கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை (2)
புலிகளின் அழிவிற்கு முன்னதாக ஒரு சமன்பாடு சமூகத்தின் பொதுச் சிந்தனையாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. புலிகளிற்கு மாற்றான அரசியலை முன்வைக்கும் ஒவ்வொருவரும் அரச ஆதரவாளர்கள் என்பதே அது. இந்த அடிப்படையிலேயே இலங்கை அரச பாசிசத்திற்கும், இனப்படுகொலைக்கும், அவற்றின் பின்னணியில் செயலாற்றிய ஏகபோக அரசுகளுக்கும் எதிராகப் போராட முன்வந்த பல தேசிய சக்திகளும் தேசிய உணர்வுடையவர்ககளும் புலிகளால் கொலைசெய்யபட்டிருக்கின்றனர்; சொந்த தேசத்திலிருந்து அனாதைகளாக, அகதிகளாக துரத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த வகையில் எவ்வாறு இலங்கை அரசு கருத்துச் சுந்ததிரத்தையும், அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மறுத்ததோ அதே வைகையில் புலிகளும் கூட இவை அனைத்தையும் மறுத்திருக்கின்றனர். அதுவும் மக்கள் சார்ந்து போராடுவதற்கான ஜனநாயகம் மறுக்கப்பட்டது.
மிகக் குறிப்பாக புலிகளுக்கு மாற்றான அரசியல் தலைமை உருவாகும் நிலைமை முற்றாகச் சிதைக்கப்பட்டது. இதன் இன்னொரு விளைவாக, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தலைமை வெற்றிடமாக்கப்படுள்ளது.
இப்படி மறுக்கப்பட்ட ஜனநாயகம் என்பதற்கு எதிரான மக்கள் எழுச்சியையும் எதிர்ப்புணர்வையும் எதிர்கொள்வதற்காக புலிகளுக்கு எதிர் என்பது அரச சார்பு என்ற சமன்பாடு சமூகப் பொதுப் புத்தியாக உருமாற்றுவதற்கான அத்தனை செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்தச் சமன்பாட்ட்டை இலங்கை அரசும் ஊக்கப்படுத்தியது.
இதனூடாக புதிய போராட்ட வழிமுறைகளையும், அரசியலையும் அழிப்பதற்கு இலங்கை அரசு புலிகளை மறைமுகமாகப் பயன்படுத்திக்கொண்டது.
இந்திய எதிர்ப்புப் போன்ற புலிகள் இயக்கத்தின் போராட்டங்களை ஆதரித்த ஜனநாயக வாதிகள் கூட இதனைப் பயனபடுத்தியே தமிழ் நாட்டில்கூட அழிவிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இதே வழிமுறையை அமரிக்க ஐரோப்பிய அரசுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாத்திற்கு எதிராகப் பயன்படுத்தியதற்கான ஆதராங்கள் பரந்து கிடக்கின்றன.
ஆக, கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதற்கான அரசியலில் மிக நீண்ட காலமாகவே இலங்கை அரசும் புலிகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்திருக்கின்றன.
புலம்பெயர் நாடுகளிலும் புலத்திலும்(ஈழத்திலும்) தமிழ்நாட்டிலும் இந்தச் சமன்பாடே புலிகளின் இணைவிற்கான பின்பலமாக அமைந்திருந்தது. இதனை உறுதிப்படுத்துவதாக இராணுவ வெற்றிகளை புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.
புலிகளின் அரசியலைத் தொடரும் இன்றைய அமைப்புக்களின் நிலை:
புலிகளின் அழிவின் பின்னர் இச்சமன்பாட்டைத் தொடர்ச்சியாக பேணுவதற்கான எந்தக் குறைந்தபட்ச வேலைத்திட்டமும் புலி ஆதரவாளர்களிடம் இல்லாது போனது.
குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் செயற்பட்ட புலி சார் அமைப்புகளின் இருப்பு கேள்விக்கு உள்ளானது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அறிக்கை போன்றவற்றைத் தமது வெற்றியாகக் காண்பிக்க முற்படும் புலம் பெயர் புலிசார் அமைப்புக்களின் தொடர்ச்சியான வேலத்திட்டமும் அரசியலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே நிலவிய சமன்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேனமுடியாத நிலையில் இவ்வமைப்புக்களின் தலைமை திடீரென ஜனநாயகம் குறித்தும், பன்முகத் தன்மையை உருவாக்குவது குறித்தும் பேசுகின்றனர்.
அடிபடையில் இவை குறித்த்துப் பேசும் போது கடந்தகால அரசியலின் விமர்சனமாக புதிய அரசியல் வழிமுறையை முன்வைப்பதற்கு மாறாக தமது இருப்பை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே செயற்படுகின்ரனர்.
இவை ஜனநாயகமோ கருத்துச் சுதந்திரமோ அல்ல. மாறாக தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் தவறான நோக்கமுடையது. ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு இச் சொல்லாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதோ அதே வழியில் இவர்களும் இவற்றைத் தமது பயன்பாட்டிற்கு உட்படுத்துகின்றனர்.
புலிசார் அரசியலோடு தம்மை இன்றும் அடையாளப்படுத்தும் அமைப்புக்கள், குறிப்பாக அவற்றின் தலைமைகள், தமது அரசியலைச் சுயவிமர்சனத்திர்கு உட்படுத்துகிறவர்களாகவும், பன்முகத் தன்மையையும் ஜனநாயக முறைமைகளையும் ஏற்றுக்கொள்வார்களாயின், சஞ்சீவராஜ் என்பவர் மீதான வன்முறையின் உள்ளடக்கத்தை கண்டித்திருப்பார்கள்.அதனை அரசியல் ரீதியாக அணுகியிருப்பார்கள.
இன்றுவரை அது குறித்து ஒரு புறத்தில் மௌனம் சாதிக்கும் இவர்கள் மறுபுறத்தில் தாம் சார்ந்த பிரசார ஊடகங்கள் வழியாக வன்முறைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இதனூடாக புலி எதிர்ப்பு என்பது அரச சார்பு என்ற சமன்பாட்டை மறுபடி நிறுவ முயல்கின்றனர்.
