லைக்கா நிறுவனத்தின் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான கட்டுக்கதையை புலம்பெயர் ஊடகங்கள் அவிழ்த்துவிட்டு அம்பலமான சம்பவம் தெரிந்ததே. லைக்காவைத் தேசிய விரர்களாக முயன்றதன் பின்னால் உள்ள அசிங்கம் இப்போது வெளியாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் சண்டே டைம்ஸ் இல் வெளியான பத்தி ஒன்றும் இதன் பின்னணியைத் தெளிவுபடுத்துகின்றது.
அலிபாபாவின் திருடர்களின் எண்ணிக்கையில் ஒன்பது நபர்கள் குறைவான லைக்காவின் குழு ஒன்று மாலைதீவில் விடுமுறையக் களிப்பதற்காகச் சென்றுள்ளது. கத்தியில் கொத்திய பணத்தைக் கொண்டாட மாலைதீவின் என்ற Four Seasons நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமுமாக நடத்தப்பட பார்ட்டியில் முறுக்கேறிய நரம்புகளோடு லைக்காவும் 31 சீடர்களும் மாலைதீவு விமாமத்தை வந்தடைந்ததனர். விடுதியில் ஆகக் குறைந்த விலையில் உள்ள அறையின் ஒரு இரவிற்கான விலை $1600 என்பது தேசிய அசிங்கங்களுக்காக தரப்படும் தகவல்.
மாலை தீவிலிருந்து கொழும்பு சென்று கொழும்பிலிருந்து லண்டனுக்குப் பயணம் செய்வதே லைக்காவின் திட்டம். அதன்படி கொழும்பிற்கு வந்தடைந்த லைக்கா குழு கட்டுனாயக்க விமான நிலையத்தில் கடை விரித்தது.கொழும்பிலிருந்து லண்டன் புறப்படுவதற்காக கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரித்திருந்த குழுவிற்கான விமானப் பயண நேரம் மதியம் 1 மணி.
சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான பங்காளிகளான 31 லைக்கா பேர்வளிகளும் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இலேயே பயணம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டனர். அந்த விமாங்களில் 31 பேருக்கு Business Class இல்லாத காரணத்தால் கத்தி பசிபிக் விமானம் ஒன்றை சிறீ லங்கன் ஏர்லைன்ஸ் ஒழுங்கு செய்து கொடுத்தது.
அங்கு வர்த்தக தங்குமிடத்திலேயே -Business Class Lounge- லைக்காவின் பணம் உள்ளே ஊற்றிய ஐந்து நட்சத்திர கசிப்பு வேலை செய்ய ஆரம்பிக்க விமான நிலையம் மீன் மார்க்கட்டாகக் காட்சியளித்தது என்று கண்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.
உள்ளிருந்த ஐந்து நட்சத்திரக் கசிப்போடு விமானத்தினுள் நுளைந்த லைக்காவும் 31 உம் விமானத்தினுள் தமது தர்பாரை ஆரம்பித்தனர். விமானப் பணிப்பெண்கள் கழுகுகளிடம் அகப்பட்ட கோழிக்குஞ்கள் போலத் திண்டாடினர்.
நிலைமையை அவதானித்த விமானத்தின் கப்டன் அவர்களில் பெட்டிபடுக்கைகளோடு விமனத்தை விட்டு இறங்குமாறு பணித்தார்.
மாலைதீவில் பார்டி நடத்திவிட்டு கொழும்பு ஊடாக லண்டன் திரும்பிய பார்ட்டியில் முன்னை நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவரும் இன்றைய கிரிகட் தெரிவுச்சபையின் தலைவருமான சனத் ஜெயசூரிய M.P மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்சின் சந்தைப்படுத்த முகாமையாளரான அரைத் தமிழர் ஜே.பி.ஜெயசீலன் ஆகியோர் அடங்கியிருந்தனர். ராஜபக்ச குடும்பத்தின் அல்லக்கையான சனத் ஜெயசூரியாவையும், தனது முதலாளிகளில் ஒருவரான ஜே.பி.ஜெயசீலனையும் சேர்த்தே விமானத்தை விட்டு வெளியேறுமாறு காப்டன் பணித்தார்.
