மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்

இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.

மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.

வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.

இங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு “குடி”, “பகுதி” என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.

மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.

மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.

மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).

மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.

மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.

இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.

இங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.

இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.

திருகோணமலை

மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.

திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.

மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

24 thoughts on “மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்”

 1. சிவத்தம்பிக்கு இந்தக் கட்டுரையைத் தொடங்கி மொட்டையாய் முடிக்க என்ன தேவை?

 2. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் கட்டுரை சிறிதானாலும் மட்டக்களப்பு சமூகத்தின் வாழ்வியல் முறையினை ஒரு ஆய்வு நிலையில் வெளிக்கொணர்ந்தமை பாராட்டிற்குரியது. யாழ் சமூகம் பற்றி பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் சிவத்தம்பி அவர்கள் மட்டக்களப்பு சமூகம் பற்றிய முழுமையான ஆய்வை தொடர வேண்டும். இலங்கைச் சூழலில் சமூக ஆய்வுகள் பற்றிய புலமைச்சிரத்தை மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இவைகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.

  1. இப்பிடி பின்னூட்ம் விடடு விட்டே சிவத்தம்பியை கவித்திட்டிடீங்களேடா!

 3. சிவத்தம்பியின் இந்தக்கட்டுரை எங்கே வெளிவந்தது, எதற்காக எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது போன்ற தகவல்கள் எதையுமே காணோமே…. இது இனியொருவுக்காக அவர் எழுதியதா?

 4. மயூரன்,
  2008ம் ஆண்டில் இனியொரு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், கட்டுரைகளுக்காக காலத்தைச் செலவுசெய்து தேடிய வேளைகள் ஒரு நண்பர் அனுப்பிவைத்த கட்டுரை. அப்போதே இது பதியப்பட்டது. முதலாவது பின்கருத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்வீர்கள். இப்போது மீள் பதிவு செய்யப்படுகிறது. இது வேறெங்காவது பதிவானதா என்பது குறித்து எமக்கு போதிய தகவல்கள் இல்லை. இருந்தால் பதிவிடுங்கள். சமகால அரசியலின் பல கூறுகள் கட்டுரைகளாக ஒவ்வொருநாளும் வெளியாகின்றன. இவற்றையெல்லாம் உச்சிவெயிலில் அரிக்கன் விளக்கோடு தேடி நீங்கள் இறுதியாகப் பெற்றுக்கொண்டது சிவத்தம்பி யாருக்காக எழுதினார் என்ற வினாவை மட்டுமே. நாளாந்தம் விவாதங்களில் பங்காற்றும் வாசகர்களுக்குக் கூட இந்த அக்கறை உருவாகவில்லைப் பாருங்கள்… உங்கள் சமூகப்பற்றுக்கு வாழ்த்துக்கள்..

 5. இருக்கலாம்!இல்லாமலும் இருக்கலாம்!கடந்த ஆண்டு தமிழின உணர்வாளர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் க(கொ)லைஞர் நடாத்திய (கனி)மொழி மாநாட்டில் ஆராய்ச்சி?க் கட்டுரையாகவுமிருக்கலாம்!அதனால் தான் ஆதியுமின்றி,அந்தமுமின்றியிருக்கிறதோ?

 6. எடுத்தவுடன் நீங்கள் என் கேள்வியைப்புரிந்துகொள்ளும் விதம் என்ன என்பதை கண்டேன்.

  நான் கேட்டதற்குக்காரணம் இது முழ்க்கட்டுரை ஒன்றின் பகுதியா அல்லது புத்தகமொன்றின் சிறுபகுதியா, பத்திரிகைக்கு எழுதிய பத்தியா, இணையத்தளத்துக்கு எழுதிய வடிவமா என்பதை அறிவதுதான்.

  ஏனென்றால் கட்டுரை கூறும் விடயம் தொடர்பில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பாக மட்டக்ளப்பின் குடிமுறை, வழிபாட்டு முறைகள் பற்றிய ஆய்வுகளில் எப்போதுமே எனக்கு தனித்த ஈடுபாடு உண்டு.

  கட்டுரையின் மூலம் தெரிந்தால் நான் முழுமையாகப்படிக்கலாம் என்கிற நோக்கத்தில் தான் கேட்டது.

  முற்சாய்வு என்பது உங்களுக்குள் ஊறிப்போனபிறகு எதை நான் சொன்னாலும் அது இடக்கானதாகத்தான் இருக்கும்.

