Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனின் தாயார் அழுதார் ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை இலங்கை சென்று திரும்பிய பெண் சட்டத்தரணி

இனியொரு... by இனியொரு...
01/24/2011
in இன்றைய செய்திகள்
0 0
39
Home இன்றைய செய்திகள்

சென்னை: உணவு,மருத்துவவசதி எதுவுமில்லாமல் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்துத் திரும்பிய சென்னை பெண் சட்டத்தரணி கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பிறகு அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை மேல்நீதிமன்ற பெண் சட்டத்தரணி அங்கயற்கண்ணி,நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பினர். சென் னை திரும்பிய அவர்கள் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். பெண் சட்டத் தரணி அங்கயற்கண்ணி கூறியதாவது;

கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்துவரும் எண்ணத்தில்தான்

சென்றோம்.

அங்கு இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் முழுமையான அனுமதி பெற்று 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை வவுனியா,மட்டக்களப்பு கடல்கோளால் பாதிக்கப்பட்ட இடங்கள்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,நவாலி, வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ள தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.

தமிழர்கள் உதவி

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதியெதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு,தண்ணீர்,மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை,கால்கள் இழந்த குழந்தைகளுக்குச் சென்னையில் சிகிச்சையளிக்க முடியுமா? எனக் கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும் குழந்தைகளும் கை,கால்கள் இல்லாத நிலையில் கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனம் அழிவைச் சந்தித்துள்ளது. முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் இராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.

பிரபாகரனின் தாயார்

தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. இராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததைப் பார்த்தோம்.

அவரது தாயார் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.

வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18 ஆம் திகதி வந்தபோது அங்குள்ள சோதனைச் சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர் உளவுப் பிரிவு பொலிஸார் எங்களைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். அதன் பின்னர் நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம்.

தினத்தந்தி

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ப.‌சித‌ம்பர‌‌ம் ‌‌‌வீ‌ட்டை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ‌மீனவ‌ப் பெ‌ண்க‌ள் கைது

Comments 39

  1. veeran says:
    15 years ago

    பிரபாகரனின் தாயார் அழுதார் இவரது மகனால் எத்தனை பேர் அளூதனர், அமிர்தலிஙம் முதல் ஆனந்த்த சங்கரி வரை, இந்த் அம்மாநல்லா அலட்டும்

    • Soorya says:
      15 years ago

      கோழையின் எழுத்து, பெயரில்தான் வீரம். என்னே வெட்கம், மனிதாபிமானத்தை அடகு வைப்பது.

      • chandran.raja says:
        15 years ago

        திரு.சூரியா வீரான காண்பிக்கப் பட்டவன் கோளையாகவும் கோளையாக காண்பிக்கப்பட்டவன் வீரனாகவும் பிரபலியப் படுத்தியதையே நாம் கண்டுவந்திருக்கிறோம. நீங்கள் இங்கு இனியொரு வாசகர்களுக்கு பல கருத்துக்களை சொல்லி வந்திருக்கிறீர்கள். வீரம் கோளை என்பதைஅளப்பதற்கு தாங்கள் வைத்திருக்கிற அளவுகோலை வாசகர்களுக்கு அறிமுக படுத்தும் படி கேட்டுக்கொள்ளுகிறேன். சிரமம் பாராது இதுவும் வாசகர்களின் கேள்வி தான் கருத்துத் தான் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதற்காண விளக்கத்தை தயவு செய்து தரவும். கருத்தாளர் என்பதின் முறையில் இது உங்கள் கடமையாகும்.

        • soorya says:
          15 years ago

          திரு சந்திரன் இராசா அவர்களே, இங்கு நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதவில்லை. தவிர்க்கமுடியாததால் சில தமிழ் சொற்கள் பாவிக்க வேண்டியுள்ளது. மன்னிக்கவும்.
          நீங்கள் தேடித் தேடி எதிர்கருத்து எழுதியதைப் பார்த்தால் ஒன்றில் உங்களுக்கு வேறு வேலையே இல்லை அல்லது உங்கள் எழுத்துகளுக்கு ஒருவராலும் எதிர்கருத்து முறையாக எழுதமுடியாது என்ற பெருமையாக இருக்கலாம். உங்கள் புலுடா மார்ச்சிச கருத்துக்களுக்கும் வியாகியானங்களுக்கும் முன்னுக்குப்பின் அர்த்தமற்ற விவாதங்களுக்கும் யார் மறு கருத்து எழுதி தம் பொன்னான நேரத்தை வீணாக்குவார்?
          வீரன் கோழை என்பதற்கு வித்தியாசம் தெரியாத ஆள் நீங்கள் என்பது எனக்குத் தெரியும். மன்னிக்கவும், முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் என் எதிர் கருத்தைக் கூறுவதில்லை. அது கற்பாறை நிலத்தில் விழுந்த நெல்மணிகளுக்கு ஒப்பானது. எழுதி உங்களை கோவமோ கொதிப்போ அடைய வைப்பதும் எனது நோக்கமல்ல.