வன்முறைச் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்:
இதன் எதிர்ப்பக்கத்தில் அரச ஆதரவாளர்கள் இவர்களின் பிரசாரத்திற்குத் துணை போகின்றனர்.அவர்கள் அரச ஆதரவு நிலைபாட்டை முன்வைத்தும் அதை நோக்கிய ஒருங்கிணைவை மேற்கொள்ளும் ஒவ்வொரு தடவையும் புலிகளின் அரசியலுக்கு எதிரான அரசியல் என்பது அரச ஆதரவு என்ற சமன்பாடு வலுவடைகிறது.
புலிகளின் அரசியலுக்கு மாற்றைக் கோருவோர்:
எது எவ்வாறாயினும் புலிகளின் அரசியலை எதிர்த்துக் குரலெழுபியவர்களை மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. புலிகளின் அரசியல் வழிமுறை தவறானது என்றும் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்குத் தமக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் புலிகளை எதிர்த்துக் குரல்ழெழுப்பியவர்கள்.
2. புலிகளின் அதிகாரத்திற்கு எதிராகத் தமது சொந்த அடையாளத்தை நிலை நாட்ட முனைபவர்கள்.
3. இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசோடு இணைந்து கொள்ளும் நோக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.
புலிசார் அரசியலை முன்னெடுப்போர்
இதே வேளை இன்று எஞ்சியுள்ள புலி சார் அரசியலை முன்னெடுப்பவர்களை மூன்று பிரதான பிரிவினராக வகைப்படுத்தலாம்.
A. இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வைக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்.
B. மக்களின் விடுதலை உணர்வுகளை தமது சொந்த இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்வோர்.
C. மக்களின் விடுதலை உணர்வுகளை மூலதனமாக்கி வியாபார அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வோர்.
இணைவும் முரண்களும் வெற்றிக்கான வழிமுறைகளும்…
புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களின் முதலாவது பிரிவினரும்(1), புலிகளின் அரசியலோடு இணைந்திருந்த (A) பிரிவினரும் ஒரணியில் இணைவதற்கான தேவை புதிய மக்கள் அரசியலையும் வெற்றிக்கான வழிமுறைகளையும் உருவாக்கும். இது திடீரென உருவாகும் அரசியல் ஒருங்கிணைவல்ல.
பல சவால்களையும் தடைகளையும் கடந்து செல்ல வேண்டிய தியாகங்களும் அர்ப்பணங்களும் மிக்க போராட்டங்களூடாகவே இது நடைபெறலாம். புலத்திற்கு (ஈழத்திற்கு) வெளியில் ஆரம்பத்தில் இந்த ஒருங்கிணைவும் அதனூடான எதிர்ப்பரசியலும் சாத்தியமாகும்.
தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் வாழும் முற்போக்கு ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அமைப்புக்களும் உதிரிகளும் இந்த இணைவு வட்டத்தினும் உள்ளடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாகவே காணப்படுகின்றது.
இவர்கள் மத்தியிலிருந்தே புதிய சமூகப்பற்றுள்ள அரசியல் வழிமுறை முற்போக்குத் தேசியமாக, இனவாதத்தைக் களைந்து உருவாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சிங்களப் பேரினவாதத்தால் இனச்சுத்திகரிபிற்கு உள்ளாக்கப்பட்டு துவம்சம் செய்யப்படும் நிலையில் இதற்கான செயற்பாட்டுத்தளம் விரிவுபடுத்தப்பட சமூக உணர்வுள்ள சக்திகள் முன்வர வேண்டும்.
இதில் பிரிவு 1. இலிருந்து உருவாகும் முன்னணி அரசியல் சக்திகளின் உறுதியும், ஜனநாயக, வர்க்க அரசியல் உறுதியும் பிரிவி A. யின் தேசப் பற்றுள்ள சக்திகளை வெற்றிகொள்ளும் நிலை உருவாகும்..
ஆக இவர்களின் தலைமை சக்திகள் மக்களின் உணர்வுகளை உள்வாங்கிகொள்வதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும், அவற்றை அரசியல் வழிமுறையூடு அவர்களிடம் திருப்பி வழங்குவதுமான இயங்கியல் உருவாகும். இந்த நிகழ்வே கருத்துச் சுதந்திரத்தை மீளமைக்கும், புதிய வெற்றியை நோக்கிய சிந்தனைத் தளத்தை உருவாக்கும். ஒற்றுமை என்பதும், ஒரு குடை என்பதும் அர்த்தமுள்ளதாக அமையும்.
இது புலத்திலும் (ஈழத்திலும்), புலம் பெயர் சூழலிலும் அதே வேளை தமிழ் நாட்டிலும் ஏன் அழிவிலிருந்து மீள முனையும் ஒவ்வொரு அரசியல் பரப்பிலும் சாத்தியமான வழிமுறையாகும்.
ஒற்றுமைக்கான சவால்கள்:
இவ்வாறு உருவாகும் புதிய அரசியலுக்கு எதிராக பிரிவு 3 உம் பிரிவு C உம் மிக இறுக்கமான இணைவினை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் வியாபாரம் நடத்துவதற்கான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கோருவார்கள். இவ்வாறான சக்திகளின் ஒருங்கிணைவு சமூகத்தை அழிவின் விழிம்பிற்குள் இழுத்துச் செல்லும்.
மிகக் குறிப்பாக பிரிவு 3 ஐச் சார்ந்தவர்கள் ஏற்கனவே தமது வியாபார அரசியல் உரிமைக்காக மக்கள் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். இனப்படுகொலை அரசுடன் இணக்க அரசியல், அபிவிருத்தி, மறு சீரமைப்பு என்பனவே இவர்களின் அடிப்படை முழக்கமாக அமைகிறது. இதே சுலோகங்களை முன்வைக்கும் பிரிவு C ஐச் சார்ந்தவர்களுள் முதன்மையானவர்கள் முன்னை நாள் புலி உறுப்பினரான கே.பி இன் தலைமையிலான வலைப் பின்னலுள் இயங்குகின்ற அல்லது அதனை நோக்கிச் செல்கின்ற பகுதியினர் பெரும்பான்மையானவர்கள். இதன் இன்னொரு பகுதியினர் தமது தேசிய வியாபார அரசியலை மக்களிடம் திருடிய பணத்திலிருந்து ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் பிரிவு C இன் உப பிரிவாகவும் அபாயகமானவர்களாயு கருத்தப்படலாம்.
புதிய அரசியல் முன்நிலைக்கு வரு போது C பிரிவில் உள்ளடங்கும் அனைத்துப் பிரிவினரும் அரச ஆதரவு அணிகளாக ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது.