  இதற்கு ஒன்றும் செய்ய முடியாது

 7. மயுரனின் நியாயமான கேள்விகளிற்கு இனியொருவின் இடக்கான பதில்கள் இனியொரு மீதான நம்பகத்தகமையைக் குறைத்து விடுகிறது. இக்கட்டுரையை இனியொரு இப்பொழுது மீள் பிரசுரம் செய்வதில் ஏதாவது உள்நோக்கம் உள்ளதோ?
  சில மாதங்கள் வரை இனியொருவில் தூற்றப்பட்ட சிவத்தம்பி திடுதிப்பென்று கதாநாயக அந்தஸ்து பெறுகிறார் பாருங்கள்.

  நிற்க இக்கட்டுரை மட்டக்களப்பைப் பற்றி மட்டும் பேசவில்லை. திருகோணமலையையும் உள்ளடக்குகிறது. தலைப்புமட்டும் மட்டக்களப்புடன் நின்றுவிடுகிறது.

  கடைசியாக இக்கட்டுரை முழுமையடையவில்லை. பெரியதொரு கட்டுரையிலிருந்து பெயர்க்கப்பட்ட சில பந்திகள் போல உள்ளது

 8. சிவத்தம்பிக்கு கரியாரை தூக்கி விட வேணும்.அதுதான் இந்த அரைகுறை விளக்கம்.

 9. அய்யா குரு, சிவத்தம்பி இங்கே கரையாரைப் பற்றி பேசவில்லை. முக்குவரை பற்றி சொல்கிறார். முக்குவர் வேறு, கரையார் வேறு.
  மயூரன். நீங்கள் B.T.F உறுப்பினர் இல்லைத்தானே, பிறகு எப்படி இனியொரு உங்களிற்கு பொறுப்பான பதிலை தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

 10. ஐய்யா சுறா குட்டி

  முக்குவர் கரையார் சாதியில் ஒரு பகுதியினர்.

  நீங்களா இனிஒரு ஆசிரியர் ?

  1. இதுதான் சாதியவாத பன்னாடைகளின் புரிதல். மட்டக்களப்பில் உள்ள முக்குவர் சமூகத்திற்கும் கரையார் சமூகத்திற்கும் சாதிஅடிப்படையில் எந்த சம்பந்தமும் இல்லை. முக்குவர்களுக்குள் பல குடிமுறைகள் உள்ளன. வெள்ளாளகுடி, கோவிலார்குடி என்பன சில குறிப்பிடத்தக்க குடிகள்.

 11. இது தேவையாக்கும்! கா.சிவத்தம்பி கரையானா? கரைவெ(வே)ட்டியானா ? பூ….. (பு) ….. விமர்சனங்கள். மட்டக்களப்பு முக்குவர் யாழ்பாணத்தில் இருந்து சாதீய மோதல்களின் விளைவால் இடம் பெயர்ந்தவர்கள் என்ற விடயமும் உண்டு. இதனை பேசி என்ன பலன்?
  கா.சி.தம்பி 1980 களில் இயக்கங்கள் மத்தியில் கருத்தியல் ஆதிக்கத்தைச் செலுத்தியவர், மற்றும் கல்விமான்கள், சமுகம் என்பவற்றில் செல்வாக்குச் செலுத்தியவர் தமிழ் மக்கள் மத்தியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடியாது பத்தோடு பதினொன்றாக விமர்சன அரசியலை மாத்திரம் கொண்டவர் அவரின் சமுக பெறுமானத்தின்
  உயரிய விளைவுகள் குறித்து நான் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை. சிவத்தம்பி ஒரு தமிழ் அறிஜர், அவ்வளவு தான் அவர் பற்றிய எனது பார்வை ஆகும். அவரை போன்ற கருத்துருவாக்கிகளும் விமர்சனவாதிகளும் பகுப்பாய்வாளர்களும் குறைந்த பட்சம் தமிழ் மக்களை, தமிழ் ஈழப் போராட்டத்தை ஐக்கிய நிலையில் முன்னகர்த்திச் சென்றிருக்கலாம். விஜிதரன் படுகொலையின் பின்னர் எழுந்த புலிகள் EPRLF முறுகல் நிலைமை மோதலில் போய் முடியாமல் பார்த்திருக்கலாம். கூடிய பட்சம் ஆருடம் கூறும் அனைவரையும் புத்தியீவிகளாக கொண்டாடும் மனோ பக்குவம் தான் எம்மத்தியில் காணப் படுகிறது. அன்றும் இன்றும் அதே நிலைமைதான். சும்மா போங்கள் இவர்களை விட நம்ம கந்தப்பு சாஸ்திரி நல்லா சொல்லுவார் பரிகாரமும் சொல்லுவார். ஆனால் நம்ம தமிழ் புத்திஜீவிகளிடம் குறிப்பாக யாழ்பல்கலைகழக மண்டுகளிடம் கீப் வைத்து இருப்பதை தவிர வேறு எதுவும் இருந்தது இல்லை, பரிகாரமா இவர்களிடம் பணியாரம் தான் கிடைக்கும் போங்கள் சமுகம் என்றால் என்ன என்பதை சமுக கல்வி புத்தகத்தில் மாத்திரம் படித்து உணர்ந்தவர்களிடம் என்ன தான் சமுக அக்கறை. பாடமாக்கி ஒப்புவிப்பதில் மாத்திரம் எம்மை நாமே கெட்டிக்காரர்கள் என கூறி தம்பட்டம் அடித்து திரியும் கூட்டம். என்று மாறுமோ இந்த நிலைமை யார் மாற்றுவாரோ இந்த நிலைமை? அன்றொருநாள் எமது கனவுகள் அவலங்களுடன் முடிவுற்றது. என்று ஒருநாள் கிழக்கில் சூரியன் எமக்காய் உதிக்கும்? அன்று வரை பொறுமையாய் மீண்டும் காத்திருப்போம். அவலங்கள் தொடர்கதை அல்ல! முடிவுகளை தொடக்கம் ஆக்குவோம் வாருங்கள்.