          வீரன் கோழை என்றால் என்ன என்று எனது பெற்றோர் எனக்கு சிறு வயதிலே சொல்லித்தந்துள்ளார்கள்.

          ஒரு அநியாயத்தைப் பார்த்து மனதிலாவது குமுறிக் கொதிக்காதவன் ஒரு கோழை. அதற்கு அர்த்தம் கற்பிக்க முனைவபன், வக்காலத்து வாங்குபவன், துணைபோபவன் பெரும் கோழை. கோழைகள் பெரும்பாலும் முட்டாள்களாக இருப்பதை நான் பலமுறை கண்டுள்ளேன்.

          உங்கள் பொதுவுடைமையை செயற்படுத்த இராயபக்ச போன்ற சர்வாதிகாரிதான் உங்களுக்கு வேண்டும். உங்கள் புலுடா மார்க்ஸ்சிசத்தினால் கார்ல் மார்க்ஸ்சையே கல்லறையில் புரளப் பண்ணுகிறீர்கள். எழுத வாய்ப்புக் கிடைக்குதென்று அதை துஸ்பிரயோகம் செய்யாதீர்.

    • vanniyan says:
      15 years ago

      வீரன்( 🙂 பெயரில் மாட்டும்தான்) பண்டாரனாயக்கவாலும், ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவாலும்,லலித அத் துலத்முதலியாலும், கொப்பைக்கடுவவாலும், ரஜ்சன் விஜெய ரெத்தினவாலும், பிறேமதாசாவாலும், சந்திரிக்காவாலும்,மகிந்தவாலும், எட்டப்பர்களாலும், துரோகிகளாலும் அழுத தமிழ்மக்களைப் பற்றி எந்தவித இரக்கமோ, பாசமோ , யாபகமோ வரவில்லை, தலைவரின் அம்மா அழுதவுடன் சந்தோசம் வருகிறதோ.

      • veeran says:
        15 years ago

        They were sinhalese and killed tamils, this ladies son being a tamil caused the death of tamils and tamil intelectuals, let this lady cry for those killed by her son

    • THAMILMARAN says:
      15 years ago

      i do not like to hear you speak in that manner.that manner never brings peace.

  2. Sorrylankan says:
    15 years ago

    Hi Veeran

    : His son’s mistake is not her fault, atleast the lady is talking about the people so please don’t be cruel.

  3. நெருஞ்சி says:
    15 years ago

    அறுவது வருச அழுகை கேட்காதவனுக்கு,”அமிர்தலிஙம் முதல் ஆனந்த்த சங்கரி வரை அலுகையா” கேட்குது வீரா! “இந்த் அம்மாநல்லா அலட்டும்.”நீ வந்து அலட்டு.

  4. suresh says:
    15 years ago

    அந்த வயோதிப தாயாரின் அழுகையை ஏளனம் செய்யும் ஈனப் புத்தி எப்படித்தான் உங்களுக்குள் ஏற்படுகுதோ ………..
    பிரபாகரன் தன் தாயின் கட்டளைப்படியா அமிர்தர் முதல் கொண்டு எல்லோரையும் சுட்டார். தயவு செய்து இது விமர்சனத்துக்கு
    அப்பால் பட்டது என விளங்கிகொள்ளுங்கள். அவர் அரசியல் வாதியோ விடுதலை புலியோ அல்ல -நான் புலி ஆதரவாளன் அல்ல-

    • sacthivel thanikasalam says:
      15 years ago

      உங்கள் கருத்தில் நீங்கள் தெளீவாக இருப்பதற்கு புலி ஆதரவாளராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.யாராகவும் இருக்கலாம்.முதலில் மனிதனாய்.

  5. Virumandi says:
    15 years ago

    அமிர்தலிங்கமும் ஆனந்தசங்கரியும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி வீரன் முதலில் அலசி ஆராயட்டும்.

    • veeran says:
      15 years ago

      யாரையும் கொல்லவில்லை அவர்கல், இந்த் அம்மாவின் மகன் அல்லது மக்க்ன் போல்

  6. Kumar says:
    15 years ago

    பிரபாகரனின் கொள்கையிலோ புலிகளின் நடவடிக்கைகளிலோ நான் பெரிதும் உடன்பாடு கொண்டவனல்ல, ஆனால் நான் தமிழன், அந்தத்தாயின் கண்ணீரில் என் தாயின் கண்ணீரைப்பார்க்கிறேன்,எதையும் இளக்கலாம் மனிதப்பண்பை இளக்கக்கூடாது.

