உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உரிமையுடன் முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும் என்றும், நாம் எவருக்கும் அடிமைகளல்ல என்பதை உணர்ந்து எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத வகையில் கௌரவமான வாழ்க்கையை நாம் மேற்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித் துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுடனான விஷேட சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரின் வருகையின் போது காய்வெட்டு நடவடிக்கைகளிலும் பல்கலைக்கழக உயர் மட்டம் ஈடுபட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட எந்தவொரு மாணவர் அமைப்புப் பிரதிநிதிகளும் இதனில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்காகவே அங்கு வருவதாக முதலில் தகவல்கள் வெளியிடப்பட்டன. எனினும் மாணவர்களுடனான சந்திப்பொன்றிற்காகவே தான் வந்திருப்பதாகவே அவரால் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் தற்போதைய வேலையற்ற பட்டதாரிகளும் என அடையாளம் காணப்பட்டவர்கள் 5க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்கனவே பல்கலைக்கழக வளாகத்தினுள் இறக்கிவிடப்பட்டிருந்தனர். அவர்களும் இக்கூட்டத்தில் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து சென்று வி;ட்டதாகவும் கணிசமான விரிவுரையாளர்கள் பீடாதிபதிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் மகிநதாவின் அடிமையென்பதை மறந்து> மற்றவர்களுக்கு உபதேசமோ?