Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனும் புலிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும் : இனியொரு

இனியொரு... by இனியொரு...
05/22/2009
in அரசியல்
0 0
13
Home அரசியல்

genocideஉலகின் வரலாறு காணாத மனிதப்படுகொலை ! 72 மணி நேரத்துள் வானைப் பிளக்கும் மரண ஓலம்!! 50 ஆயிரம் மனித உயிர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதற்காகவே நாகரீகமடைந்த எந்த மனிதனையும் அவமானப்படுத்தும் இந்த இனப்படுகொலையை கண்ணுற்ற ஒரே சாட்சியான நந்திக்கடலின் அலைகளே மிரண்டுபோன சில மணி நேரங்களுக்குள் சிறீ லங்கா தெருக்களில் சிங்கள் அப்பாவிகள் ஆனந்தக் கூத்தாடினர். குருதியுறையும் இந்த மனித அவமானத்தை பணப்பசியோடு கோரமாய்த் தெற்காசியத் தெருக்களில் அலையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கீகாரத்தோடும் பங்களிப்போடும் இலங்கைப் பேரினவாத பாசிச அரசு நடாத்தி முடித்திருக்கிறது. தமிழ்ப் பற்றாளராகத் தன்னை முன்னிறுத்தும் தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி நாட்கள் தமிழ் பேசும் 50 ஆயிரம் தமிழ் அப்பாவிகளின் அவல மரணத்தை நியாயப்படுத்துவதில் முடிவடையப் போகிறது.

முழு உலகமுமே மௌனமாய் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, துடிக்கத்துடிக்க இரவோடிரவாய் கொன்று குவிக்கப்பட்ட நமது குழந்தைகள், முதியோர், தாய்மார் உடல்கள் இன்று சாட்சியின்றி அகற்றப்படுகின்றன. உடல்கள் இரசாயனத் திராவகங்களை ப்யன்படுத்தி இனப்படுகொலைக்கான சான்றுகளே இல்லாமல் உருக்கப்படுகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சுதந்திரமான எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. சாட்சிகளும் சான்றுகளும் இன்றி அழிக்கப்படுவதை மூடி மறைக்க இலங்கை அரசும், தன்னைப் பற்றி வெளியாகக் கூடிய தகவல்களை இந்திய அரசும் பயன்படுத்தும் ஆயுதம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்ப்பிள்ளை பிரபாகரனின் மரணம்.

பிரபாகரன் இறந்து போனாரா அல்லது உயிருடன் உள்ளாரா என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பொறுத்திருக்கத் தயார். ஆனால், ஐம்பாதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்துவிட்டு, தெருக்களில் சுதந்திரமாக உலாவும் மனித வேட்டைக் காரர்களை ஐந்து நிமிடமும் நாகரீக மனிதர்களுக்கு மத்தியில் உலாவ நியாயமாகச் சிந்திக்கும் எந்த மனிதனும் அனுமதிக்கமாட்டான்.

இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி மக்கள் மத்தியில் உலாவ விடுதல் என்பது மனித் குலத்திற்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம் மட்டுமல்ல, இவர்கள் இதே அங்கீகாரத்தோடு இன்னும் இன்னும் ஆயிரக்கணக்கில் கொடிய மனிதக் கொலைகளை அரங்கேற்றுவர் என்பது மேலும் மேலும் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று யுத்தம் நடைபெற்ற போது இடம்பெயர்க்கப்பட்ட அப்பாவி மக்களின் முகாம்களில் சிறுவர்களைக் கடத்திக் கொலைசெய்யும் உதவி இராணுவக் குழுக்கள் பற்றி அவசர அறிவிப்பொன்றை The Coalition to Stop the Use of Child Soldiers (CSUCS) விடுத்திருக்கிறது.

வழமை போல நடந்த படுகொலையை கண்டும் காணாதிருந்த ஐக்கிய நாடுகள் சபை விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறது. விசாரணை முடிபில் அங்கெல்லாம் குழந்தைகளே இல்லை என்ற நகைப்புக்கிடமான முடிபுகள் கூட வெளியாகலாம்.

ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று அடையாளமின்றி, சாட்சியின்றி அழித்துக் கொண்டிருக்கும் மகிந்த அரசு தண்டிக்கப்படாவிட்டால், உலகெங்கும்முள்ள மகிந்த போன்ற சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமுமின்றி இலங்கையில் நடந்தது போன்ற மனிதப் படுகொலைகளை நிறைவேற்றுவர்.

இந்த சூழலில் இப்படுகொலைகளைச் சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்வதும், ராஜபக்ஷ குடும்பம் உட்பட அனைத்து யுத்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய சூழலை சர்வதேசத்திற்கு ஏற்படுத்துவதும் அவசரமாகச் செயலாற்ற வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்களாகும்.

இது மொத்த மனிதகுலத்திற்கும் நாம் செய்யும் சேவையாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய சாட்சிகள் படுகொலையிலிருந்து உயிர் தப்பியவர்களாகும்.

இதுவரை இறுதிப் படுகொலை நாட்களின் போது உயிர் தப்பியிருக்கக் கூடிய யாரையும் கொலையாளிகள் விட்டுவைக்கவில்லை.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஏனைய தலை மட்ட உறுப்பினர்களும் இன்னமும் உயிருடன் இருப்பதாக புலிகளின் ஆதரவளர்களும் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களும் கருத்து வெளியிடுகின்றனர்.

இது உண்மையானால், பிரபாகரன் தான் இருப்பதைத் ஆதாரபூர்வமாகத் மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் இதனூடாக ஐம்பதாயிரம் மக்களின் படுகொலைக்குச் சாட்சியாவதுடன், அவர்களின் உடல்கள் உருக்கப்பட்டு படுகொலைக்கான அடையாளம் தெரியாமல் சிதைக்கப்படுவது உலகுக்குத் தெரியப்படுத்தப்படும்.

இந்திய, சீன,ஐரோப்பிய அரசுகளுக்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு ஒவ்வொரு தமிழ் மனிதனும் அழிந்து போவது தவிர்க்கப்பட வேண்டும். உயிருடன் இருந்தும் வெளிவராமல் இவர் தாமதித்தால் இலங்கை அரசு தனது சர்வதேச நாசகாரக் கூட்டாளிகளுன் இணைந்து அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு, தனது இனப்படுகொலையை வேறுவடிவங்களில் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

தவிர புலிகள், விடுதலை இயக்கம் என்ற நிலைக்கும் அப்பால் பாசிச அமைப்பு என்ற நிலைக்கு வளர்ந்து விட்டதை அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்குச் சக்திகளும் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வாறான தவறுகள் தான் நியாயமான ஒரு போராட்டத்தை சரணடைவிலும் தோல்வியிலும் முடித்து வைத்திருக்கிறது.

பிரபாகரன் வெளிவந்து தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்வதனூடாகவும் திருத்திக் கொள்வதனூடாகவும் இலங்கை அரச பாசிசத்திற்கெதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் உளவியல் வலிமையைக் வழங்க முடியும். இவற்றினூடாக மனிதப்படுகொலைகள் தற்காலிகமாகவேனும் நிறுத்தப்படும். ஆக, பிரபாகரன் உயிரோடிருந்தால், அவசரமக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு படுகொலைகளையும் கொலையாளிகளையும் அம்பலப்படுத்தும் வரலாற்று கடமையைச் செய்வதனூடாக தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்குப் புதிய பரிணாமத்தைக்கூட வழங்முடியும்.