    • Sorrylankan says:
      15 years ago

      Good comment

      எதையும் இளக்கலாம் மனிதப்பண்பை இளக்கக்கூடாது. Veeran please remember this. I know you don’t look Tamil.

      • veeran says:
        15 years ago

        மக்ன் இருந்தால் இன்னும் பல்ரை கொன்ரிரருபாரே என்ரு அந்த அம்மா அலுகிரார் போல்

        • THAMILMARAN says:
          15 years ago

          அவரது அழுகைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் அதற்காக நீங்கள் அலுத்துக் கொள்கிறீர்கள் பாருங்கள் அதுதான் உங்கள் கஸ்ட காலத்தின் கதவு..

        • Soorya says:
          15 years ago

          தாயன்பை அறியா அநாதைக்கு தமிழ் பாடசாலையிலுமா படிக்க இடம் கிடைக்கவில்லை? 

          • chandran.raja says:
            15 years ago

            தாய்க்கு தற்கொலைதாரியாக குண்டை கட்டிவிட்டு மகிழ்ந்த தமிழ்ழீழமே! தாய்யை மதிக்காத காப்பாற்ற முடியாது உனக்கு அவள் பிள்ளைகளைப் பற்றிய கேள்விகளும் ஒரு கேடா? உனது நடிப்பான பாவங்களை முதலில் நிறுத்து அந்த பிள்ளைகள் தானே வளரும். கல்வியும் கற்க்கும் தமிழ்மக்களின் பிற்போக்கு தனத்திற்கு பாடமும் புகட்டும்.