உலகின் பணக்காரக் கும்பலொன்று பயணிக்கும் விமானத்தில், அந்த விமானத்தின் பயணச்சீட்டுப் பங்களார்களையே விமானத்தை விட்டு வெளியேற்றுவதா என்று 31 பேரும் கப்டனை எதிர்க்க ஆரம்பித்தனர். தொலைபேசி அழைப்புக்கள் பறந்தன. ராஜபக்ச குடும்பம், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் என்று யார் சொல்லியும் கேட்க மறுத்த கப்டன், இவர்கள் பயணம் செய்தால் ஏனைய பயணிகளுக்கு ஆபத்து என்று உறுதியாகக் கூறினார். லைக்காவையும் 31 பெருமக்களையும் விமானத்தில் அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.
பணத்திற்கு இணைய ஊடகங்கள், தேசிய சீமான்களை வாங்கியது போன்று பைலட் கப்டனை வாங்க முடியவில்லை. அப்போது தான் விலைபோகாத மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று லைக்காவும் 31 உம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இக்கும்பலை இறக்குவதற்காக விமானம் 2மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பையும் கப்டன் பயணிகளுக்கு விடுத்திருந்தார்.
இறுதியில் லைக்கா குழு விமானத்தை விட்டு இறங்கி துண்டைக்காணோம் துணியை காணோம் என்று பெட்டி படுக்கைகளையும் தூக்கிக்கொண்டு ஒட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சிறீ லங்கன் ஏர்லைன்சின் முக்கிய புள்ளியும் சேர்த்தே கப்டன் கடாசியிருக்கிறார்.
1 மணிக்குப் புறப்பட வேண்டிய விமனம் 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் தாமதமாக 3:20 இற்கே கொழும்பிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
தனது முதலாளிகள் ஒருவரையும், ராஜபக்சவிற்கு நெருக்கமான இலங்கை அரச அடியாள் ஒருவரையும் எந்த அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் ஏனைய லைக்காக்களோடு சேர்த்து விமானத்தை விட்டு வெளியேற்றிய கப்டன் செந்தூர்செல்வன் தமிழர். இங்கு பணத்திற்கு விலைபோகாத செந்தூர்செல்வனே சுப்பர் ஸ்டார். கத்தி படத்தின் வேர்ஷனை உண்மையிலேயே நிகழ்த்திக்காட்டியவர்.
விமான நிலையத்தினுள் இறக்கப்பட்ட லைக்கா குழுவிலிருந்த ஆங்கில வெள்ளைக் கூலி ஒன்று மறுகணமே தமக்கு மீண்டு செல்ல விமானம் வேண்டும் என்று அடம்பிடிக்க லைக்காவிற்கு ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தே கசிப்பு அசிங்கத்தைத் தேசிய அசிங்கமாக்கும் வேலை ஆரம்பமானது.
ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி மற்றும் லைக்காவின் பணம் வழங்கும் பட்டியலிலுள்ள ஊடகங்கள் லைக்கா உரிமையாளஎ சுபாஸ்கரன் இலங்கையில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு மக்களை மந்தைகளாக்கின.
உடனடியாகவே செய்தியை உள்வாங்கிக்கொண்ட சீமானும் விசில்களும் முக நூலில் சுபாஸையும் லைக்காவையும் தேசியத் தலைவகளாக்கும் முயற்சியில் இறங்கின.
பணத்திற்காக தமிழ்ப் பேசும் மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் குருதியையும் விலைபேசும் இக் கும்பல்களை என்னென்பது? தம்மைச் சுற்றி மாபியா வியாபாரப் பேரரசைத் தேசியத்தின் பேரால் உருவாக்கிக்கொள்ளும் இச் சமூகவிரோதக் கும்பல்கள், எதற்கெடுத்தாலும், பிரபாகரன், புலிகள், மக்களுக்காக மரணித்த போராளிகள் போன்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அதன் ஆழத்தில் பணத்தைச் சுருட்டிக்கொள்வதே இந்த ஊடக மாபியாக்களின் அடிப்படை நோக்கம். இவர்களின் பண வெறிக்கு ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் பலியிடப்படுகிறது. இதுவரை கால தியாகங்களும் இழப்புக்களும் பயன்பட்டுப் போகின்றன.
இவர்களைப் புறக்கணிப்பதும் மக்கள் சார்ந்த உண்மையை உலகிற்குச் சொல்வதும் இன்று ஒவ்வொருவரதும் கடமை. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மட்டுமல்ல, தேசியத்தின் பேரால் பிழைப்பு நடத்தும் பண வெறியர்களும் அவர்களின் வலையமைப்புக்களும் கூட தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றன.