மறு புறத்தில் பிரபாகரன் உயிரோடில்லாதிருந்தால் புலிகளின் எஞ்சியிருக்கும் பகுதியினரும் தலைமை அல்லது முடிவெடுகும் மட்டத்திலுள்ளோரும், பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்துவதனூடாக இது தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சிறீலங்கா அரசின் இனப்படுகொலையையும் யுத்தக் குற்றத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். புலிகளின் கடந்த காலத்தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, புலிகளின் ஆதரவாளர்கள் புதிய போராட்டத்திற்கு பரந்துபட்ட ஜனநாயக சக்திகளோடு இணைந்து தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற மாபெரும் பேரணிகள் புலிகளைக் காப்பாற்றவன்றி மக்களைக் காப்பாற்ற, புலிகளின் கொடிகளும் கோசங்களுமின்றி நடாத்தப்பட்டிருந்தால், புலிகளின் தவறுகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களின் தவறு என்ற அபிப்பிராயம் ஏற்பட்டிராது. இன்று தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திலிருந்து விலகி நிற்கும் ஆயிரக்கணக்கான மேற்குலக ஜனநாயக வாதிகள் எம்மோடு இணைந்து எமக்காகக் குரலெழுப்பியிருப்பர். ஈராக்கிய ஆக்கிரமிபின் போது அமரிக்காவிற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய் பிரித்தானிய பிளேயரின் அரசையே அதிரவைத்த யாருமே புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டே நின்றனர்.

பிரபாகரன் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைபதும் அதனை மேலும் வேறு வடிவங்களில் தொடர்வதும் என்பது இலங்கை அரசின் தந்திரோபாய வழிமுறை என்பதைப் புரிந்துகொண்டு, புதிய போராட்ட வழிமுறைகளை ஆராய்வதும் மக்களின் உடனடி மட்டும் மற்றும் நீண்ட காலத் தேவைகளை முன்நிறுத்தித் திட்டமிடலுமே அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும்.

இன்று மேற்கு நாடுகள் இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் முதலைக்கணீர் வடிக்கின்றன. இவையெல்லாம் மக்கள் மீதுள்ள பற்றினால் அல்ல. மனிதாபிமானமும் மக்கள் பற்றும் இருந்திருந்தால், நடாத்தி முடிக்கப்பட்ட மக்கள் படுகொலைகளைத் இந்த நாடுகள் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தெற்காசியாவில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ளவே மேற்கு நாடுகள் இலங்கை அரசை மிரட்டுகின்றன. தாம் விரும்பியதை இந்நாடுகள் பெற்றுறுக் கொள்ளுமாயின் இலங்கை அரசை ஜனநாயக அரசாகயும் பயங்கர வாதத்திற்கெதிரான கதாநாயர்களாக ராஜபக்ஷ குடும்பத்தை மாற்றவும் இந்த நாடுகள் தயாராகவே இருக்கும். ஆக, மக்கள் மீதான நம்பிக்கையும், மக்களை அதிகாரத்திற்கெதிராக அமைப்பாக்கலும் உலக மக்களை அநீதிக்கெதிரான போராட்டத்தில் ஒருங்கிணைப்பதுமே போராட்டங்களின் வெற்றிக்கு வழிசமைக்கும்.

இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து எவ்வாறு இனப்படுகொலையை நடாத்தி முடித்திருக்கிறது என்றும், ஒரு காலத்தில் சோசலிசக் கட்டமைபில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சீனா எவ்வாறு இனப்படுகொலைக்கு கொடிய ஆயுதங்களை வழங்கியும், இராஜதந்திர உதவிகளை வழங்கியும் ஆதரித்திருக்கிறது என்றும், உலகின் ஒரு மூலை இரத்தத்தால் குளிப்பாட்டப்படும் போது சில அறிக்கைகளோடு மௌனமாய் இருந்த மேற்குலகின் ஜனநாயகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் பச்சைத் துரோகத்தையும் நாம் கண்முன்னால் கண்ட சந்ததியைச் சார்ந்தவர்கள். இவர்களெல்லாம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் மக்கள்மீது மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது தான். இன்றைய இந்தப் புறச் சூழலைப் புரிந்துகொண்டு அரசிற்கெதிரான போராட்டத்தில் கடந்த காலத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட்ட புலி ஆதரவாளர்களும் ஏனைய ஜனநாயக முற்போக்கு சக்திகளும் புதிய பாதைக்குள் அடியெடுத்து வைப்போம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அகதி முகாம்களில் அரச ஆதரவுக் ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்.