  7. chandran.raja says:
    15 years ago

    தோழமையுடன் சூரியா! தாய் தகப்பனின் வேண்டுதலின் பேரில் தான் நாம் வெளிநாடு புறப்பட்டு ஒன்று அவர்களின் நோக்கம் பிள்ளையின் பாதுகாக்கப் படுவதற்காக இருக்கலாம்.இல்லை பொருள் தேடிதமது வாழ்வை முன்னிலை படுத்தவும் என்பதாக இருக்கலாம். நாமெல்லாம் தாய்யில் சிறந்தது கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை என்பதை தான் கேட்டுவளர்ந்து வந்தோம். இதுவெல்லாம் நாம் வளர்ந்த காலத்தில் மனதிற்கு தென்பையும் பூரிப்பையும் கொடுத்தாலும் நாளாந்தம் மாறி வரும் மனிதஅவலங்கள் அரசியல் போக்குகள் பல சமூகங்களின் கூட்டுவாழ்க்கை உறுதிப்படுத்தினால் மட்டுமே! நாமும் நமது சந்ததியும் வாழமுடியும் என்கிற எதிர்வினையும் ஏற்பட்டுத்தியிருக்கிறது. நாளாந்த அரசியல்வாழ்வுக்கும் அபாயகரமாகவும் மாறியிருக்கிறது. எமதுதமிழ்மன்னர்களின் இலக்கியங்களில் அவன் கட்டளைக்கு அவன் வழங்கும்கூலிக்கு போராடி இறந்தவனை முதுகு குப்பறகிடந்தவனை பிரட்டிஎடுத்து மார்பில் கீறி புதைப்பது எரிப்பதை வழக்கமாக கொண்டார்கள் என்று சொல்லுகிறது. இதுவே வீரத்திற்கு அடையாளம். இதையோ காசிஆனந்தனில் இருந்து கனகலிங்கம் வரை வீரக்கவி பாடி முப்பதுவருடங்களாக யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். பலன்? வீரர்களாக நாம் வெளிநாடுவந்து வாழ்வைத் தேடிக்கொண்டோம். கோளைகளாக ஈழத்தில் அவர்களை சாவதற்காண விதியையும் அமைத்து வைத்தோம். இப்படித் தான் எமது தமிழ்யிலக்கியங்களும் இலக்கியம் படித்த தமிழ்பண்டிதர்களும் எம்மை வழிநடத்திவைத்திருக்கிறார்கள். பலன்? காசியண்ணா இந்தியாவில தஞ்சம். புதுவை இரத்தினதுரையும் முள்ளுக்கம்பிக்குள். இவர்களின் இலக்கியபடிப்புக்கு எமது இனமக்களும் பலியானார்கள். இப்படித்தான் வீரம் கோளை என்பதை இனம் காணவேண்டியுள்ளது.
    வீரம்-கோளை என்பதை எப்படி நீங்கள் இனம்காண்கிறீர்களோ அதே போல தான் மாக்ஸியத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள். கால்மாக்ஸ் என்கிற ஒரு படிப்பாளி மனிதவரலாற்றை ஆய்வுசெய்து தனதுகருத்தை வெளியிட்டார். மனிதகுலம் கடந்துவந்த வரலாற்று பாதையை ஆய்வு செய்து தனது முடிவைவெளியிட்டார். நடத்திமுடிக்கப்பட யுத்தங்கள் போர்கள் மதச்சண்டைகள் இனச்சண்டைகள் நாடுபிடித்தல் போன்றவைகள் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் வரலாறே என்பதை சுருக்கமாக சொல்லியும் முடித்தார். சொல்லி முடித்தததுமல்லாமல் அதற்கு தீர்வையும் முன்வைத்தார். அவர் முடிவாக வைத்த தீர்வுதான் “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”. இதையே மாக்ஸியம் என்று சொல்வார்கள். மாக்ஸ்சும்-அவர் தோழர்ரான எங்கஸ்சும் உலகபாட்டாளி மக்களுக்கு
    ஒரு வேலைதிட்டத்தை தயாரித்தார்கள்.அதுவே கம்யூனிஸ்கட்சி அறிக்கை என்பது. இவர்கள் இத்துடன் செயல்வடிவமும் கொடுத்தார்கள். அதுவே முதாலம்அகிலம் என்பது. இப்படி தான் மாக்ஸியம் உலகத்திற்கு உழைப்பாளிகளுக்கு கலம்கரைவிளக்கமாகிய வரலாறு. வெற்றி தோல்விகளுஊடாகத் தான் இன்று நான்காம்அகிலமாக பிராகாசித்துகொண்டிருக்கிறது. இதை ஸ்டாலின் குழிதோண்டி புதைத்து அதன்புதை மேட்டில் நின்று ஏகாதிபத்தியவாதிகளுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கவே போல்ஷிவேக் புரட்சியின் வெற்றியாளன் மாபெரும் செஞ்சேனையின் ஸ்தாபகன் ஈடுயிணையில்லாதவன் ரொக்ஸியினாலே நான்காம்அகிலம் ஸ்தாபிக்கபட்டது. இதுவே இன்று உலகத்தில் உள்ளபாட்டாளிமக்களின் “உலகத்தொழிலாளர்கட்சி”. இவற்றின் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் அணிவகுப்பவர்களையே மாக்ஸியவாதிகள் என்பார்கள். மற்றைவைகள்-மற்றவர்கள என்பததெல்லாம் உங்கள் வீரம் கோளைத்தனம் போன்று அர்த்தம் கற்பிக்கப் படுதலே. உங்களால் முட்டாளாக கருதப்படுகிற இந்த ச.ரா வும் இந்த பாயப்போகிற பெருவெள்ளத்தில் அடிக்கப் போகிற பேரலையில் ஒரு துளியாக கரைந்துவிட சேர்ந்துவிட ஆசைப்படுகிறேன். அப்போது இனவெறியில்லை மதவெறியில்லை பெருமையில்லை.வெள்ளை கறுப்பு பேதமில்லை. அங்கு உண்மையான உழைப்பு ஆளுமை செய்யும்.அதன் காவலர்களாக தொழிலாளர்கள் இருப்பார்கள். இது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும் சூரியா. முயன்றால்… வானமும் வசப்படும்..

  8. Soorya says:
    15 years ago

    அப்பாடியோவ் இந்த ஆழமான கருதுக்களை வாசித்து விளங்க நான் எத்தனை பேரின் உதவியை நாட வேண்டியிருந்தது. விளங்கியபின் பார்த்தால் இது அரிவரி படிக்கும் பிள்ளையின் பாடம் என்று தெரிந்தது. பெருமை ஒருபோதும் கூடாது இராசா! சுண்டெலி ஒருபோதும் ஆனையாகாது.

    எதற்கோ கருத்தெழுதப்போய் எங்கேயோ போய்விட்டார் இராசா. என்னிடம் இரண்டு கேள்விகள்:
    1.நோயில் வாடும் வயோதிபப் பெண் அழுததைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
    2. ராஜபக்ச ஒரு போர் குற்றவாளியா?
    இதற்கு ஒரு வீரனின் பதிலை எதிர்பார்கிறேன்.

