வடமாகாண சபைத் தேர்தலில் நம்பிக்கையற்று அரசியல்ரீதியாக அதனை நிராகரிக்கிறோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி நேற்று ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறிக்கையை தினக்குரல் மற்றும் வீரகேசரி ஆகிய நாளிதழ்கள் பிரசுரிக்க மறுத்துவிட்டன. அந்த அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அதனிப் பிரசுரிக்க இந்த இரண்டு ஊடகங்களும் நிராகரித்துவிட்டன. கருத்துச் சுந்தந்திரம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைகுள் முடக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த ஊடகங்களும் தம்மால் இயன்ற அளவிற்கு ஜனநாயக மறுப்பை மேற்கொண்டன. இன்று இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் எல்லைக்குள் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு அப்பாலான எந்தக் கருத்தையும் ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை.
சுயாதீனமாகவும் ‘நடுநிலைமையாகவும்’ செயற்படுவதாகக் கூறும் இந்த ஊடகங்களும் காலத்திற்குக் காலம் எஜமானர்களின் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஊடகங்களாக மாறியுள்ளன.
வடமாகாணசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கடந்தமுறை போட்டியிட்டப் பார்த்தனர். எவரும் வோட்டுப்போடவில்லை. இம்முறை தேர்தலில் நின்றால் பயனில்லை என்பதால் புறக்கணிக்குமாறு கேட்கின்றனர். புறக்கணிப்பின் பயன் அரசுக்குத்தானே கிடைக்கும்.
ஒன்று சக ஒன்று என்பது அரசியலல்ல உமா! இந்திய அரசின் அடியாள் படையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும். அவர்களின் ஏவல் நாய்கள் போலவே செயற்படும் இந்தக் கும்பல் வெற்றிபெற்றால் விக்கி சொல்வதைப் போலவே வடமாகாண சபைக்கான அங்க்கீகாரம் கிடைக்கும். இராணுவ ஆட்சிக்கும் குடியேற்றங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இன்று டக்ளஸ் கும்பல் வெற்றிபெறுவதை விட விக்கி கும்பல் வெற்றிபெற்றால் மகிந்த அரசுக்கு நன்மை அதிகம். இங்கு இத் தேர்தல் என்பதே தவறானது என்று நிராகரித்து மக்களை ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டிப் போராடத் தயார்படுத்துவதே சரியான வழிமுறை. அங்காங்கு முளைவிடும் போராட்ட சக்திகளையும் அழிப்பதற்கு இலங்கை இந்திய அர்சுகள் தெரிந்தெடுத்த வடிகாலே விக்கி!
இந்தியா அமெரிக்கா நோர்வே உட்பட்ட அனைத்து நாடுகளுமே இணைந்து எம்மை இத்தகு அவல நிலைக்குள்ளாக்கின என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் அப்பாவிகள் எவருமே கொல்லப்படவில்லை என்ற டக்ளஸ் முதல்வரானால் நிலைமை இன்னும் மோசமாகும். விக்னேஸ்வரன் முதல்வரானால் ஓரளவுக்காவது சனங்கள் குறுகியகாலத்துக்காக நிம்மதியடையமாட்டார்களா என்பதே எனது எண்ணம். நாங்கள் வெளிநாட்டில் இருந்து எதையும் பேசலாம். ஆனால் அங்குள்ளவர்கள் இனிமேல் போராட்டத்தைத் தாங்கமுடியாதவர்கள். காணி பொலிஸ் அதிகாரத்தையாவது வடபகுதிக்குப் பெற்றால் ஓரளவுக்காவது நம்மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவர். விக்கி இந்தியாவின் தெரிவானாலும் தகுதியான ஒருவர் என்பதே எனது அபிப்பிராயம்.
