கனடாவில் பௌத்த விகாரை ஒன்று எரிக்கப்பட்டதை புளட் இயக்கத்தின் கனடா பிரிவு கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ கிங்ஸ்ரன் வீதியில் அமைந்திருந்த பௌத்த விகாரை எரிக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்விதமான நடவடிக்கைகள் தமிழ்மக்களின் விடியலுக்கு எந்தவித விமோசனத்தையும் தரமாட்டாது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இப்படியான தாக்குதல்களே, அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாக சர்வதேச நாடுகள் பலவும் முத்திரை குத்துவதற்கு வழிகோலியது.
ஆகவே ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை தாக்குவதன் மூலம் எதிர்கால இளைஞர் சமுதாயத்திற்கும் வன்முறையை போதித்து உலகிலேயே ஒர் கீழ்த்தரமான இனமாக எமது தமிழினத்தை உலகிற்கு காட்டுவதற்கே இவ்வாறான சம்பவங்கள் வழிவகுத்துள்ளன. இவற்றை விடுத்து அமைதி முறையில் எமது மக்களின் உரிமை போராட்டத்தை இங்கே மேற்கொண்டு நாம் வன்முறைகளிற்கு எதிரானவர்கள் என்பதை கனேடிய அரசுக்கும் பல்கலாச்சாரத்தினை கொண்டுள்ள கனேடிய மக்களிற்கும் எடுத்துகாட்டுவதன் மூலமே கனேடிய மக்களினது ஆதரவை எமது மக்களது உரிமை போராட்டத்திற் கு வென்றெடுக்க முடியும்.
கடந்த காலங்களில் வீதிமறிப்பு போராட்டம், நெடுஞ்சாலை மறிப்பு போராட்டம் என்று மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் எதன் மூலமும் கனேடிய நாட்டு மக்களை வென்றெடுக்க முடியவில்லை. மாறாக அவ் மக்களின் எதிர்ப்பினைதான் சந்திக்க நேரிட்டது. தாயகத்திலும் இவ்வாறான வன்முறைகளை பேணிவந்தோரே இங்குள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியிலும் அதனை போதித்து எமது எதிர்கால சமுதாயத்தையே சீரழித்து நடுவீதிக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அமைதியான முறையில் கனேடிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமே பல்கலாச்சார சமுதாயத்தையும், கனேடிய அரசினையும் எமது பக்கம் ஈர்க்கமுடியும், மாறாக வணக்க தலங்கள் மீதான வன்முறைகள், அடாவடிதனங்கள் மூலம் நாம் எந்தவொரு சக்தியையும் வென்றெடுக்க முடியாது. இவற்றை கடந்தகால அனுபவங்களினுடாக பெற்று கொண்டுள்ளபோதும், மீண்டும் அதே பாணியில் பயணிப்பது எமது சமூகத்தை ஒர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.
ஆகவே வருங்கால சந்ததிகளாக வளர்ந்துவரும் அன்பான இளைய சமூகத்தினரே இவ்வாறான வன்முறை நடவடிக்கைகளை கைவிட்டு உரியமுறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றுமாறு கோருகின்றோம். வணக்க ஸ்தலங்களை எரிப்பது, நூல் நிலையத்திற்கு தீவைப்பது, ஊடகத்துறையை அச்சுறுத்துவது, வர்த்தக நிலையங்களை உடைப்பது, வாகனங்களை அடித்து நொருக்குவது இவை எதுவும் எமது நீண்டகால நியாப+ர்வமான அரசியல் உரிமை போராட்டத்திற்கு உதவ போவதில்லை என்பதை உணர்ந்து செயலாற்றுமாறு கேட்டுகொள்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதி சண்டைகளில் ஈடுபட்ட இளம் தமிழ் இளைஞர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.
