Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பேரினவாத்தத்தையும் வன்முறையையும் தூண்டும் ராஜபக்ச சிங்கள பௌத்தர் அல்ல

இனியொரு... by இனியொரு...
07/20/2015
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியையும் போர் வெறியையும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தையுமே தனது பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அவர் போட்டியிடும் தொகுதியான குருனாகலையில் யுத்த வெறியைத் தூண்டும் வகையிலும், வன்முறையை மற்றும் பேரினவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசிவருகிறார்.

இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச தனது இனக்கொலை நடவடிக்கைகளைப் பயன்படுத்தியே மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்த எண்ணுகிறார். மகிந்தவின் வன்முறையை எதிர்கொள்ள இலங்கையில் வேறு கட்சிகள் இல்லை என்பதே அவல நிலை.

குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கல்கமுவ பொல்பிட்டிகம, யாப்பகூவ, இரியால, வாரியபொல, பண்டுவஸ்நுவர, பெல்காவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

அன்று யுத்தம் இருந்த காலத்தில் இந்தக் குருநாகல் மாவட்ட பிள்ளைகள்தான் அதிகமாக யுத்தத்துக்குப் போனார்கள். தோல்வியுறச் செய்ய முடியாது என்று உலகத்தில் முதலாம் இடத்தில் இருந்த கொலைகார அமைப்பை தோல்வியடையச் செய்ய இந்தக் குருநாகல் பிள்ளைகள் மாபெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார்?:

டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பத்துடன்
டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பத்துடன்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது. ராஜபக்சக்கள் மலாக்கன் கத்தோலிக்கர்கள்.(அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே)

மகிந்த ராஜபக்சவின் தந்தையின் பெயர் டொன் அல்வின் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவின் இயற்பெயர் பேர்சி மகிந்த ராஜபக்ச. அரசியலில் பிழைப்பதற்காக கத்தோலிக்கர்களான ராஜபக்சக்கள் பௌத்தர்களாக மதம் மாறிக்கொண்டனர்.

பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச அதிபர்களாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள். பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர்.

பௌத்தத்தின் பேரால் நாட்டில் வன்முறையத் தூண்டிய கிறீஸ்தவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டனர்.

கத்தோலிக்கர்களான ராஜபக்ச குடும்பம் இன்று இலங்கையில் அதிக செல்வாக்குப் படைத்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. ராஜபக்சவின் குடும்பக் குழுமம் முழுவதுமே இலங்கையின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையை ஒட்டச் சுரண்டிய ராஜபக்ச குடும்பமே வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொல செய்யப்படுவதற்குக் காரணமாகியது.

நீர்கொழும்பின் சீதுவப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பம் தமது மலாக்கன் கத்தோலிக்க முன்னோர்களுடன் சேர்ந்து கம்பந்தோட்டம் என்ற பிரதேசத்திலுள்ள சிப்பிக்குளம் மற்றும் கிருவாபத்துவ ஆகிய கிராமங்களில் குடியேறினர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள கம்பந்தோட்டமே இப்போது ஹம்பாந்தோட்ட என்று அழைக்கப்படுகின்றது.

போத்துகீசர் மலாக்காவை ஆக்கிரமிக்க முற்பட்ட காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருபகுதியினர் இலங்கையில் குடியேறினர். இலங்கையின் கரையோரப்பகுதியான நீர்கொழும்பில் மலாக்கா உட்படப் பல்வேறு மலேசிய நகரங்களிலிருந்த குடியேற்றங்கள் தொடர்பான வரலாறுகள் காணப்படுகின்றன.

சிங்கள பௌத்த பேரினவாதி கத்தோலிக்கரான ஷிராந்தி விக்கிரமசிங்கவை திருமணம் செய்துகொண்டபோது..
சிங்கள பௌத்த பேரினவாதி கத்தோலிக்கரான ஷிராந்தி விக்கிரமசிங்கவை திருமணம் செய்துகொண்டபோது..

ஹம்பாந்தோட்டையில் நிலப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபக்சக்கள், அப்பகுதியில் அரசியல் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தனர். தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அப்பகுதியில் அரசியல் பிழைப்பிற்காக ராஜபக்சக்கள் பௌத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்கத்தையே கடைப்பிடித்தனர்.

டொன் டேவிட் ராஜபக்சவின் மகனான டொன் மத்தியூ ராஜபக்ச 1936 ஆம் ஆண்டு அரச சபைக்கு ஹம்பாந்தோட்டைப் பிரதிநியாத் தெரிவானார்.

1945 ஆம் ஆண்டு டொன் மத்தியூ ராஜபக்ச மரணமடைந்ததும், அவரின் சகோதரரான டொன் அல்வின் ராஜபக்ச இடைத்தேர்தல் ஒன்றின் வழியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிறார். டொன் அல்வின் ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவானார்.

1967, தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு பெலியத்தவில் வயதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த தெரிவுசெய்யப்படுகின்றார். தனது 25 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குள் நுளைந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதியான கத்தோலிக்கரின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சாரிசாரியாக மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.

http://www.srilankaguardian.org/2013/09/rajapakse-ancestry.html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அறிவற்றவர்களா சதிகாரர்களா?

விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அறிவற்றவர்களா சதிகாரர்களா?

Comments 1

  1. a voter says:
    11 years ago

    அரசியல் வாதிகளிற்கு மதம் கிடையாது. அல்லது தங்களது புகழ் செல்வாக்கு வருமானம் என்பவைதான் அவர்களது மதம். எப்போதோ கத்தோலிக்கர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் அல்லது அவர்களது முன்னோர்கள் இருந்தார்கள் என்பதற்காக இன்னமும் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று எழுதுவது குழந்தைத் தனம்.
    டிபி விஜயதுங்க ஒருபோதும் கிறிஸ்தவராக இருந்ததில்லை. சந்திரிக்கா பிறப்பதற்கு முன்னரே எஸ் டபிள்யு ஆர் டி பௌத்தராக மாறி விட்டார்.
    தகவல்களை ஆராய்ந்து எழுதுவது நல்லது.
    வெறுமனே கத்தேலிக்கர்களிற்கு எதிராக துவேஷ நோக்குடன் எழுதுவது நண்பர்களையும் பகைவர்களாக்கவே உதவும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...