உமா,
வடக்கிலும் கிழக்கிலும் எந்த அதிகாரத்தையும் வழங்கமாட்டார்கள் உமா. அப்படி கற்பனையில் வாழ்ந்து இப்போது 30 வருடங்களைக் கடந்துவிட்டீர்கள். அழிவுகளின் பின்னர் இப்போது தான் மக்கள் தங்களைச் சுதாகரித்துக்கொண்டு மீட்சி பெற்றார்கள். உலகம் முழுவதும் சிறிது சிறிதாக மக்கள் எமது போராட்டத்தைப் புரிந்து கொண்டார்கள் இந்தியாவில் எழுச்சிகள் உருவாகின்றன. இவற்றை எதிர்கொண்டு மக்களை மீண்டும் ஒடுக்குவதற்காகவே விக்கி இறக்கிவிடப்பட்டுள்ளார். விக்கி முதல் ஆள் இல்லை. பிலிப்பைன்ஸில் படுகொலைகளுக்குப் பின்னரும், கஷ்மீரிலும் மக்கள் அழிக்கப்பட்ட பின்னரும் விக்கி போன்றவர்களை இறக்கிவிட்டுள்ளார்கள். ஆனால் அங்கெல்லாம் தம்மைச் சுதாகரித்துக்கொண்ட தலைமைகள் தேர்தலைப் பகிஷ்கரித்து போராட்டத்தைப் புதிய வடிவில் முன்னெடுத்தன.. என்ன செய்வது தமிழர்கள் புலம் பெயர் நாடுகளிலிருந்து மட்டுமே சிந்திக்கிறார்கள். அதனால் கோழைகளாகிவிடுகிறார்கள்.
ஏன் சாத்தியமில்லாத, தோற்றுப் போன வழிகளையே மீண்டும் திறந்துவிடக் கோருகிறீர்கள். புதிய வழிகள் குறித்து சிந்திக்கவே மாட்டீர்களா?
தங்கள் கருத்தில் சகலருக்கும் உடன்பாடுதான். ஆனால் திரும்பவும் போராடும் மனநிலையிலோ அல்லது பலத்துடனோ மக்கள் இல்லை. மிகவும் நொடித்துப்பொன அவர்களுக்கு சற்று ஆறுதல் வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பும் தோற்றுப்போன வழிதானே? அதனால்தானே மகிந்தரே வந்தார்.
அனைவரும் ஒத்து நிற்கும்வரை போராட்டத்தைத் தள்ளிவைப்பதே வழி என்பது எனது அபிப்பிராயம்.
மக்களைப்போராடச் சொல்கிறார்கள், போராட வீதிக்கு வருபவா்களையும் அவா்கள் குடும்பங்களையும் பாசிஸ அரசுகள் அழித்தொழிக்கின்றபோது இயலாமல் போய் அந்த மக்கள் கூட்டம்”” இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா”” என்று கதறும்போது அவா்கள் யாரையோ எதிர்பா்ப்பது தெரிகிறது, ஆனால் நாம் கூறுகின்றோம், யாருமே வரமாட்டார்கள் அப்படி வந்தாலும் அவா்களால் ஆபத்தே அதிகம் நீங்களே மறுபடியும் எழுந்து போராடுங்கள் என்று. அதாவது நாம் யாவரும் பாதுகாப்பாக அன்னிய நாடுகளில் இருந்துகொண்டு.
தமிழ் நாட்டில் மக்கள் போராடினால் அவா்களுக்குப்பயந்து இலங்கையில் பேரினவாதிகள் தமிழ் ஈழத்தை வழங்க முன்வந்துவிடுவார்களா அல்லது மத்திய அரசு பயந்துபோய் தமிழ் ஈழத்திற்கு தலையசைக்குமா? புரியவில்லையே, அப்படியானால் மறுபடியும் இந்திய அரசைத்தானே நாம் நம்பவேண்டிய நிலை
Both these papers have four editions. North, East, Colombo and Regional.That shows the deviation in the hearts and minds of our people. Variety and varying needs. Thoughts that are compatible with the social change imposed by other factors and forces.
அரசியல்,ஆயுதப் போராட்டங்கள் தோற்றுப் போய்,பணையக் கைதிகளாக வாழும் மக்கள்,இனியொரு எழுதலுக்கு,இன்னொரு யுகம் வேண்டும்.
