றது’
படங்கள் உள்ளே!
http://www.ilankainet.com/2013/12/blog-post_2637.html
எங்கே போய் முட்ட…
‘நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) வெளியேறுவதை தடைசெய்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்’
கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தில் என்று செய்தி வர…
(http://www.epdpnews.com/news.php?id=22185&ln=tamil)
பிறிதொரு கட்சியின் ஆதரவு இணையதளத்தில்…
‘
நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறிய அதே நேரத்தில் தீவகத்தில் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை இழுத்து மூடுவது எனவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சகோதரப் படுகொலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஈடுபட்டதை அடுத்து தீவக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு உணர்வலைகளே ஈ.பி.டி.பியின் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையைக் கண்டித்து வந்த ஈ.பி.டி.பியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் அதே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது’ (http://www.neruppu.com/?p=79574) என்றும் செய்தி வந்துள்ளது…
ஏதோ ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு சந்தோஷமாம்…
இப்படியே பால நடராஜா ஐயர்… ‘தினமுரசு’ அற்புதன்… ராஜாவின் கொலைகளின் மர்மம்களையும் துலக்கினால்….
என்னத்திற்கும்… http://www.uthr.org/ யினரின் அறிக்கைகளைப் பிரட்டிப் பார்த்தால் அறியலாம்….
ஆனாப் பாருங்கோ… சிலவேளையிலை தீவக மக்கள் ஒண்டு சேர்ந்து…
“எமது முன்னால் தீவகப் பொறுப்பாளர் குற்றமற்றவர்…. அவரை உடன் கட்சியுடன் இணையுங்கள்…” என்ற கோஷத்துடன்…
வள்ளங்களில் ஏறி… சிறீதர் தியேட்டரை நோக்கி நடைபவனி சென்று உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம்…
பிற்குறிப்பு:
இங்கு தீவக மக்கள் என்று குறிப்பிட்டது… தற்போது தீவகத்தில் இருக்கும் மக்களையே… 90 களில் துரத்துப் பட்டு… தெற்கிலும்… வவுனியாவிலும்… யாழின் இதர பகுதிகளிலும்… தமிழ் நாட்டிலிலும் இருக்கும் இடம்பெயர்ந்த / அகதிகளை இல்லை.
மேலும் 90 களில் துரத்தப்பட்டு புலம்பெயர் நாடுகள் சென்றவர்களில் பெரும்பாலோனோர் தான் இன்றும் புலி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்…
குறிப்பாக கனடிய main streem politics இருக்கும் தீவிர அரசியல்வாதிகள் நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்ட புலி ஆதரவாளர்கள்…
கடந்த மாகாணசபை தேர்தலில் கட்சி வடக்கில் எதிர்பாராத தோல்வியை… குறிப்பாக யின் தீவகத்தில் படுதோல்வியை சந்தித்த வேளையில்… அதே தீவகத்தின் முன்னாள் பொறுப்பாளரும்… யாழ். மாவட்ட பொறுப்பாளரும்… முதலமைச்சர் விக்க்னேஸ்வரனின் எதிக்கட்சித் தலைவருமான கமலேந்திரன் தற்போதைய தீவக… கொலைக்குற்றவாளியாக சந்தேகத்தின் பேரில்… கைது செய்யப்பட்டிருக்கும் வேளையில்…
நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) வெளியேறுவதை தடைசெய்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்திய வேளையில்…
பாராளுமன்ற உறுப்பினர் உதயன் அவர்கள் “நடைபெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக உண்மையான குற்றவாளி எத்தரப்பாக இருப்பினும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இவ்வாறான செயற்பாடு எமது கட்சியின் கொள்கையல்ல அதுவொரு தனிநபர்சார்ந்த குற்றச்செயலாகவே காணப்படுகின்றது இவ்வாறான செயல்களை நாம் இதுவரை அனுமதித்ததும் இல்லை இனிவரும் காலங்களில் அனுமதிக்கப் போவதிலும் இல்லை அந்தவகையில் எமது கட்சியின் உறுப்பினர்களை மீளாய்வு செய்ய வேண்டுமென்று கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முடிவு எடுத்திருக்கின்றார். இதனடிப்படையிலேயே நெடுந்தீவு அலுவலகம் தொடர்பாக ஆய்வு எடுக்கப்பட்டது.
என்று கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தில் செய்தி வர…
(http://www.epdpnews.com/news.php?id=22185&ln=tamil)
கடந்த மாகாண தேர்தலில் எதிர்பாராத தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல்… (http://www.slelections.gov.lk/2013PPC/Northern%20Province.html) 90களில் பெரும்தொகையான மக்கள் துரத்தப்பட்ட தீவகத்தின் ஏக பிரதிநிதிகளாக இருந்த நிலையில்… தற்போது மூன்றில் ஒரு வாக்குகள் (TNA 8,917 votes – 67.42 %; EPDP 4,164 votes- 31.48 %)பெற்று தோல்வி அடைந்துள்ள நிலையில்… (http://www.slelections.gov.lk/2013PPC/KAYTS.html)
இன்று…
“நெடுந்தீவிலிருந்து எமது அலுவலகம் நீக்கப்பட்டதையும், யாழ்.குடாநாடு தழுவிய ரீதியில் உள்ள எமது அலுவலகங்களில் சிலவற்றை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதையும் திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை.
நீண்டகாலமாகவே எமது அலுவலகங்களை ஒழுங்கமைப்பது மற்றும் கட்சியின் கட்டமைப்பை மீள் ஒழுங்கு செய்வது என்ற எமது ஆய்வுகளும், ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இடையில் தேர்தல்கள் வந்ததாலும், குறிப்பிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியல் செயற்பாடுகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை இருந்ததாலும் எமது சீரமைப்புச் செய்றபாடுகள் காலதாமதமடைந்திருந்தன.