தொடர்புடைய பதிவுகள்:
விலை போகாத விமானியும், விலைபோன தேசிய ஊடக அசிங்கங்களும்.
அற்பனுக்கு ஏதோ வந்தால் அா்த்தராத்திாியிலும் எழுந்து குடைபிடிப்பானாம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் எதுவும் என்ன இருந்தாலும் கொஞ்சம் பரம்பரைவழியாகவும் வரவேண்டுமல்லவா.
வாழ்க அந்த மனிதன் அதாவது விமானி.
இதையும் அந்த விமானி பொறாமையில்தான் அப்படி நடந்து கொண்டுள்ளாா் என்று சில அடிமை மனோபாவம் கொண்டவா்கள் இங்கே கூற முற்படலாம்.
பல உயிர்களை காப்பாற்றிய விமானி தன் கடமையை துணிந்து செய்த மனிதராவார்.
லைக்கா கும்பல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு பின்வாசல் வழியாகவோ வேறு தனிப்பாதை வழியாகவோ செல்லப்படாது எனவும் சாதாரண பயணிகளின் பாதையிலேயே சென்று வெளியேற வேண்டும் எனவும் கடுமையான தொனியில் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதிர்வு இணையம் அல்லிராசா புலிகளின் தடையை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட்டாரா என கடுமையாக இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டதாக செய்தியை வெயிட்டது. அதிர்வு மக்களும் தன்னைப் போல கேணைப்பயல்கள் என எண்ணிக் கொண்டுள்ளது.
பணத்திற்கு இணைய ஊடகங்கள், தேசிய சீமான்களை வாங்கியது போன்று பைலட் கப்டனை வாங்க முடியவில்லை. அப்போது தான் விலைபோகாத மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று லைக்காவும் 31 உம் புரிந்துகொண்டிருக்க வேண்டும்
புலம்பெயர் நாட்டில் எல்லாமே யாவாரமாக்கப்படதுக்கு இங்குள்ள கஷ்டங்களும் காரணம் என்பதையும் விளங்கிகொள்ள வேண்டும். இதை யாராவது மறுக்குறீர்களா?
சிங்கள இணையம் சொல்லும் கருத்தை அப்படியே நம்பி எழுதி இருக்கிறீர்கள் போல தெரிகிறது. அந்த சிங்கள இணையத்தில் ஒரு வார்த்தை உள்ளது. அதாவது புலி மாட்டிக்கொண்டது போல என்று எல்லாம் எழுதி இருக்கிறார்களே அது உங்கள் கண்களில் படவில்லையா ? இல்லை எழுதவேண்டும் என்று தோணவில்லையா ? உங்கள் எழுத்து நடையில் ஒரு நடு நிலை இல்லை. தராதரம் இல்லை ! அசிங்கமான வார்த்தை பிரயோகம் மட்டுமே இருக்கிறது. லைக்கா மோபைல் என்னும் நிறுவனத்தை நீங்கள் அடியோடு வெறுக்கிறீர்கள் என்பது நன்றாகப் புரிகிறது. வேறு எதுவும் புரியவில்லை.
அன்புடன் ,
சிவமணி லண்டன்.
இதைத் தான் வைத்து இன்றைக்கு சிவபோதனை போலுள்ளது.
http://www.sundaytimes.lk/141102/columns/captain-fantastic-drunken-uk-rajahs-brought-down-to-earth-125667.html
ஆங்கில மூலத்தை எழுத்துக் கூட்டி மூன்றுமுறை வாசியும் உமது புரிந்துணர்வு உய்யும்.
நீரும் ஒரு பிச்சைக்கு லைக்காவுக்கு பொதி சுமக்கும் ஒரு தமிழ்த்தேசிய அசிங்கமாக (இனியொரு-இன் சொற்பிரயோகத்துக்கு நன்றி) இருப்பீரானால் கடைசி வசனத்தை பற்றி முன்கூட்டியே தகவல் தருவீரானால் நிம்மதியாய்த் தூங்கலாம்.
// Tailpiece to the story is that these folks are tipped to get the GSA (General Sales Agency) for the national airline in Britain. What with a senior official from the airline about to join them after November 25 as their CEO
லைக்காபிளை நிறுவனத்துக்கு நவம்பர் இறுதியில் ஒரு புதிய நிர்வாகி போலத் தெரிகிறதே?