Comments 13

  1. றஞ்சினி says:
    17 years ago

    அநியாயமாக அழிக்கப்பட்ட 50ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்க்ளின் உயிரை எடுத்த ..அகதியாக்கிய ராஜபக்ஷ குடும்பம் ,பொன்சேகா மற்ரும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்ணிட்டப்பட வேண்டும் ..எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அனுமதிக்கப்படாமல் சிலமாதங்கலில் எங்கும் நடக்காத படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் ..

    // பிரபாகரன் வெளிவந்து தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்வதனூடாகவும் திருத்திக் கொள்வதனூடாகவும் இலங்கை அரச பாசிசத்திற்கெதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் உளவியல் வலிமையைக் வழங்க முடியும். இவற்றினூடாக மனிதப்படுகொலைகள் தற்காலிகமாகவேனும் நிறுத்தப்படும். ஆக, பிரபாகரன் உயிரோடிருந்தால், அவசரமக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு படுகொலைகளையும் கொலையாளிகளையும் அம்பலப்படுத்தும் வரலாற்று கடமையைச் செய்வதனூடாக தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்குப் புதிய பரிணாமத்தைக்கூட வழங்முடியும்.

    மறு புறத்தில் பிரபாகரன் உயிரோடில்லாதிருந்தால் புலிகளின் எஞ்சியிருக்கும் பகுதியினரும் தலைமை அல்லது முடிவெடுகும் மட்டத்திலுள்ளோரும், பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்துவதனூடாக இது தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சிறீலங்கா அரசின் இனப்படுகொலையையும் யுத்தக் குற்றத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். புலிகளின் கடந்த காலத்தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, புலிகளின் ஆதரவாளர்கள் புதிய போராட்டத்திற்கு பரந்துபட்ட ஜனநாயக சக்திகளோடு இணைந்து தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.//

    உண்மை …
    பகமைகளை மறந்து நாமும் புலிகளும் எல்லோரும் செய்ய வேண்டியது ..

  2. mani says:
    17 years ago

    பிரபாகரனும் குழுவினரும் எப்படி அழிக்கப்பட்டனர்?

    எல்லாருக்கும் தெரிந்தபடி புலிகள் இயக்கத்திற்கு பில்லியன் கணக்கில் உலகம் பூராயும் சொத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்த விடயம். 20 வருடங்களாக புலம் பெயர் நாடுகளில் மக்களிடம் சேர்த்த பணம் மட்டுமே 2 பில்லியன் ட்லார்கள். இதில் ஒரு பகுதி நோர்வே வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதை விட, உலகம் பூராவும் பல வியாபாரக் கப்பல்கள், எண்ணைக் குதங்கள், வீடமைப்புக் கம்பனிகள், ஏக்கர்கணக்கில் பண்ணைகள், பெற்றோல் நிலையங்கள் என்று உலக பணக்காரன் ஒருவரை விட அதிகமாகவே பணம் இருந்தது. இந்தப்பணத்திற்குப் பொறுப்பாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர் கே.பீ என்று அழைக்கப்படும் கே.பத்மனாதன். இவர் இன்ரர்போல் உட்பட பல உலக உளவு அமைப்பு அமைப்புக்களால் தேடப்பட்டவர் என்பதால் இவர் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓட முடியாது என்பதே பிரபாகரனின் கணிப்பு.