தற்போது மாறியிருக்கும் அரசியல் சூழலையும், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட கட்சியின் செயற்பாடுகளின் மறுசீரமைப்புக்கான தேவையையும் கவனத்தில் கொண்டு அலுவலகங்களை ஒழுங்கு செய்வதையும், உள்ளக நிர்வாகக் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதையும் கட்சி செயற்படுத்தும். அதன் ஒரு நடவடிக்கையாகவே நெடுந்தீவு அலுவலகம் மூடப்பட்டதும், தீவகத்திலுள்ள சில அலுவலகங்களை அகற்றிக் கொள்வதற்கான திட்டமுமாகும்” (http://www.epdpnews.com/news.php?id=22190&ln=tamil) என்று செய்தி வந்துள்ளது…
இந்த இரண்டு செய்தியும்/ அறிக்கையும்… ஒன்றிற்கு ஒன்று முரண்படவில்லையா…???
“எமது கட்சியின் உறுப்பினர்களை மீளாய்வு செய்ய வேண்டுமென்று கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முடிவு எடுத்திருக்கின்றார். இதனடிப்படையிலேயே நெடுந்தீவு அலுவலகம் தொடர்பாக ஆய்வு எடுக்கப்பட்டது”
(http://www.epdpnews.com/news.php?id=22185&ln=tamil)
“.நெடுந்தீவிலிருந்து எமது அலுவலகம் நீக்கப்பட்டதையும், யாழ்.குடாநாடு தழுவிய ரீதியில் உள்ள எமது அலுவலகங்களில் சிலவற்றை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதையும் திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை” (http://www.epdpnews.com/news.php?id=22190&ln=tamil)
ஹ்ம்ம்….
அடக்கடவுளே இதைத்தானே காலம்காலமாக சொன்ன போதும் புாிந்து கொள்வே இல்லை எனி அனைவருக்கும் புாியும்
EPDP Kamalendran’s Smoking Gun…
The history and track-record of the EPDP, led by Minister Douglas Devananda, is no secret to anyone. EPDP’s history is inseparably linked to that of Douglas Devananda, its mentor and founder.
He later formed EPDP as a politico-military body that also demanded the creation of a separate Tamil state in the North and East.
In 1990, Douglas Devananda had a secret meeting with Ranjan Wijeratne, the incumbent Defence Minister of Sri Lanka at the time, who was spearheading the war against the LTTE. After that meeting, the EPDP agreed to work with the government on the condition that the government would provide them protection from the LTTE. From that point on, until the end of war in May 2009.
There were heavy security measures around the EPDP Leader and the cadres were provided arms by the military – primarily to ensure their self-defense. With these weapons, the EPDP was able to show some sort of resistance to the LTTE. At the same time, other political parties in the North, mainly the TNA, accused the EPDP of torture and extortion against its political opponents. However, the EPDP thrived under government protection and remained the biggest strength of the government in its political endeavours in the North.
The EPDP was at the receiving end of severe criticism for using their gun-power against political opponents.
There were allegations against the EPDP that they were still carrying arms when there was no war. There were incidents, over the past several years, where EPDP members unleashed violence against other political parties in the North and went scot-free. Although the Northern Provincial Council election took place in a relatively peaceful environment, complaints against the EPDP never ceased.
Kandasamy Kamalendran, was a longstanding member of the EPDP since the time it was a politico-military body that did not accept the tenets of democracy. Following the arrest, photographs were published in the media where Kamalendran was wearing a military outfit and armed to the teeth, like a soldier. Also, there was another picture where Kamalendran was carrying the coffin of the slain PS Chairman, wearing a sad look on his face.
If the EPDP is denying that they are using illegal weapons, then that is a blatant lie. How did the Opposition Leader of the North Central Provincial Council election get hold of the 9 mm pistol? Provincial council members are not provided with weapons for their personal security. If the EPDP is not carrying illegal arms, there is no way that the NPC opposition leader can have access to a 9 mm pistol!
Jaffna’s Judicial Medical Officer (JMO), who was handling the post-mortem of the Delft PS Chairman, had received death threats to declare it as a suicide and not a killing.
Even a child in the North knows that the EPDP is still carrying arms. All in all, the matter is now at a standstill.
For more in detail…
http://www.thesundayleader.lk/2013/12/15/kamalendrans-smoking-gun/
முன்னால் தீவகப் பொறுப்பாளரும்… யாழ் மாவட்ட பொறுப்பாளரும்… வட மாகாண சபை எதிர்க் கட்சி தலைவருமான
கமலேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு பின் வந்த ஜாநோதயமோ… இன்றைய பத்திரிகையில் வந்த கட்டுரையின் (http://www.thesundayleader.lk/2013/12/15/kamalendrans-smoking-gun/
) பின் வந்த ஜாநோதையமோ…
ஜனநாயகக் கட்சியின்… ‘ஊடக அறிக்கை’ என்று ஊடகங்களிர்க்கான அறிக்கையாகவோ… அன்றி மனம் திறந்த அறிக்கையாகவோ… வந்து இருக்கிறது…
நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில்,….
http://www.epdpnews.com/news.php?id=22263&ln=tamil
ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கமலேந்திரனின் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில்… இந்த அறிக்கை… வந்து இருக்கிறது…
ஆயுதம் தாங்கி போராடத் தொடங்கிய அனைத்து போராட்ட இயக்கங்களும்… அவர்கள் அவர்கட்கு கிடைத்த சந்தர்ப்பங்களில்… அவற்றின் ஆயுத… மக்களை அடக்கும் வலிமைக்கு ஏற்ப… ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல…
அந்த EPDP அறிக்கை…
http://www.epdpnews.com/news.php?id=22300&ln=tamil