இதுவும் ஆங்கிலத்தில் தான் ஆனால் சனத் ஜயசூரியா எப்படி ராஜபக்ச அரசால் கிரிக்கட் அணியை அலங்கரித்து பொய்ப்பிரச்சார அரசியலுக்கு அனுப்பப்படுகிறான் என்பதை நன்கே புரிய வைக்கும்.
இந்த பிரித்தானிய ஊடக விபச்சார அமர்த்தலுக்குப் பின்னரா அல்லது முன்னதாகவா சனத் ஜயசூரிய லைக்கவின் சொறிமட்டை வியாபரத்துக்கு கைமாற்றப் பட்டான் என்பது ஒரு புதிர். ராஜபச்ச குடும்பத்தின் பிரதான வியாபரமான விமானத்துறைசார் சேவைகளின் அடிப்படையிலா லைக்கா பிளை நிறுவத்தைப் பெருப்பிக்கவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறதே?
http://www.theguardian.com/sport/2011/jun/21/the-spin-sanath-jayasuriya-england
// n a recent interview with the BBC’s Sinhalese service, Jayasuriya explained that “the world should realise that the Sri Lankan government has stopped one of the worst terrorist organisations in the world. I am 41 years old. Thirty years of my life, we went through a terrible time in Sri Lanka. Anybody can come into my country now and walk anywhere without fear,” Jayasuriya continued. He added that the world should be “happy” at what the government had achieved
இப்பந்தியை தேசிய அசிங்க ஊடகங்கள் திருப்பித் திருப்பி வாசிக்க வேண்டும். இனவழிப்போ போரிகுற்றமோ என்று ஒன்றையும் பொருட்படுத்தாது தான் மூன்று தசாப்தங்களாக பீதியில் பயந்து வாழ்ந்ததற்குக் காரணமான பய்ங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாம். எவரும் தனது நாட்டுக்குள் வரலாமாம் …வந்து உண்மைகளை நேரேயே அறியலாமாம். தனது அரசின் செயற்பாட்டையொட்டி முழு உலகே ஆனந்தப்படவும் வேண்டுமாம்.
பண்ணையில் வாழும் பன்றியை குளிப்பாட்டி கழுத்தில் சிவத்த
றிபனைக்கட்டி மேசையில் இருந்த்தினால் அழகாகத்தான் இருக்கும்.
அந்த பன்றியை அதன் இருக்குக்மிடத்தில் திரும்ப விட்டால்தான் அந்தபன்றியின் குணமும் அதன் சுயரூபமும் வெளிவரும்.
இதே போல்தான் சில மனிதர்களின் வேசமும். யாரால் எதற்காக
இவ்வாறு வளர்ந்தார்களென்பது யாருக்குமே தெரியாது.
ஆனால் அவர்களின் செயல்கள் அவ்ர்களின் சுயரூபத்தையும்
அவர்களிடமுள்ள திறமையின் வர்ணத்தையும் வெளிக்காட்டும்,
அடுத்த நாளே ஊடகப்படுகொலை மூலம் தனது சாயத்தினை வெளுக்கச்செய்துவிட்டனரே.
நானும் ஒரு தமிழன்தான் என சொன்ன
லைக்கா சுபாஸ்கரன் இலங்கை விமான நிலையத்தில் கைதானது ஏன்? எப்படி?
——————————————————-
லைக்கா தயாரிப்பு எனும் பெயரை அகற்றும் வரை கத்தியை வெளியே விட அனுமதியோம் என நடந்த தமிழ் ஆர்வலர்களது அல்லது கவர் விரும்பிகளது போராட்டம் தமிழுலகம் அறிந்ததே. அது பழைய நியுஸ் – இது எக்ஸ்குழுசிவ் நியுஸ்.
லைக்கா சுபாஸ்கரனின் பொக்ஸ் ஒபிஸ் பண ஆசையை நிராசையாக்கிய தமிழகத்தை (தமிழர்களை) முட்டாள் ஆக்க மண்டையை போட்டுக் குடைந்த போது போடப்பட்ட கத்தாத சினிமாதான் லைக்கா சுபாஸ்கரன் அல்லிராசா கைது நாடகம்.
