கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை
பேரினவாதத்திற்கு எதிரான ஒற்றுமை – அரசியல் படமாக்கல்
மேற்குறித்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த இடுகையை விரித்துக்கொண்டால் மேலும் அர்த்தமுடையதாகும். பருமட்டான கருத்துக்களாக முன்வைக்கபடும் இக்கட்டுரையை உங்கள் அனைவரதும் பங்களிப்புடன் செழுமைப்படுததலாம்.
தேசியம் என்ற கருத்தியலின் உருவாக்கம்
தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. ஆயிரமாயிரமாய் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும்.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தாக்கத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, சட்டங்கள் விதிகளிலிருந்ததா? லெனின் அல்லது ஸ்டாலினிருந்தா?
தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசியம் என்பதன் உள்ளர்த்தம் என்ன? தேசியம் யாருக்கானது? என்ற பொதுவான கேள்விகளுக்கான விடைகளிலிருந்தே குறிப்பான சூழலில் தேசம் குறித்த கருத்துக்களுக்கு முன்வர இயலும்.
தேசியம் குறித்த கருத்தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் 16ம் நூற்றாண்டின் பிந்திய பகுதிகளில் உருவான தேசங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. பல்வேறு தலையங்கங்களின் கீழ் அழைக்கப்பட்ட ஐரோப்பிய தேசிய அரசுகள் குறித்த விஞ்ஞான பூர்வமான விளக்கம் பின்னதாக கவுத்ஸ்கி, லெனின், ஸ்டாலின் போன்றோரால் முன்வைக்கப்படுகிறது.
ஆக, தேசியம் என்பது மன்னர் காலத்தைய நிலப்பிரபித்துவ சமூக அமைப்பை உடைத்து அதன் அத்தனை கூறுகளுக்கு எதிராகவும் போராடி இறுதியில் தேசிய அரசுகளாக உருவாகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலங்களைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருபோரே அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தனர். அந்தச் சமூகத்திலிருந்து வர்த்தகம் வளர்ச்சியடைய பணப் பரிமாற்றம் ஏற்படுகிறது. நிலங்களில் விவசாயம் செய்வதற்கு அப்பாலான உற்பத்தி முறைகள் உருவாகின்றன. அவ்வாறான உற்பத்தி முறைக்கு மூலதனம்(Capital) பிரதான காரணியாகிறது. நிலத்தை உடமையாக வைத்திருப்போருக்குப் பதிலாக மூலதன உடமையாளர்கள்(Capital owners) ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு சந்தை அவசியமாகின்றது. அதனை நிறுவனப்படுத்த அரசுகள், சட்டம், ஒழுங்கு என்பன அவசியமாகின்றன. இவை தேசிய அரசுகளாகின்றன. தேசிய அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் தேசிய இனங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றனர். பிரான்ஸ் போன்ற நாடுகளில் 50 வீதத்தினர் மட்டுமே பேசிய கோலுவா என்ற மொழி சில வருடங்களுக்கு உள்ளாகவே பிரஞ்சு தேசத்தின் மொழியாகிறது. பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த இனம் பிரஞ்சுத் தேசிய இனமாகின்றது. இவ்வாறே தேசிய இனங்கள் உருவாகின்றன. ஆக, தேசிய இனங்களின் உருவாக்கம் என்பது முதலாளித்துவக் காலகட்டத்திர்கு உரித்தானது. வரலாற்றின் குறித்த காலகட்டமான முதலாளித்துவக் காலகட்டத்திற்கு உரித்தான மக்கள் கூட்டமே தேசிய இனங்களாகும்.
பெருந்தேசிய ஒடுக்குமுறை…
முதலாளித்துவம் சமச்சீராக வளர்ச்சியடையாத பல நாடுகளில் பல்வேறு பிரதேசங்களில் சந்தைகள் உருவாகின்றன. ஆக, பல் வேறு தேசிய இனங்களும் உருவாகின்றன. பால்கன் நாடுகளில் இவ்வாறான ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே பல தேசிய இனங்கள் உருவாகின. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு பகுதியின் சந்தைக்கு உரித்தானவர்கள் இன்னொரு பகுதியை ஆக்கிரமிக்க முனைந்த வேளையில் தேசிய இனப்பிரச்சனைகள் உருவாகின. குறிப்பாக பெருந்தேசியவாதம் முன்வைக்கப்பட்டு சிறிய தேசிய இனக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகின. இவ்வேளைகளில் எல்லாம் தமது தேசிய இனங்களை விடுதலை செய்து தமக்கு உரித்தான சந்தையைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அத் தேசிய இனங்களைச் சார்ந்த முதலாளிகள் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்களாக பரிணாமம் அடைந்தது.
தேசிய இனங்கள் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான சந்தைப் பொருளாதாரத்தையும் அதற்குரிய அமைப்பையும் கொண்டிருந்தன. பெருந்தேசிய ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்ட காலங்களில் தேசிய இனங்கள் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான நியாயத்தை விஞ்ஞான பூர்வமாக வரலாற்றை அணுகிய சமூகப்பற்றுள்ள அனைவரும் ஆதரித்துள்ளதைக் காணலாம். இவ்வாறு தனியாகப் பிரிந்து சென்று அரசை அமைப்பதற்கான போராட்டம் தேசிய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது.
முகாமைத்துவ வர்க்கம்(managerial class)
ஐரோப்பிய நாடுகளின் தேசிய அரசுகள் முதலாளித்துவத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக ஏகாதிபத்திய அரசுகளாக மாற்றமடைந்தன. இதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் சமூகப்பொருளாதார அமைப்பில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. இவை ஐரோப்பியத் தேசிய அரசுகளின் உள்ளேயே பல சிக்கலான அமைப்புக்களைத் தோற்றுவித்தது.
தேசிய முதலாளிகள் ஏக போக முதலாளிகளாக மாற்றமடைந்தனர். தமது தேசத்தின் எல்லையை அவர்களது மூலதனம் கடந்து சென்று ஏனைய நாடுகளை ஆக்கிரமித்தது. அதே வேளை தமது நாட்டின் எல்லைக்குள் ஏக போக முதலாளிகளுக்கு உறுதியாக ஆதரவு வழங்கும் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர். உற்பத்தித் திறனற்ற இந்த வர்க்கம் மத்தியதர வர்க்கத்தினதும், மேல் மத்தியதர வர்க்கத்தினதும் வரை முறைகளைக் கடந்து புதிய சிக்கலான அடுக்குகளைக் கொண்டு உருவாகிற்று. முகாமைத்துவ(managerial) ஆதவை வழங்கிய இவர்கள் முகாமையாளர்கள், கணக்காளர்கள், என்று ஆரம்பித்து லிகிதர்கள் வரை சென்றது. இவர்களின் பணி ஏகபோக முதலாளிகளையும் அவர்களின் மூலதனத்தையும் பாதுகாப்பதாகவே அமைந்தது.
உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சி…
இதே உற்பத்தித் திறனற்ற முகாமைத்துவ வர்க்கததை(managerial class) தமது முதலீடுகள் பரவியிருந்த ஏனைய நாடுகளிலும் உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் ஏகபோக முதலாளிகளின் தரகுகளாக அந்தத நாடுகளில் செயற்பட்டனர்.
ஏகாதிபத்திய நாடுகளின் உள்ளே அங்கு உருவான தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் அதிகரிக்க உற்பத்திய மூன்றாமுலக நாடுகளின் தரகுகளின் உதவியோடு உற்பத்தியை அந்த நாடுகளை நோக்கி நகர்த்தினர். குறிப்பாக எழுபதுகளில் ஆரம்பமான இந்த நகர்வு எண்பதுகளின் இறுதிப்பகுதியில் மேலும் விரிவடைந்தது.
மூன்றாம் உலக நாடுகளின் முகாமையாளர்கள் அல்லது தரகுகள் ஐரோப்பிய மூலதனச் சொந்தக்காரர்கள் அளவிற்குப் பலம் பெறலாயினர். மூன்றாம் உலக நாடுகள் இப்போது உற்பத்திக்காக மட்டுமன்றி, சந்தையாகவும் உருவானது. உலக மயமாதலின் பின்னதாக உருவான புதிய சூழல் வறிய நாடுகளின் சந்தையை அழித்து வந்த ஏகபோகங்கள் அவற்றைப் பயன்படுத்தும் நிலௌ உருவானது.
