ஈழத்தில் புலிகளின் போராட்ட வழிமுறை தோல்வியைச் சந்தித்த
போதும், புலம் பெயர் நாடுகளில் புலிகளைச் சார்ந்த அமைப்புக்கள் தோல்வியடந்த அதே அரசியலை முன்னெடுக்க முயல்கின்றன. அழிக்கப்பட்ட தலைமை முப்பது வருடங்களைப் பின்னோக்கிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது மட்டத்திலான தலைமை வரை அழிவைச் சந்திருக்கிறது. புலிகள் ஏகத்தலைமையை ஏற்றுக்கொண்ட காலத்திலிருந்து மட்டுமல்ல, தேசிய விடுதலை இயக்கங்கள் இராணுவக் குழுக்களாக உருமாற்றம் பெற்ற காலத்திலிருந்தே இந்த அழிவரசியல் ஆரம்பமாகிவிட்டது. இன்று அரசியல் வெற்றிடத்தைத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிரப்புவதற்குப் பதிலீடாக அதே புலிகளின் பழமைவாத அரசியலை முன்வைக்கிறார்கள்.
தமது சமூக வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலும், புலம் பெயர் நாடுகளில் தமது அடையாளத்தை நிலைனாட்டும் நோக்கிலும், வெறுமனே வியாபார நோக்கிலும் மூன்று வகையான கூறுகளின் ஒருங்கிணைவே இங்குள்ள புலம் பெயர் புலி அரசியலின் தொடர்ச்சி.
கடந்தகாலங்களில் புலம்பெயர்நாடுகளில் வெறுமனே தலைமை வழிபாடும், வெறும் தேசியத் தேவாரமும் பாடிய சக்திகள் ,இன்னும் புலம்பெயர்நாடுகளில் உள்ள கோவில் ,மற்றும் தமிழ்பாடசாலைகளிலும் ஏதோ விதத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டுதான்
இவர்களும் புலம்பெயர் கட்டமைப்புகளும் சேர்ந்துதான் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, நாடுகடந்ததமிழீழ வாக்கெடுப்பு என்று பெரும்பணத்தை செலவழித்து,பெரும் கேலிக்கூத்தாடியவர்கள்.
மேற்கு நாடுகள் முழுவதிலும் எந்த அடிப்படை அரசியல் திட்டமுமின்றி மக்களின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த இந்த நாடகங்களின் வழியாக அப்பாவிகளை இன்னமும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கென்றே சில அரசியல் சுலோகங்களை வைத்திருக்கிறார்கள். பிராபகரனை கடவுள் என்ற எல்லைவரை மறுபடி மறுபடி பிரச்சாரம் செய்தல், புலிகள் மீதான கண்மூடித்தனமான விசுவாசம் என்பன மட்டும் தான் இவர்களின் குறிக்கோள். இலங்கை அரசின் அரசியலைக் கூட பிரபாகரன் மற்றும் புலிகள் மீதான பற்று என்ற முழக்கங்களின் கீழே மிக இலகுவாக நடத்திவிடலாம். இவர்களுக்கு அரசியல் என்பது கிடையாது.
இலங்கை அரசோடு உல்லாசமாக உலாவரும் கே.பி உருவாக்கிய நாடுகடந்த தமிழீழம் இதுவரைக்கும் இலங்கை அரசிற்கு எதிராக எந்தக் காத்திரமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை. குறைந்த பட்சம் ராஜபக்ச அரசு போர்க்குற்றவாளி என்பதை ஆவணப்படுத்தும் காத்திரமான ஆதாரத்தை உலக மக்கள் முன்வைக்க இவர்கள் ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.
காலத்திற்குக் காலம் இலங்கை அரசிற்கு பாதிப்பு ஏதுமின்றி அதிரடியாக மக்கள் முன் தோன்றி, சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள். பாராளுமன்றத் தேர்தல், பிரதமமந்திரி தெரிவு, மஞ்சள் நிற பட்டி குற்றிக்கொள்ளல், புலிக்கொடி பறக்கவிடுதல், கனவான்கள் போல உடையணிதல் போன்ற இன்னோரன்ன நாடகப் பாணியிலான நிகழ்வுகளை அரங்கேற்றுவார்கள்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல எல்லா அதிகார அமைப்புக்களும் மேற்கொள்வதைப்போல புலம் பெயர் தமிழ்ர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்போகிறார்களாம்! நமது எதிர்காலச் சந்ததி இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் கண்டு அவமானமடையும் என்பதை எண்ணிப்பார்க்க வேதனை மேலிடுகிறது.