தனக்கு மகிந்தவோடு எந்த உறவும் இல்லை. நானும் ஒரு தமிழன்தான் என்றாலும் லைக்கா பிளைய் எனும் (லைக்காவின் விமான சேவை ) பெயரில் டிக்கட் முகவர் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஶ்ரீலங்கா அதிபர் மகிந்த அவர்களது குடும்ப உறவினர்கள் சிலர் மௌன பங்குதாரர்களாக உள்ளனர். முன்னால் கிரிகெட் வீரரும் – ஶ்ரீலங்கா அரசின் உப தபால் அமைச்சருமான சனத் ஜயசூரிய லைக்கா மற்றும் ஶ்ரீலங்கா அதிபர் ஆகியோரது இணைப்பு பாலமாக இங்கு செயல்படுகிறார்.
எனவேதான் கடந்த முறை இவர்களால் எதுவித தங்கு தடையுமின்றி விமான படை விமானத்தில் முல்லைத்தீவு – கிளிநொச்சி – யாழ்பாணம் – மன்னார் ஆகிய இடங்களுக்கு சனத் ஜயசூரியவுடன் சென்று ஞானம் பவுண்டேசனை தொடங்கி வைக்க முடிந்தது.
இந்த ஞானம் பவுண்டேசனின் தலைவராக ரூமி ஜவுபர் என்பவர் செயல்படுகிறார். அதன் இணைப்பாளராக லண்டன் தமிழரான – தற்சயம் யாழ்பாணத்தில் வசிக்கும் செந்தில் கடமையாற்றுகிறார்.
இனி விடயத்துக்கு வருவோம். கத்தி திரைப்படத்தின் வெற்றியை லைக்கா சுபாஸ்கரன் – சனத் ஜயசூரிய உட்பட தமது குழுவினருடன் மாலைதீவில் விமரிசையாக கொண்டாடினார். அங்கே போடப்பட்ட திட்டம்தான். மாலைதீவிலிருந்து கொழும்பு ஊடாக விமானத்தில் லண்டனுக்கு பயணிக்கும் போது கைதாவதற்கான திட்டம்.
அவர்கள் போட்ட திட்டத்தின் படி ; மாலைதீவிலிருந்து Business classசில் பயணத்தை தொடங்கியதும் விமானத்துக்குள் அட்டகாசங்களை செய்யத் தொடங்குகிறார்கள். இவர்களது அட்டகாசங்களை பொறுக்க முடியாத விமானத்தின் கெப்டன் ; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்களது அட்டகாசம் குறித்து தெரிவிக்கிறார்.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும் பாதுகாப்பு துறையினர் விமானத்தினுள் இருந்த லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உட்பட குழுவினரை விமானத்தை விட்டு வெளியேற்றி கட்டுநாயக்கா (கொழும்பு) விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கிறார்கள். விமானத்தில் வந்தவர்கள் இந்த ரகளைகளை பார்க்கிறார்கள்.
பின்னர் இவர்கள் தடுத்து வைக்கப்பட இவர்கள் வந்த விமானம் லண்டனை நோக்கி தனது பயணத்தை இவர்களில்லாமலே தொடர்கிறது. இவர்கள் திட்டமிட்டபடி இவர்களது உதவியில் நடத்தப்படும் ஊடகங்கள் லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பில் கைது என Breaking News ஒன்றை வெளியிடுகிறது. தமிழக மற்றும் சர்வதேச தமிழர்களது தலையில் மிளகாய் அரைக்க முயன்றாலும் இச் செய்தி இலங்கை ஊடகங்களில் பெரிதாக வரவேயில்லை.
இவர்களது உண்மையான நாடகத்தை அறிந்த சிங்கள ஊடகங்கள் கொழும்பில் நடந்த கூத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.
கத்திக்கு வெற்றி ! மொக்கு புத்திக்கு தோல்வி!!
சிங்களத்தில் அந்த தகவல் : http://sinhala.lankanewsweb.net/exclusive/14300-2014-11-02-15-24-42
// முன்னால் கிரிகெட் வீரரும் – ஶ்ரீலங்கா அரசின் உப தபால் அமைச்சருமான சனத் ஜயசூரிய லைக்கா மற்றும் ஶ்ரீலங்கா அதிபர் ஆகியோரது இணைப்பு பாலமாக இங்கு செயல்படுகிறார்
லைக்காவுக்கும் ராஜபக்ச குடும்ப பியத்துக்கும் இணைப்பு பாலம் 2007 அளவில் ஸ்கைநெட் நிறுவனஞ் சார்ந்த $100 மில்லின் களவு. இப்போது அந்த ஸ்கைநெட் நிறுவனம் ஸ்ரீலங்காவின் பங்குசந்தையிலேயே அதி விலைஉயர்ந்த கைமாறலின் பின்பு மலேசியாவில் இயங்கும் ஆனந்தகிருஷ்ணனின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்-இன் ஒளிக்கப்படும் உப-நிறுவனமாக உள்ளது.