இந்த நிலையில் உலக முதலாளித்துவம் பலமான சமூகமாக உருவாகிறது. இந்தச் சமூகத்தில் மூன்றாம் உலகத் தரகுகள் கூடப் பங்காளர்களாக இணைந்து கொள்கின்றனர். ஆக, உலகத்தின் வழங்களையும் மக்களையும் சுரண்டுகின்ற உலக முதலாளித்துவம் விரல்விட்டெண்ணத்தக்க மனிதர்களையும் அதே வேளை அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளையும் கொண்டு உருவாகிறது. இப்போது மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் உலக முதலாளித்துவத்திற்குச் சேவையாற்றும் அரசுகளாக மாற்றமடைகின்றன. அவ்வரசுகளின் ஆதார சக்திகளாக உற்பத்தித் திறனற்ற கொள்வனவு மனோபாவம் கொண்ட புதிய முகாமைத்துவ வர்க்கம் ஒன்று உருவாகிறது.
ஆக, உலக முதலாளித்துவத்தின் பங்குதாரர்கள், முகாமைத்துவ அணி, மேல் மத்தியதர வர்க்கம் என்பன அதிகாரத்தின் ஆணிவேராக மூன்றாமுலக நாடுகளில் அமைகின்றன. இவர்களோடு இப்போது உலகப் பொருளாதார மாற்றங்களோடு சிதைவடைந்து அதிகார அமைப்புக்களோடு இணைந்துகொள்ளும் நில உடமையாளர்களும் பிரதான அதிகார சக்திகளாகக் காணப்படுகின்றனர். இவர்களின் பின்பலமாக ஏகபோக முதலாளித்துவமும், அவர்களை நிறுவனப்படுத்தும் ஏகபோக அரசுகளுமே திகழ்கின்றன.
எகபோகங்களின் நோக்கம்…
ஆக, உலகமயமாதலுக்கும் முன்னதாகவோ அல்லது அதன் பின்னான காலப்பகுதியிலோ, தேசிய உருவாக்கத்தை ஆதரிக்கும், தேசியப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும், தேசிய நலனுக்காகப் போராடும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் எப்போதுமே இருந்ததில்லை.
தவிர ஐரோப்பாவில் உருவானது போன்ற முதலாளித்துவம் மூன்றாம் உலக நாடுகளில் உருவானதில்லை. முதலாளித்துவ உருவாக்கம் இல்லையெனின் தேசிய இனங்கள்கூட அங்கு இல்லை என்று ஆகிவிடுமா? மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவமும் அதன் அரசமைப்பும் ஏகாதிபத்திய நாடுகளால் அவற்றின் சுரண்டல் நோக்கங்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டன. அதனோடு கூடவே சந்தையும் சந்தப் பொருளாதரமும் இயங்கு திறனற்றுக் காணப்பட்டது. அவற்றின் இயங்கு திறன் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக அவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது. இன்று உலக முதலாளித்துவத்தின் தேவைக்காக அது பயன்படுத்தப்படுகின்றது. அதன் ஒரே நோக்கம் உலக வழங்களைத் தமது மூலதனத்தைப் பெருக்கும் நோக்கோடு ஒட்டச் சுரண்டிக்கொள்வதே.
இலங்கையில் தேசிய இனங்களின் வளர்ச்சி…
இவ்வாறான சமூகப் புறச் சூழல் ஒன்றின் பின்னணியில் தான் தேசிய இனங்கள் உருவாகி வளர்ச்சியடையும் நாடாக இலங்கை காணப்பட்டது. ஆக, தேசிய இனங்கள் ஐரோப்பிய தேசிய இனங்களைப் போன்றனவாகக் காணப்படவில்லை. சாதிய ஒடுக்கு முறை, பிரதேச ஒடுக்குமுறை போன்ற பல உள்ளக முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட வளர்ச்சியடையும் நிலையிலான தேசிய இனங்களே இலங்கையில் காணப்பட்டன. மறு புறத்தில் இத் தேசிய இனங்களின் முழுமையை நோக்கிய வளர்ச்சியை தலைமைதாங்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் காணப்படவில்லை. ஆக, இரண்டு முதன்மையான முடிபுகளை இங்கே முன்வைக்கலாம்.
1. தேசிய இனங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே காணப்பட்டன.
2. அவற்றின் வளர்ச்சியைத் தலைமை வகிக்கும் தேசிய முதலாளித்துவமும் காணப்படவில்லை.
ஐரோப்பிய சூழலில் பெருந்தேசிய ஒடுக்கு முறை என்பது சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் சந்ததையைக் கையகப்படுத்தும் ஒடுக்கு முறையாகவே ஐரோப்பாவில் நிகழ்ந்தது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை இது முற்றிலும் சரியானதல்ல. தேசியப் பொருளாதாரம் உருவாகுதலைத் தடுக்கும் நோக்குடன் பெருந்தேசியம் சிறுபான்மைத் தேசிய இன அழிப்பை மேற்கொள்கிறது. இதன் பின்னணியில் சந்தையைக் கைப்பற்றும் செயற்பாட்டை ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்கின்றன. தேசிய இன முரண்பாட்டையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் இவ்வாறே ஏகபோகங்கள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
தேசிய இன ஒடுக்குமுறை…
ஆக, இரண்டு முதன்மையான முடிபுகளை முன்வைக்கலாம்:
1. பெருந்தேசிய ஒடுக்கு முறை என்பது தேசிய சந்தையைக் கையகப்படுத்துவதற்கான அரசியல் செயற்பாடாக இருக்கவில்லை.
2.ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான செயற்பாடாகவே காணப்பட்டது.
இவை தவிர தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை இரண்டு காலக் கூறுகளாக வகைப்படுத்தலாம்.
1. உலகமயமாதலிற்கு முற்பட்ட காலப்படுகுதி.
2. உலகமயமாதலுக்குப் பின்னான காலப்படுகுதி.
இவற்றுள் முதலாவது காலப்படுகுதியில் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான நிகழ்ச்சி நிரலில் தேசியப் பொருளாதாரத்தைச் சிதைப்பதும் தேசிய உற்பத்தியை மட்டுப்படுத்துவதும் பிரதான நோக்கங்களாக அமைந்தன. இரண்டாவது காலப்பகுதியில் தேசியப் பொருளாதாரம் அழிக்கப்படுதல் ஒரு புறம் நிகழ்ந்த அதே வேளை மறுபுறத்தில் தேசிய உற்பத்தையை மட்டுப்படுத்தலுக்குப் பதிலாக அதனை ஏகாதிபத்தியச் சந்தைக்குச் சார்பாக பயன்படுத்தல் என்பது முதன்மையான பகுதியாக அமைந்தது.
இதன் அடிப்படையிலேயே முன்பு புலிகள் போன்ற இயக்கங்களைத் தேசிய உற்பத்தியை அழிப்பதற்காகப் பயன்படுத்திய ஏகாதிபத்தியங்கள், பின்னர் தேசிய உற்பத்தியை தன்னுடைய நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவற்றை அழித்தன. 2000ம் ஆண்டுகளின் பின்னர் புலிகள் போன்ற இயக்கங்களின் தேவை அற்றுப்போன சூழலில் அவற்றை பொதுவான அரசியலுக்குக் அழைத்துவர ஏகாதிபத்தியங்கள் முயன்றன. இதனூடாக சந்தையைப் பயன்படுத்தும் சமாதான சூழலை உருவாக்க முயன்றன, அது சாத்தியமற்றுப் போன சூழலில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.
இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுணைவில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு அனைத்து நாடுகளும் வழங்கிய ஆதரவின் அரசியல் பின்னணி என்பதே சந்தைக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலே.
(புலிகள் இயக்கம்உட்பட விடுதலை இயக்கங்கள் ஏகாதிபத்தியங்களின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் தகவமைப்புக்களை எவ்வாறு கொண்டிருந்தது? அதற்கான வர்க்கப் பின்னணி என்ன?அதன் பின்னதான அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைந்தன? போன்றவற்றின் அடிப்படைகளும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகள் எவ்வாறு உருவாகின அவற்றின் வர்க்கப் பின்னணி என்ன என்பனவும், இவற்றிலிருந்து எதிர்காலம் எவ்வாறு மீட்கப்படலாம் என்பதும் அடுத்த பதிவில் ஆராயப்படும். எது எவ்வாறாயினும், ஏனையோரின் காத்திரமான பங்களிப்பின்றி இம் முயற்சி முழுமை பெற முடியாது.)
அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுது
தமிழ் மக்களின் போராட்டம் பின்னடைவுக்கு காரணம், விடுதலை புலிகள் என்பதை விட, தமிழ் ஈழம் என்று ஆயுதம் தூக்கியவர் விடுதலை புலிகள் எதிர்ப்பு போரரட்டம் என்று கூறி தாம் எடுத்த கொள்கையில் இருந்து மாறி சிங்கள அரசுகளுடன் சேர்த்து இன்று தமிழர்களை உரிமைகள் அற்றவர்களாக மாற்றி விட்டார்கள்.
தமிழீழம் என்று மக்களை கொள்ளையடித்த மாற்று அமைப்புகள் இதில் முக்கிய பங்கு எடுக்க வேண்டும்
நிவீர் திருந்தவே மாட்டியள்…. தீக்கோழி தன் தலையை மண்ணுள் புதைத்தது போல….
1971 ஜெ.வி.பி யினரை அழிப்பதற்கு இந்தியா மற்றும் எனைய நாடுகள் உதவினவே ,அதற்கு என்ன காரணம்?
ஜே.வி.பி இன் அழிவு இன்னும் விரிவாக ஆரயத்தக்கது. ஜே.வி.பியின் 80களின் எழுச்சிக் காலத்தில் கூட மன்னிப்புச் சபை போன்ற அதிகார அமைப்புக்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்ய மறுத்தமைக்கான காரண்மாக அவர்கள் கூறுவது “அவ்வாறான தரவுகளை ஆவணப்படுத்தினால் இளைஞர்களின் கோபத்தை அதிகரிக்கும்” என்பதே. இளைஞர்களின் கோபம் என்ற தன்னார்வ நிறுவனங்களின் சொல்லாடலை ஆராய்ந்தால் அதன் அர்த்தம் புரியும். ஜே.வி.பியின் எழுச்சியை அவர்கள் சமூக எழுச்சியாகவே கருதினார்கள். அவ்வாறான சமூக எழுச்சிகள் தெற்காசியநாடுகளில் இடதுசாரிய இயக்கத்தைத் தோற்றுவிக்கும் என்பதே அவர்களின் அச்சம். 90களின் இறுதிவரை தன்னார்வநிறுவனங்கள் இடது எழுச்சிகளைக் கட்டுப்படுத்தவே செயலாற்றின. அதன் பின்னர் சந்தைக்கான சூழலை உருவாக்குவது அதனோடு இணைந்தநோக்கமாகியது ,
//இதன் அடிப்படையிலேயே முன்பு புலிகள் போன்ற இயக்கங்களைத் தேசிய உற்பத்தியை அழிப்பதற்காகப் பயன்படுத்திய ஏகாதிபத்தியங்கள்இ பின்னர் தேசிய உற்பத்தியை தன்னுடைய நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவற்றை அழித்தன. 2000ம் ஆண்டுகளின் பின்னர் புலிகள் போன்ற இயக்கங்களின் தேவை அற்றுப்போன சூழலில் அவற்றை பொதுவான அரசியலுக்குக் அழைத்துவர ஏகாதிபத்தியங்கள் முயன்றன. இதனூடாக சந்தையைப் பயன்படுத்தும் சமாதான சூழலை உருவாக்க முயன்றனஇ அது சாத்தியமற்றுப் போன சூழலில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.//
எதையும் யதார்த்தமான சிந்தியுங்கள் எழுதுங்கள். குரானில் அல்லாவின் வார்த்தைகள் இப்படியிருக்கு.மொகமது நபி அதற்கமைவாய் இப்படிச்செய்தார் எனவே நாமும் அப்படித்தான் செய்யவேணுமென இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போதிப்பதும். மார்க்ஸ் இப்படிதான் சொல்லியுள்ளார். அதற்கமைவாகவே லெனின் ஸ்ராலின் இப்படி அரசியல் செய்தனர் அதைதான் நாங்கள் செய்யணுமென சொல்லும் உங்களிற்கும் என்ன வித்தியாசம்? உங்களிற்கென்று சுயசிந்தனையொன்று இருக்குத்தானே! அதையும் கொஞ்சம் உபயோகியுங்கள்.
புலிகள் இயக்கம் ஆரம்பித்த வேளை சிறிமாவின் பட்டினி ஆட்சி முடிந்து. ஜேஆரின் மேற்குலக ஆதரவு ஆட்சி தொடங்கிவிட்டது! அப்போ இலங்கையில் இருந்த தேசிய உற்பத்தி பிரித்தானியன் கொடுத்த தேசீயவருமானம் தரும் தேயிலை உற்பத்திதான். ஜேஆர் மேலதிகமாக தொழிலாளர்களை அரபு நாடுகளிற்கும் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்தார். சிறுவர்பாலியலை சிறிலங்காவின் தேசீய சந்தையாக மாற்றினார். (அதுதான் உல்லாச பயணிகளின் வருகை) அதைதான் சொல்கிறீர்களோ தெரியவில்லை சிறிலங்காவின் பெருமைமிகு தேசிய உற்பத்தி? என.
ஈழத்தமிழரின் தமிழீழ கோரிக்கையை ஆரம்பத்திலேயே மேற்குலகு அப்பட்டமாக ஏற்கமறுத்துவிட்டது. தனக்கு எல்லாவகையிலும் வளைந்து கொடுக்கும் சிங்கள பேரினவாதமிருக்கும் போது அதற்கு எதிராக சுயஅடையாளத்தை இழக்க விரும்பதா ஈழத்தமிழினம் ஒரு நாட்டை பெறுவது பெரும் இடைஞ்சல்தான்.
உலக போக்கை விளங்காத இடதுசாரி ஆர்வ கோளாறு இளைஞர்கள். உண்மை பின்புலமறியாது இந்திய/சிங்கள நலன் பேணும் நோக்கோடு சிறிலங்கா இந்தியா உளவாளிகளினால் தோற்றுவிக்கப் புளொட் ஈபிஆர்எல்எப் அமைப்புக்களின் கீழ் ஒன்றினைந்தனர். பலஸ்தீன பயங்கரவாத முகாம்களில் பயிற்சி எடுத்து போதாக்குறைக்கு அலன் தம்பதிகளை கடத்தி மேற்குலகிற்கு சவால்விட்டனர். இது மேற்குலகின் ஈழத்தமிழர் எதிர்நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.
ஆக எல்லா வகையிலும் ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை மேற்குலக எதிர்ப்பாகவும் கொம்முனிச பலஸ்தீன பயங்கரவாத ஆதரவாகவும் காட்டி மீளமுடியாத படுகுழிக்குள் தள்ளியது வெத்துவேட்டு கொம்முனிச கோம்பைகளே.
இதை நிவர்த்திக்கத்தான் புலிகள் மேற்குலகின் அரசியல் பொருளாதார நடைமுறைகளிற்கு தம்மால் எந்த பங்கமோ/ அச்சுறுத்தலோ ஏற்படாது என திரும்ப திரும்ப சொல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அதை புலியெதிர்ப்பு பிரச்சாரத்திற்கு “புலிகள் மேற்குலகின் எடுபிடிகளென” வசதியாக பாவிக்கப்படுகிறது.
இந்தியா 1992ற்கு பிற்பட்ட காலப்பகுதியிலேயே முழுமையாக மேற்குலகுடன் ஒத்து செயற்பட தொடங்கியது. இந்நிலையில் சிறிலங்காவின் தேசீய உற்பத்திகளை சிதைக்கவா! புலிகளை அழிப்பதற்கு 1986ன் ஆரம்பத்திலேயே தொடங்கியது.! புலியெதிர்ப்பை குறியாக வைத்து என்ன சொல்கிறோம் அது தர்க்கரீதியிலான யதார்த்திற்கு உட்படுமா என சிந்திப்பதில்லையா!
புலிகளின் ஈழத்தமிழினத்தின் சுயத்தை இறைமையை விட்டுக்கொடுக்காத உறுதியான நிலைப்பாடுதான் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க மேற்குலகு எடுத்த முடிவிற்கு மிகப்பிரதான காரணமே தவிர வேறில்லை.விடுதலைப்போராட்டம் புலிகளின் தியாகம் வீரம் கொள்கைப்பிடிப்பாலும் ஈழத்தமிழரின் ஆதரவாலும் முன்னெடுக்கப்பட்டதே தவிர புலிகள் யாரினதும் நலன் பேணியதால் அல்ல.