வெறுமனவே ஊட்டப்படும் உணர்ச்சிகளுக்காக உங்களது எதிர்காலத்தை வீணடிக்காமல் அவற்றை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து தாயகத்தில் ஒர் கோர யுத்தத்திற்கு முகம் கொடுத்து துவண்டுபோயுள்ள மக்களின் விடியலுக்கான ஒர் அரசியல் உரிமையை கனேடிய மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு தங்களை கேட்டு கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்-PLOTE
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-DPLF
தகவல் பிரச்சார பிரிவு-கனடா
கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவ் விகாரை இது இரண்டாவது தடவையாக எரிக்கப்பட்டுள்ளது. முதல் தடவை நிர்வாகத்தினரே வழக்கை மீள பெற்றுக் கொண்டனர். பிரபாகரன் அழிக்கப்பட்ட தினங்களில் லங்கா காடியன் என்ற உணவகம் தமிழரால் எரிக்கப்பட்டது என ரொரண்ரோ இலங்கை தூதர் உட்பட்ட பலர் கண்டனம் தெரவித்திருநடதனர் . சில நாட்களின் ரொரண்ரோ நெருப்பு அதிகாரிகள் இதனை உணவக நிர்வாகத்திகரே செய்திருப்பதாக பத்திரிகைகளில் தெரிவித்திருந்தனர் .
இந்த மெற்குறிப்பிட்ட அறிக்கைக்குப் பதிலாக இனியொருவில் செய்தி ஒன்றை வெளியிட்டுக் கருத்தை அறிந்திருக்கலாம். ரதன் போன்றவர்கள் தொடர்ந்தும் இனியொருவில் எழுதிக்கொண்டிருக்கிறார்களே.
முன்னர் பின்னூட்டமிட்டவரை எக்குத் தெரியாது. ஆயினும் ரொரன்ரோவில் வரும் வலதுசாரி அடிமட்ட (அடித்தள அல்ல) பொதுமகனைக் (மகளையுமல்ல) கவரும் பத்திரிக்கையான செய்தி ஏட்டில் இது புலிகளால் செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற தொனியில் எழுதியிருக்கிறார்கள். இந்தச் செய்தி இடது அல்லது மித இடதுப் பத்திரிக்கைகளை; எதிலும் வரவில்லை…அதாவது அதன் முக்கியத்துவம் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
அதில் ‘ பெளத்த விகாரைகளைத் தாக்குவதில் புலிகள் கைதேர்ந்தவர்கள்” என்று எழுதியிருக்கிறார்கள். மேலும் கனடாவின் ரொரன்ரோப்பகுதியில் இருக்கும் இலங்கை அரசுப் பணிமனையின் அதிகாரி பந்துல சொல்லியிருப்பதையும் வெளியிட்டிருக்கிறார்கள் “ இந்தத் தாக்குதலால் எமது சமூகம் ஒற்றுமையில் வலுப்பெறும்.” அது எப்படி என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.
இந்தத் தாக்குதல் புலிகள் கொண்டாடும் அவர்களது இறந்துபட்ட போராளிகளுக்கான மாவீரர் நாளுக்கு முந்தைய நாள் நடந்தது குறிப்பிடத்தக்கது. செய்திக்கவனத்தை ஊடகங்களை விட்டுத் திசை திருப்பிவிடும் வேலையாகவும் இருக்கலாம்.
இந்த தீவைப்பு நிகழ்வில் பாதிப்பு 5 000 டொலருக்கும் குறைவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இது குற்றவியல் சட்டத்திற்குள் வராது. கனடாவின் காவல்துறை அவ்வாறு பதிவு செய்ய வேறு யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. மேலும் இந்த நிகழ்வில் இரு பெளத்த பிக்குகள் மயிரிழையில் உயிர் தப்பியதாக செய்தி வெளிவருவதில் சிறிலங்காத் தரப்பு செய்தி முனைப்பு காட்டியுள்ளதும் தெரிகின்றது.
இந்த தீவைப்பில் இன்னும் சரியான வீடியோ பதிவுகூடக் கிடைக்கவில்லை என்கிறார்கள் – செய்திப்படி. இந்த விகாரை இருப்பது கனடாவின் மிகப் பழம்பெருமையான ஒரு வீதியில். அந்த வீதியில் இருக்கும்போதே வீடியோ பதிவுகள் இல்லை என்றால்….
