மனித உரிமைகள் இல்லத்தினால் யாழ். பொது நூலக மண்டபத்தில்; நடத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு யாழ் மாநகர முதல்வரின் நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கருத்தரங்கு 19 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்து. அதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
19 ஆம் திகதி மாலை வேளை கருத்தரங்கிற்கு சென்ற போது, மாநாகர நூலக மண்டபத்தில் மாநாகர முதல்வர் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்ததாகவும் மனித உரிமைகள் இல்லக் கருத்தரங்கு நிறுத்தப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் வட-கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஏற்படு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கினை அதிகாரத்திலுள்ளவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொள்ள இருந்ததுடன் தற்காலப் பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் வெளிக்கொணரப்படும் என எதிர்பார்த்திருந்த வேளையில், இவ்வாறானதொரு கருத்தரங்கினை நடாத்த விரும்பாத சக்திகளே இக்கருத்தரங்கினை நடாத்த விடாமல் தடுப்பதற்கு இந்த முயற்சியினை மேற்கொண்டாதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கைகள் குறித்து பல அதிருப்தியீனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நியைலில்; இவ்வாறனதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.