1980 களின் ஆரம்பத்தில் உமா நாபா டக்ளஸ் நிர்மலா இராகவன் மாத்தையா போன்றோர் யாரின் பின்புல ஆதரவுடனும் எதை நோக்காக கொண்டு இயங்கினார்களே அதன் தொடர்சியே இன்றைய புலம்பெயர் தமிழர்களின் புலியெதிர்ப்பு. இல்லை நாங்கள் தமிழ்தேசீயத்திற்காக போராடுகிறோம் என்பவர்கள்.
1) ஈழவிடுதலை ஆயுத போராட்டமா பரிணமித்த வேளை சிறிலங்காவின் தேசீய உற்பத்தி எதுவென சொல்லட்டும்.
2)தீபத்தில் சிறிலங்க அரசபயங்கர வாத ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் புலிக்கொடி எதிர்ப்பு பிரச்சாரத்தின் பங்களிப்பு எந்தவகையில் தமிழ்தேசீய விடுதலையை முன்னெடுக்கும்?
இவை ஏற்கனவே என்னால் முன்வைக்கப்பட்ட இதுவரை பதிலளிக்காது நிலுவையிலுள்ள கேள்விகள்தான்.
//மார்க்ஸ் இப்படிதான் சொல்லியுள்ளார். அதற்கமைவாகவே லெனின் ஸ்ராலின் இப்படி அரசியல் செய்தனர் அதைதான் நாங்கள் செய்யணுமென சொல்லும் உங்களிற்கும் என்ன வித்தியாசம்? உங்களிற்கென்று சுயசிந்தனையொன்று இருக்குத்தானே! அதையும் கொஞ்சம் உபயோகியுங்கள்.
// மார்க்ஸ் அப்படி அப்போது சொல்லவில்லை. லெனின் ஸ்டாலின் போன்றோரும் மேற்சொன்ன விடங்களை ஆரயவில்லை. ஏனென்றால் அப்போதைய சமூகச் சூழல் வேறுபட்டது. ஆக, இது நான் சொல்லும் விடயங்கள் மட்டுமே. இஸ்லாம்-எதிர், புலிகள் – எதிர் போன்ற முத்திரையிடும் விடயங்களை தற்காலிமாகவேனும் ஒதுக்கி வைத்துவிடு உள்ளடக்கம் குறித்து சிந்தியுங்கள்.
//ஈழவிடுதலை ஆயுத போராட்டமா பரிணமித்த வேளை சிறிலங்காவின் தேசீய உற்பத்தி எதுவென சொல்லட்டும்//
இதற்கான ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம். 70 களில் இலங்கையில் எவ்வாறு தேசியப் பொருளாதாரம் , ஏனைய தெற்காசிய நாடுகளைப் போலன்றி, வளர்ச்சி அடைந்தது என்பதை கண்டறிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக மனித வளம் ஆய்வு மையம் தனியான கற்கைக் குழுவை எவ்வாறு அமைத்தது. சிங்கப்பூர் பிரதமரின் இதற்கான கற்கைக் குழுவின் இலங்கை வருகை. அதன் பின்னான ஜே.வி.பி மற்றும் ஈழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கம் என்ற அனைத்தும் ஆராயப்பட வேண்டும்.
//தீபத்தில் சிறிலங்க அரசபயங்கர வாத ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் புலிக்கொடி எதிர்ப்பு பிரச்சாரத்தின் பங்களிப்பு எந்தவகையில் தமிழ்தேசீய விடுதலையை முன்னெடுக்கும்?
//
புலிக் கொடி குறித்த விவாதத்திற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் என்ன தொடர்பு. புலிக்கொடியை ஏற்றுக்கொளாமை இலங்கை அரசை ஏற்றுக்கொள்வது என்ற சமன்பாட்டை உருவாக்குவது ஆபத்தானது. அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதே தொலைக்காட்சியில் கூறிய சுரேன் சுரேந்தரையும், ஸ்கந்ததேவைவையும் இலங்கை அரச ஆதரவாளர்கள் என்றா சொல்கிறீர்கள்? புலிக் கொடி ஏந்துவதை வன் முறையாக மேற்குநாடுகள் தடை செய்ததைப் போல் யாரும் தடை செய்தால் அதற்கு எதிராக குரல் எழுபுவதில்நானும் ஒருவனாக இருப்பேன். ஆனால் அதன் அரசியல் விளைவுகளை தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சொல்லும் உரிமையும் எனக்கு உண்டு. இதற்காக நான் எந்த சன்மானத்தையும் யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்!!!
Fellow Tamils! Open your eyes (and mind) and see for yourselves!!
I am a SriLankan Tamil, have visited many places in the North of Sri Lanka and spoke to people who had been trapped and used as human shield by the LTTE with the dual purpose of saving their (LTTE) existence and to engage in a propaganda using the deaths of innocent people caught in the cross-fire, and shelling in the last stages of war.
At least seven families of my close relatives who also had lost children by being caught in the fights testified themselves and all of them put the blame for their misery on the LTTE, and not the Government forces, despite the loss of their children.
In fact, my sister, who lost one of her sons, and a brother who lost his only child cursed the LTTE and called the Sri Lankan army as their saviors. My sister’s actual word are: “…….. I have witnessed the LTTE, who claimed to be the saviors of the Tamils, killing some of the innocent Tamils who tried to escape from the fighting, I hate them with all my heart,…. Whenever I see the SL army, I happen to think , if it were not for them, we also would have been killed and they now look like angels for saving us from the cruel clutch (word used in Tamil ‘kodukkup pidi’) of the ‘nassamai ponavangal’ (let them go to hell), meaning the LTTE. ( I have not modified or changed any word said by my sister). My brother said when his daughter, a six year old only child was injured due to shelling, he took her to the hospital, where one of the five doctors later surrendered to the Government forces was working.( I do not want to mention the doctor’s name, as I knew very well that he would not have any other choice other than obey the orders of the LTTE while he was in Wanni, even though I do not agree with his actions at all!)
The doctor did not have time to treat the little girl, as he was too busy treating the injured LTTE cadres. After waiting for a long time with the child still bleeding from the injury, he went to beg the doctor to have a look at the child and put some medicine to stop the bleeding, he was rudely told by the doctor, that he knew his job, and that he was too busy. The little girl died after while due to unattended medical care. My brother said, his daughter sustained comparatively a non-serious injury, and with timely medical attention she would have been saved. While he was narrating this tragic incident, I still noticed his anger and inability to act anything against the doctor.
The same doctor, again when one of the three of my sister’s son approached for treatment, rudely told that his injury was nothing compared to others and that he could go and fight along with the LTTE instead. (I just wonder, if that doctor had a son aged enough to be a fighter, where would he had been, and what the doctor would have told him! I am sure the doctor would have probably had his children studying in the South, not in Wanni for sure! Others also confirmed the story of the LTTE shooting and killing many people who tried to escape from the scene of fights. Another son of my same sister, who had been forcibly taken by the LTTE was made to undergo a weeks training in the use of arms, died in the fight with the SL the SL arm when he was sent to the front by the LTTE. For this, my sister was not angry with the SL army, but with the LTTE as they had brought that innocent teenager to the war front against his will ..
The other thing they told was that the LTTE always moved their heavy artillery and launchers inside the government declared safe zones and would fire from there purposely in order to cause more human casualties among the civilians which they could use as a propaganda against the government. My brother, who had remained in the war zones until the last stage of war, said once he witnessed about six people killed in shelling by the army in retaliation of the LTTE’s attack from the safe zone, and later in the evening he heard in the news aired by the LTTE radio as being exaggerated in numbers as sixty- six! See, how the numbers got twisted! I could easily perceive where the ‘more than 40,000 innocent people were killed by Sri Lankan forces during the last stage of war….! , came from.
Another thing my sister told me was that at the time the final stage of the war started four years ago in the North, she had to live in hiding with her two teenage daughters in the thick of the jungle in order to save her children from being taken away by the LTTE. Anyone who lived in the Wanni area would know how it would be sleeping in the jungles at nights, let alone at homes. They had to brave the weather, the snakes and other reptiles along with the constant nuisance of the mosquitoes there. Yet they preferred to live like that than to be caught by the LTTE as they had no other better alternatives. My brother would take food for them by secret ways twice a day without the knowledge of the LTTE members and there cohorts.
