கடந்த முழுநிலா நாளன்று கொழும்பு, மெசஞ்ஞர் வீதியிலுள்ள பிரைட்டன் ரெஸ்ட் இல் கூடிய மேற்படி அமைப்பானது, தனது முதலாவது கலந்தரையாடலில் ‘சமூக அசைவியக்கத்திற்கு மக்களின் கருத்தாடலும் கருத்து பரிமாற்றமும் அவசியமாகும்’ என்ற அடிப்படையில் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுவதென்ற பொது இணக்கத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளில் ஒன்று கூடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதற்கமைய எதிர்வரும் 20.08.2013ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப.3.00 மணிமுதல் 5.00 மணி வரை கொட்டாஞ்சேனை இல34, விவேகானந்தா சபை, (கலந்துரையாடல் அறை) விவேகானந்தா பீடம், கொழும்பு என்ற முகவரியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
1) கல்வி, பொதுநிருவாகம், நீதித்துறை போன்ற துறைகளில் தமிழ்மொழி அமுலாக்கத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை முன்மொழிதல்.
2) முன்மொழியப்பட்ட உரிமைகளை நிலை நாட்டுவதற்காக மக்களுக்கு விழிப்பூட்டும் கருத்துகளைத் தொகுத்து ஆவணமாக்குதல்.
3) அந்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்மொழியை பூரணமாக அமுல்படுத்துவதற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
மேற்படி தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடலில் தாங்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
அழைப்பாளர்கள் –
1) சி.சரவணபவானந்தன் – 0714427784 (sarabava@yahoo.com)
2) இ.தம்பையா -0714302909 – (thambiahlawassociates@gmail.com)
ஆகா! அருமை! அந்த ‘முழுநிலா நாள்’.சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திணிப்பை,அழகியலாக ஆக்குவது.சும்மா ‘போயா’.அதுவே.