பிரிவு B மற்றும் C ஆகிய பிரிவினர் புதிய அரசியலின் எதிர்நிலையாளர்களாக உருவாகும் நிலையில் அவர்கள் பிரிவு 1 மற்றும் A எதிர்ப்பியக்கங்களுக்கு எதிரானவர்களாகவோ அல்லது அதனை அழிப்பவர்களாகவோ உருமாறக் கூடிய நிலையே காணப்படும்.
இதே வேளை பிரிவு 2 ஐச் சேர்ந்த புலிகளின் அடையாளத்திற்கு எதிராகத் தமது அடையாளத்தை நிலை நாட்ட விரும்பும் பிரிவினர் அரச சார்பு அணிக்கு மிகவும் உறுதுணையாகவும் பின்பலமாகவும் அமைந்திருப்பார்கள். இவர்களின் அடையாளம் என்பதும் கூட வர்க்க நிலை சார்ந்ததே.
மிகத் தீவிர புலியெதிர்ப்பை முன்வைக்கும் இப் பகுதியினர் தமது வன்முறை அடையாளத்தைப் புலியெதிர்ப்பு சார்ந்தே கட்டமைத்துக் கொள்வார்கள். பழமைவாத யாழ்ப்பாண மேலாதிக்க வாத வெளாள சிந்தனையை அடிப்படையாகக் கொண்டியங்கும் இப்பகுதியினர் வேளாள புனிதத்துவத்தை தமது அடையாளத்தின் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்துவர்.
இன்று சமூகத்தில் புறக்கணிக்கத்தக்க அளவிலேயே காணப்படும் இப்பிரிவினர் இறுக்கமான அணியாகக் காணப்படாவிட்டாலும் அண்மித்த எதிர்காலத்தில் அபாயகரமானவர்களாக மாற்றமடைவது தவிர்க்க முடியாதது.
குறிப்பான சூழ்நிலை ஆய்வு – case study
சஞ்சீவராஜ் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தை இந்த அனைத்துப் பிரிவுகளும் எவ்வாறு செயலாற்றினர் என்பது சிறந்த உதாரணம்.
சஞ்சீவராஜ் புலி ஆதரவாளர் ஒருவரால் தாக்கப்படதும், வன்முறைக் கலாச்சாரத்தின் அரசியல் பின்னணியை முன்வைத்து இனியொரு செய்தி வெளியிட்டது. பின்னதாக 26.06.11 அன்று இதனைக் கண்ணனம் செய்து ஆர்ப்பாட்ட ஒன்று கூடல் ஒன்று இடம்பெறுவதாக சிலர் அறிவித்தனர்.
அவ்வறிவிப்பை விடுத்தவர்களுடன் உரையாடிய போது, ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பவர்கள் இலங்கை அரசோடு இணக்கப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் (C) என்றும் ஆனால் யாரும் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்ததொடர்ந்த விவாதத்தில் இனப்படுகொலை அரசுடன் இணக்கப் போக்கு என்பது மற்றொரு வன்முறை என்ற கருத்து முன்வைக்கப்பட்டடு விவாதித்த போது, ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தரப்பிலிருந்து வெறுமனே பன்முகத் தன்மைகொண்ட இரு அரசியல் முரண்பாடுகள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதன் பின்னதாக, இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களை குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கலாமா எனக் கேள்வியெழுப்பப்பட்ட போது, ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு என்பதால் அது தேவையற்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆர்பாட்டம் குறித்து புதிய திசைகள் அமைப்பு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறது. இத் துண்டுப் பிரசுரத்தைத் தொடர்ந்து இனியொருவிற்குத் தாக்கப்பட்டவர் ஒரு கடித்ததை எழுதுகிறார். அது எந்த மாற்றமும் இன்றிப் பிரசுரிக்கப்படுகிறது. மறு நாள் இதே நபர் இனியொரு “ஜனநாயகவாதிகளின்” ஆர்ப்பாட்டத்தை தடுத்தாகவும் அதனால் இனியொரு புலிகளின் மறைமுக வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதம் பின்னதாக ஒரு இணையத்தில் பிரசுரிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜனநாயக வாதிகள் அல்ல என்பதை முன்னதாக ஒத்துக்கொண்ட சஞ்ஜீவராஜ் மிகத் தீவிரப் போக்குடன் ஆர்ப்பாட்டத்திற்கு தானும் செல்வதாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இறுதியில் அவர் கூறியபடியே ஆர்ப்பாட்டத்திற்குச் செல்லவில்லை என்பதும் உண்மை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இலங்கை அரசோடு பேச்சு “வார்த்தை அரசியல்” அல்லது “இணக்க அரசியல்” எனப்தை வரித்துக்கொண்டவர்கள்.
இனியொரு போன்ற பல அரசியல் தளங்களில் இணக்க அரசியலின் அபாயத்தை தர்கீக அடிப்படையில் முன்வைத்த போதும் அதற்கு எதிரான சேறடிப்புக்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மட்டுமே இவர்கள் முன்வைத்தனர்.
இப்போது தமது அடையாளத்திற்கான அரசியலை தீவிர புலியெதிர்ப்பு அரசியலாக முன்வைக்கும் குழுவினர் (பிரிவு 2) இனியொரு புலிசார் இணையம் என்ற ஆதாரமற்ற சேறடிப்பை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இலங்கை அரசுடன் இணக்கப்பட்டு நிலையிலுள்ளவர்களை, கே.பி ஊடாக மக்களை அணுக விரும்புகின்றவர்களையும், இலங்கையில் பண முதலீட்டிற்கான ஜனநாயம் கோருவோரையும், ஏனைய அரச ஆதரவுக் குழுக்களுடன் இணக்க அரசியல் என்ற தலையங்கத்தில் ஒன்றிணைவோரையும் ஜனநாயக வாதிகளாக முடிசூட்டி இனியொருவை புலி ஆதரவு இணையம் என்று இலங்கை அரசு உட்பட அனைத்து அதிகாரங்களுக்கும் காட்டிக்கொடுக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அணிசேர்க்கைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை மிகத் தெளிவாக வெளிக் காட்டுகின்றது.
இங்கு பிரிவு 1 ஐச் சார்ந்தவர்கள் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் போது பிரிவு A ஐச் சார்ந்தவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுகே வழங்குதல் என்பதும் பின்னர் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் கற்பித்தல் என்ற இயங்கியல் உறவைத் தடை செய்து அதனைத் திசை திருப்பும் நோக்கில் ஏனைய அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவதை வெளிப்ப்படையாகக் காணலாம்.
ஆக, ஒற்றுமை என்பது பிரிவு 1 மற்றும் பிரிவு A ஆகியோரிடையேயான ஒன்றிணைவாகவும், ஏனைய பிரிவுகள் இதற்குச் சவாலாகவும் அமைகின்றனர். இது வெறும் குறித்த உதாரணம் மட்டுமே. முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னதாக நிகழ்ந்த ஒவ்வொரு குறிப்பான நிகழ்வுகளிலும் இதன் வெளிப்பாடுகளைக் காணலாம்.
இங்கே ஜனநாயகம் என்பதும் கருத்துச் சுதந்திரம் என்பதும் மக்கள் மற்றும் புரட்சிகர அரசியல் ஆகியவற்றின் இடையேயான இயங்கியலின் அடிப்படையிலேயே உருவாகிறது.
வியாபரம் செய்வதற்கான ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கோரும் பகுதியினருக்கும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாவோ ஆதரிக்கும் பகுதியினருக்கும் எதிரான ஒற்றுமை என்பது பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின், தேசிய இனத்தின் ஒற்றுமையாக அமையும்.
இதனையே வர்க்க ஆய்வாகவும் முன்வைக்கலாம்.
(இலங்கையில் உலகமயமாதல் ஏற்படுத்திய உற்பத்தி உறவுகளின் பின்னதான வர்க்க ஆய்வு எதுவும் இதுவரை தெளிவாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் பருமட்டான ஏற்கனவே கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் குறித்து ஆய்வு முற்படலாம். இந்த ஆய்வு இணைவிற்கான உடனடி மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களுடன் அடுத்த பகுதியில் முன்வைக்கப்படும்.)
1வது பிரிவில் இருப்பதாக பெயரளவில் காட்டிக்கொண்ட சஞ்சீவராஜ்ம் தாங்களும் Aபிரிவிலுள்ளோரை சீண்டி கோபப்படுத்தும் விதமாக 3வது பிரிவிலுள்ளவர்கள் யாரென மிகதெளிவாக தெரிந்து கொண்டுதானே தீபத்தில் சிறிலங்கா அரசபயங்கரவாத ஊடகசிப்பாய்களாக செயற்பட்டீர்கள். 1வது பிரிவில் இருப்பதாக பெயரளவில் காட்டிக்கொண்டவர்களின் கபடமுகம் விலாங்குதனம் அம்பலப்பட்டு அம்மணமான நிலையில். எப்படி Aபிரிவிலுள்ளோர் 1வது பிரிவில் இருப்பதாக பெயரளவில் காட்டிக்கொண்டவர்களுடன் இணங்கிச் செயற்படுவார்கள்? எனவே 1வது பிரிவு என்பது மோசடிதனமும் சூழ்சியும் நிறைந்த ஏமாற்றுக்காரர்கள் என்பது நிதர்சனம்.
நிர்மலன் நீங்கள் B பிரிவா C பிரிவா?
நிர்மலன் நீங்கள் பீ அல்லது சீ என்பது தெளிவு. ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறீர்கள்….. ஏன் தமிழ் மக்களை பிரிக்க ஆவல் கொள்கிறீர்கள். உங்களுக்குப் பின்னணி ராஜபக்சேவா?
அப்பூ இப்ப என்னராசா சொல்லுறியள்? எல்லன்ஞ்சிவமயம் என்டு கிடக்க குயப்பிவிடுரீங்கலே?
I am glad that Jaffna university Maths Special theorems at last useful to explain our politics
We can use this article as a template for our future socio political moves. There will definitely be critics in the framework proposed, however the basics seem to be excellent.
ஐயோ சமன்பாடு விளங்காமல்தானே துவக்கை காட்டி சமப்படுத்தலாம் என்று படகேறி
கடைசியா ஓரத்தனாடு சவுக்கு மர சமவெளிக்குள் சவப்படுத்தி நாங்கள் நிக்க அங்கால ஒரு பார்ட்டி முள்ளிவாய்க்காலிற்குள் வட்டம் கீறி மையப்புள்ளியை அடையாமலே மெளனிச்சு போனாங்கள்.
நீங்கள் என்ன சொல்ல வாறீங்க ‘ஏ’ யும் 1 உம் ஒன்று சேர்ந்தால் தமிழருக்கு நல்லதா?
என் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள/வைக்கப்போகிறவர்களிற்கு தெளிவாக சொல்ல விரும்புவது என்னவெனில். நானொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை! தாரளமாக என்னை விமர்சியுங்கள் குற்றம்சாட்டுங்கள் ஆனால் எதுவும் உண்மையான ஆதாரத்தின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
1வது பிரிவிலுள்ளதாக காட்டிக்கொண்டவர்கள் வெறும் வாயளவில்/பேச்சளவில் தம்மை தமிழ்தேசீயவாதிகளாக காட்டிக்கொண்டனரே தவிர அவர்களின் செயற்பாடு 3 வது அணியிலுள்ளவர்களின் சிறிலங்கா ஆதரவு செயற்பாடே என்பது தீபத்தில் அப்பட்டமாச்சு! இதை சம்பந்தப்பட்டவர்களோ இல்லை அவர்களது “சிஞ்ஞ்சக்” நண்பர்களாலோ இதுவரை மறுக்க முடியவில்லை! இது எனது குற்றச்சாட்டை இன்னமும் வலுப்படுத்தியுள்ளது.
மறுதலையாக என்னை B,C பிரிவுகளை சார்ந்ததாக குற்றம்சாட்டுபவர்கள் எந்த உண்மை ஆதாரத்தையும் தெரிவிக்காதுகுற்றம் சாட்டியுள்ளீர்கள். இதை அப்பட்டமான சேறடிப்பு/ ஊகம் சார்ந்ததே என்பது எனது கருத்து.
நிர்மலன்,
அடிவாங்கிய 2ம் பிரிவை முதலாம் பிரிவில் சேர்த்து சீ பிரிவை சேர்ந்தவரே னீங்கள் என னிருபித்து உள்ளீர்கள். ஒற்றுமைக்கு எதிரான சீ காரர், இப்படி தான் ராம் போன்ற பீ காரரை பயன் படுத்தி கொள்வர்.
வன்முறைக்குள்ளனாவர்(?) தன்னை 1ம் பிரிவை சேர்ந்தவராகவே இனம்காட்டினார். அதே தொனிப்பில்தான் அவரது நண்பர்களும் புதியதிசைகள் குழுமமும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் . வன்முறைக்குள்ளனாவரினது(?) முகமூடி கிழிந்தவுடன் அவரை 2ம் பிரிவுக்காரர் என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.
னான் புதிய திசைகள் குழுமத்தை சார்ந்தவன் என்று முத்திரை குதுவதே சீ பிரிவின் வேலை. நான் எனது சொந்த கருத்தை சொன்னால் உங்களுக்கு முத்திரை தேவை. இதை விட அடிவாங்கியவரை எனக்கு தெரியாது. சரி, அவர் 1ம் பிரிவில் இருந்து 3ம் பிரிவுக்கு கருணா, கே.பி அண்ணன் பாப்பா, போல பல்டி அடித்தவர் என்றே வைத்து கொள்ளுங்களேன். ஏனப்பா அதை வைத்து முழுதையும் மறைக்க பாக்குறீர்கள்? கே.பி ஐ வைத்து முழுப் பேரையும் துரோகி என்ற சொல்லாத கட்டுரை 1ம் பிரிவு. ஒற்றுமையை குலைக்கும் நீங்கள் சீ பிரிவு. குரிப்பு: புதிய திசைகளுக்கும் என கருத்துகளுக்கு உடன்படாத கருதுக்கள் பல.
நான் உங்களை எங்காவது “புதியதிசைகள் குழுமத்தை” சேர்ந்தரென்று சொல்லியுள்ளேனா! அதற்கான ஆதாரத்தை காட்டவும். பொய் என்னது கையாளகதவர்களின் போக்கிடம்.
மகிந்தா அரசு மட்டும் எம் மக்களின் எதிரியல்ல. மக்களின் சுதந்திரத்தை நசுக்கக் கோரும், ஒடுக்கக் கோரும் புலியும் தான், தமிழ் மக்களின் சுதந்திர மூச்சைக் கொன்று வருகின்றது. தமிழ்மக்களின் அவலம் தொடர, அவர்கள் சுதந்திரமாக போராட முடியாதவாறு புலிப் பாசிசக் கும்பலும் தான் மகிந்தவுக்கு நிகராக ஆட்டம் போடுகின்றது.தமிழ் மக்களை பலியெடுத்து, பலி கொடுத்து தப்பிப் பிழைக்க முனைந்த கூட்டம் தனது சொந்தப் புதைகுழியில் தானே பலியானது. எஞ்சிய கூட்டம் மக்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு கொலைவெறியுடன் ஆட்டம் போட்டு அடிக்கின்றது, மிரட்டுகின்றது. மகிந்த குடும்பம் எதை இலங்கையில் செய்கின்றதோ, அதை புலத்தில் செய்யக் கனவு காண்கின்றது.மகிந்தவோ இலங்கையில் சிங்கக்கொடி மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றார். புலத்தில் புலிகள் புலிக்கொடி மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றனர். இதுவல்லாத அனைத்தையும் அடித்து நொருக்கு, கொன்று குவி என்கின்றனர்.இந்த அடிப்படையில் அண்மையில் லண்டனில் தாக்கிய புலிகள், இந்த வன்முறை சரியானது என்று தங்கள் ‘ஒரு பேப்பர்” பத்திரிகை மூலம் மிரட்டியுள்ளனர். இது போல் தொடர்ந்து தாக்குவதன் மூலம், தாமல்லாத அனைவரினதும் வாயை மூடிவிட முடியும் என்று பிரகடனம் செய்துள்ளனர். இதுதான் புலி. இதுதான் அந்த வர்க்கத்தின் அரசியல் வரம்பு.இதைத் தானே இலங்கையில் மகிந்த குடும்பம் செய்கின்றது. புலத்தில் புலிக் கும்பல் செய்கின்றது. வன்னியில் புலித்தலைமை இருந்த காலம் வரை, இன்று மகிந்த அரசு எதைச் செய்கின்றதோ அதைத்தான் புலியும் செய்தது. முள்ளிவாய்காலுக்குப் பிந்தைய அரச படுகொலைகள் போல் புலியும் பலவற்றை நடத்தி முடித்திருக்கின்றது. முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் 1995 களில் கைப்பற்றிய போது, 1500 முதல் 2000 இராணுவ வீரர்களில் ஒருவரைக் கூட உயிருடன் தாம் பிடிக்கவில்லை என்று கூறி அவர்களை படுகொலை செய்தனர். அதே மண்ணில்தான் இன்று அரசு அதையே செய்தது.முள்ளிவாய்க்காலில் புலிக்கொடியைக் கீழே போட்டுவிட்டு, தங்கள் புனித சயனட்டையும் எறிந்து விட்டு, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலித்தலைமைக்கு எது நடந்ததோ அதைத்தான் புலிகள் தம் வாழ்நாள் முழுக்கச் செய்தனர். அரசு இதுவரை யார் தம்மிடம் கைதியாக இருக்கின்றனர் என்ற விபரத்தை, புலிகள் போல் தான் வெளியிடவில்லை. கொலை வெறியுடன் கொன்று குவித்த கூட்டம் இது.இப்படி இந்தக் கொலைகாரக் கூட்டம் தான், அரசு – புலி என்ற அடையாளங்களுடன், கொலை வெறிபிடித்து கொக்கரிக்கின்றனர். தங்கள் தலைமையையும், மக்களையும் கொன்று குவித்த அரசின் செயல் போல், புலிகள் அல்லாதவர்களை ஒடுக்கக் கோருகின்றது “ஒரு பேப்பர்”.