இந்தத் தேர்தல்,அந்தப் பணையக்கைதிகளுக்கு கிடைத்த,மூச்சு விடு நிலை.அவர்களுக்கான எதிர்கால இருப்பை தக்க வைப்பது என்பது,எந்தப் பன்னாடையைத் தன்னும் ஒருமித்து ஆதரிப்பதே.அதில் அவர்களுக்கான ஒரேயொரு தெரிவு,’விக்கி கோஷ்டி’ மட்டுமே.
இதில்,’அணி திரட்டி’ என்ற வார்த்தை ஜாலமும்,’அங்கங்கு முளை விடும் போராட்ட சக்திகள்’ என்ற பீற்றலும்,ஏட்டுச்சுரைக்காய்களே.
தேர்தல் என்பது பணயக் கைதிகளை இன்னும் ஒரு நீண்ட காலத்திற்குப் பணயக் கைதிகளாகவே வைத்திருப்பதற்கான வியூகம். போர் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரே புதிய சக்திகள் எழுச்சி பெறுகின்றன. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும், தமிழக முற்போக்கு அணிகள் மத்தியிலிருந்தும், ஏன் வட கிழக்கிலிருந்தும் எழுச்சிகள் உருவாகி வந்தன. இவைகளை ஒடுக்கி மிகக் குறுகிய காலத்திலேயே பிரதேசங்களை அபகரித்து இந்தியாவும் அமரிக்காவும் எதிர்ப்பார்ப்பதைப் போல ‘மார்க்கட்டபிள் என்வயர்மன்டை’ உருவாக்க விக்கி சாமியே சரியான ஆள். நீங்கள் வெள்ளிபார்த்து செய்வினை செய்யுங்கள்.
60 வருடங்களுக்கு மேலாக அகிம்சை,ஆயுதம்,விமானம் எல்லாம் கொண்டு தாக்கியும் எதுவுமே நடக்கவில்லை இனித்தான் நாங்கள் வெள்ளிபார்க்க எல்லாமே பறிபோகப்போகிறது. இந்த இடசாரி சாயம் பூசிய மேதைகள் வடகொரிய,கியூப மடயா்கள் மாறினாலும் இவா்கள் மாறவேமாட்டார்கள்.
தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு துரும்பு தற்போதைக்கு தமிழ் கூட்டமைப்பன்றி வேறு எதுவுமில்லை. விக்கினேஸ்வரன் சரியாக இயங்காவிட்டால் அவரை விலக்கிவிட்டு இன்னொரு கதிரேசனை முதலமைச்சராக நிறுத்தமுடியாதா என்ன.
60 வருடமாக நீங்கள் எதில் எல்லாம் தோற்றுப் போனீர்களோ அதனையே மீண்டும் அழைத்து வருகிறீர்கள். மீண்டும் அழிப்பதற்காக. 83 இல் இந்தியாதான் ஒரே துருப்புச் சீட்டு என்று இரத்தக்களரியை ஏற்படுத்தினீர்கள். 90 களில் புலிகள் தான் துருப்புச்சீட்டு என்று முள்ளிவாய்க்கால் வரை கொண்டுவந்தீர்கள். அதற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் துருப்புச் சீட்டு என்று காட்டிகொடுத்தீர்கள். இவை எல்லாவற்றினதும் விளைபலன்களைப் பாருங்கள். கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை. வடக்கில் இராணுவ ஆட்சி,
உங்களுக்குத் மூளையில் எங்காவது சதை இருந்தால் யோசித்துப் பாருங்கள். இந்தியாவிற்கு ஒரு திட்டம் இருந்தது, தமிழர்களை அழித்து அழிந்து போனவர்களை விரக்திக்கு உள்ளாக்கி இந்தியாவின் பக்கம் இழுத்து பின்னர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையே இல்லாமல் ஆக்கி அழித்து விடுவது என்பதே அது. அது நடக்கிறது. விக்கி தான் அதன் தலைவன். துருப்புச்சீட்டு அல்ல.
இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் இல்லை இனிமேல் தான் உருவாகவேண்டும்.
எதோ விமானமும் மண்ணாங்கட்டியும் இருந்தது என்கிறீர்கள் அது போராட்டம் அல்ல. அது அரசுகளிடமும் உள்ளது. ஆக அரசுகள் தான் இறுதியில் வெல்லும். இலங்கையை விட அதிகமான குண்டுகளையும் விமானங்களையும் பயன்படுத்திய போதும் ஆயுதம் தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் நிக்கரகுவாவில் மட்டுமல்ல பல நாடுகளில் அமரிக்க அரசே தலை தெறிக்க ஓடியிருக்கிறது, உங்களது எஜமானர்கள் அப்படி ஒரு போரட்டம் வந்துவிடக்கூடது என்பதற்காகவே விக்கியையும் கூட்டமைப்பையும் களமிறக்கி அழிக்கிறார்கள்.
தமிழ் நெட் நேர்காணலில் சொன்னது போல வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கேட்கவே விக்கி களமிறங்கியுள்ளார்.
நான் கூறுவது 60 வருடங்கள் பல நிலைகளிலும் போராடியும் எதையும் நிறுவவோ நிறுத்தவோ முடியாதபோது விக்கினேஸ்வரன் என்ற ஒருவா் முதலமைச்சராக வந்தவுடன்தான் யாவையும் இழக்கப்போவதுபோல் கதறுவதை நிறுத்தும்படி கூறுகிறேன் இலங்கையில் போலிக்கம்யூனிஸ்ட்கள்தான் சரித்திரம் பூராகவும் வாழ்ந்தார்கள் வாழ்கின்றார்கள் எதிர்காலத்திலும் அதுவே, உங்களைப்போன்ற மண்டையில் சதை உள்ள பெரியவா்கள் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற வழிதேடுகிறீா்களே தவிர வேறு எதுவும் இல்லை.
wanted to stay away from INIORU BUT ,I couldn’t stop commenting on current issue and some of wrong views from far left to far right. my humble view is:I think we all should see the reality: YES We all want our fate is in our hands, but the reality is not in our hand.and we don’t have any other options or plan B
to control the direction of our issue right now. உடனடி,குறுகிய ,நீண்ட கால,இறுதி இலக்குகளிட்கு இடையில் ஏற்படும் குழப்பங்கள் தான் இவை.இறுதி இலக்கிற்கான கொள்கை ,கோட்ப்பாடு ,தத்துவங்களை தெளிவாக வகுத்துக்கொண்டு இன்று இருக்கும் சமூக அமைப்பை அது போராடிக்கொண்டிருக்கும் அன்றைய
பிரச்சனைக்கான போராட்டங்களோடு இணைந்து, இணைய முன்வரும் சக்திகளை இணைத்து அவர்களை வழிநடத்தி அடுத்த இலக்கிற்கு தயார் படுத்தலே சரியான வழியாகும். அதை விடுத்து வெவ்வேறு இலக்குகளிட்கான முன்நிபந்தனைகளை இடம் மாற்றி வைப்பது ஒரு மாற்றத்தையும் முன் நகர்த்தாது,எதிர் விளைவையே உருவாக்கும். இந்தக் குழப்பங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையே ஒழிய திட்டி தீர்ப்பதாக இருக்கவும் கூடாது.
…………………………………………………………………………………………………………………………………………………
அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டையும் மீறிய, மக்கள் வர்க்கப்பிரிவினையை உணர்ந்துகொள்வதை தடுக்கும் பெருந்தேசியவாதம் தான் தேசிய இன முரண்பாட்டின் அடிப்படைக்கே மூல காரணி, இது வர்க்கங்களையும் மீறிய காரணி. வர்க்கப் போராட்டம் மூலம் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக இன்றுள்ள நிலையில் தீர்வு இல்லை ,ஏனெனில் மக்கள் வர்க்கப்பிரிவினையை உணர்ந்துகொள்வதை பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு தடுக்கிறது
this is a war between two nations Tamil Ellam and Srilanka . nothing more nothing less.