My sister and her daughters had to live like that not for a few days or weeks, but for over five months! After some time, unable to live like that anymore, she had her two daughters married by the age of 14 years as this would prevent the LTTE from taking them away! Do the diaspora Tamils know about these tragic incidents and situations the people went though? Or is it that they do not want to talk about the LTTE atrocities?
These are all first-hand news, not hearsay or published by media. As for media, mainly the Tamil/English media locally and abroad controlled by so-called Eelam supporters, they never seem to bother writing the truth nowadays, either because they happen to be the propaganda machines of some groups of vested interests, or due to lack of analyzing the truth, come with lot of lies as they seem to write news as a business not caring about the set journalistic ethics with the exception of some news coming in the internet media as some of those who write in the net do so just to register their true feelings.
Also, when I went to Sri lanka, I applied for MOD in order to travel to Jaffna. I was issued one without any problem. First time I traveled to Jaffna showing my foreign credentials, and I was treated with respect at the check point by the SL army. Then I traveled in the North without any foreign credentials as I wanted to see if there would be any difference the way I was treated (by the security men) as a foreigner and a local Tamil. I did not use or show any of my foreign credentials. I received the same treatment as before from the SL army. Anyone complains about being ill-treated by the SL army would be lying or it might have been an isolated incident just because the security men at the post would have had some reason. Any foreigner who travels to the U.S knows what kind of security checking we have to go through when we travel to the U.S. No one make any complaints as it was cited as a reason for the security concern of the country.( rather, no one dare to question about it!)
And, it is also true that almost 50% of the Tamils who went to the Western countries as refugees visit Sri Lanka whenever they get travel documents, time and money to do so. (Please note many of them did not dare to visit the North East of Sri Lanka when those areas were under the control of the LTTE) After the decimation of the LTTE, many have no fear to visit their homelands. In fact one of my friends, who remained to be a Tiger sympathizer, told me recently that she want to go back to Sri Lanka for good. She did not think of going and living there while the LTTE she has always admired and sympathized with existed.
To be frank, I also went to the Western country as a refugee, fearing the LTTE, not the SL government. I dared to visit the country only after the decimation of the LTTE. I did not support or belong to any armed groups, but used to criticize the wrong doings of the LTTE which earned me the wroth of the LTTE!.
People had gone through a lot of problems and lived in fear for their own safety and safety of there children (from being forcibly taken away by the LTTE for forced conscription) The expatriate Tamils, while they want to have their children go to better schools, colleges & universities in the countries they live, always wanted to have the poor children in the North/East to join the LTTE and die for the so-called ‘Eelam’, where they would have never gone and settled with their children, even if the LTTE succeeded to have created that land.
Do those politicians like Nedumaran, Vaiko and cinema storywriter/director Seeman in Tamil Nadu know about it? Above all, do our TNA politicians know about it? I do not think anyof the children of the TNA politicians live and study in Sri Lanka! ( If the children of these TNA politicians happen to be still in the North Eastern provinces studying and or living, I am sorry for making the above statement) There are more bitter truths I happened to hear more tragic incidents like the ones above from the very people who actually suffered in the cruel clutch of the LTTE during the one and a half years from 2008 to May 2009, the time period the war in the Northern theatre was raging at the peak.. The Tamil media that often criticize the government never talk about these atrocities by the LTTE.
Please fellow Tamils, stop your false propaganda!. People in the North (I have not visited the East) are happy that the Tiger menace is gone and they don’s seem to bother much about the presence of the Security forces there. In fact, they said because of the presence of the Security forces, the remnants of the LTTE (those who managed to escape from the final war) are unable to raise their heads, and to pose any threats as before. Therefore, be sensible about what you say and act! There is nothing wrong that you want to live comfortably and happily yourself with your children and other relatives if possible, but to expect poor innocent people to sacrifice their livelihood and lives so that you can brat yourselves of getting a ‘dreamland’ where I am sure most of you (99%) would never go back and live, is simply BARBARITY!
Mr. Ganapathy Moorthy, you have lost your credibility with your single excerpt saying that 40 thousand Tamils killed during the war was simply the LTTE’s propaganda. Instead it was confirmed by several independent organization and numerically more than 140 thousand Tamils are still missing in the Vanni area after the war. I have seen statement like this already in different Sinhalese media and my humble assumption is that you do a good work for your masters by cutting and pasting. I am sorry if it is not true, anyway what you are writing is just utter nonsense. But you have the nerve to produce such an effrontery beyond belief.
PS.: Next time please visit the East to get more inspiration.
….But only a little percent of 600 reported gone missing from you figures…. Please do not play the number game to gain attention… The fact is during this war innocent people were killed. SL government and LTTE mainly the overseas LTTE should take responsibility to this crime. Like the News of the World, Oru Paper, IBC Radio, ILC radio, GTV, Theebam TV, Eelamurasu should stop media work as they were not only hiding the LTTE’s crimes against humanity but also help them to carry out the cruality in many ways. We should first clean our selves and then only we have the right to ask international community to punish the Sri Lankan government.
குளத்தோடு கோவித்துக்கொண்டு கு…… கழுவாது திரியும் நீங்கள் எப்போது உங்கள் அசிங்கங்களை எல்லாம் கழுவிமுடித்து ராஜபக்ச கூட்டத்தை விசாரிக்க வழிவிடப்போகிறீர்கள்?
ஏன் இப்படிச் செய்தால் என்ன? முதலில் ராஜபக்சவின் போர் குற்றத்தை விசாரித்துவிட்டு அதன்பின் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உங்கள் அசிங்கங்களை கழுவ ஐயரை அழைக்கலாமே?
அல்லது ஒரே நேரத்தில் கு….. கழுவவேண்டியவர்கள் கழுவிக்கொண்டு இலங்கை அரசையும் விசாரிக்கும்படி ”சர்வதேச சமுதாயத்தைக்” கேட்கலாமே?
சரி பன்னாட்டுவிசாரணைமூலம் உறுதிசெய்யத்சிங்களப்பேரினவாதம் தயாரா?
எப்போதும் அடுத்தவர்களை குற்றம்சாட்டுவது (துரோகி) அல்லது யாராவது வெங்காயத்தை நம்பி (ஒபாமா ,ஜெயலலிதா ) தலைமேல் வைத்து கூத்தாடுவது தவிர புலியின் அரசியலில் என்ன இருக்கிறது?
தியாகமும் நேர்மையும் தமிழனின் சுயத்தை இழக்காத தன்மானத்துடன் கூடிய விடுதலைதான் புலியரசியல். இந்தியா சிறிலங்காவிடமிருந்து கைக்கூலி பெறும் ஈனத்தனம்தான்புலியெதிர்ப்பு அரசியல் .
இந்தியா சிறிலங்காவின் கைக்கூலியாகவிருந்து வயிறு வளர்ப்பவர்கள். உலகமகா கெட்டிக்காரர்கள்தான்.
புலியரசியல் வெளிப்படையாக தமிழருக்கானதாக இருந்தாலும்
அது தமிழரின் நலனில் அக்ககறையுள்ளதாக் ஒரு போதும் செயலில் வெளிக்காட்டியத்தில்லை. சாதிகள்,சம்யங்கள்,போராட்ட அமைப்புகள், புலிகள்,புலி எதிர்ப்பு எல்லாம் தமிழரைப்பிடித்துள்ள
நோய்கள்.. இவற்ரிலிருந்து முதலில் யாவரும் விடுபடவேண்டும்.
அதனை விடுத்து தான் பிடித்த முயலிற்கு மூன்று காலென்று சொல்பவர்க்ளெல்லாம் கிணற்று தவளை கத்துவது போலக்கத்தி, உயிர்போவார்கள் அல்ல்து பாம்பிற்கு இரையாவார்கள். -துரை
வந்துட்டாருய்யா சால்ரா?நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா?யோக்கியன் வரான் சொம்மை எடுத்து உள்ள வைஎன்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.சரி புலிகள்தான் எல்லாம் செய்தார்கள் .ஆனால் இப்பொழுது அவர்கள் இல்லை .இலங்கை சிங்களர்களை பல நூறாண்டுகளாக சிங்கள பேரினவாத நோய் பிடித்து வாட்டுகிறது.அந்த நோய்க்கு மருந்தாக இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று தின்று வருகிறது.இதன் விளைவில் விளைந்த்தே புலிகள் இயக்கம்.இது இயக்கவியல் சார்ந்தது.ஏன் இப்படி தமிழர்கள் கொல்லப்படவேண்டும்.தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு சிங்கள சாத்தான்துரை வேதம் ஓதுகிறது.இப்படிப் பேசி செயல்பட்டுத்தான் புலிகள் உருவானர்கள்.உங்களுக்கு மனசாட்சியும் ஆண்மையும் இருந்து நீங்கள் பேடிச்சிங்களப்பேரினவாத அரசியல் நடத்தாமல் இருந்தால் அராணுவத்தை வெளியேற்றிவிட்டு பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஒப்புக்கொள்ள திராணி உண்டா?
