வேதாந்தா என்பது பிரித்தானியாவை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்று. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து ஆசிய நாடுகளை மீண்டும் காலனியாக்கும் ஏகபோக உப கூறுகளில் வேதாந்தாவும் ஒன்று. லண்டன் பங்குச் சந்தையில் இலாபத்தில் நடத்தப்படும் நிறுவனங்களில் வேதாந்தாவும் ஒன்று. ஒரிசா மானிலத்தில் பழங்குடி மக்களை தமது சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடித்து தமது வியாபார வெறியைத் தீர்த்துக்கொண்டது வேதாந்தா. பங்குச் சந்தையில் பிரித்தானியச் செல்வந்தர்களது முதலீட்டில் இயங்கும் வேதாந்தா உலகின் 20 பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்று. அலுமினியம், இரும்பு, வெள்ளி, ஈயம் போன்ற கனிமங்களை உலகம் முழுவதும் கொள்ளையிடும் நிறுவனங்களில் வேதாந்தா முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்படுக்கையில் எண்ணை மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச 2011 ஆம் அண்டில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அகழ்வில் இந்திய நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்த Cairn India இன் இலங்கைக் கிளையான Carirn Lanka முழுமையாகச் செயற்பட்டது. ஆக, மன்னார் கடற்படுக்கையில் இந்தியாவும் சீனாவும் போட்டி போடுவதாகவும் இந்த இடைவெளிக்குள் புலம் பெயர் குறும் தேசிய ஐந்தாம்படைகள் ஒடி மீன்பிடித்து தமிழீழ உணவு படைப்பதாகவும் மக்களை ஏமாற்றினர்.
உண்மை என்னவென்றால் இன் வேதாந்தாவின் இந்தியக் கிளை. 60 வீதமான நிறுவனத்தின் பங்குகளை பிரித்தானிய நிறுவனமே வைத்திருக்கிறது. பிரித்தானியச் செல்வந்தர்களின் மூலதனத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களின் நிதியிலேயே தன்னார்வ நிறுவனங்கள் பல்தேசிய நிறுவனங்களின் பொறுப்பு என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கடல் பாதுகாப்பிற்கு என கோத்தாபயவின் தலைமையில் இயங்கும் ரக்ணா லங்கா என்ற அமைப்பிற்கு மில்லியன்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரித்தானியாவில் இருந்து சென்றதாக பிரித்தானிய டேவிட் கமரனின் கட்சி கூறுகிறது. சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பாதுகாப்பு அது என்கிறது. ஆனால் அதன் இணை நிறுவனமான அவன் கார்ட் மரிடைம் என்ற இலங்கை நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. இலங்கையில் ஆயுதங்களைப் பாதுகாப்பதற்கு ஏனைய தனியார் இராணுவத்திற்கு சேவை செய்வதாக இந்த நிறுவனம் கூறுகிறது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பல தனியார் பாதுக்காபு நிறுவனங்கள் இலங்கை இனக்கொலையாளிகளைக் கொண்ட இந்த இரண்டு நிறுவனங்களுடனும் கூட்டுவைத்து இயங்குகின்றன.
பாலஸ்தீன அரசு மகிந்தவிற்கு விருதுவழங்கியதாக வெளியான இலங்கை அரசின் போலிச் செய்தியை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ஏகாதிபத்திய சார்பு இணையங்கள் மேலும் ஒரு செய்தியை நேற்று வெளியிட்டன. கோத்தாபய சட்டவிரோத ஆயுதங்கள் கடத்துவதை சர்வதேச உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டனவாம். கோத்தாபயவிற்கு ஆயுதங்களைத் தனியார் நிறுவனங்களூடாக வழங்குவதே சர்வதேச உளவு நிறுவனங்கள் என்பதை மறைப்பதற்கான இந்தச் செய்தி மற்றொரு சதி.
மகிந்த குடும்பத்தின் தனிச் சொத்தான இந்த இரண்டு இராணுவ நிறுவனங்கள் மல்ரி பில்லியன் வியாபார நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிகின்றன.
இந்திய இலங்கைக் கடற்படுக்கையில் எண்ணைவளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் பாதுகாப்பே இந்த நிறுவனங்களின் முக்கிய சேவையாகும் என்பது கணிப்பு.
மன்னாரைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தைச் சூனிய வலையமாக்குவது இலங்கை இராணுவத்தின் முதலாவது பணியாகும். அதற்கு இந்திய இராணுவமும் துணைசெல்கிறது.
இதன் முதல்பகுதியாக இக்கடற்பரைப்பை மீன்பிடிக்கு ஒவ்வாத பிரதேசமாக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. 2009 வன்னி இனப்ப்படுகொலைகளின் பின்பும் தமிழ் நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்வளங்கள் அழிக்கப்படுவதும், சீனோர் மீளமைக்கப்படுவதும் இப்பின்னணியிலிருந்து ஆராயப்படவேண்டியது அவசியமானதாகும்.
தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளங்கோ புதுவையில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பில் வெள்ளைக் கொடியுடன் இலங்கையில் குடியேறுவோம் என்கிறார். வேதாந்தாவின் எரிவாயு மற்றும் பெற்றோல் அகழ்வு வலையங்கள், மீன்பிடிக்குத் தடைசெய்யப்படப் போகின்ற பகுதிகள் ஆகியன குறித்த தகவல்களை இலங்கை இந்திய அரசுகளிடம் உத்தியோக பூர்வமாகத் இலங்கை இந்திய மீனவர்கள் பெற்றுக்கொள்வதும் அவற்றிற்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்களைத் திட்டமிடுவதும் அவசியமானதாகும்.
Thank you for the information.