 12. திமிலர், முக்குவர் இருவரும் மட்டக்களப்புக்கும் யாழ்பாணத்திற்கும் உரிய சாதிய பிரிவுகள். மட்டக்களப்பில் முக்குவர் விவசாயம் மீன்பிடி இரண்டையும் செய்கிறார்கள். யாழ்பாணத்தில் திமிலரும் அதே போன்று இரண்டையும் செய்கிறார்கள். சரி இதை தெரிந்து நாம் எதைச் செய்ய?

  1. இப்படிப்பட்ட கீழ்த்தரமான, காலத்திற்கு தேவையற்ற ஆராட்சிக்குத்தான் நாம் தகுதியானவா்கள் என்பதை நிரூபிப்பதில் என்ன தவறு கண்டுவிட்டீா்கள் ராகவன்.

   1. ஆம் குமார், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் நகர்வுகள் எதுவும் பிரகாசமாகவும் முற்போக்காகவும் இல்லை, நாம் எதையோ தின்று வளர்ந்து விட்டோம்.

 13. ஆனால் நம்ம தமிழ் புத்திஜீவிகளிடம் குறிப்பாக யாழ்பல்கலைகழக மண்டுகளிடம் எதுவும் இருந்தது இல்லை, பரிகாரமா இவர்களிடம் பணியாரம் தான் கிடைக்கும் போங்கள்…..

  மிக சரியான வார்த்தை.

 14. சரியான வார்த்தைப்பிரயொகமும் பதிலடியும், வாழ்த்துக்கள் ராகவன், ”வட்டுக்கோட்டைக்கு வழிதேட துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்காம்” தவிப்பும் வேதனையும் பட்டவனுக்கே புரியும், இங்கே ஊர்படுகிறபாட்டில் ஊமையன்கள் சீட்டி அடிக்கிறார்கள் – இவையெல்லாம் புளிச்ச ஏவறையில்லாமல் வேறென்ன? அவலங்கள் தொடர்கதை அல்ல! முடிவுகளை தொடக்கம் ஆக்குவோம் வாருங்கள். நடேசன்
  திருமலை

 15. கா.சிவத்தம்பி எனது அயலூர்காரர் அவர்பற்றி உயரிய மதிப்பு வைத்திருந்தேன். அவரை ஒரு முற்போக்குவாதியாக கணித்து வைத்திருந்தேன் கொழும்பில் தமிழ் சங்கத்தில் அவர் பங்குகொள்ளும் பல நிகழ்ச்சிகளில் நானும் குந்தி இருந்து நேரத்தை கழித்து உள்ளேன். இவர் ஒரு மோசடித்தனமான முகமூடி, முற்போக்குவாதி அவ்வளவுதான்.

