பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
மொஹான் பீரிஸிற்கு எதிராக அடிப்படையற்ற சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவை பாரதூரமான குற்றச் செயல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொஹான் பீரிஸ் சேலான் வங்கியின் தலைவராகவும், அமைச்சரவையின் சட்ட அலோசகராகவும், லங்கா லொஜிஸ்டிக் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், ரக்ன லங்கா பாதுகாப்புச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லங்கா லொஜிஸ்டிக் கோதாபயவின் தனிப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.