சிங்களபேரினவாத த்துக்கு சால்ரா தட்டுவதைத்தவிர உம்முடைய வாத த்தில் வேறு என்ன இருக்கிறது?
// 70 களில் இலங்கையில் எவ்வாறு தேசியப் பொருளாதாரம் , ஏனைய தெற்காசிய நாடுகளைப் போலன்றி, வளர்ச்சி அடைந்தது என்பதை கண்டறிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக மனித வளம் ஆய்வு மையம் தனியான கற்கைக் குழுவை எவ்வாறு அமைத்தது. சிங்கப்பூர் பிரதமரின் இதற்கான கற்கைக் குழுவின் இலங்கை வருகை.//
“ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக மனித வளம் ஆய்வு மையம் தனியான கற்கைக் குழுவை எவ்வாறு அமைத்தது.” என்பது 1948ல் ஜப்பானுக்கு அடுத்த நிலையில் எழுத்தறிவில் மேம்ப்பட்ட நாடாக இருந்த சிலோன். 1972ற்குள் எப்படி தோல்வியடைந்த சிறிலங்காவாக மாறியதென்பதே அதன் அவதானம். புதிதாக தோன்றிய பல்லின மக்களை கொண்ட சிங்கப்பூர் தமதுநாட்டை ஒத்த சிறிலங்காவிடமிருந்து நல்ல விடயங்களை தெரிந்து கொள்ளவே ஆர்வம் காட்டியது. வந்து பார்த்தபோதுதான் ஒருநாடு எப்படியிருக்க கூடாது என்ற உதாரண படிப்பினையை பெற்றது. சிங்கப்பூர் அதன் மூலம் சரியான வழியை தேர்ந்தெடுத்து தேறி சாதனைபடைத்தது. ஜேஆர் சிலவருடங்கள் கழித்து சிங்கப்பூரிடம் ஆலோசனை கேட்க போனபோது. எல்லா மொழிக்கும் இனத்திற்கும் சம அந்தஸ்த்தை உரிமையை கொடுத்து நாட்டை முதலில் அமைதியாக்கு. தரமான விமானசேவையை ஆரம்பி.. என பல நல்வழி சொல்ல. எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முனைந்த ஜேஆர் சிங்கள பேரினவாத சிந்தனையை விடமறுத்தார். தோல்வியடைந்த நாடு சிறிலங்கா என்ற தொடர்பட்டத்தை தக்க வைத்தார்.
நான் சிறிமா காலத்தில் (1972ல்) சிறுவன். ஒரு இறாத்தல் பாணுக்கு மணிக்கணக்காக நெரிபட்டு கியூவில் நின்றதும். குரக்கன் புட்டும் மரவள்ளிகிழங்குடன் அரைவயிறு பட்டினி கிடந்ததும். புழுப்பிடித்த பர்மா/சீனா வெள்ளை பச்சை அரிசியில் கஞ்சிகாச்சி குடித்ததையும் மறக்கவில்லை! நீங்கள் யாரும் 40 வயதிற்கு குறைந்தவர்களிற்கு சொல்லுங்கள் 1972ல் சிறிலங்கா தேசீய உற்பத்தி வளர்ந்தாக. சிலது அவர்கள் ஏமாந்து நம்பக்கூடும்.
எப்படி! ” ஜே.வி.பியின் எழுச்சியை அவர்கள் சமூக எழுச்சியாகவே கருதினார்கள்.” இதைச் சொன்ன உங்களிற்கு தமிழின விடுதலைப் போராட்டம் மேற்குலகின் நலன் பேணும் புலிப்போராட்டம். இதை சொல்லும் தாங்கள் தமிழ்தேசிய விடுதலைப்போராளி! ஜே.வி.பி யும் அதே சிங்களப் பேரினவாதிகள்தான் என்பதை சந்திக்கா காலம் தொட்டு மகிந்தா காலம் வரை நல்லாய் பட்டுணர்ந்து விட்டோம். இடதுசாரி எழுச்சி கதைவிடாதீர்கள்.
//புலிக் கொடி குறித்த விவாதத்திற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் என்ன தொடர்பு. புலிக்கொடியை ஏற்றுக்கொளாமை இலங்கை அரசை ஏற்றுக்கொள்வது என்ற சமன்பாட்டை உருவாக்குவது ஆபத்தானது. அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதே தொலைக்காட்சியில் கூறிய சுரேன் சுரேந்தரையும்இ ஸ்கந்ததேவைவையும் இலங்கை அரச ஆதரவாளர்கள் என்றா சொல்கிறீர்கள்? புலிக் கொடி ஏந்துவதை வன் முறையாக மேற்குநாடுகள் தடை செய்ததைப் போல் யாரும் தடை செய்தால் அதற்கு எதிராக குரல் எழுபுவதில்நானும் ஒருவனாக இருப்பேன். ஆனால் அதன் அரசியல் விளைவுகளை தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சொல்லும் உரிமையும் எனக்கு உண்டு. இதற்காக நான் எந்த சன்மானத்தையும் யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்!!!//
தமிழீழவிடுதலையை விரும்பும் மக்களை ஒன்றினைக்கும் ஓரே ஒரு அடையாளம் புலிக்கொடி. பிரித்தானிய சட்டமே அதை அனுமதிக்கும் போது. உங்களிற்கேன் குத்துது குடையுது! புலிக்கொடி எதிர்ப்பை செய்பவர்கள் தமிழீழவிடுதலையை விரும்பும் மக்களை எதிர்க்கிறார்கள். சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறார்கள். புலிக்கொடி எதிர்ப்பை விரும்பியோ / விளக்கமில்லாதோ முன்னெடுக்கின்றவர்களிற்கு. இதை பல தளத்தில் தெளிவான விளக்கத்துடன் சொன்ன பிறகும். அதை செவிமடுக்காது தொடர்பவர்கள் நிட்சயம் சிறிலங்கா ஆதரவாளர்கள்தான். தமிழ் தேசீய எதிர்ப்பாளர்கள்தான். அதுசரி புலிக் கொடி ஏந்துவதை எந்த மேற்கு ஐரோப்பிய நாடு தடை செய்தது?
புலிக்கொடி ஏந்துவதை எதிர்க்கும் ஒருவர் “புலிக் கொடி ஏந்துவதை வன் முறையாக மேற்குநாடுகள் தடை செய்ததைப் போல் யாரும் தடை செய்தால் அதற்கு எதிராக குரல் எழுபுவதில்நானும் ஒருவனாக இருப்பேன்” என்று சொல்வதிலுள்ள தர்க்க நியாயம் புரியவில்லை!
ஐயாGanapathy Moorthy
ஐநாநிபுணர் குழு சிறிலங்கா பயங்கரவாத அரச மீதும் புலிகள் மீதும் யுத்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதை சர்வதேச விசாரணையில் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாரென்றுதான் புலிகள் சொல்கிறார்கள். இன்னுமேன் தாமதம் ஐநாவிடம் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க கோரிக்கை விடுங்கள். அதனூடு உங்கள் குற்றச்சாட்டிற்குரிய புலிகளை தண்டிக்கலாம். அதனூடு திருப்திபடலாம்.
சிங்களக்கொடியேந்தி ஒரு பௌத்த சிங்களப்பேரினவாத அரசைநடத்தும் உங்களுக்கு விடுதலை அரசியல் புரியாது.பேரினவாதவெறிஉமது கண்ணைக்கட்டுகிறது.காற்று சுழல்கிறது .வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுங்காலம் நெருங்குது.உலகின் முன் சிங்களப்பேரினவாதம் கூனிக்குறுகிநிற்குங்காலம் வராமல்போகாது.தமிழினம் புலம்பெயர்நாடுகளில் தொடர்ந்து போராடவேண்டும்.
