மகிந்த கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகும் சிறீ ரங்காவின் மின்னல் நிகழ்ச்சிக்குத் தடை

srirangaஇனப்படுகொலை, போர்குற்றம் போன்ற உணர்ச்சியூட்டும் வார்த்தைகளைத் தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தம்மைத் தமிழர்களின் பிரதிநிதி என்கின்றனர். குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத அருவருப்பான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் நயவஞ்சகள் ஒவ்வொரு முகமூடிகளுடன் தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வாக்குக் கேட்க வந்துவிடுகின்றனர்.

தமிழீழம், தேசியத் தலைவர், இனப்படுகொலை, சரவ்தேச விசாரணை போன்ற உணர்ச்சியூட்டும் வாத்தைகளைப் பயன்படுத்துபவர்கள் எல்லோரும் மக்கள் பற்றுள்ளவர்கள் அல்ல. மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் கூட இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதற்கு சிறீ ரங்கா சிறந்த உதாரணம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சிறீ ரங்கா என்பவர் நடத்தும் மின்னல் என்ற நிகழ்ச்சியில் சந்திரநேரு அழைக்கப்பட்டிருந்தார். வன்னி இனப்படுகொலையின் இறுதி யுத்தத்தின் போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நேரடிச் சாட்சிகளில் சந்திரநேரு ஒருவர்.

சந்திர நேருவைத் தனது மின்னல் நிகழ்ச்சிக்கு அழைத்து இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என நீண்ட உரையாடல் ஒன்றை சிறீ ரங்கா நிகழ்த்தினார்.

பின்னதாக அனந்தி சசீதரனை நிகழ்ச்சிக்கு அழைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்திற்காகச் செயற்படவில்லை என்றும் அதனை அனந்தி ஊடாகத் திருத்துவதே தமது நோக்கம் என்றும் கூறினார்.

சிறீ ரங்கா இப்போது மகிந்த கட்சியில் போட்டியின்றி தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளரான சிறீ ரங்கா மின்னல் நிகழ்ச்சி நடத்தும் அதே வேளை அரசியலில் ஈடுபடுவதால் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது.
சிறீ ரங்கா என்பவர் மட்டுமல்ல, சிறீ லங்கா அரசினதும், இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய நாடுகளதும் அடிவருடிகள் பலர் தமிழ்த் தேசியத்தைத் தமது பிழைப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் அடிமை சிறீ ரங்காவின் தமிழ்த் தேசியப் பற்று:

சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள்