Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலம் பெயர்ந்த தமிழர்களே..:சன்னா.

இனியொரு... by இனியொரு...
11/17/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகில் நீங்கள் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவர்களா.. உங்களை ஆதரித்த பாவத்திற்காக உங்களை ஆதரிக்கும் சாதி இந்துக்கள் தருமபுரியில் செய்த வெறியாட்டத்தை பாருங்கள்..

கொள்ளை, தீ வைப்பு ஈழமண்ணில் மட்டும் நடக்கவில்லை, தமிழகத்திலும் நடப்பதைப் பாருங்கள். இதை நடத்துபவர்கள் சிங்களவர்கள் இல்லை. ராசபட்சேக்கள் இல்லை.. உங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கும் சாதித் தமிழர்கள். இவர்களைத் தான் இத்தனைக் காலம் நீங்கள் நம்பி ஏமார்ந்திருக்கிறீர்கள். நம்பிக்கை துரோகிகள். கபட வேடதாரிகள்.

ஈழ விடுதலையைப் பேசி தலித்துகளை அடிமைப் படுத்துபவர்கள். சமுக நீதிபேசி சேரிகளை கொளுத்துபவர்கள். உலகத்தின் முன் தமிழ் முகத்தைக் காட்டி தலித்துகளிடம் கோர முகத்தை காட்டுபர்கள். இவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பீர்களா?

சேரித் தமிழனை ஒடுக்கும் சாதித் தமிழனின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா? நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் லாயக்கற்ற இவர்களை நம்பி நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

சிங்களவர்களிடம் இந்தியா கொடுத்த ஆயுதங்கள் இவர்களிடம் கிடைத்தால் தலித்துகளை என்ன செய்திருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

வெறும் பெட்ரோலை வைத்து ஒட்டுமொத்தச் சேரியை கொளுத்தி தரை மட்டம் ஆக்கியவர்களுக்கு கையெறி குண்டுகளும், எறிகணைகளும், கண்ணிவெடிகளும், துவக்குகளும் கிடைத்தால் என்ன செய்திருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

தமிழகத்தில் காவல்துறை கண்டுபிடிக்கும் பயங்கர ஆயுதங்கள் வீச்சரிவாளும் கத்திகளும் தடிகளும்தான். இதை வைத்தே இத்தனை கொடுரங்களை அரங்கேற்றுபவர்கள் நவீன ஆயுதங்கள் கிடைத்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதை கற்பனை செய்துப் பாருங்கள்.

தன்னந்தனியாய் நிற்கும் அம்பேத்கர் சிலைகளை வியூகம் அமைத்து தாக்கும் வீரம் படைத்தவர்கள் சாதி தமிழர்கள். நிராயுதபாணியாக நிற்கும் தலித்துகளிடமும் குழந்தைகளிடமும் வீரத்தைக் காட்ட படை நடத்தத் துடிப்பவர்கள்.

உங்களுக்குத் தெரியுமா வெறும் 60 வீடுகள் உள்ள அண்ணா நகரின் சேரி மீது 1000 வன்னியர்கள் படையெடுத்தார்கள் என்று.. சிங்களவன்கூட அப்படி நடந்திருக்க மாட்டான்..

வீட்டில் சமையல் செய்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் முதிவர்களை மொத்தமாய் 2000பேர் போய் தாக்கினார்கள். என்றால் இவர்களின் வீரத்தை உங்களால் மெச்ச முடியுமா?

நேற்றுவரை பள்ளியில் உடன் படித்த மாணவர்கள் அந்த 2000 பேருடன் சேர்ந்து வருவதைப் பார்த்த சக சேரி மாணவ மாணவியர் அன்போடு அவர்களை அழைத்தபோது பழகிய பாசத்தைக்கூட மறந்து அந்த சிறுவர்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. அந்த பிஞ்சுகளின் மனது என்ன பாடுபட்டிருக்கும்.. நாளை அவர்களை பள்ளியில் எப்படி எதிர் கொள்ளுவார்கள் அந்த பிஞ்சுக் குழந்தைகள்.

போர்களம்தான் போரளிகளை அடையாளம் காட்டும். தமிழகத்தில் அது துரோகிகளை, கயவர்களை, போலிகளை, சாதி வெறியர்களை அடையாளம் காட்டும்.

உங்களின் குரலாய் கர்சனைச் செய்யும் அத்தனை புலி வீரம்பேசும் தமிழகத் தலைவர்களும் ஊமையாய், தேரையாய், வாய்முடி மொனமாய் இருக்கும் அதிசயத்தை உங்களால் காண முடிகிறதா?

ஈழ ஒடுக்குமுறைக்கு ஒரு குரல், ஒரு நீதி பற்றி வாய் கிழிய பேசுவார்கள்.. தமிழகத்தில் நடக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசுங்கள் என்று கேட்டால் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல அமைதியாய் இருக்கிறார்கள்.. ஏன் என்று உங்களால் கேட்க முடியுமா?

போலிகளை நம்பி நீங்கள் ஏமாறலாம் ஏனெனில் கடல்கடந்து வாழ்கிறீர்கள், உங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தகவல்கள்தான் உண்மைபோலத் தெரியும். ஆனால் எங்களுக்கு இவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இவர்களின் ரத்தத்தைப் பற்றி நன்றாகத் தெரியும், இவர்களின் நாக்கைப் பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இவர்களோடுதான் வாழ்ந்து வருகிறோம்.. நெருக்கமும் அதிகம், வலிகளும் அதிகம்.

எச்சரிக்கைச் செய்கிறோம். முகநுலில் நல்ல முகத்தைக் காட்டுவார்கள். தமிழ்த் தளங்களின் தமிழ்த் தேசியம் பேசுவார்கள், தமிழக மண்ணில் மட்டும் அதை நடவே மாட்டார்கள். வேரில் வெந்நீரை ஊற்றுவார்கள். இதுதான் சாதி இந்துக்கள். உங்களால் நம்ப முடியுமா.. இவர்களை?

எச்சரிக்கைச் செய்வது எமது கடமை இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் கடமை. ஒடுக்கப்பட்ட வனுக்குத்தான் வலிகளும் வஞ்ககங்களும் புரியும் அந்த அனுபவத்தில், உரிமையில் உங்களிடம் சொல்கிறோம்.

இவர்களை ஒடுக்க நீங்கள் மனித வெடி குண்டாக மாறக் கோரவில்லை உங்கள் மனசாட்சியை திறக்கக் கோருகிறார்கள் தருமபுரியில் பாதிக்கப் பட்ட தலித்துகள்.. உங்களிடம் மனசாட்சி இருக்கிறதா..?

சாதி வெறியர்களை உலக நாடுகளின் முன்பு உங்களால் அம்பலப் படுத்த முடியுமா..?

நன்றி:-
http://www.piraththiyaal.com/2012/11/blog-post_2433.html

தொடர்புடைய பதிவு: -காதல் திருமணம் : உயர்சாதி வெறியர்களின் கொலைத் தாண்டவம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பால் தாக்கரே – தண்டிக்கப்படாத பயங்கரவாதியின் மரணம்

பால் தாக்கரே - தண்டிக்கப்படாத பயங்கரவாதியின் மரணம்

Comments 6

  1. ஓணான் says:
    13 years ago

    உங்களுக்குதெரியுமா அநுராதபுர படுகொலை, உங்களுக்குதெரியுமா கந்தன்கருணை படுகொலை, உங்களுக்குதெரியுமா மட்டகளப்பு மசூதி படுகொலை, உங்களுக்குதெரியுமா சிங்கள கிராமத்தில் குழந்தைகள்,பெரியார்கள் படுகொலை,உங்களுக்குதேரியுமா…….?

    • thamizhan says:
      13 years ago

      ஓணானுக்குத்  தெரியுமோ  ” குருடன் , யானை  பார்த்த கதை ” :).  எங்களுக்கும்  நிநிநிறைறைறைய்ய்ய்ய்ய்ய் யயயய படுகொலை தெரியுமிங்கோ.83 ஜூலைப் படுகொலை குமுதினி படகு படுகொலை  நவாலிதேவாலயப் படிகொலை, மடு தேவாலையப் படுகொலை,நாகர்கோவில் பள்ளிக்கூடப் படுகொலை, மணலாறுப் படுகொலை, சத்துருக் கொண்டான் படுகொலை, கொக்கட்டிச் சோலை படுகொலை, இன்னும்  னெறைய இருக்க. இது போதும் உமக்கு.

  2. pulen says:
    13 years ago

    கட்டுரையாளர் அப்பாவி என்பது மட்டும் தெரிகிறது.ஈழத்தில் இதே வேலைகளை செய்தவர்கள் தான் சிங்கலவரகளிடம் ” உரிமை ” கேட்டு போராடுகிறார்கள்.இந்த ஜென்மத்தில் இவர்களது கோரிக்கை நிறைவேறாது என்பது மட்டும் தெரியும்.

  3. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Now Sri Lanka Police is functioning as national force i the North and East.

  4. pidungi says:
    13 years ago

    பள்ளன்,பறையன்,பண்டாரம்
    குறவன்,தோட்டி,தொம்பை, பார்ப்பான்
    அருந்ததியர் அல்லது அரவாணிகள்
    தேவன்,பிள்ளை,வன்னியர்,
    வண்ணான்,செட்டி,வெள்ளாளன்,கொல்லன்,தச்சன்
    அம்பட்டன்
    வெட்டியான்,நாடான், நளவன்,திமிலன்
    கரையான், முக்கியன், கோவியன், சாண்டான், கள்ளன்
    என்று வினாடிக்கொரு,ஆளுக்கொரு சாதிகள் பகுத்துத் தானே அழிந்து தலைசாய்கிற
    தமிழனுக்கு சாதிக்கொரு தலைவன் வந்தால் பிரச்சனை சரியாய்ப் போய்விடுமா? இத்தனை சாதிப்பகுப்பில் தலித் என்று எந்தப்பிரிவை அழைப்பது ?? ///ஈழ விடுதலையைப் பேசி தலித்துகளை அடிமைப் படுத்துபவர்கள். சமுக நீதிபேசி சேரிகளை கொளுத்துபவர்கள். உலகத்தின் முன் தமிழ் முகத்தைக் காட்டி தலித்துகளிடம் கோர முகத்தை காட்டுபர்கள். இவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பீர்களா?// என்கின்ற கேள்வி நியாயமானதுதான் ஆனாலும் தலித் என்கின்ற ஒரே கொடியினுள் தாழ்த்தப்பட்ட மக்களே திரளாமல் பலவகை சாதிபிரித்து நான் பெரிது நீ பெரிது என்கின்றீர்கள் உங்களால் முடியாதா? காட்டையழிக்கும்கரம் உமது இந்த நாட்டையழிக்க முடியாதா?

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Dr. Jayampathy Wickremaratne did talk about Csate Buisiness in 1978. Al Karaiyars will always be proud of that guy from VVT..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In