இந்த நாடுகடந்ததமிழீழத்தினர் பழைய பாணியில் வெறும் நப்பிக்கையை மட்டும் ஊட்டி கலர்,கொடி,சின்னம்.தேசியஅடையாளஅட்டை என்று புலம்பெயர்மக்களை முட்டாள் ஆக்க முற்படுகின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட,அழிக்கப்பட, அரசியலை பார்க்க தகுதி இல்லாத இவர்கள் தேசியத்தின் பெயரில் புலம் பெயர்மக்களுக்கு மதவாதிகளைப்போல, பொய்யான நப்பிக்கையை மட்டும் கொடுக்க முற்படுகின்றார்கள்.
இவர்கள் இதற்காக பிரதமர்,துணைப்பிரதமர்.மற்றும் அமைச்சர்கள் எல்லாம் உருவாக்கிஉள்ளார்கள். இவர்கள் அதிகாரம் செலுத்த முன்புஇருந்த கட்டமைபுகளைத்தான் கட்டமுற்படுகின்றார்கள்.இவர்களுக்கு முற்பது வருடங்களாக இருந்த கட்டமைப்பு, எப்படி இருந்த இடம் இல்லாமல்போனது என்பதை உணரமுற்படவுமில்லை,அதை ஒட்டியதேடலும்மில்லை அனாலும் இவர்களிடம் தேசியப்பிரச்சனைக்கு வெறும் அடையளசசின்னக்களின் ஊடாகவும்,உணர்ச்சிமயமாகவும் மக்களுக்கு காட்டி ஏமாற்ற முற்படுகின்ரர்கள்.
இத்தகைய செயற்பாடானது ஒருபெரும் அரசியல் வெறுமையை உருவாக்கும்.அதே நேரத்தில் புலம்பெயர் சமூகத்தில் உள்ள முன்னேரியபிரிவினர்கள் அல்லது மாற்று புரச்சிகரசக்திகளும் இதற்கான காரணிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த முன்னேறிய பிரிவினர்கள் புலம் பெயர் நாட்டில் இதுவரை எந்த முன்னேற்றமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
முன்னேரிய பிரிவினரும் மக்கள் பற்றுள்ளவர்களும் இதை முன்னெடுத்தால் இலங்கை அரசு சார்ந்த உதிரிகள் கூட்டமும், புலி சார் அடிப்படை வாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இனியாவது இந்த அரசியலற்ற அதிகாரத்தனமான கூட்டத்தை புலம்பெயர் அரசியலில் இருந்து அகற்ற முற்படவேண்டும். சிறலங்கா அரசானது தமிழ்மக்கள் ஒரு தேசியஇனம் என்ற அடையாளத்தை இல்லாது அழிப்பதின் மூலமாக தேசியப்பிரச்சினைக்கு “தீர்வுகண்டு” கொண்டு இருக்கின்றது. ஆனால் புலம்பெயர் சக்திகளோ தோற்றுப்போன,அரசியல் அற்ற கட்டம்ப்புக்களை கட்டமுற்பட்டுக்கொண்டு ,அடையாளஅட்டை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ……….








வெங்காய வியாபாரம் செயது பழக்கப்பட்டவர்கள் அந்த மைண்ட் செட் இல் இருந்து விடுபட மறூக்கிறார்கள்.வரம்புகள உடைத்து வெள்ளம் பாய்ந்து பயிரெல்லாம் பாழான பிறகும் பழைய கனவுகளீல் மிதக்கிறார்கள் இன்னும் புலிக் கொடி பறக்கிறது என சிடி வித்து தமிழரின் சிந்த்னை மாற்றத்தையும் மறீக்கிறார்கள்.புட்போல் சீசன் டிக்கெட் இருந்தாலே பெரிய மாட்ச் பார்க்க டிக்கெட் கிடைக்காதபோது இவர்களது அடையாள அட்டையை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது தமிழனுக்கு புதினம் காட்டத்தான் முடியும்.நல்ல கட்டுரை.
