இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன,
தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேநேரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுவிஸ் வாழ் தமிழர்களினால் ஐ.நா முன்றலில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது








இன அழிப்பில் இருந்து காப்பதற்காகத் தான் தமிழர் போராட தொடங்கினார்கள். காப்பாற்ற வேண்டியவர்களே ஓடி விட்டார்கள். அவர்களை காப்பாற்றத்தான் இந்த தீக்குளிப்பு.
எப்போது தான் திருந்துவார்களோ?
முகுந்தன் ….
சரி பிழை என்பதற்கு வெளியில் இந்த முகுந்தன் போன்றவர்கள் தன்னிச்சையான தியாகங்களைக் கூடக் கொச்சைப் படுத்தி கேவலமாக்கி விடுகிறார்கள்.
தன்னிச்சையான தியாகங்களுக்கு அர்த்தம் இருக்கவேண்டும் .இதுவரை செய்த தியாகங்களினால் நமக்கு என்ன விளைந்தது?
உங்களைப் போல் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இப்படி குரூரமாய் இழப்பதை ரசிக்கவோ கொண்டாடவோ முடியவில்லை சகுந்தலா!