இந்த நிலையில் புலிகளுடன் தேன்நிலவை நடத்துகின்றனர் திடீர் இடதுசாரியப் பன்னாடைகள். புலிகள் திருந்திவிட்டார்கள் என்றும், புலித் தலைமையின் ஒரு பகுதி இது போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், புலிக்கு உள்ளே சென்றுதான் புலியைத் திருத்தி தமிழ் மக்களை வழிக்கு கொண்டு வரமுடியும் என்றும் கூறிக்கொண்டு, நாயாக அவர்களை நக்கிக் கொண்டு அதன் பின்னால் வரும்படி அழைக்கின்றனர்.புலி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் என்பதையும், அந்த வர்க்கத்தின் வன்முறை தான் புலியின் நடத்தை என்பதையும் மறுத்து, ஏதோ வர்க்கம் கடந்த தவறு என்று கூறுகின்ற பிழைப்புவாத புரட்டைச் செய்கின்றனர். வர்க்கமற்ற தேசியத்தையும், புலிக்கேற்ற பிரிந்துபோகும் சுயநிர்ணயம் என்று சுயநிர்ணயத்தையும் திரித்துக் கொண்டு இடதுசாரி வேஷம் போட்டுக்கொண்டு புலியுடன் கூடிக் குலாவுகின்றனர்.புலிக்குள் வர்க்கம் கடந்த நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையானவர்கள், தேசியவாதிகள் இருப்பதாக கூறிக்கொண்டும், காட்டிக்கொண்டும் நடத்துகின்ற பித்தலாட்டம் அரசியலாகின்றது. இந்த இனியொரு-புதியதிசை கூட்டம் தாங்கள் கூடிக்குலாவும் புலியுடன் சேர்ந்து, நடந்த வன்முறையைக் கூட்டாகக் கூடக் கண்டிக்கவில்லை. புலியின் “ஒரு பேப்பரின்;” வன்முறையை தொடர்ந்து நடத்தக் கோரும் நிலையில், அந்த அடாவடித்தனத்தை புலிக்குள் உள்ளவர்களோ, இனியொரு-புதியதிசை கூட்டமோ தனியாகக் கண்டிக்கவில்லை. புலியின் “ஒரு பேப்பரின்;” மிரட்டலை, செய்தியாகக் கூட இனியொரு வெளியிடவில்லை.இதற்குள் ஊடக தர்மம் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் ஊருக்;கு வகுப்பு எடுக்கின்றனர் தீபம் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்திய தாக்குதலை, தீபம் தொலைக்காட்சி கண்டிக்கவில்லை. இந்த விவாதங்களில் இனியொரு-புதியதிசை யுடன் தேன்நிலவு நடத்தும் புலிகள் கூட கண்டிக்கவில்லை.இப்படி புலிக்கு மாற்றுகளற்ற அரசியல் தளத்தில், வன்முறையைத் தொடரும்படி புலிகளின் “ஒரு பேப்பர்” அறை கூவல் விடுத்துள்ளது. புலத்தின் எதார்த்தம் இதுதான். இதை எதிர்த்து போராடாது, புலியுடன் நடத்தும் வர்க்க இணக்க அரசியல் புலி வன்முறை அரசியலுக்கு உட்பட்டதுதான்.
புலம்பெயர்ந்த தமிழர் கையில் எந்தக்கொடியிருக்க வேணுமென்பதை கொம்முனிச சர்வதிகாரம் தீர்மானிக்க முடியாது. அதை புலம்பெயர்ந்த தமிழர்தான் தீர்மானிக்க முடியும். உங்களிற்கு விருப்பமான கொடியை பிடிக்க வேண்டமென்று யார் தடுத்தது? உங்களிடம் சொந்த கொடியுமில்லை எசமானர்களின் சிங்கக்கொடி பிடிக்க ஆதரவு மக்களுமில்லை. சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் நிகழ்சி திட்டமான புலிக்கொடியெதிர்ப்பை செய்து கொண்டு அதைமறைக்க கொம்முனிச வேசம்/மகிந்தாஎதிர்ப்பு. ஈபிக்கும் கேபிக்கும் உங்களிற்கும் என்னவித்தியாசமிருக்கு!
Thevan 2
Posted on 07/05/2011 at 10:29 am
இந்த வர்க்கக் கண்ணாடி நல்லாயிருக்கு.இன்னுமொரு கொண்டையாக இல்லாவிட்டால் நல்லது.
பேரினவாதம் வர்க்கம் விகிதம் பார்த்துத் தான் தமிழரை கொல்லுமோ?
பேரினவாதத்தில் கட்டுண்டிருந்த சிங்கள இடதுசாரிகள் ஏன் எம் மீது பேரினவாதம் நடாத்திய படுகொலைகளை வன்முறைகளை கண்டித்து போராடவில்லை?
வர்க்கம்:
தமிழ் தேசியதிட்குள் இருக்கும் அணைத்து வர்க்கமும் எதிர்கொள்ளவேண்டிய முதன்மையான பொதுப் பிரச்சினை பேரினவாதம்.
இந்தப் பேரினவாதத்தின் பின்னாலுள்ள,ஆதரவாகவுள்ள அனைத்து மக்கள் விரோத சக்திகளினால் வேறு வடிவல் உருவில் தம் நலனிற்காக எம்மீது திணிக்கப்பட்டதே எம்முன் உள்ள முதன்மையான தேசிய விடுதலைப் போராட்டம்.
இந்தப் பேரினவாதத்தின் பின்னாலுள்ள,ஆதரவாகவுள்ள அனைத்து மக்கள் விரோத சக்திகளிற்கு எதிரான போராட்டம்,இனத்திற்குள் இருக்கும் வர்க்க முரண்பாடுகள், போராட்டங்கள் என்பன தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சமாந்தரமாக இயல்பாகவே இயங்கி கொண்டிருக்கின்றன, தொடர்ந்து இயங்கி கொண்டேயிருக்கும்.
மக்கள் விரோத சக்திகளிற்கு எதிரான போராட்டம்,இனத்திற்குள் இருக்கும் வர்க்க முரண்பாடுகள், போராட்டங்களை ஒரு முற்றுப் புள்ளியில் நிறுத்த முனைவது சித்தாந்தங்களை இயங்கியலை திரிவு படுத்துவதாகும்.