  katsura சொல்லுவது போன்று, சிவத்தம்பிக்கு இந்தக் கட்டுரையைத் தொடங்கி மொட்டையாய் முடிக்க என்ன தேவை? என நானும் கேட்கிறேன். அதிலும் அங்கு (மட்டக்களப்பில்) ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. எனக் கூறும் இவர் வடமராச்சியின் கரவெட்டியின் கோடிகரையிலும் பௌத்த குடியிருப்புகள் இருந்தன எனச் சொல்லலாமே. சிவத்தம்பிக்கு சந்திரிக்கா இருந்து இருந்தால் நிறைய தூக்கி கொடுத்திருப்பா. மக்கள் மருமக்கள் எல்லோருக்கும் சந்திரிகா காலத்தில் நிறைய பெற்று கொடுத்தவர். இப்ப மகிந்த கருணாநிதி போன்றோரிடம் சென்று வாயை பார்த்தால் நிறையவே கொடுக்க கூடும். அதைவிட்டு விட்டு எனையா அவருக்கு தேவையில்லாத வேலை.

 16. Eman Al Obeidy burst into the hotel housing the foreign press in Tripoli Saturday and fought off security forces as she told journalists that she had been raped and beaten by Qaddafi militia members.

  She showed the members of the press her b…ruised and bloodied body, and said she had been abducted from a checkpoint, held for two days, and tied up, raped, beaten, defecated and urinated on by 15 men. She stayed in the hotel for an hour pleading for help from the reporters.

  In the ensuing chaos, reporters were beaten off and threatened as they tried to protect the woman and get her story, and hotel staff suddenly began working in tandem with security staff to get the woman off the premises. A reporter for the Financial Times had his recording device, which had recorded the woman’s testimony, wrested from him.

  She was shoved in a car and whisked away by government forces to a “hospital”.

  It has been dismissed it as “fantasies” by the Libyan government. The government went on to say that the woman appeared “drunk” and “mentally ill”.

  In Libya, as in other parts of the world, a woman’s rape remains her fault – please support her – see more on:- http://www.nytimes.com/2011/03/27/world/middleeast/27tripoli.html?_r=4&hp

 17. பாருங்கப்பா
  பத்து பின்னூட்டம் அதுக்கு பதில் இதெல்லாம் வந்திட்டுது. அப்ப அது நலர்ல சரக்கு.
  அதை தள்ளினவரும் நல்ல திறனாளி.
  இணையத்திற்கும் நல்லது.
  உங்களுக்கும் நல்லது.
  சரியதானே!
  போங்கப்பா வீட்டிக்கு.
  40 வருசாமா இந்தாள் சனத்தைக் கெடுத்து திரியிறான். இன்னும் அவனை வைச்சு கதையளக்கிறியள்.

 18. மட்டக்ளப்பு சாதி அமைப்பை. ஆராய்ந்தால் புரியும் முக்குவர் வேறு .முற்குகர் வேறு முற்குகர் குகவம்சத்தினர் இவர்கள் இந்தியாவின் ஒரிசா மானிலத்தை சேர்ந்தவர்கள்., முக்குவர் கரையார் இனத்தின் உட்பிரிவினர்

 19. சிவத்தம்பியின் இந்த எழுத்து ஒரு ஆய்விற்கான முன்னுரையாக கொள்ள முடியும். இந்த அடிப்படையை உள்ளடக்கிய பல புத்தகங்கள் தற்பொழுது கிடைக்கின்றன. அதில் முக்கிய விடயம் கிழக்கு மாகாணத்தைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள் முழுமையாக பெறமுடியவி்ல்லை என்பதுதான். முக்குவர் – முக்கியர் அல்லது முக்குவர் எல்லாம் ஒன்றுதான். இவர்கள் கேரளத்தில் இருந்து கன்னடக்கரை வரை வாழ்கின்றார்கள். இங்கு 1255களின் மாகோன் அவன் மதம் லிங்காயத்து – இது கர்னாடகாவின் மத்திய பகுதியில் இருந்து உருவாக எதிர்ப்பியக்கம். அதன் கோணேசர் கோவில் அந்த சமயப் பிரிவின் வழிபாட்டு முறையை ஒட்டடியே பண்டாரிகள் (தங்கேஸ்வரி) இருந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். கலிங்க ஆட்சிப் பிரதேசம் அதன் படகோட்டிகளை தீர்மானிக்கின்றது. புத்தளத்தில் இருந்த முக்குவர்- முஸ்லீம் முக்குவர் இவர்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சாதியப் பெருமைக்காக ஒரிசாவில் தேடுவதுடன் நிறுத்தி விடமுடியாது.

Comments are closed.