இரண்டாவதும் முதன்மையானதும்…
கடந்த இரு கிழமைக்கு முன்புதான் இந்த விகாரையின் வேலி ரொரன்ரோ மாநகரின் வரையறையை மீறிச் சிறப்பு அனுமதி பெற்று உயரமாகப் போடப்பட்டது என்று ஓர் மித இடதுப் பேப்பரில் செய்தி வந்திருந்தது.
அதைக்குறிப்பிட்டு தமிழ்ச் செய்தி ஏட்டில் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
உணர்ச்சிவசப்பட்டு சிலர் செய்யும் காரியங்கள் தவறானவை. (அதாவது முன்பு நடந்த நிகழ்வு- அதிலும் குற்றவாழிகள் யாரென்பது தெரியாது. அனைத்தும் ஊகமே!)
பெளத்த சமயம் தமிழருடையதும்கூட. எனவே பெளத்தத்தை வெறுப்பதை விட்டுவிட்டு கையாளப் பழகவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இந்த வேலி போட்ட சம்பவத்தையும் பின்னர் மாவீரர்நாள் நிகழ்வின் முதல் நாள் என்பதையும் (பரப்புரைக்)கருத்தில் கொண்டு பார்த்தால் பந்துல சொன்னதுடன் பார்க்கையில்…ஏதாவது புலப்படுகிறதா?
மற்றொரு பக்கத்தில் ஒரு கிழமைக்கு முன்பு கனடாவின் இடதுசாரி வெளிப்பாடுகளைக்கொண்ட தொலைக்காட்சி ஒன்றில் பந்துலவைப் பேட்டி கண்டனர்.
கனடாவின் பெரும்பான்மை இனத்தவர்…ஆங்கில வழியில் பார்க்கும் பிறர் அனைவரும் ‘மனிதம்’ பற்றி வெட்கித் தலைகுனியும் கருத்துக்களை அவர் பெருமையுடன் சொன்னார். (றறற.வஎழ.ழசப)
குறிப்பாக இலங்கையில் ஒரே ஒரு இனம்தான் இருக்கிறது…. என்றார்.
வெளியில் இருந்து வரும் எந்த மாதிரியும்> கருத்தும் அங்கிருக்கம சிக்கலுக்கு தேவையில்லை…..என்றார்.
இலங்கையில் நாங்களே அனைத்தையும் செய்து கொள்வோம் என்றார்.
ஒருகாலின் முழங்காலில் மற்றக்காலில் கணுக்காலை சிரமப்பட்டு வைத்துக்கொண்ட அவர் கொடுத்த பேட்டி உண்மையில் இலங்கையின் ஓர் பெரும்பான்மை இனத்தின் அறிவுசீவிக்கு வெட்கக்கேடானதான வகையிலேயே இருந்தது.
அட மறந்துவிட்டது…
இனியொருவிற்கு இவ்வளவு பெரிய கடிதம் எழுத வைத்த புளட் அறிக்கைக்கு நன்றி.
கனடாவில் பல பழைய புளட்டுக்கள்தான் இப்ப புதிய ‘கடும்’ புலிகள் என்பதையும் சொல்லி …
வணக்கம்
வந்தனம்
நமஸ்காரம்.
வேர்ட் இலிருந்து மாற்றுகையில் வந்திருக்கும பிழைகள்(எழுத்து) …மன்னிக்க
யார் செய்திருந்தாலும் இப்படிப்பட்ட காரியங்களை நாம் கண்டிக்கத் தவறவேண்டியதில்லையே!
கண்டித்த பிறகு குற்றவாளிகள் யாரென்று விசாரிக்கலாம். கண்டிக்கிற பிறரின் நோக்கங்களை ஆராயலாம்.
சிங்கள விவசாயிகளின் படுகொலைக்குக் கூட நம்மிடமிருந்தது நழுவல் அல்லது நியாயப்படுத்தல்.
நாம் எத்தகைய மனிதர்கள்?