விடுதலைப் புலிகளின் முன்னைநாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி க்கு தனித் தமிழீழம் இப்போதைக்கு தேவையில்லையாம். யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலு, தான் நடத்தும் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஊடாக, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதே தனது முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
இந்த நிறுவனத்தின் ஊடாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் உதவவேண்டும் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நிகழ்சியை பாத்த எனக்கே அவரை தூக்கி போட்டு மிதிக்க வேணும் போல இருந்தது, ஆத்திரப்பட்டால் எனது உடலுக்கும், எனது ரீவிக்கும் பழுது என்று போட்டு இருந்து விட்டேன், அப்பநானும் என்ன புலியோ?, எல்லாரும் என்னைபோல இருப்பாங்கள் என்று எதிர்பார்க்க முடியாது, அப்பிட்டவன் பிடிச்சு சாத்தி இருக்கிறான், சந்தர்ப்பம் கிடையாதவன் உணர்வுகளை அடக்கி கொள்கிறான், அதுக்கு புலி அடிச்சது பூனை அடிச்சது என்று விசர்கதை கதைக்காமல் தற்பாதுகாப்பு கலையை கற்று வச்சு இருக்கிறது நல்லது, யார் எங்க சாத்துவான் என்று தெரியாது,கற்க முடியாவிட்டால் உணர்வு பூர்வமான விடங்களில் அமைதிகாத்தல் உடம்புக்கு நல்லது, லண்டன் போலிசே சொல்லுது உந்த கொடியை கொண்டு போனால் உணர்சி வசப்பட்டு றோட்டில குந்தீடுவீங்கள் என்று, அதுல வந்த கொன்சேற் கேட்டார் ஆர் புலிக்கொடியை தேசிய கொடியா ஆக்க அனுமதி கொடுத்தது என்று அவர்மட்டும் எனது கையில் கிடைச்சல், மகனே கைமாதான். ஒரு பேப்பர்
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 3
3. புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்!
நான் எமது புத்தகக்கடையை அண்மித்தபோது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. ‘சந்தேகத்துக்கு இடமின்றி இந்தப்பொடியன் அவங்கடை ஆள்தான்’ என்பதை அனுமானித்துக் கொண்டேன். நான் எனது சைக்கிளைவிட்டு இறங்கியதும் அந்தப்பையன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எனது கடையில் இருந்த தோழர் தவராசாவின் முகத்தையும் பார்த்தான். அதாவது ‘இவர்தான் நாங்கள் தேடிவந்த மணியம் எனபவரோ?’ என்ற கேள்வி அந்தப்பார்வையில் இருந்தது. பதிலுக்கு தவராசாவும் ‘உன்னைத்தேடி வில்லங்கமான ஆட்கள் வந்திருக்கிறாங்கள்’ என்ற தகவலைத் தன் கண்களால் எனக்கு உணர்த்தினார். வந்திருப்பவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதை ஊகித்தறிய எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. சாதாரணமாகவே, தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு, சில அசாத்திய மோப்பக்குணங்கள் உண்டு. தனது இனத்திலுள்ள யாராவது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால், சிறிதுநேர உரையாடலின் பின், அவர் எந்த ஊரவர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஓரளவு சரியாகச் சொல்லி விடுவர். இந்தப் ‘புலனாய்வு’த் திறமை, அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்கள் பற்றிய அவர்களது கணிப்பீடுகளுக்கும் பொருந்தும். இயக்கப் ‘பொடியளை’க் கண்டால், அவர்கள் எந்த இயக்கம் என்பதை சரியாக மதிப்பிட்டு விடுவ -தேனீ
நாடுகடந்த தமிழீழம் சி பிரிவாமே?நிர்மலன் என்ன சொல்கிறீர்கள்?
சீ.. சீ அவர் கே. பிரிவு
நல்ல ஒரு தொடக்கம்,
புலிகளின் அரசியலுக்கு மாற்றைக் கோருவோர்,
புலிசார் அரசியலை முன்னெடுப்போர் பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும் ஆராய வேண்டிய கட்டாயதிட்குள் தமிழ் தேசியம் தள்ளப் பட்டுள்ளது.
நாம் 1,2,3, A,B,C ஆக பிரித்துப் பார்க்குமளவு மிக எளிதானதல்ல உண்மை நிலைமை.தேசிய அரசியல் இவை இரண்டிற்கும் வெளியே தான் என்பதை கூற, இன்றைய பொதுப் புத்தி ,சமன் பாடுகள் உடைக்கப் பட இந்த கட்டுரை உதவும் .
1 இற்குள் 2ம்,2 இற்குள் 3ம் புரிந்தோ புரியாமலோ, வெளியில் தெரிந்தும் தெரியாமலோ இருக்கின்றன அல்லது இருக்கக் கூடும்.அத்தோடு இந்த உப பிரிவுகள் , கருத்துள்ளோர் இருப்பதற்க்கான அக புற அழுத்தங்களையும் நாம் கவனத்தில் எடுத்தல் அவசியம்.
எந்தெந்த கரானக்களிட்காக
இந்த பிரிவுகள் 1,2,3, A,B,C உருவாகின என்பதையும் ஆராயவேண்டும்.
ஒருத்தரும் பிறக்கும் போதே தேசியத்திற்கு எதிராகத்தான் செயல் படுவேன் என்று கங்கணம் கட்டித்தான்
வந்திருப்பார்கள் என்று கூற முனைவதும் நன்றல்ல
இங்கே கூறப்பட்ட பிரிவுகள் வெறுமனே இன்று வெளித்தெரியும் முரண்பாடுகள் மட்டும் தான். இவற்றிற்கான வர்க்கம் சார்ந்த காரணங்கள் இன்னும் விரிவாக ஆரயப்பட வேண்டும். கட்டுரையின் தொடர்ச்சியில் அவற்றை முன்வைக்கிறேன். அதே வேளை ஒவ்வொருவரும் பங்களித்தால் மட்டுமே இதனைக் கூட்டு முயற்சியாக வெளிப்படுத்தவும் கட்டுரையச் செழுமைப்படுத்தவும் இயலும். இங்கு பின்னூட்டமிடுகின்றவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.
இங்கு பின்னூட்டமிடுகின்றவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.//
நிச்சயமாக , இந்த கட்டுரையின் ஆராயும் நோக்கதிற்கு எதிராக அல்லது திசையை மாற்ற முனைவோரையும் சரியான திசையில் இழுத்துக் கொண்டுவர அனைவரும் கூட்டு முயற்சியாக முயல்வார்கள்.தொடரட்டும் .
// இந்த கட்டுரையின் ஆராயும் நோக்கதிற்கு எதிராக அல்லது திசையை மாற்ற முனைவோரையும் //
கேள்விக்கு பதில் “ரண்டக்க ரண்டக்க ” இற்த வல்லலில்” ஆராயும் நோக்கதிற்கு” இதுக்கொண்னும் கொறைச்சலில்லை. வடிவேலுவின் இடத்தை பிடிச்சிட்டுங்கள். “சிஞ்ஞ் சக்” போடுகிறவருக்கு. “ஆராயும் நோக்கு”. முடியலே!
