ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க பிற நாடுகளில் விடுதலைப்புலிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து இவ்வாணையகம் எந்தக் குறிப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித் உரிமைகளை சட்டவரம்புகளுக்கு உட்பட்டுக்கூட மதிக்காத இலங்கை அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,சில நாடுகளின் அரசுகள் புலி ஆதரவு குழுக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.ஆனால் புலி ஆதரவு குழுக்களின் சட்டவிரோத செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே இக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிதீவிரப்படுத்தப்படுதல் வேண்டும்.
இறைமை உடைய ஏதேனும் ஒரு நாட்டுக்கு ஆபத்தாக இருக்கக் கூடிய பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் கடும்போக்கைக் கைக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.