    • chandran.raja says:
      15 years ago

      நோயில் வாடும் ஒருவயோதிப பெண் அழுதது சூரியாவிற்கு எவ்வளவு மனக் கவலை அளிக்கிறது. அப்படியானால் காலம் முழுக்க அழுது தம்கண்முன்னே பறித்தெடுத்து பலிகொடுத்த போது தற்கொலை செய்த தாய்தகப்பன்களை நினைத்தால் சூரியாவுக்கு எவ்வளவு கண்ணீர் வரும்?. இலங்கையில் புதுதாக குளம் கட்டவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன். இப்படி சிந்தித்து அழுவது தான் படித்தயாழ்பாணத் தமிழரின் மரபோ?. அடுத்தது.ராஜயபக்சாவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டியதேவை மேற்குலவல்லரவுசுக்கு கிழக்காசியாவில் தமது பொளாதார ஆதாயங்களை பெறுவதற்கு அரசியல் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள அசியமானது. இதுவரை காலமும் புலத்திற்கு வந்த தமிழ்மக்களை பொய்யான கதைகளை சொல்லி சுகபோகங்களை அனுபவித்தவர்களுக்கும் தேவையானது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கோ இலங்கைவாழ் மக்களுக்கோ இப்படியான அர்த்தமற்ற சுலோகங்கள் பேரழிவைக் கொடுக்குமென்றே கருதுகிறார்கள். அவர்கள் தமிழர்மக்கள் பெயரில் சிலபயங்கரவாத நடவடிக்ககாக மனம் வருந்து கிறார்கள். குறிப்பாக 1996 ஜனவரி 31 ல் மத்தியவங்கி முன்னிலையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலில் 41 வங்கிஊழியர்கள் 91 பொதுமக்கள் இறப்புடன் 1400 க்கும் காயமடைந்திருக்கிறார்கள்.அனைவரும் எந்தவொரு அரசியல்குற்றமும் செய்யாத அப்பாவிகள். ஈழத்துதமிழ் மக்கள் இந்த கசபானசம்பவங்களை திரும்ப திரும்ப அசைபோட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படியான பயங்கரவாத் தன்மைகொண்ட ஒரு இயக்கத்தை அடியொட்ட அழித்துவிட்ட பெருமை மகிந்தா ராஜயபக்சாவையே சாரும். இந்த பயங்கரவாதஇயக்கத்தை அழித்தொழிக்காமல் விட்டிருந்தால் வன்னிமக்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்க முடியாது என்பதை கஷ்ரப்பட்டாவது புரிந்துகொண்டு கருத்துக்களை சொல்ல முன்வாருங்கள்.

      • கிறுக்கன் says:
        15 years ago

        “குறிப்பாக 1996 ஜனவரி 31 ல் மத்தியவங்கி முன்னிலையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலில் 41 வங்கிஊழியர்கள் 91 பொதுமக்கள் இறப்புடன் 1400 க்கும் காயமடைந்திருக்கிறார்கள்.” 

        83 கலவரம் அதுக்கு முன்பான கலவரங்கள் கொக்கட்டிச்சோலை, செம்மணி, நவாலி இன்னும் பல, இவர்கள் அரசியல் குற்றம் செய்தவர்களா? அரசியல் குற்றம் செய்தவர்களை கொல்வது மார்சியத்தின் அடிப்படையோ? உங்கள் கருத்துகளிலையே பக்கச்சார்பு இருக்கும்போது மற்றவர்களை பளிப்பது நகை முரணாய் இல்லை? 
        (இதுக்காக நீங்கள் புலி, பிற இயக்கங்கள் செய்த கொலைகள் எண்டு பட்டியலிட வேண்டியதில்லை)  புலி, பிற இயக்கங்கள் செய்த கொலைகள் ஈழம் தமிழின விடுதலை என்ற அடிப்படையில்… சிங்களம் செய்த கொலைகள் ஒரு இனத்தை அதன் இருப்பை துடைத்து அழிக்க வேண்டும் என்பது இந்த அடிப்படை தெரிந்தும் தெரியததுபோல் நடித்தால் நீங்கள் சொல்லவரும் யதார்த்தமான கருத்துக்களையும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒரு இனத்தையே ஆழும் வர்க்கம் வேரறுத்துக்கொண்டுடிருக்கும் போது என் அண்ணன் எனக்கு தலையில் கொட்டிவிட்டான் தம்பி இடுப்பில் கிள்ளிவிட்டான் எண்டு ௬ப்பாடு போடும் கோதாரிக் ௬ட்டம்.     

  9. Soorya says:
    15 years ago

    அப்பட்டமான சிங்கள இனவெறியனின் கூச்சல்போல் தெரிகிறது. தொடரட்டும் புலுடா மார்க்சிசமும் புண்ணாக்கு மனிதாபிமானமும்! சேலை கட்டி கொலையாளியை முந்தானையில் மறைக்க முயலும் வீரன். சேலை பெண்கள் அணிந்தால் அழகு, அதை ஒரு ஆண் அணிந்தால்? முதுகெலும்ம்பை எங்கே தொலைத்தாய் மானிடனே? சிலர் முதுகெலும்பு இன்றியே பிறக்கிறார்களா? அதனால்தன் இவர்கள் குனிந்து கும்பிடு போட்டு எலும்பு பொறுக்கி வாழ்கிறார்கள்போலும். உன்னால் போராட முடியாவிட்டாலும் நிமிர்ந்து நட, துணிந்து சொல் எது நியாயம் எது அநியாயம் என்று. அதுபோதும் உன்னை நீ மானிடன் என்று அழைக்க இல்லையேல் நீ மிருகத்திலும் கேடு கெட்ட பிறவிதான்.