//புலிகளின் அரசியல் வழிமுறை தவறானது என்றும் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்குத் தமக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் புலிகளை எதிர்த்துக் குரல்ழெழுப்பியவர்கள்//
தமிழீழவிடுதலைப்புலிகளென்றால் அங்கு எவ்வாறு அரசியல்நுழைய முடியும்?
ஒரு நாட்டை ஆழ்பவ்ர்கள் கைக்கொள்ழும் ஆயுதமற்ர ஜனநாயக முறையில்
பிரச்சினகளைத்தீர்த்தலே அரசியல். அரசியல் சந்தர்ப்பவாதமும் ஏமாற்றும்நிறைந்த
ஒன்று. புலிகளிற்கு அரசியல் இருந்திருந்தால் அவர்க்ழும் சந்தர்ப்பவாதிகள்தான்.
ஒட்டு மொத்தமாக விடுதலையின் பெயரிலோ, அரசியலின் பெயரிலோ அடித்தள்ம்
அற்ர ஆயுதப்போராடமே புலிகளினுடையது. இராணுவத்தை தமிழ்ப்பகுதிகளில்
இருந்து அகற்ருவதே ஆயுதமேந்தியவர்களின். நோக்கமாக் இருந்த்து. இந்த நோக்கம்
புலியின் தலைகளால் மற்ர அமைப்புக்களை அழிக்கவும், தமிழர்களை
அடக்கவும்
தமிழினத்தின் அரசியல் தலைவர்களை அழிக்கவுமே பயன்படுத்தப்பட்டது.
இததகைய தவறினை எடுத்துகாட்டியவ்ர்களே புலியின் எதிர்ப்பாளர்,துரோகிகள்.இவர்
கள் வன்னியில் மட்டுமல்ல உலக்முழுவதுமுள்ளனர். வன்னியிலழிந்தது
ஆயுதமேந்தியவ்ர்கள். புலம்பெயர்நாடுகளில் அரசியல் செய்திருந்தார்க்ளென்றால்
தமிழரிற்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது. என்வே புலிகள்வேறு தமிழரின் பிரச்சினைவேறு. புலியின் கதையுள்ளவரை தமிழர் எங்கும் தலையெடுக்க மாட்டார்கள். இலங்கையி வாழும் தமிழர் தாமாக தலைடுத்து தங்கள்காலில்
நின்று விடுதலைக் குரல் எழுப்புவதே விடுதலை. அதனை ஏற்படுத்த வே
ண்டியது
புலம்பெயர் அறிவுள்ள தமிழரின் பொறுப்பு.
புலிகளோ புலி எதிர்ப்போ
அல்ல.-துரை
Thurai!
ஒருத்தரும் பிறக்கும் போதே தேசியத்திற்கு எதிராகத்தான் செயல் படுவேன் என்று கங்கணம் கட்டித்தான்
வந்திருப்பார்கள் என்று கூற முனைவதும் நன்றல்ல. including you.
தமக்குள்ளே துண்டு துண்டாக பிளவு பட்டு ஒருவரை ஒருவ்ர்
பிடித்து உண்ணும் நிலயிலுள்ளவ்ர்களிற்கு தாம் ஒரு இன்மென்று எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுவதும் கூறவைப்பதும் உலகின் கண்களிற்கு பயங்கரவாதமாகவே தோன்றும்.-துரை
துரை
!
என்னவொரு அறிவு ஜீவிதனமான விளக்கம் “ஒரு நாட்டை ஆழ்பவ்ர்கள் கைக்கொள்ழும் ஆயுதமற்ர ஜனநாயக முறையில்பிரச்சினகளைத் தீர்த்தலே அரசியல்”
அப்ப மன்னர் ஆட்சிகாலங்களிலும்/ஆட்சிகளிலும் . கொம்முனிச ஆட்சிகளிலும் நீங்கள் வரையறுத்த அறிவு ஜீவிதனமான “அரசியல்” இல்லை. அரசியலுள்ள நாடுகளில் ஆயுதப்படை இல்லை?
இந்தநிலையிலை “புலிகளிற்கு அரசியல் இருந்திருந்தால் அவர்க்ழும் சந்தர்ப்பவாதிகள்தான். ஒட்டு மொத்தமாக விடுதலையின் பெயரிலோ அரசியலின் பெயரிலோ அடித்தள்ம் அற்ர ஆயுதப்போராடமே புலிகளினுடையது.” நீங்களெல்லாம் மக்களிற்கு புத்தி சொல்ல வெளிக்கிட்ட அறிவுஜீவிகள்!
துரை இவ்வளவு சொன்ன நீங்கள். உந்த அரசு ஐனநாயகம் என்ற சொற்களிற்கும் விளக்கத்தை சொன்னீர்களென்றால் புண்ணியமாய் போகும்.
ஆயுதப்படை ஜனநாயக்ரீதியிலான அரசியலை பாதுகாப்பதற்கே.
அதே ஆயுதப்படை தனது கடமையில்தவறும் போது பயங்கரவாதமாகவே அது மாறும். இதே போல் தமிழரின் விடுதலைக்கென ஆயுதமெடுத்தவ்ர்கள் தங்கள் சுயநலன் கருதி
செயற்படும்போது தனிநபர் பயங்கரவாதமாக மாறிவிடும். இதுவே
தமிழரின் வரலாற்ரு உண்மை. போட்டுடைத்த கண்ணாடியை
திரும்ப ஒட்டி காட்ட முயல் வேண்டாம். புதிதாக சிந்திக்கவும்.-துரை
இக் கட்டுரைகள் குறித்த எனது பார்வைகளை வார இறுதியில் செய்கிறேன் நாவலன்.இத்தகைய ஆய்வின் வழி செல்நெறியைக் கண்டடைவதே முக்கியம்.புலம் பெயர் தளத்தில் மிகவும் பேசப்படத் தக்க கட்டுரை இது.இதுகுறித்துச் சனி-ஞாயிறு தினத்தில் எனது கவனக் குறிப்புகளைத் தருவேன்.
சிறீரங்கன்
தமிழ் நாட்டில் கூட கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போன்ற இணைவுகள், அணிசேர்க்கைகள் பிரிவுகள் போன்றன காணப்படுகின்றன. கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்பட்டாலும், பொதுவான போக்கு ஒன்று தான். குறைந்த பட்ச இப்படியான விவாதங்களையும் கருத்து பரிமாற்றங்களையும் நடத்துவதற்கு ஆவது ஒன்றிணைய மாட்டார்களா?