பிரான்சின் இருதயப்பகுகுதியில் லா டிபென்ஸ் என்ற இடத்தில் அணையா விளக்கும் அதனைச் சுழவரக் காணப்படும் உலக யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களது நினைவுச் சின்னங்களும் பாரிஸ் நகரின் வருவாயை அதிகரிக்கும் மூலங்கள். இதே போன்று புலம்பெயர் சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு தமிழ் நாட்டில் நடராஜன் என்ற ஊழல் பேர்வழியின் முதலீட்டில் உருவாக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம். காலம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களின் எதிரியாகச் செயற்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கொல்லப்பட்டவர்களின் நினைவு முளைப்பதற்குக் கைகொடுத்தவர் நெடுமாறன். நடராஜனின் பணமுதலீட்டை நெறியாள்கை செய்தவர் அவரே. இது குறித்த முழுமையான விவரணத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையனின் காணொளி தருகிறது.
மருதையன வேஸ்ட் no different so ramasamy indu Ram
புலிகள் கடைசிநேரத்தில் பலரை தொடர்பு கொண்டதாக கூறும் பழைய நக்சல் பாரிகளின் எச்ச சொச்சமாக விளங்கும் திரு. மருதையன் அவர்களே, புலிகளின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து, மு.க.கனிமொழியை, க.அன்பழகனை, ஜெயந்திநடராஜனை தொடர்பு கொண்டதை ஏன் கூறவில்லை. பொருளாதாரப் பிரச்சனை எல்லா இயக்கங்களுக்கும் பொதுதான். தி.மு.க.வின் 2 ஜி பெட்டிகள் வெளிநாடுகளில் கனமாகத்தான் உலாவுகின்றன.
“ஓடுகிறவர்கள் எல்லாம் ஓடுங்கள்..காசையும் ஆயுதத்தையும் தாருங்கள், நாங்கள் போராடி வென்று காட்டுகிறோம்.” என்றவர்கள் இந்த மாதிரி இந்திய அரசின் அடிவருடிகளை நம்பி தான் கெட்டார்கள் .
அதில் எல்லா இயக்கங்களும் அடக்கம்.
மருதயைனை குறை கூறுபவர்கள் அவற்றிற்கு எதிரான ஆதாரங்களை சொன்னால் ஏற்க்க முடியும்.
தோழர் மருதய்யன் கூறுவது நூறு வீதம் சரியே !
சிந்தனையில் மாற்றம் தேவை. இல்லை என்று அடம் பிடித்தால் இன்னும் அழிவுகளை தான் சந்திக்க நேரும்.
தெற்காசிய “டிரைபல்” சமூகங்கள் “ஜாதி அமைப்பு” ரீதியாகத்தான் இயங்குகின்றன. இது ஐரோப்பிய “குடியுரிமை” அமைப்பு வளர்ந்த விதமானது. ஐரோப்பாவிலும் மத்திய காலங்களில் உழவர்கள் கிட்டதெட்ட அடிமைகளாகவே இருந்தார்கள். கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பவை ஐரோப்பா வளர்ச்சியடைந்த பிறகு உருவான சமூக எச்ச சொச்சங்களே!.
ஐரோப்பாவின் நோய் (பெஸ்ட்) தாக்குதலும், மதப் போர்களும், சிவில் போர்களும், என்லைடெண்மெண்டுகளும், தொழிற்ப் புரட்சிகளும் இவைகளை மாற்றியமைத்தன.
ஆனால் தெற்காசிய சமூகங்களில் இவைகள் நடைப்பெறவில்லை, மேலும் காலனித்துவத்தால், இந்த மாற்றம் “உறைநிலைக்கு” சென்றது. தமிழநாட்டிலாவது ஈ.வே.ராமசாமி நாயக்கரால் சிறிது மாற்றம் வந்தது. இலங்கை தமிழர் மத்தியில் இதுக் கூட நடைப்பெறவில்லை.
உயிர் போகும் 2009 கட்டத்தில் கூட இந்த மனோநிலை மேலும் இறுகியதே தவிர மாற்றமடையவில்லை. மாவிலாறு நிகழ்ச்சியிலிருந்தே அவரவர் வசதிக்கேற்ப புலிகள் இயக்கத்தில் தான்ரோன்றித்தனமாக செயல்பட ஆரம்பித்தார்கள். தங்கள் ஜாதி தொடர்புகள் வழியில் தங்களை காப்பாற்றிக் கொளும் முயற்சிகளின் அவலமாகவே இருந்தது. இதையேதான் இந்திய மட்டத்திலும் கைகொள்ளும்பதட்ட நிலை இருந்தது. பிரபாகரன் சுற்றி இருந்தவர்கள் தன்னிச்சையாக நெடுமாறன், வைக்கோ போன்றோர்களைநெருக்கினார்கள். இதில்கைவிடப்பட்டது எந்த தொடர்பு வசதிகளும் இல்லாத அப்பாவி மக்களே. கழுதை தேய்ந்து ஜாதி இயங்கியலாக மாறியது. ஒரு பொது நிலைமை இலாமல் ஒவ்வொரு ஜாதியும் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் பிசுபிசுத்த நிலை ஏற்ப்பட்டது !
Aunty ஐ ஆஸ்பத்திரியில சேருங்க.