பைபிள் குறிப்பிடும் உலக அழிவின் இறுதி நாட்கள் என மதவாதிகள்,வருடக்கணக்கில் ஆரூடம் கூறினார்கள்.
பின்னர் ‘முற்போக்குசக்திகள்’ ஏகாதிபத்திய வங்குரோத்து நிலையும்,தொழிலாளர் புரட்சியும் பற்றி,வருடக்கணக்கில் காண்டம் வாசித்தார்கள்.
ஏதாவது நடந்ததா?
சிங்கள பௌத்த பேரினவாதம், சீன ஏகாதிபத்தியத்துடன் ஒடுக்குமுறையைத் தொடரலாம்,தீவையே அவர்களிடம் அடகு வைக்கலாமென்றால்,ஒடுக்கப்படும் இனம் பூமிப்பந்திலிருந்து நிர்மூலமாகப் போவதைத் தடுக்க,”இந்தியா அமரிக்கா உருவாக்க சாமி’ மூலம் உருவாடினாலும்,அது தப்பேயில்லை.
அண்ணை யாரோ! நான்,இருக்கிற- தெரிகிற வெள்ளியைப் பார்ப்பது உண்மைதான்;ஆனால் உங்களைப் போல முற்போக்குக்கனவில மிதக்கவில்லையென்றதையும் கவனத்தில் வையுங்கோ.
/// இந்திய அரசின் அடியாள் படையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும்—Yaroo///
சம்பந்தன் அன்ட் கோ யாருக்கும் கட்டுப்பட்டவர்களாக மாறக் கூடியவர்கள் என்பது உண்மை. சம்பந்தன் இந்த தெரிவை செய்தது ஏன் என்பது அதிசயமாகவே எனக்குப் படுகின்றது .
ஆனால் நீதி தேவன் அப்படியல்ல . இந்தியா தனது நாட்டில் புரியும் கொலைகளுக்கும் , சிறீலங்கா அரசு செய்யும் கொலைகளுக்கும் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க மறுக்கும் அரசு .
ஆனால் 1983 காலத்திலில் இருந்து இன்றுவரை கொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் விட்டுக் கொடுப்பு இல்லாதவர் ஐயா விக்கினேஸ்வரன் .
இப்படியானவர் இந்தியாவின் கையாள் என்பது ஆதாரம் அற்ற பொய் மட்டும் அல்ல தர்க்க ரீதியாக பொருத்தமற்ற பிதற்றல். ஏனெனில் ஒருதரப்பு கொலைகார கும்பல் ஐயா கொலகாரர்கள் தண்டிக்கபட வேண்டும் என வாதிடுபவர் . துப்பாக்கி முனையிலும் விட்டுக் கொடுப்பில்லாமல் 1983 படுகொலைக்கு காரணமான இராணுவத்தை கைது செய்யும் முடிவில் மாற்றாதவர் . ஒரு இராணுவத் தளபதி போல் எதிர்தரப்பு படையணியை வெளியேற இரண்டு நிமிடம் அவகாசம் தருகின்றேன் என கட்டளையிட்டு அவர்களை வெளியேற்றவும் செய்தவர் .
1983 இல் வடபகுதியில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான அவரது வரிகளில் சில , /////
The next day when I came out of my official residence, which was just behind the courts, I found several armed soldiers all over. They were pointing their guns more or less towards me. Obviously the army was annoyed with me for arresting two of their soldiers.