சனத் ஜயசூரிய ஒரு உலகப் பிரசித்தி பெற்ற துடுப்பாட்டக் காரன். முத்தையா முரளிதரனைப் போலவே கிரிக்கட் – ஐ வைத்து வியாபார விளம்பரம் செய்யும் லைக்காவின் நோக்கில் அவன் ஒரு முக்கிய பாலம். ஆனால் ராஜபக்ச குடும்மபத்துக்கு என்பது தவறான கருத்து.
சனத் ஜயசூரியவுக்கும் ஏதோ வழ்க்கை விமானப் பணிப்பெண்களுடன் தகராறூஜகளிலேயே என்று ஆகிப் போயிற்று:-
http://lankanstuff.blogspot.co.uk/2012/11/sanath-jayasuriya-maleeka-sirisena.html
நேர்மையாக நடப்பவர்களை தண்ணியில்லாக்காட்டுக்கு அனுப்புவது போல இந்தநேர்மையான விமானியையும் பணம் படைத்தவர்கள் என்ன செய்வார்களோ தெரியாது இனியொருதான் அவருக்கு உதவி செய்யவேண்டும்
அது சரி லிபரா மோபைல் நிறுவனத்திடம் இனியொரு இணையம் எவ்வளவு காசு வாங்கியது என்று சற்று சொல்ல முடியுமா ? ஒரு தமிழனை பிளேனில் இருந்து இறக்கிவிட்டுள்ளார்கள் சிங்களவர்கள். இதனை பெருமையாகப் பேசி இருக்கிறீர்கள் நீங்கள் அவ்வளவு தான் !
“ஒரு தமிழனை பிளேனில் இருந்து இறக்கிவிட்டுள்ளார்கள் சிங்களவர்கள். ”
மன்னிக்க வேண்டும் சிவமணி அய்யா….
இந்தக் குடிகார குறவர் கூட்டத்தை இறக்கி விட்டவர் சிங்களவர்கள் இல்லை
அவர்களை எப்படியாவது அந்த விமானத்தில் கூட்டிச் செல்லும்படி VIP கள் நெருக்கடி கொடுத்தும் … அவர்களை அவர்களைக் கூட்டிச் செல்ல முடியாது என்று உறுதியாக நின்றவர் அந்த விமானத்தின் கப்டன் செந்தூர்செல்வன் என்ற தலை வணங்காத் தமிழன்
“Hats off to Capt. S. Senthoorselvan who refused to budge in the face of immense pressure — not so much from the passengers as from high officials of the national airline” The Sunday Times .
“லிபரா மோபைல் நிறுவனத்திடம் இனியொரு இணையம் எவ்வளவு காசு வாங்கியது என்று சற்று சொல்ல முடியுமா”
நல்ல காலம் அந்த தமிழ் கப்டன் லிபராவிடம் காசு வாங்கியிருப்பார் என்று சிவமணி அய்யா கூறவில்லை
“இதனை பெருமையாகப் பேசி இருக்கிறீர்கள் ”
ஆம் அந்த தமிழ் கப்டனை எண்ணி தமிழர்களாகிய நாம் பெருமைப்படலாம்
“நீங்கள் அவ்வளவு தான் ”
சிவமணி அய்யா ..
இனிஒருவிற்கு மரண தண்டனை விதித்து விட்டீர்களா !
இனிஒரு நேற்று முடக்கப் பட்டதா?
அல்லது
கொலை முயற்சியில் இருந்து தப்பிப் பிழைத்ததா??
“நீங்கள் அவ்வளவு தான் ” என்று
சிவமணி அய்யா .. கூறியதில் உள் அர்த்தம் இருந்ததா??
லக்காவும் லெபராவும் கொழுக்கட்டையும் மோதகமும்போல்தான்.
ஒரேவேரில் வளர்ந்த இரு மரங்கள்.