கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான் என்றும் கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மேற்கு நாடுகள் போலன்றி குறைந்தபட்ச சமூக நலத் திட்டங்கள் இல்லாத இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைக்கின்றன. பல் தேசிய நிறுவனங்களின் நலனுக்காக உருவாகும் அணு மின்னிலையங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இந்திய மக்களின் விடுதலைப் போரின் ஒரு பகுதி.
பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கில் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களின் அழிவிலிருந்து தம்மை மீளமைத்துக்கொள்ள முனைகின்றன.
கூடங்குளம் அணு மின் உலையை சோதித்த மத்திய நிபுணர் குழுவினர் இன்று தமிழக அரசு அமைத்த குழுவினருடன் திருநெல்வேலியில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவின் உறுப்பினரும், தமிழக அரசு அமைத்து குழுவில் இடம்பெற்றிருந்தவருமான புஷ்பராயன் இவ்வாறு கூறியுள்ளார்.