பல்தேசிய மாபியாக்களின் தெற்காசிய சொர்க்கபுரியாக இலங்கை உருவாகியுள்ளது. பொதுவாக இலங்கை முழுவதிலும் குறிப்பாக வழக்கிலும் கிழக்கிலும் சட்டவிரோதக் கொள்ளப் பணங்களை சர்வதேச மாபியாக் குழுக்கள் முதலிடுகின்றன. மகிந்த ராஜபக்சவின் உலகின் குறைந்தபட்ச ஜனநாயக சட்டவரம்புகளுக்குக் கூட உட்படாத பாசிச அர்சின் தேவை இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் அவசியமானதாகின்றது.
இந்தியா, சீனா, ரஷ்யா அமரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிலிருந்து இலங்கையில் பெருமளவிலான பணப்பதுக்கலும் சட்டவிரோத முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையிலும், களியாட்டம் சார்ந்த துறைகளிலும், விடுதிகள் போன்றவற்றிலும் இப் பணம் முதலீடு செய்யப்படுகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் இம் முதலீடுகளுக்ககப் பறிக்கப்படும் நிலங்களைச் சூழ பாதுகாப்பு அரண்கள் போன்று இராணுவக் குடியேற்றங்களும் சிங்களக் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்களப் பகுதிகளில் நிலப்பறிப்பின் போது போராட்டங்கள் உருவாகமல் தடுக்கும் நோக்கில் உதவி என்ற பெயரில் தன்னார்வ அமைப்புக்கள் செயற்படுகின்றன.
ஆக, பேரினவாத முரண்பாட்டைப் பயன்படுத்தி, வரி விலக்கு வழங்கப்படும் இந்த நிறுவனங்களின் கொள்ளையை ராஜபக்ச அரசு இலகுவாக்கியுள்ளது. நிறுவனங்கள் வழங்கும் கப்பப்பணம் ராஜபக்ச குடும்பத்தையும் சுற்றியுள்ள ஆதரவாளர்கயும் சென்றடைகிறது. மக்கள் மந்தைகளாகவும் தலைவர்கள் மேய்ப்பர்களாகவும் பேரழிவை நோக்கிச் சமூகம் நகர்த்தப்படுகின்றது. சிஙகளத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனமும் இணைந்துவிடாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணனக்கான அமைப்புக்கள் களத்தில் செயற்படுகின்றன.
That is right. Colombo is very busy. Sri Lanka Police is very experienced and professional like the Singapore Police.
” சிஙகளத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனமும் இணைந்துவிடாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணனக்கான அமைப்புக்கள் களத்தில் செயற்படுகின்றன.”
இவர்களை ஒற்றுமைப் படுத்த ஏதாவது அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா அப்படிப்பட்ட அமைப்பொன்றை உருவாக்க நாம்-inioru- ஏன் முயலக்கூடாது