ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றின் உறுப்பினராகவும் நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளாராகவுமிருந்த டானியல் றெக்ஷியான் (ரஜிவ்) 26.11.2013 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அண்மைக் காலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் டக்ளஸ் தேவாநந்தாவின் இலங்கை அரசின் அடிமை நிலை குறித்தும் விமர்சனம் செய்துவந்த ரஜிவ் குமுதினிப் படகில் கொலை செய்யப்பட்டவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்யதிருந்தார் என தகவலறிந்தோர் தெரிவித்தனர். 47 வயதான டானியல் றெக்ஷிசன் அல்லது ரஜிவ் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என வந்ததி பரப்பப்பட்டது.
எனினும், பிடறி பகுதியில் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்தாகக் கூறப்பட்டது.
ரஜிவ் இலங்கை அரசிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமையால் புலனாய்வுப் பிரிவினர் அல்லது அவர்களின் ஆதரவுடன் ஈ.பி.டி.பி யினர் அவரைச் சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தமது அணியிலிருந்துகூட தமக்கு எதிரான குரல்கள் எழும்போது கூட அழித்துச் சாம்பலாகும் ராஜபக்சவின் இராணுவ பாசிச ஆட்சியும் அதன் துணைக் குழுக் கும்பல்களும் கடந்த மாதம் நிமோ என்பவரையும் இவ்வாறே கொலை செய்த்தாகச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இப்படியும் ஒரு செய்தி… எது உண்மை…???
“றெக்சியன் கொலைக்குப் பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடாம்?”
http://www.athirady.com/tamil-news/news/293747.html