அடுத்த நாள் நீதி மன்றத்தின் பின்னால் உள்ள எனது வீட்டில் இருந்து வெளியே வந்த பொழுது ஏராளமான இராணுவத்தினர் எல்லா இடங்களிலும் நின்றனர் . அவர்களது துப்பாக்கிகள் ஏறத்தாள என்னை நோக்கியே இருந்தது . இராணுவத்தினரைக் கைது செய்தது தொடர்பாக அவர்கள் எரிச்சல் அடைந்திருந்தனர் என்பது வெளிப்படையாக தெரிந்தது……………..கட்டையான உடல் பருத்த விஜேரத்ன என்ற அதிகாரி வந்திருந்தார் . நீதிமன்ற வளாகத்துள் இத்தனை பெரிய இராணுவ குழு ஏன் வரவேண்டும் என நான் அவரிடம் கேட்டிருந்தேன் ……………..அவை உடனடியாக போய் விடவேண்டும் என்றேன் . இரானுவாதிகாரி தயக்கம் காட்டினார் . நான் அவரிடம் சொன்னேன் இங்கிருந்து விலக இரண்டு நிமிடங்கள் தருகின்றேன் அதற்குள் இங்கிருந்து போய் விடவேண்டும் இது கட்டளை என்றேன் . எனது கட்டளை அமுலாகியது
சந்த்திரமெளலி,
குணநிதி குணநிதி என்று சாமியார் விக்கியை கோபால் பற்பொடியிலும் கேவலமாக்கிவிட்டீர்கள். அவர்மீது அப்படி உங்களுக்கு என்ன கோபம்? பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.
//// Yaroo
Posted on 08/01/2013 at 07:55
சந்த்திரமெளலி,
குணநிதி குணநிதி என்று சாமியார் விக்கியை கோபால் பற்பொடியிலும் கேவலமாக்கிவிட்டீர்கள். அவர்மீது அப்படி உங்களுக்கு என்ன கோபம்? பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.//////
analysis of this comment clearly indicates that you have no legs to stand (counter my argument ) . Please accept that I have a point and lets walk together.
because Unlike some others , I do not doubt your conviction the diffrence we have is choice of stratagy .
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் ”
பொருள் ——மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை விண்ணுலகத்
தெய்வமாய் நன்குமதிப்பர்
திருக்குறள்
அறத்துப் பால்:
இல்லற இயல் :
அதிகாரம் :5 இல்வாழ்க்கை
hence there is nothing wrong in calling him நீதி தேவன் கடவுள் தந்த பாக்கியம் etc
கோபால் பற்பொடி பலமுள்ளது …
TAMILS ARE NOT IN THE GAME: WE ARE NOT PLAYING: VIGNESH IS ANOTHER PAWN ,IF HE GOES AGAINST INDIA’S INTEREST, HE WILL BE REMOVED FROM THE GAME; NOTE: IT HAS HAPPENED TO VP. பூகோள அரசியல் காரணிகள் (இந்தியா , மேற்கு ,சீனா…),ஸ்ரீ லங்கா இடையேயான சதுரங்கத்தில் உருட்டப்பட்ட , உருட்டப்படும் காய்கள் தான் தமிழ் தேசிய தலைமைகள். இந்த சதுரங்கத்தில் நாம் காய்களை உருட்டகூடிய பலத்தை முதலில் பெறவேண்டுமே ஒழிய,யார் கையால் உருட்டப்படவேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடாக இருக்க முடியாது.
//நான் கூறுவது 60 வருடங்கள் பல நிலைகளிலும் போராடியும் எதையும் நிறுவவோ நிறுத்தவோ முடியாதபோது விக்கினேஸ்வரன் என்ற ஒருவா் முதலமைச்சராக வந்தவுடன்தான் யாவையும் இழக்கப்போவதுபோல் கதறுவதை நிறுத்தும்படி கூறுகிறேன் இலங்கையில் போலிக்கம்யூனிஸ்ட்கள்தான் சரித்திரம் பூராகவும் வாழ்ந்தார்கள் வாழ்கின்றார்கள் எதிர்காலத்திலும் அதுவே, //
உங்களுக்கு எந்தச் சாமியார் சாத்திரம் சொல்லித்தந்தார்? விக்கி சாமியோ? பிரேமாந்த்தா என்ற செக்ஸ் சாமியை ஆதரித்தவர் அவர் கவன்ம்!