இன்று உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டிலாவது மக்கள் உண்மையான விடுதலையை அடைந்திருக்கிறார்களா? இன அழிவிலிருக்கும் தமிழினம் தம்மைக்காப்பாற்றிக் கொள்வதுதானே முக்கியம். ஏன் இதுவரை உண்மையான ஒரு கம்யூனிசிய அரசு உருவாகவில்லை. மனிதனின் அடிப்படை இயல்பான மற்ற மனிதர்களை அடக்கி ஆள நினைப்பது ஒரு காரணமா? தயவு செய்து பதில் தெரிந்தால் யாரும் சொல்லுங்கள்.
Sri Lanka to the UN›
Last modified on: 7/11/2011 5:52:28 PM
UNICEF report proves lie of exaggerated repetitions of ‘40,000 conspiracy’
Blowing of the hype of exaggerated repetitions on ‘40,000 civilian deaths’ during the final stages of the Sri Lankan humanitarian campaign in 2009, UNICEF on July, 2011 in its latest analysis report prepared of missing persons accounts the numbers as 2,564 individuals. The report also reinforces the Government’s policy on zero civilian casualties endured during the end of the conflict resulting in the world’s largest rescue mission.
In its independent report prepared in collaboration with the Northern Provincial Department of Probation and Child Care and Government Agent of Vavuniya, UNICEF reveals that 676 children- of which a staggering 64% that holds LTTE terrorists culpable of forcible recruitment of underage to war.
UNICEF says it launched the project, Family Tracing and Reunification (FTR) in Dec. 2009 over 9 districts in response to a spate of tracing requests received since the conclusion of the conflict in May 2009. It believes in spite of difficulties in tracking down those listed missing; more children could be found and re-united with their families.
To date 78 children were matched and referred to probation for tracing, verification and reunification, UNICEF further reported.
Earlier, Gordon Weiss the Former UN Spokesperson in Sri Lanka in his infamous Channle-4 presence was head over heel alleging security forces as responsible for deaths of ‘over 40,000 civilians herded by LTTE in a narrow land stretch’. In response the UN, however, is on record stating that it has distanced itself from Gordon Weiss. Stunned by the UN response, Weiss during a book launch in Melbourne Australia last week, revised his vague figures as 10,000 stirring much controversy.
On 15th February 2006, the United Nations Children’s Fund (UNICEF) representative in Sri Lanka Joanna VanGerpen in a communiqu‚ released stated that, “Over 5,300 child soldiers have been enlisted by the Liberation Tigers of Tamil Eelam(LTTE) since a truce went into effect”.
Full text of the UNICEF’s report: ‘Overview of ongoing government efforts to trace and reunify children in Northern Sri Lanka”.
இதயச்சந்திரன் எழுதும் கட்டுரைகளை படித்து நிர்மலனுக்கு மூளை கலங்கி விட்டது.
இலங்கை குடியுரிமையில்லாத மலேசியா பிரசைகள் இலங்கை தேர்தலில் போட்டியிட்டதாக ஒருவர் இட்ட பதிவை அப்படியே மீள்பதிவு செய்த அறிவாளியல்லவா தாங்கள்! நிர்மலனுக்கு சொந்தப்புத்தி சுயசிந்தனையிருக்கு! அடுத்தவரின் கருத்தை காவுவது அல்ல என் தொழில்.
//ஐரோப்பிய சூழலில் பெருந்தேசிய ஒடுக்கு முறை என்பது சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் சந்ததையைக் கையகப்படுத்தும் ஒடுக்கு முறையாகவே ஐரோப்பாவில் நிகழ்ந்தது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை இது முற்றிலும் சரியானதல்ல. தேசியப் பொருளாதாரம் உருவாகுதலைத் தடுக்கும் நோக்குடன் பெருந்தேசியம் சிறுபான்மைத் தேசிய இன அழிப்பை மேற்கொள்கிறது.//
பெருந்தேசியமான சிங்கள தேசியம் தமிழ் தேசியப்பொருளாதாரம் உருவாக்குத்தலை தடுத்ததா? தேசியப்பொருளாதாரத்தை கைப்பற்றுவது தானே மூலதனத்தின் & முதலாளித்துவத்தின் பண்பு. அப்படியிருந்தால் தானே லாபம். அழிப்பதின் மூலம் என்ன லாபம் அவர்களுக்கு?? தோழர் சற்று விளக்கவும்..
தங்களில் ஒரு பகுதியினரை அடக்கி வைத்து கொண்டும் இழிவாக நடாத்துபவர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று ஊளையிடுவது நகைப்புக்குரியது.
இதைதான் சொல்வதோ “வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாட்டென” ?. தங்கள் சிறிலங்காஅரசபயங்கரவாத அடிமைதனத்தை தொடர்வதற்கு இல்லாத பொய்குற்றச்சாட்டை தமிழினபோராட்டம் மீது சுமத்த வேண்டாம்!
தமிழின போரட்டம் என்று எதை சொல்லுவது? அன்னியநாடுகளின் ஆயுதம் கொண்டு சொந்த மக்களை போட்டு
தள்ளுவதையா?
ஏய் பிடாரியே! வேறு ஒரு நாட்டில்யிருந்து அடிமை சேவகம் செய்யும் உனக்கு சொந்த நாட்டுமக்களை அடிமை என்று சொல்வதற்கு உனக்கென்ன தகுதியிருக்கிறது?
எதையும் இணையத்தளத்தில் எழுதலாம் என்று நினைத்து எழுதாதீர்கள். எய்த அம்பு திரும்பவும் உங்கள் செஞ்சை
குறிபார்த்து துளைத்து செல்லும் எம்பதை மறந்தவிடாதீர்கள்.
ஆமையிறச்சி தின்று ஆமையாக முள்ளிவாய்கால் கடக்கரையில் மல்லாக்காக படுத்து கிடந்த தேசியஆமையிறச்சி தலைவர் போல
.
சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலைக்கு போங்கள். சிந்தனையில் யதார்த்தமான எண்ணங்கள் தோன்றும். ஊர்பணத்தை நம்பியிருக்காதீர்கள் நிர்மலன்.
உழைத்து வாழவேண்டும்.போட்டுத்தள்ளுகிற அரசியல் 9/11 உடன் சர்வதேசியரீதியாக தடைசெய்ய பட்டுவிட்டது. இது தெரியாமல் தான துள்ளிக் குதிக்கிறீர்கள்?.
நீர் படிக்கும் வீரகேசரியின் திருமண பக்கத்தை பார் .தமிழரின் பெருமை எல்லாம் தெரியும்.புலம் பெயர் நாடுகளிலாவது திருந்தி விட்டார்களா ..?
இந்த பிரச்னையை நாம் ஐ .நா வரை எடுத்து செல்வோம்.அப்போ தெரியும் உங்கள் வண்ட வாளங்கள் எல்லாம்.
கனடா ,அமெரிக்காவில் இதை ஏற்க்கனவே தொடங்கி விட்டார்கள் தம்பி.
//நீர் படிக்கும் வீரகேசரியின் திருமண பக்கத்தை பார் .தமிழரின் பெருமை எல்லாம் தெரியும்.புலம் பெயர் நாடுகளிலாவது திருந்தி விட்டார்களா ..?
இந்த பிரச்னையை நாம் ஐ .நா வரை எடுத்து செல்வோம்.அப்போ தெரியும் உங்கள் வண்ட வாளங்கள் எல்லாம்.கனடா அமெரிக்காவில் இதை ஏற்க்கனவே தொடங்கி விட்டார்கள் தம்பி.//”கோமாளி ” நவநீதன்
ஒருவர் தனது வாழ்கைத்துணையை அவர்விரும்பும் மத கலாச்சார உளவிருப்பு அடிப்படையில் தேர்வு செய்வது தனிமனித உரிமை! இதை தாண்டி ஐநா எப்படி ஒருவரின் தனிப்பட்டவாழ்வுரிமையில் தலையிடமுடியும்? ஓஓ அடிமைகளிற்கு உரிமைபற்றிய வரையறை தெரிந்திருக்க நியாயமில்லைதான்!