Though I am not 100% convinced with TGTE, I will support their effort . However I support some issues raised by the author of this article.. I do no see any good reason to keep flag of LTTE in any our activities. Instead our voices heard, LTTE related banner will only lead for rejections both internationally and locally (amoungThamils). Any activities done for Thamils stuggle should keep away from our old movements, even though they are significantly carried out by members from our old movements to get optimum results.
dear nada சின்னம் என்று சொல்கின்ற சிறு கலர் துணியில் எங்கள் நம்பிக்கையை அல்லது நாங்கள் வேண்டிய ஒன்றை எம் சுய நலத்திற்காக பாதுகாக்க விரும்பினால் அந்த பாதுகாப்பு இயக்கமே எம்மை பொதுவான மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து வெளியேதான் கொண்டுபோகும்
dear nada இன்று இந்தப் புலிக்கொடி எதை முன்னிறுத்திக் காட்டுகின்றது. இக்கொடி எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னேற்றத்தைக் காட்டி நிற்கவில்லை. மாறாக உலகப்புதியஒழுங்கில் அது பயங்கரவாதத்தையே அதிகம் சுட்டிக்காட்டி நிற்கின்றது. ஆகவே இந்த புலிச்சின்னம் இலங்கையிலுள்ள எம்மக்களுக்கு எந்தவித விடுதலைக்கான அடையாளமாக இப்போது இல்லை என்பதை நாங்கள் உணரவேண்டும்.
புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் எம்மக்களின் பிரச்சனைகளின் உண்மையான இப்போதைய தளம் புரியாமல் உள்ளார்கள். புரிவதற்கு முற்படவுமில்லை. இவர்கள் தங்களின் பெருமைக்காக, தங்களின் திருப்திக்காக புலிக்கொடியைப் பிடிக்கின்றார்கள்.
ஏன் புலிக்கொடி தூக்க வேண்டாம் என்பதற்கும், ஏன் இதை தூக்கக் கூடாது என்பதற்கும் நிறையக் கருத்துக்கள் உண்டு. தம் திருப்திக்காக கொடியை தூக்குபவர்கள்தான் அதிகம். தெளிவில்லாத,
கருத்துக்கள் இல்லாத, சுயமாக மக்களின் பிரச்சனையை பார்க்க முடியாதவர்கள்தான் ஒரு
சின்னத்தின் பின்னே ஒழிந்திருப்பார்கள்.
எம்மக்களின் நலனில், எம்மக்களின் உரிமையில் அக்கறை கொண்டவர்கள் இந்தப் புலிக்கொடியின் பின்னுள்ள தோல்வியினையும், எங்களது பிழையான அதிகாரத்தனமான அரசியலையும் பார்ப்பார்கள். எம்மத்தியிலும் உள்ளேயும், வெளியேயும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதின் அடையாளத்தையும் உலக நாடுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அச்சுறுத்தலைக் கொடுத்த ஒரு பயங்கரவாத சின்னமாகத்தான் இந்தப் புலிக்கொடி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சரியோ பிழையோ எம் பிரச்சனையை உலகம் அறிய வைத்ததும் இந்த புலிக்கொடிதான் என்பதை மறுப்பதுக்கும் இல்லை.
ஆனாலும் இன்றைய நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்
என்னதான் சொல்லுங்கள் என்னதான் எழுதுங்கள் தமிழீழத்தேசியக்கொடியையும் தமிழீத்தேசியத்தலைவரான பிரபாகரனையும் ஒதுக்கி தமிழீழ அரசியலை நகர்த்த தமிழீழ மக்கள் எவருக்குமே உண்மையான அனுமதி தரமாட்டார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் வரலாறு தந்திருக்கும் படிப்பினை அது.
People need to be diplomatic and dynamic to achieve our goals..I thing it is so called leaders or disciples of leaders are only making the people to use these flags and idiology..The struggle carried out so far has failed…it is an ultimate fact..you can find many reasons for this failure based on politics, statergies and spritual.. But we are not ready to do this because we are not brave enough to look back and understand the facts. Unless we put our sentiments on one side and go forward with right attitude, right statergy and more importantly right face with intellectual thinking, we are going to wast our next stage of effort..