  10. chandran.raja says:
    15 years ago

    ஏன் அண்ணர் நல்லமாதிரி கதைத்துப் போட்டு இப்படி கோவிக்கிறியள்? யாருக்கும் நீங்கள் தமிழினம் என்று சொல்லிப் போடாதங்கோ. பரிசுகெட்டு போயிடும். “தீதும் நன்றும் பிறர்தர வரா” இதுவும் தமிழ் இலங்கியங்களில் தான் சொல்லியிருக்கிறது? ஏன் வெட்டுகிற குத்துகிற பக்கங்களுக்கு போகிறீர்கள் என்பது தெரியவில்லை சூரியதேவனே! பழக்கதோஷமாக இருக்கலாம். இப்படியானவை ரத்தக்கொழுப்பு ´கூடியவருக்கு ஏற்படடுகிற வியாதிககளில் ஒனறு. அதற்கு இரு ஆலோசணைகளை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். கொஞ்சகாலத்திற்கு கருத்துச்சொல்வதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கவும்.காலையில் எழுந்து இரண்டு மையில் தூரமாவது ஓடவும். இரண்டாவது சாப்பாடுகளில் (விழுங்துவது) மட்டுப்படுத்தவதாலும் இப்படியான வருத்தங்களை குறைத்துக் கொள்ளமுடியும். இதுவொன்றும் பயப்படகூடிய விஷயம் இல்லை. எல்லோருக்கும் வருவது தான்.கூடுதலாக புலிச்சாமிகளுக்கு புலி புண்ணாக்குகளையே கூடுதலாக இந்த நோய் தாக்குகிறது. நான் சொன்ன அறிவுரை கடைப்பிடித்து வந்தீர்களானல் வெகு விரைவில் சகஸநிலைக்கு திரும்பிவிடலாம். எக்காரியம் கொண்டும் சாப்பாட்டில் உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அறவே நிறுத்தினாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கே கூடியபலனைத் தரும். முடிந்தால் காளியம்மாமை நினைத்து விரதம் பிடிக்கவும். காளிகளில் பலவிதகாளிகள் உண்டு சூரியா.நான் சொன்ன காளி பல கைகளோடு வாள் கத்தியோடு தலையை அறுத்து ஒருகையில் வைத்துக் கொண்டு நாக்கைநீட்டிக் கொண்டிருக்குமே அந்த காளி. “ஓல் தா பெஸ்ட்”.

    • suganthan says:
      15 years ago

      தன்னைப்போல் பிறரையும்(சக மனிதனை) நேசி என்பது சான்றோர் வாக்கு. அதனை மனப்பிறழ்வுக்குள்ளானவர்கள் யோசி என்று எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ரொட்சிச மனநோய்க்குள்ளானவர்கள் தீவிரமதவாதிகளை போல மாக்சிச பாலபாடத்தை திரும்பதிரும்ப மந்திர உச்சாடணம் செய்வார்கள். விவாதங்கள் பலமிழக்கின்றபோது தங்களைப்பற்றிய வர்ணணைகளை பிறருடையதாக கதையெழுதுவார்கள். இது அவர்களைப்பற்றிய கழிவிரக்கத்திலிருந்து பிறக்கின்றது. கொலைகாரர்களுக்கு விளக்குப்பிடித்துக்கொண்டே (அறிவெனும்) ஒடுக்குமுறைக்கெதிராக தொழிலாளர்களை ஒன்றுபடுங்கள் என்று பீலா விடுவதும், ச.பு என்று பினாத்துவதும், ஒன்றில் நம்மை யாரும் சட்டை செய்யமாட்டார்கள் என்ற மனவேதனையில் பிறந்த்ததாகவோ, அன்றேல் …….

      • chandran.raja says:
        15 years ago

        இவ்வளவு கதைசொல்லியும் உங்கள் மண்டை திறக்க வில்லை என்றால் கோடாலியை பாவிப்பதில் தப்பேதும் இல்லை.

        • கிறுக்கன் says:
          15 years ago

          இதைத்தான் மற்றவையும் சொல்லுகினம் எவ்வளவத்தை சொல்லியும் இந்த ராசாவுக்கு மண்டை திறக்குதில்லையே… அதுசரி உங்கடை கோடலிமட்டும் தான் அறிவுக்கண்ணை திறகுக்மோ இந்த எக்காளம், ஏளனம்  தான் தமிழனுக்கு உள்ள அடுத்த மனவியாதி. தன் இனத்தானை மதிக்கிறதில்லை ஆனா மற்றவனுக்கு ௬ஜா தூக்கிறது. 