//தமிழின போரட்டம் என்று எதை சொல்லுவது? //chandran.raja
ஒவ்வொரு தேசீய இனமும் ஏன் தனிமனிதன் கூட தனக்கு உரிமை மறுக்கப்படுமிடத்து அதற்காக போராடும் உருத்துடையவன். அதை சர்வதேசமே ஏற்கும் போது உங்களிற்கேன் அது புரியுதில்லை! ஓஓ தாங்கள் ஈபிடிபி அமைப்பை சார்ந்த சிங்கள அடிமையல்லவா!அடிமைகளிற்கு உரிமைபற்றிய வரையறை தெரிந்திருக்க நியாயமில்லைதான்!
//ஏய் பிடாரியே! வேறு ஒரு நாட்டில்யிருந்து அடிமை சேவகம் செய்யும் உனக்கு சொந்த நாட்டுமக்களை அடிமை என்று சொல்வதற்கு உனக்கென்ன தகுதியிருக்கிறது?//
ஜேர்மனி என்ன உன் சொந்த நாடா! இல்லை சிறிலங்காஅரசபயங்கரவாதத்திற்கு கட்டுப்படும் அடிமைநாடா! நான் ஒரு அகதியாக வாழ்வதற்கு ஐரோப்பிய சட்டம் அனுமதிக்குது வாழ்கிறேன். மாண்மைமிக சிறிலங்கா பிச்சைக்கார பிரசைக்கு முதலாளித்துவ ஜேர்மனியில் வாழ என்ன தேவையிருக்கு! பிச்சை எடுக்காவா! இல்லை புரட்டுப்புரட்சி பேசவா!
//எதையும் இணையத்தளத்தில் எழுதலாம் என்று நினைத்து எழுதாதீர்கள்//
இந்த இணையம் எனது கருத்துசுதந்திரத்திற்கு இடமளிக்கும் போது. ஈபிடிபி கொலைகாரர் எப்படி தடைபோட முடியும். என்ன மகிந்தா இராட்சியநெனப்போ!
//முள்ளிவாய்கால் கடக்கரையில் மல்லாக்காக படுத்து கிடந்த தேசியஆமையிறச்சி தலைவர் போல//
சரி அவர் “முள்ளிவாய்கால் கடக்கரையில் மல்லாக்காக படுத்து கிடந்தாக” உங்கள் அற்ப சந்தோசத்திற்கு உண்மையென(???) வைப்பம். அவர் நேசித்த மண்ணில் வீரனாகத்தானே வீழ்ந்தார்(???). மகிந்தாவின் கோமணத்திற்குள்ளோ ஜேர்மனியிலோ ஒழிந்திருக்கவில்லையே!
//சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலைக்கு போங்கள். சிந்தனையில் யதார்த்தமான எண்ணங்கள் தோன்றும். ஊர்பணத்தை நம்பியிருக்காதீர்கள் //
இதைத்தான் உங்களிற்கும் சொல்கிறேன் மகிந்தாவும் டக்ளசும் போடும் ஈனகூலிப்பணத்தில் வயிறு வளர்க்காதீர்! எனியாவது மனிதராக வாழப்பாரையா!
//போட்டுத்தள்ளுகிற அரசியல் 9/11 உடன் சர்வதேசியரீதியாக தடைசெய்ய பட்டுவிட்டது.//
சூளைமேட்டுக்கொலைக்கு இந்தியாவும் தமிழின அழிப்பிற்கும் கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவிற்கு உங்கள் லும்பன் கள் டக்ளசையும் மகிந்தாவையும் ஐநா சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்குது. புலிக்கொடி லண்டன் பொது போக்குவரத்து பேருந்திலுமல்லவா பறக்கிறது.
லும்பன் ஈபிடிபி டக்ளசைப்பற்றி பேராசிரியர் ரட்ணஜீவன்கூலின் நேற்றைய கருத்து வெளிப்பாடு
“While Devananda with several serious allegations of criminality seemedto have gained respectability up to last year, Wikileaks revelationsthrough US embassy cables of his business deals in supplying Tamilgirls to the army, and also the army’s own statements that his cadresare responsible for the night time robberies and murders in Jaffna (arevelation prompted in response to the public belief that the soldierswere culpable) have put him in new light. It is my assessment that hehas become a zero in the eyes of the Tamil public except for hangerson wanting jobs and contracts.
“
கள்ள கடத்தல் கும்பல் ஒழிக்கப்பட்டு விட்டது
கள்ள கடத்தலை குடிசை கைத்தொழிலாக கருதியவர்கள் புலிகள்.
தாயகம் தீயில் எரிகையில்
தப்பி பறந்தவர் தம்பியும் வா
என அழைத்தனர் .
அப்பு ஆச்சி கவனம் கவனம்
என்று கடிதம் எழுதினர்.
துப்பு கேட்டவர்
நாயிலும் கீழவர்
ஊளை சதையர் எல்லாம் ஓடட்டும் .
எஞ்சியுள்ள தம்பி ,தங்கைகளே
வாருங்கள்… [புதுவை ]
நிர்மலன் போன்ற நாய் வேஷம் போடும் நரிகள் ,இரட்டைவேடம் போடும் கயவர்கள் அங்கே சென்று போராடியிருக்க வேண்டும்.இங்கே இருந்து கொண்டு ஊளையிடுவதால் என்னய்யா லாபம்.?
புலிகளின் ஸ்டைல் போராட்டத்தை உலகில் உள்ள எந்த ஒரு மாபியா கும்பலும் செய்து விட முடியும்.மக்கள் போராட்டம் என்பது மிகவும் கடினமானது.செம்மறியாடுகள் இதை புரிந்து கொள்ள முயலாதது ஒன்றும் வியப்பில்லை.
வருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?
திருந்தாத உருவங்கள் வாழ்ந்தென்ன லாபம் ?
நிர்மலன் எப்போவோ தற்கொலை படைக்கு போயிருக்கவ்ண்டியவர்.தமிழ் ஈழம் எடுக்கத்தான் வெளிநாடு ஓடிவந்தார் போலும்.!!!!!
நிர்மலன் தற்கொலைபடைக்கு போயிருக்கவேண்டியவர். இது தவறான கருத்து.
இவர்கள் தமிழினத்தின் அடக்யொடுக்கப் பட்டமக்களிடமிருந்தே வாழ்வை அனுபவிப்பவர்கள். இவர்கள் எப்படி தற்கொலைப்படைக்கு போகமுடியும்?
தற்கொலைப்படைக்கு ஆட்களை சேகரிப்பவர்கள். இவர்கள் ஒருபோதும் தற்கொலை
போராளியாக ஆவதற்க்கு வாய்பே இல்லை. தேசிய ஆமையிறச்சி தலைவரைப் போல.
உலக இன்பங்கள் இவர்கள் பார்வையில் கொட்டிக்கிடக்கிறது. எப்படி? இவர்களால் போகமுடியும் உலகஇன்பங்களை நீத்து.
புலிக்கொடி லண்டன் பேர்ஊந்திலும் அல்லவா பறக்கிறது? எப்படி இருக்கிறது பதில்? லண்டனில் ஒரு பஸ்சை வாடகைக்கு பிடித்து ஸ்க்கரையொட்டி ஒருவரை
போட்டி எடுத்து இணையத்தில் உலவவிட்டால்…. பொதுபேருந்திலையும் புலிக்கொடி
பறக்கிறது என்பதை என்னவென்று சொல்வது? இது வன்னிமக்களுக்கு பதின்னாங்கு
ஆண்டுகள் காதுக்குள் துவக்கைவிட்டு குடுமி எடுத்த வேலையல்லவா? ஏய்! நிர்மலனே உனது இனத்தையும் நேசித்து வாழப்பழகிக்கொள்.
அலுகோசு கேள்விகேட்கிறதாம். அது அர்த்தம் உள்ளதாம் அதற்கு பதில் சொல்ல வேண்டுமாம். அலுகோசுக்கு அரசியல் கேள்வியென்றால் மிருகம்மாதிரி முகத்தில் விறாண்டுகிற வேலையா?
என்ன “கோமாளி ” நவநீதன் chandran.raja!
கொஞ்சம் கூடுதலாய் எழும்புத்துண்டு போட்டுவிட்டரா மகிந்தா! நல்ல சவுண்டாய் கூடிக்குரைக்கிறீர்கள்.
நிர்மலன் எப்போவோ தற்கொலை படைக்கு போயிருக்கவ்ண்டியவர்.தமிழ் ஈழம் எடுக்கத்தான் வெளிநாடு ஓடிவந்தார் போலும்.!!!!!
தாயகம் தீயில் எரிகையில்
தப்பி பறந்தவர்…..
பயந்தான் கொல்லி அடிமைகள்.