விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார் .
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.








கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர்.
எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.
இப்போ எத்தனை பிரபாகரன்கள:!> பத்மநாதன் (உயிரோடு) அரசு: தொலைக்காடசிக்காக் இன்னொன்று> கருணா அம்மான் முல்லைத்தீவிற்கு போகாமலே! அடையாளம் காட்டிய இன்னொன்று! இன்னும் எத்தனையோ?