    கே.பி என்பவர் செப்டெம்பர் 2007 இல் தாலாந்து அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே தாய்லந்து அரசு இதை மறுக்க இலங்கை இந்திய அரசுகளும் இதைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டன.
    ஆனால் நடந்ததோ வேற். இந்திய உளவு அமைப்பன “றோ” இவரை தாய்லாந்து அரசோடு தொடர்புகொண்டு விடுதலை செய்தது. இந்தக் காலப்பகுதியில் தான் நீண்டகாலமாக இழுபறியிலிருந்த இந்தியா-தாய்லாந்து எப்.ரீ.ஏ வர்த்தக உடன்பாடும் நிறைவேறியது. இந்த வர்த்தக உடன்பாட்டில் கே.பீ யும் இணைத்துக் கொள்ளப்பட்டார். கே.பீ யின் பொறுப்பிலிருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரார்களான டாடா, மற்றும் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்புகளை விட அதிகமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ரீ.எஸ். குமரன் என்ற பெயரி அறியப்பட இந்த செல்வராஜா பத்மனாதன், இதன் பின்னர் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட வியாபார ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கடவுச்சிட்டுடன் சட்டரீதியானவராக்கப்பட்டார்.
    எப்பிரல் 2008 இல் நீண்ட காலமாகப் பேசப்பட்ட சிறீலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்குதல் சம்பந்தமான பேச்சுவார்த்தையை பசில் ராஜபக்ஷ ஜப்ப்பானிய ரெலிக்கொம் ஆன என்.ரீ.ரீ இலிருந்து மலேசியத் தமிழரும் மில்லியன்களுக்கு அதிபதியும் புலிகளோடு தொடர்புடையவருமான ஆனந்த கிர்ஷ்ணனுக்கு விற்பது தொடர்பாக கிருஷ்ணனுடனும் கே.பி உடனும் சிங்கப்பூரி பேசினர். கிசுஷ்ணன் 35% பங்குகளை வாங்கிவிட்டார். இது கே.பீ இற்கு கிருஷ்ணன் ஊடாக ராஜபக்ஷ புலிகளைக் காட்டிக்கொடுக்க வழங்கிய லஞ்சம். இது தவிர இலங்கை சம்பத் வங்கியும் இதே வாறு தமிழர் ஒருவருக்குப் பங்கு கொடுத்தது. கே.பீ யும் பசிலும் சிங்கப்பூரில் சந்தித்த போதே இவையெல்லாம் நடந்தது.

    தயானிதி மாறனிடமும் கே.பி இன் பணம் பல மில்லியன்கள் இருப்பதால் தான் அவர்கள் இம்முறை இலங்கை அரசை ஆதரித்தார்கள்.

    எந்த நிபந்தனையும் இன்றி பிரபாகரன் ஒருவரை நம்பினார் என்றால் அது கே.பி மட்டும் தான். பிரபாகரனின் திருமணப் படம் மட்டுமல்ல எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் இவர் பக்கத்தில் நிற்பார்.

    கிளிநொச்சியில் போர் தொடங்க முன்னர், கே.பீ பிரபாகரனிடம் ஏவுகணைகள் அனுப்புவதாகக் கூறி ஒரு கப்பலை அனுப்பியிருந்தார் இது தான் 2009 ஜனவரியில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டது. பிறகு கே.பி போர் உச்சமடையும் வரை தான் ஏவுகணை அனுபுவதாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்து முள்ளிவாய்க்கால் வரை தொலை பேசியிலேயே நகர்த்திச் சென்றார். ஊடகங்களுக்கு அமரிக்காவோடும் ஐக்கிய நாடுகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கண்துடைப்புக்காக அறிக்கை விட்டார்.
    பின்னர் நிலமை கை நழுவிப்போய் விட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய வழி செய்து கொடுப்பதாகயும் கடைசி நேரத்தில் கூறி வந்தார். இதையும் பதுங்கியிருந்த பிரபாகரன் குழு நம்பியது.

    கடைசியில் 2000 பேருடன் இருந்த அனைவரையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வந்து இலங்கை ராணுவத்துடன் சரணடையக் கூறினார் கே.பி. இதை நம்பிய புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த மறுகணமே. புலி உறுப்பினர்கள் கொல்லப்பட அதன் தலைமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இதைக்கேட்ட மகிந்த நாடுதிரும்பினார். கே.பீ உடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தப்படி அனைத்துத் தலைமைகளையும் கொன்றுவிட வேண்டும் என்பதையே இந்திய அரசு இலங்கைக்கு வலியுறுத்தியது. அப்போதான் கே.பீ இன் பணத்திற்குச் சாட்சி இராது. இதனால் இந்தியா கூறிய படி பிரபாகரன், குடும்பம், ஏனையோர் கொல்லப்பட்டனர். இதைப் புலிகளின் ஆதர்வாளர்கள் அறிவிக்க வேண்டும். கே.பீ இடம் முடங்கிக் கிடக்கும் பணத்தின் ஒரு பகுதி வெளி நாட்டு தமிழர்களிற்கு உரிமையானது.
    இனியொரு நண்பர்கள் எழுதி இருப்பது போல 50 மக்கள் கொல்லப்பட்டதை வழ்க்குத் தாக்குதல் செய்யவும் அகதிகளுக்கும் இப்பணம் பாவிக்கப்பட வேண்டும்.

    புலிகளின் மிஞ்சியிருக்கும் தலைமையோடு உடன்பாட்டிற்கு வந்துள்ள கே.பீ பிரபாகரன் இருப்பதாக ஒரு குறிப்பிட்ட காலம் பிரச்சாரம் செய்தால், தன்னிடம் இருக்கும் மில்லியன் களைப்பற்றி யாருமே பேச மாட்டார்கள் என்று நம்புகிறார். இதனால் தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. செத்த பிறகு கூட அஞ்சலி செலுத்த வக்கற்ற நண்பர்தான் இவர்.
    ஆகவே இலங்கை அரசை மட்டுமல்ல இது போன்றவர்களையும் அம்பலப்படுத்துவொம்.

    குறிப்பு: பாதுகாப்புக் காரணங்களுக்காக் நான் எனது பெயரை குறிப்பிடவில்லை. ஆனல் இன்னும் என்னிடம் விபரங்கள் உள்ளன …. தொடர்ந்து எழுதுவேன்..

  3. மாயா says:
    17 years ago

    மணி , உங்கள் கருத்து போலவே பிரபாகரனது சாவுவுக்குப் பின் கருத்துகள் பலரிடம் இருந்து வந்தன. உங்கள் கட்டுரை வடிவிலான கருத்து திறமாக இருக்கிறது. தொடருங்கள்…… பலரது விழிகள் திறக்க இப்படியான பகிர்வுகள் அவசியமானது.

  4. mani says:
    17 years ago

    மாயா,
    நான் அரச ஆதரவாளன் இல்லை. முன்னைய போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்டு இனியொரு போராட்டம் தேவை என்று நினைக்கிறேன்.
    மறுபடி, கருணாநிதியின் மருமோன் தயாநிதி மாறன் எப்படி கே.பீ உடன் டீல் போட்டார் என்று அதனால் கருணாநிதி எப்படி பல்டி அடித்தார் என்றும் எழுவேன்.

  5. selvam says:
    17 years ago

    இனி ஒரு தோழர்கள் சொல்வது போல பிரபாகரன் பற்றின விவாதத்தை விட முக்கியமானது, அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் புலிகள் போல எனி ஒரு இயக்கம் வரமல் சரியான இயக்கத்தை வளர்ப்பதும் தான். ஆனல் பிரபாகரன் இறந்து விட்டது உண்மை போல் தெரிந்தாலும், அரசாங்கம் காட்ட்டிய படங்கள் அவரது இல்லை. ஏனென்றால் 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரபாகரன் மீசை வைத்துக் கொள்ளவே இல்லை. ஏனென்ற விசயம் கருணா உட்பட பல பேருக்குத் தெரியும். ஏனென்றால் பிரபாகரனின் மீசை நரைத்து விட்டது என்பதே. வன்னியில் மகா நாடு கூட்டி சிறிதுநாட்களில் நரைத்த மீசையுடன் ஒரு படம் வந்ததும் பலருக்குத் தெரியும். ஆனால் ரூபவாகினி படத்தில் மீசை சுத்த கறுப்பாக உள்ளது.

  6. mathu says:
    17 years ago

    இங்கிருக்கும் அரச ஆதரவு கழைக்கூத்தாடிகள் இன, மொழி மற்றும் பண்பாட்டு உணர்வின்றி மக்கட்பண்பு சிறிதுமின்றி தன்னலத்திற்காக சோரம் போகின்றனர் என்பதே வெட்கக்கேடு.