          • chandran.raja says:
            15 years ago

            கிறுக்கனுக்கு இன்று வரை யார்? தனது இனம் என்பது தெரியாது. இந்த கிறுக்கன் தமிழ்மக்களிடையே சாதியால் பிளவுண்டு அடித்தாழ்வாரத்தில் ஒதிக்கிவிட்ட தமிழ்மக்களை தெரியாது. இலங்கைக்கு பெரும் பகுதி வருவாய்யை ஈட்டிக் கொடுக்கிற தமிழ்மக்களை இறுக்கன் தமிழ்மக்களாக ஏற்றுக் கொண்டதில்லை. ஆகமொத்தத்தில் இந்தசிறு தீவில்ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தை தமது அரசியல் சித்துவிளையாட்டால் மற்றைய சமூகத்கதிற்கெதிராக இனவெறியை வளர்த்து விட்ட முதாலித்துவ வக்கீல் தமிழரும் அவர்களினால் வளர்த்து விடப்பட்ட காடையர்கள் கிறிமினலையுமே தெரியும். கிறிமினல் வேலையில் சிறுவயதில் புகழ்பெற்ற மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனையுமே தெரியும். இல்லையேல் 1996 மத்திய வங்கி தற்கொலை குண்டுதாக்குதல் பிழையானது தான் என்பதை பற்றி கருத்து சொல்லாது இந்த ஈனப்பிறவிகள் மெளனம் சாதிப்பார்களா? இப்படியான காட்டுவாளிக் கூட்டத்தை எந்த இனத்திலும் சேர்த்து கதைப்பதே பெறுமதியில்லாது. வரும்காலத்தில் யார் தமிழ்மக்கள் என்பதை நிரூபித்து காட்டுவார்கள். யாழ்பானத்து வக்கீலும் அதற்கு பின்னால் இருந்து காரியமாற்றிய காடையர் கூட்டமா? இல்லை. ஐக்கியஇலங்கையில் வாழத்துடிக்கிற தமிழ்மக்களின் உழைப்பாளர்களா என்பதை.

  11. Soorya says:
    15 years ago

    நோயாளி வைத்தியருக்கு மருந்து செய்த கதை போல் இருக்கிறது, அதுவும் மனநோயாளி செய்தால்….

    • chandran.raja says:
      15 years ago

      முப்பது வருட மனநோயாளிகள் யார் என்பதும் அவர்களை உருவாக்கி உலவ விட்டவர்கள் எவர் என்பதும் உலகறிந்த செய்தி தானே!. இனி சூரியாவுக்கு தேவையானது.மனநோயாளி என்பதை உறுதிபடுத்த கூடிய வைத்தியரின் சான்றிதழ்லே. இதையாவது தெளிவாக கிரகித்துகொள்ளுங்கள் சூரியா. உங்களுக்கு வைத்தியர் இல்லாத நானே அறிவுரை தருகிறேன். நீங்கள் கடுமையாக உழைக்கவில்லை.உலைந்து விட்டீர்கள். ஓய்வுதேவை.

      • Soorya says:
        15 years ago

        சந்திரன் இராசா அவர்களே, திரும்பத் திரும்ப சொல்லியும் பிரயோசனமில்லை என்றுதெரிந்தும் கடைசிமுறையாக இதை எழுதுகிறேன். ஒரு பக்கம் பிரபாகரன் மண்டையில் கொத்திக் கொன்றுவிட்டோம் என்று கொண்டாடுகிறீர்கள், மறுபக்கம் பிரபாகரனை உயிர்ப்பித்துக் கொண்டுவா நீதிமன்றம் முன்னிறுத்த என்று கூச்சல்போடுகிறீர்கள். நாம் கேட்பதெல்லாம் உயிருடன் இருக்கும் கொலைகாரனை கூண்டில் நிறுத்த ஒற்றுமைப்படுவோம் என்பதே. இராயபக்சவால் இலங்ககையில் ஒருவருக்கும் விடுதலை கிடைக்கவில்லை, மாறாக பட்டினியும், துன்பமும், வேதனையும்தான் மிச்சம். நாட்டை கொள்ளையடித்து மக்கள் பணத்தில் திமிரான சுகபோக வாழ்வு வாழும் மனிதனை எப்படி தொழிலாளர் நண்பன் என்று அழைக்கலாம்? இல்லை இலங்கை அரசியல் படிப்பதில்லையா அதிபுத்திசாலி என்று மார் தட்டும் இராசா அவர்களே? யதார்த்தம் தெரியாமல் இங்குவந்து சந்திசிரிக்கும் சமாச்சாரம் சொல்கிறீர்கள்! உங்கள் எழுத்துக்களை வாசிக்க எமக்கு வெட்கமாக இருக்கிறது, இப்படியும் எம்மத்தியில் ஒருவனா என்று எண்ணி. விடுங்கள் இராயபக்சவையும் அவரின் போர் குற்றங்களையும். வாசிக்க ஒருவருமே இல்லை இருந்தும் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் புலுடா மார்க்சிசம் பற்றி.

