முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடுவின் வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், 18 படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினர் உட்பட 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளின் குண்டுகளுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியானது இப்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
மக்களைப் பாதுகாப்பு வலையங்களை நோக்கி வெளியேறுவதைத் தடுப்பதற்கான வெளிப்படையான நடவடிக்கை என அமரிக்க அரசு தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் கொல்ல படுவது வெதனை தருகிரது .
அமெரிக்கநாடு கன்டனம் சரி . ஆனாலும் அரசு ஆயிரகனக்கில் கொல்லும் பொது மக்கள் குரித்து கண்டனம் இல்லை எனும் போது அதுநியாயம் சார்நடவடிக்கையாக இல்லை .
இதுவரை காலமும் சும்மா இருப்பது வல்லரசு என்பதின்நிலைநியாயம் இல்லை.
இரைமை என்பதின் பொருள் கொல்லும் அதிகாரம் என கொள்ள ஸ்றீளாண்Kஆ செய்யும் இன கொலைகள்
கண்க்கிட முடியாது உள்ளது.
அதை கண்ணை மூடி பாராது அமெரிக்கா இருப்பதுநியாயமிக்க செயல் இல்லை .
எனது கண்டனம் பாராது உள்ள எல்லாநாடுகளையும் அமைகிறது
புலிகளின் செயலுக்கான கணடனம் வரவேற்கத்தக்கது! அரசின் குண்டுமழைப்பொழிவால் மக்கள் நுhற்றுக்கணக்கில் மடிகின்றளர்! மருத்துவமனைகளுக்கே குண்டு வீசி நோயாளிகளை எரித்து சாகடின்றது அரசு. இதற்கு கண்டனம் இல்லை! இது அமெரீக்க ஒபாமா ஐனநாயகமோ? அல்லது கடைந்தெடுத்த ஏகாதிபத்தியப் புத்தியோ?