  7. மாயா says:
    17 years ago

    // ஏனென்றால் 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரபாகரன் மீசை வைத்துக் கொள்ளவே இல்லை. ஏனென்ற விசயம் கருணா உட்பட பல பேருக்குத் தெரியும். ஏனென்றால் பிரபாகரனின் மீசை நரைத்து விட்டது என்பதே. வன்னியில் மகா நாடு கூட்டி சிறிதுநாட்களில் நரைத்த மீசையுடன் ஒரு படம் வந்ததும் பலருக்குத் தெரியும். ஆனால் ரூபவாகினி படத்தில் மீசை சுத்த கறுப்பாக உள்ளது. //

    மீசை வளராதோ இல்லை வளர்ந்தால் டை அடிக்க முடியாதோ? அவரது முடி எப்பவோ நரைத்து விட்டது. அவர் தொடர்ந்து டை அடித்து வந்தார். அதையே மீசைக்குமம் அடித்துள்ளார். தாடியில் நரையுண்டு…… பார்த்தீர்களா?

  8. amuthabharathi says:
    17 years ago

    இ ந்தியவில் உல்ல தலைவர்கல்லஒருவர்பலிவாஙும்செயலால்பல்லாஇரம் இலஙைத்தமிலர்கல் பலி
    உலகததில் இந்தியாவிர்கு தலைகுனிவு
    முத்தமில் அரிஙர் உலகதமிலர்தலைவர் என்ரு சொல்லிவால்ந்த தமிலருக்கு தன்மனசாட்ஷி
    என்ருமெ உருத்தும் இதுதான் அவருக்கு தன்டனை

    தமிலன்

  9. mithila says:
    17 years ago

    good explanation.,i want more information about our thalaivar

  10. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    17 years ago

    தலைவர் பிரபாகரன் உயிரொடு இருக்கிராரா இல்லையா என்பது சர்ஷைக்குரிய விசயமாக விவாதம் செய்வது இர்ருப்பினும் 50 ஆயிரம் தமிழர்கள் இ றந்தது எப்படி பொறுதுக்கொள்ள் முடிகிற்து? ஆகவே விவதிப்பதைநிறுத்திவிட்டு ஆக்கபபோர்வமன விசயஙகள்ள் உலகின் கவனததை திருப்பவென்டும்

  11. mukilvanann says:
    17 years ago

    we all know kp was the god father of mullivaikal and death of pirabaharan family.there was the artical on paraparapu weekly was published two years ago but nobody was noticed.its good paper for investicative journalism.i also wanted to say that murasoli maran family is 9th richest family south east asia they dont need pegging hole they may invest in srilanka ,they have every rights to do so.so what is your problem ? is that easy to blame karunanithi family all the time and accused them?

  12. sigaram says:
    17 years ago

    எவ்வளவு எளிதாக ஒரு தனி மனிதனின் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றவர்களால் பொறுப்புக்களிலிருந்து நழுவ இயலுமாகிறது.

    கே.பி. சொன்னால் கேட்பவர்க்கு மதி எங்கே?
    இந்த அழிவுக்கான காரணங்கள் தீர விசாரிக்கப்பட வேண்டியன. தனி மனிதர்கட்கும் அப்பால் தேடல் விரிய வேண்டும்.

    முதலில் தமிழ்த் தேசியத்தின் சிந்தனையும் செயற்பாடும் மீள விசாரிக்கப்பட வேண்டும்.

    அரசு செய்தது கொலை என்றால் போராட்டத்தின் பேரால் நடந்த அழிவுகள் (இறுதி மாதங்களின் தவறான முடிவுகள்) ?

  13. mukilvannan says:
    17 years ago

    SIGARAM IS VERY RESPONSIBLE CITIZEN I CAN THINK OF.HIS IDEOLY IS CONCERNING TAMIL PEOPLE I WOULD RESPECT HIM.HE IS NOT LIKE MANY OF US.IGNORANTS.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...