  12. veeran says:
    15 years ago

    MR is a war criminal, just as much late Pirabakaran, both commited and approoved crimes against humanity, both are friends, it was late Piraba, who helped Mahinda to come to power after getting promise of 5 billion, rs, Mahinda also promised that he would not not disturb tigers in Vanni, and allow them to rule tthere, unfortunately for tigers and fortunately for tamils, , MR did not keep that promise. 

    When tigers killed fighters from EPRLF and Telo there was no mobile phone camera available. if not we would have seen more about vanished tigers crime, 

  13. veeran says:
    15 years ago

    மரங்கொத்ததி பரவை எல்லா மரத்தையும் கொத்தி  கடைசியில் அகப்படுவது வாலை மரத்தில் அது போல் புலியும் எல்லாரையும் ஏமாட்ரி கடைசியில் ம்கிந்தவிடம் அகப்பட்டது

  14. கிறுக்கன் says:
    15 years ago

     சிங்களத்தின் இனச்சுத்தீகரிப்பு பற்றிக்கதைக்க வக்கில்லை பாட்டாளிகள் பற்றி பாடம் எடுக்கிறார் ராசா நான் உட்பட இங்கு பலர் நடுத்தர உழைக்கும் மக்கள் தான் எமக்கு ஒண்டும் முதலாளித்துவ பித்து பிடிக்கவில்லை அதுக்கு நீங்கள் மருந்து சொல்ல.
     “இந்தசிறு தீவில்ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தை தமது அரசியல் சித்துவிளையாட்டால் மற்றைய சமூகத்கதிற்கெதிராக இனவெறியை வளர்த்து விட்ட முதாலித்துவ வக்கீல் தமிழரும் அவர்களினால் வளர்த்து விடப்பட்ட காடையர்கள் கிறிமினலையுமே தெரியும்”
    இது மகிந்த, ஹெல உறுமய சொன்னதுங்கோ…. அதையே நீங்களும் அப்பாவி சிங்கள இனத்துக்கெதிராக இனக்குரோதத்தை தூண்டாதைங்கோ எண்டு சொல்லுங்கோ.. அதை விட்டுட்டு பாட்டளிமக்கள் உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எண்டு கதை அளவாதையுங்கோ.. நாங்கள் ஆவெண்டு கொண்டு அமிர்தலிங்கம், ஜிஜி, செல்வா விட்ட குசுக்களை மணந்து கொண்டு திரியவில்லை…  அதை மாதிரி நீங்களும் விடுகிறதை பாத்து விடுங்கோ இங்கை ஒருத்தரும் அடி முட்டாள் இல்லை பொத்திக்கொண்டிருக்க.    

  15. கிறுக்கன் says:
    15 years ago

    கீழ அம்பாந்தோட்டையில இருந்து நீர்கொழும்பு வரையில இருக்கிற மசாஜ் சென்டர் போனவைக்கும், தெற்கில விதைச்ச பயிர்கள் வாளோணும் எண்டுறவைக்கும் தான் இந்த ஐக்கிய இலங்கைக்குள்ள வாளோணும் எண்டுற துடிப்பு மற்றபடி ஒரு மண்ணாங்கட்டி சமத்துவமும் இல்லப்பா. உதுக்குத்தான் அந்தகாலத்து சட்டாம்பிகள் தொடக்கம் இந்தக்கால சண்டியர் வரை மடங்கினவை. 

    • veeran says:
      15 years ago

      உஙகலுக்கு பொருத்தமான பெயர்

      • THAMILMARAN says:
        15 years ago

        வைண்ட் அப் பண்ணீ பல பம்பரங்கள உருள வைத்து விட்டீர்கள் வீரன் ஆக நீங்கள் வீரந்தான்.

  16. a voter says:
    15 years ago

    ஒரு வயோதிபப் பெண்ணின் கண்ணீர் எனக்குப் புரிகிறது. ஆனால் அதனை அரசியலாக்குவது தான் ஏன்? இவர் பிரபாகரனின் தாய் என்பதாலா? (பிரபாகரனின் செயலுக்கும் இந்த வயோதிபப் பெண்ணிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.)
    இந்தச் செய்தி வந்திருப்பதன் நோக்கம் என்ன? மனிதாபிமானச் செய்தியை அரசியலாக்கி செய்தியின் மதிப்பைக் குறைத்து விடாதீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In